Wednesday, July 19, 2023

ASIATIC MANGROVE A SHIP BUILDING TREE 262.கப்பலோட்டிய மரம் சிற்றிலை அலையாத்தி

 

கப்பலோட்டிய  மரம்
சிற்றிலை அலையாத்தி

தமிழ்நாட்டில் மட்டும் 14 வகையான அலையாத்தி மரங்கள் உள்ளன என்று பட்டியலிட்டு இருக்கிறார்கள். அந்த 14 ல் ஒன்றுதான் இந்த சிற்றிலை அலையாத்தி மரம்.

பொதுப் பெயர்கள்: ஆசியாடிக் மேங்ரோவ் (ASIATIC MANGROVE)

தாவரவியல் பெயர்: பெம்பிஸ் அசிடியுல்லா (PEMPHIS ACIDULA)

தாவரக்குடும்பம்: ரைசோபோரேசி (RHIZOPORACEAE) 

தமிழ்நாட்டில் 25 முதல் 30 இடங்களில் அலையாத்தி என்னும் மேங்ரோவ் மரங்கள் இருக்கின்றன. அவற்றில் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் முக்கியமானவை.

உலகிலேயே மிகவும் பெரிய அலையாத்தி காடுகள் மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசத்தில் அமைந்துள்ள சுந்தரவக்காடுகள். உலகில் இரண்டாவதாக உள்ள பெரிய அலையாத்தி காடு என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் அலையாத்தி காடு.

தமிழ்நாட்டில் மட்டும் 14 வகையான அலையாத்தி மரங்கள் உள்ளன என்று பட்டியலிட்டு இருக்கிறார்கள். அந்த 14 ல் ஒன்றுதான் இந்த சிற்றிலை அலையாத்தி மரம்.

பயன்கள்:

இந்த சிற்றிலை அலையாத்தி மரத்தின் கட்டைகள் உறுதியானவை, வலுவானவை. மாலத்தீவுகளில் இந்த மரங்களை கப்பல் கட்ட பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

இதனை நங்கூரம் செய்ய பயன்படுத்தி வந்தார்கள். இவை தவிர வேலிக்கம்பங்கள்,ருவிகளுக்கு கைப்பிடிகள் போடுதல், கைத்தடிகள் செய்தல், போன்றவற்றையும் செய்ய இந்த மரங்கள் பயன்பட்டு வருகின்றது. பிலிப்பைன்ஸ், தைவான், மற்றும் சீனாவில் இந்த சிற்றிலை அலையாத்தி மரத்தைப் போன்சாய் தாவரமாக வளர்க்கிறார்கள்.

இந்த சிற்றிலை அலையாத்தி மரத்தை வெட்டுவது, சேகரிப்பது, விற்பனை செய்வது, எடுத்துச் செல்வது, எல்லாமே குற்றம் என பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் சுற்றுச்சூழல் துறை சிற்றிலை அலையாத்தி மரத்தை அருகி வரும் மரவகை என்று சட்டபூர்வமாக அறிவித்துள்ளது.

தாகித்தி உட்பட மூன்று நான்கு பசிபிக் தீவுகளில், கருவிகளுக்கு கைப்பிடிகள் போடுதல், உரல் உலக்கை செய்தல், ஆயுதங்கள் செய்தல், சீப்பு செய்தல் போன்ற பல வகையான மரச்சாமான்கள் செய்இதன் மரக்கட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.

சிற்றிலை அலையாத்தி என்னும் இந்த மரங்கள் கடற்கரை ஓரங்களில் வளரும். அதிகமான உப்பினை தாங்கி வளரும். இதனை ஆங்கிலத்தில் ஹேலோபைட்ஸ் (HALOPHYTES)என்று சொல்லுகிறார்கள் இங்கு இன்னொன்றையும் தெரிந்து கொள்ளலாம்.

கிளைகோபைட்ஸ் (GLYCOPHYTES)என்றால் அதிகப்படியான ப்பினை தாங்கி வளர முடியாத தாவரங்கள் என்று அர்த்தம்.

