Wednesday, July 19, 2023

ASIATIC MANGROVE CONTROL HEAVY BLEEDING 264.பேய்கண்டல் மரம் பெரும் ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும்

 

பேய்கண்டல் மரத்தில் தொங்கும்
பிராப்பக்யூல்ஸ் -  விதைக்கன்றுகள்

பேய்கண்டல் மரத்தின்
முட்டு /தாங்கு வேர்கள் 

தாவரவியல் பெயர்: ரைசோபோரா முக்குரனேட்டா

இந்த மரத்திற்கு ஏன் பேய் கண்டல் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சில மரங்களில் பேய்கள் அடைந்திருக்கும் என்பது உலக நாடுகள் எல்லாவற்றிலும், ஒரு நம்பிக்கை உள்ளது. ஆவி மரம், ஏழிலைப்பாலை மரம், புளியமரம், வேப்பமரம், இவற்றில் எல்லாம் துஷ்ட ஆவிகள் இஷ்டமாக வசிக்கும் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டு சின்ன வயசில் இந்த மரங்களைப் பார்த்து பயந்து இருக்கிறேன்.

பல நாட்டு மரங்கள் பற்றிய ஆய்வுகள் செய்யும் பொழுதும் பேய்பிசாசுபற்றிய  செய்திகள் பயமூட்டுகின்றன. ஆப்பிரிக்க நாட்டில் ஒரு மரத்தை ஆள் விழுங்கி மரம் என்கிறார்கள். பேய் கண்டல் அலையாத்தி மரத்திற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம் ?  எனக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த பேய்கண்டலை ஆங்கிலத்தில் என்ன சொல்லுகிறார்கள் ? இதன் தாவரவியல் பெயர், தாவர குடும்பம், பிறமொழி பெயர்கள், இதன் வளர் இயல்புகள், பயன்கள், சிறப்புச் செய்திகள், அனைத்தையும் சுருக்கமாக பார்க்கலாம்.

பொதுப்பெயர் மற்றும் ஆங்கில பெயர். ஆசியாடிக் மேங்குரோவ் (ASIATIC MANGROVE )

தாவரவியல் பெயர்: ரைசோபிரா முக்குரனேட்டா (RHIZOPORA MUCRANATA)  

தாவரக் குடும்பம்: ரைசோபோரோசி (RHIZOPORACEAE)

மொழிப் பெயர்கள்:

பெங்காலி: கர்ஜன் (GARJAN)

குஜராத்தி: கரூர் (KAROD)

கன்னடா: கண்டேல்(KANDALE)  

கொங்கணி: கும்தலம்(KOMDALAM)  

மலையாளம்: பனாச்சி கண்டல் (PANACHI KANTAL)

மராத்தி: தம்பி (DAMBI)

ஒரியா: ராய் காச்சா(RAI GACHA)  

தமிழ்: கண்டல், பேய் கண்டல்(KANTAL, PEYKANTAL)  

தெலுங்கு: அடவி பொன்னா (ADAVI PONNA)  

துளு: கான்ட்லா (KAANDLA)

வளரியல்பு

பேய்கண்டல் மரங்கள் நல்ல உயரமாக வளரும். அதிகபட்சமாக 25 மீட்டர் வரை கூட வளரும். இதன் மூச்சு வேர்கள் நன்றாக வளர்ந்திருக்கும். பார்த்தவுடன் தெரியும், இந்த வேர்களை வைத்து இது பேய் கண்டல் மரம் என்று கண்டுபிடிக்கலாம். இலைகள் நீளமானவை. அதிகபட்சமாக 25 சென்டிமீட்டர் இருக்கும், கிட்டத்தட்ட ஒரு அடி நீளம் இருக்கும், அகலம் பத்து சென்டிமீட்டர் இருக்கும்.