உலகில் உள்ள தாவரங்களில் சுமார் இரண்டு சதவீதம் மட்டுமே மிகையான உப்பினை தாங்கி வளரக்கூடிய தாவர வகைகள். இவற்றைத்தான் நாம் ஹேலோபைட்ஸ் என்று சொல்லுகிறோம். இந்த சிற்றிலை அலையாத்தி மரம் கூட ஹலோ பைட்ஸ் என்ற வகையைச் சேர்ந்ததுதான்.

அலையாத்தி மரங்கள் தனது தேவைக்கு போக அதிகப்படியான உப்புக்கள் இருந்தால் அவற்றை இலைகளில் இருக்கும், உப்புச் சுரப்பிகள் மூலமாக வெளியேற்றி விடுகின்றன என்ற நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

உதாரணமாக அவரை மற்றும் நெல் பயிருக்கு நாம் கொடுக்கும் பாசன நீரில் ஒரு லிட்டர் நீரில் 1 – 3 கிராம் உப்பு மட்டுமே இருக்கலாம். பார்லி மற்றும் பேரிச்சைக்கு ஒரு லிட்டர் நீரில் உப்புக்கள் ஐந்து கிராம் வரை இருக்கலாம். இவற்றை மிதமான உப்பை தாங்கும் தாவரங்கள் என்று சொல்லலாம். இதனை ஆங்கிலத்தில் மார்ஜினல் ஹாலோஃபைட் (MARGINAL HALOPHYTES)என்று சொல்லுகிறார்கள்.

உணவுப் பயிர்களில் கூட, இது மாதிரி ப்பினைத் தாங்கி வளரும் பயிர் ரகங்களை உருவாக்கத்தின் மூலம் நமது உற்பத்தியை கணிசமாக அதிகப்படுத்த முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உதாரணமாக சாலி கோர்னியா பிஜிலோவி (SALICORNIA BIJILOVII) போன்றவற்றின் மூலம் பயோடீசல் தயாரிக்க முடியும் என்கிறார்கள்.

உப்பு நிறைந்த இடங்களில் இது சாலிகோர்னியா வளருவதால், உணவு பயிர்களுக்கான நிலப்பரப்பை இது எடுத்துக் கொள்ளாது என்றும் சொல்லுகிறார்கள். மேலும் இது மாதிரி உப்பினை தாங்கி வளரும் செடிகளை தொடர்ந்து வளர்ப்பதால் அந்த மண்ணில் உள்ள ப்பின் அளவை, அது படிப்படியாக குறைத்து விடும் என்றும் சொல்லுகிறார்கள் மண் ஆராய்ச்சி நிபுணர்கள்.

இந்த சிற்றிலை அலையாத்தி மணல்சாரியான மண், சுக்கம்பாறைகள் உள்ள மண் லிட்டரல் ஜோன்ஸ் (LITTORAL ZONES)என்ற பகுதிகளில் வளரும் என்கிறார்கள். அப்படி என்றால் கடல்நீர் நிற்கும் இடம், கடலோரம் உள்ள குளம், ஏரி, அல்லது ஆறுகளை குறிக்கும். அதாவது கடல் நீர் தேங்கி நிற்கும் இடங்களில் கூட இது வளரும். இப்படி எப்போதும் கடல் நீர் தேங்கி நிற்கும் இடங்களை போர்ஷோர் (FORE-SHORE)என்றும் சொல்லுகிறார்கள் சாதாரணமாக கடல் நீரில் அல்லது சமுத்திரத்து நீரில் எவ்வளவு உப்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம், ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் வரை உப்பு இருக்கும்.

இந்த பதிவில் சிற்றிலை அலையாத்தி மரம் உட்பட அத்துடன் தொடர்புடைய பல்வேறு புதிய தகவல்களை நாம் தெரிந்து கொண்டோம்.இது பற்றி வேறு ஏதும் புதிய செய்திகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...