பூக்கள்

நீளமான தண்டுகளில் இதன் பூங்கொத்துக்கள், கிளை நுனிகளில் தொங்கிக் கொண்டிருக்கும். பூவிதழ்கள் மஞ்சள் நிறமாக இருக்கும், புற இதழ்கள் வெண்மை நிற கோப்பை மாதிரி அடிப்பக்கப் பூவை மூடி இருக்கும். விதைக்குச்சிகள்

அலையாத்தி மரங்கள் அதன் பூக்கள் மூலம் விதைகளை உற்பத்தி செய்யாது. செடிகளாகவே உற்பத்தி செய்யும். பிராணிகளில் முட்டையிடுவதற்கு பதிலாக குட்டி போடுவது போன்ற செய்கை இது. மேங்ரோவ் மரவகை குட்டிச் செடிகளாகவே இனப்பெருக்கம் செய்கின்றன, இதனை ஆங்கிலத்தில் விவிப் பாரஸ் (VIVIPAROUS)என்று சொல்லுகிறார்கள்.

மருத்துவ உபயோகம்

சிறுநீரில் ரத்தப்போக்கு இருந்தால் அதன் பட்டைகளைத்தான் பர்மாவில் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

மலேசிய நாட்டில் பிரசவமான பெண்களுக்கு சக்தி ஊட்டுவதற்காக பேய்க் கண்டல் மரத்தின் இலைகள் மற்றும் வேர்களில் மருந்து தயாரித்து கொடுக்கிறார்கள்.

சில வகை மீன்கள் கடிப்பதனால் ஏற்படும் பெருவலியை தணிக்க பேய் கண்டல் இலைகளை பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கிறார்கள். சில மீன்கள் தனது முட்களால் குத்தினால் தேள் கொட்டியது போல வலிக்கும். உதாரணம் நம்ம ஊரு கெளுத்தி மீன்கள்.

இதயத்தில் ஏற்படும் குறைவான ரத்த ஓட்டத்தினால் ஏற்படும் மார்பு வலிக்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள். இதற்கு அதன் இளஞ்செடிகளிலிருந்து எடுக்கும் சாற்றினை பயன்படுத்துகிறார்கள்.

இலை தவிர அதிகப்படியான ரத்தப்போக்கு, சர்க்கரை நோய், வயிற்றுப்போக்கு,கியவற்றைக் குணப்படுத்த இதன் வேர்கள், இலைகள் மற்றும் பட்டைகளை பயன்படுத்துகிறார்கள்.

இந்தோனேசியா, மலேசியா, சீனா, ஜப்பான், ஆகிய நாடுகளில் உடல் உபாதைகளை சரிசெய்ய பேய் கண்டல் மரத்தினை மூலிகை மரமாக பயன்படுத்துகிறார்கள்

அன்பிற்குரிய நண்பர்களே, இன்றைய பதிவில் பேய் கண்டல் பற்றிய பல புதிய செய்திகளை பார்த்தோம். இது பற்றி வேறு சுவாரசியமான தகவல் எதுவும் உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு சொல்லுங்கள் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்த இந்த மரம் உதவுகிறது.

மேங்குரோவ் சதுப்பு நிலச் சூழலில் ஒரு அங்கமாக இது விளங்குகிறது. கடலோரங்களில் அமைந்துள்ள கிராமங்கள் அல்லது நகரங்களுக்கு இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

கடற்கரைகளில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மண்ணரிப்பு போன்றவற்றைத் தடுத்து அதன் சூழலை பாதுகாப்பதுடன் மேம்படுத்துகிறது.

பேய்க்கண்டல் பற்றி தமிழ் அகராதியில் கூட தேடினேன், அதில் பேய்கள் பற்றிய முக்கியமான ஒரு செய்தியைப் பார்த்தேன். அதாவது ஆண் பேயை பேயன் என்றும் பெண் பேயை பேய்ச்சி’ என்றும் சொல்லவேண்டுமாம், பேய்க்கும்  பேய்க்கண்டலுக்கும் உள்ள தொடர்பு பற்றி எந்த தகவலும் இல்லை. உங்களுக்கு ஏதாவது பேய் கண்டல் பற்றிய தகவல் தெரிந்தால் அல்லது கிடைத்தால் எனக்கு சொல்லுங்கள். நன்றி வணக்கம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE  A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...