Sunday, July 2, 2023

ARECANUT A MEDICINE FOR SEXUAL DISEASES 216. பாலியல் நோய்களை குணப்படுத்தும் மரம் பாக்கு

 

பாலியல் நோய்களை
குணப்படுத்தும் குரு பாக்கு


(ARECANUT TREE)

தாவரவியல் பெயர்: அரிகா கேட்டிச்சு (ARECA CATECHU)

தாவரக்குடும்பம் பெயர்: அரிகேசியே (ARECACEAE)

தாயகம்: மலேசியா, பிலிப்பைன்ஸ் (MALAYSIA, PHILLIPINES)

பொதுப் பெயர்கள்: பீட்டல் பாம், அரிகா பாம், அரிகா நட் பாம் (BETEL PALM, ARECA PALM, ARECANUT PALM)

இரண்டாயிரம் வருஷத்து பழக்கம்

பாக்கு சாகுபடி வெற்றிலைப் பாக்கு போடும் (வெ.பா.) பழக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுக்க இருந்து வருகிறது. உலக அளவில்; 10 முதல் 20 சதவிகித மக்கள் இன்னும் இந்தப் பழக்கத்தின் அடிமை. புகைபிடிப்பது, மது அருந்துவது, காபி சாப்பிடுவது இந்த மூன்றும் தான் உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களை அடிமையாக வைத்துள்ளது. நான்காவதாக இருப்பது இந்த சமாச்சாரம்.  சர்வதேச அளவில் சுமார் 600 மில்லியன் பேர் வெ.பா. போட்டுத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுத்துள்ளது.

சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை கழத்தின் (WHO) புள்ளி விவரப்படி உலகில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு நமது இந்தியாதான். உலகின் மொத்த உற்பத்தியில் 49.24 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி ஆகிறது. இங்கிருந்துதான் பாக்கு பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது.

இந்தியாவில் பாக்கு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள் கர்நாடகா> கேரளா மற்றும் அசாம்; இதில் முதலிடத்தில் இருப்பது கர்நாடகா. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 41.7 சதவீதம் உற்பத்தி செய்வது கர்நாடக மாநிலம்தான்;. அந்த மூன்று மாநிலங்களும் சேர்ந்து உற்பத்தி செய்யும் அளவு 88.59 சதம்; மீதமுள்ளவற்றை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மேகாலயா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம்.

இது இந்திய கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது. குறிப்பாக தென்னிந்தியாவில் எல்லாவிதமான விசேஷங்களுக்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன. எந்த ஒரு விசேஷமான காரியத்திற்கும் வெ.பா. வைத்து அழைப்பது இன்றும் பழக்கத்தில் உள்ளது.

பாக்கு மரத்தின் பலமொழிப் பெயர்கள்:

தமிழ்:; அடைக்காய், சகுந்தம், சாமர புஷ்பம், கமுகு, சந்தி, கூந்தற்கமுகு, பூகம்,  விம்பு (ATAI-K-KAY, CHAKUNTAM, CHAMARA PUTPAM, KAMKU, KANTI, KOONTHAR KAMUKU, PUKAM, VIMPU )

இந்தி:  சாமர புட்பா, குவாக், குவா,  கபூர், புக், புகி, புங்கி, சுபாரி, உத்வேக் (SAMARA PUTPA, GUVAK, GUWA, KHAPUR, PUGI, PUNGI, SUPARI, UTVEG)

மணிப்புரி: குவாபம்பி (KWA PAMPI)

மராத்தி: போப்பால், போப்பாவி, புக், புகாபால், புகிபலா, சுபாரி (POPHAL, POPHALI, PUG, PUGAPHAL, PUGIPALA, SUPARI)

மலையாளம்: கமுக், கவுங் (KAMUK, KAVUNG)

தெலுங்கு: கோண்டா, கற்பூரமு, கிரமுகாமு, போகா (GHONTA, KARPURAMU, KRAMUKAMU, POKA)

கன்னடா: அடக்கி> அடைக் (ADAKE, ADIKE)

பெங்காலி: சுபாரி (SUPARI)

கொங்கணி: போபாரா, சுபாரி (POPHARA, SUPARI)

குஜராத்தி: அய்ரைக், சொபாரி (AYRIKE, SOPARI)

சமஸ்கிருதம்: அகோத், சாமர்புஷ்பா, குவாகா, கபூர், புகாபால், புக், புகு, உத்வேக், வாக்டாரு (AKOTH, SAMARPUSHPA, KUWAKA, KAPHUR, PHUG, PHUKU, UTHVEK, VAKTARU)

நேபாளி: சுபாரி (SUPARI)

உருது: சுபாரி, பீபால் (SUPARI, FEEFAL)

அரபி: போபால், பீபால் (FOFAL, FEEFAL)

பர்மிஸ்: குன், குன்சி (KUN. KUNSI)

சைனிஸ்: பிங் லாங் (PING LANG)

இத்தாலியன்: அரிகா (ARECA)

போர்ச்சுகீஸ்: அரிகா (ARECA)

ஜெர்மன்: அரிகாபாம் (ARECA PALM)

டட்ச்: அரிகா பாம் பூம்> பினாங் (ARECA PALM BOOM, PINANG)

ரஷ்யன்: அரிகா> கப்புஷ்ட் நாயா பாமா (ARECA, KAPUST NAYA PALMA)

துளு: கங்கு (KANGU)

வெத்தலை பாக்கு வெச்சு யாராச்சும் உன்னக் கூப்பிட்டாங்களா என்று வேண்டாதவர்களிடம் விரோதம் பாராட்டுவதும்>  உங்களயும் வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கணுமா ? என்று வேண்டியவர்களிடம் உரிமையாகக் கேட்பதும் வழக்கில் உள்ள பழக்கம். 

திருமண பத்திரிகைகளை உறவினர்களுக்கு அல்லது தெரிந்தவர்களுக்கு கொடுப்பதைக்கூட பாக்கு வைப்பது என்பார்கள். மாப்பிள்ளை பெண் நிச்சயதார்த்தங்களில்  வெ.பா. மாற்றிக் கொள்ளுவது ஒரு முக்கியமான சடங்கு. அதனால்தான் அதன் பெயர் நிச்சயதாம்பூலம். தாம்பூலம் மாற்றி விட்டால் அதன் பின்னால் மாப்பிள்ளையோ அல்லது பெண்ணையோ மாற்ற முடியாது.

இந்தியாவில்  கடற்கரை ஓரத்தில் மட்டும் சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாக்கு மரங்களை சாகுபடி செய்கிறார்கள.; கடற்கரை இல்லாத இந்திய மாநிலங்களிலும் பாக்கு சாகுபடி நடக்கிறது. இந்தியா> சைனா மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பாக்கு சாகுபடி பிரபலமானது.

பலவித நோய்களையும் குணப்படுத்த பாக்கு அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.  வாய்ப்புண்கள்> ஈறுகளில் ரத்தக்கசிவு> பல் வலி போன்றவற்றை குணப்படுத்த இதன் கஷாயத்தை கொப்பளித்தால் போதுமானது.;  பாக்கு தூளை உடலில் ஏற்படும் காயங்களில் வைத்துக் கட்டுவதன் மூலம் ரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தலாம்; காயங்களையும் குணப்படுத்தலாம்; வயிற்றுப்போக்கு மற்றும் குடல் பூச்சிகளை கட்டுப்படுத்த 10 மில்லி பாக்குக் கஷாயம் அருந்த வேண்டும.;

பாக்கு ஊறவைத்த நல்லெண்ணையை தடவுவதன் மூலம் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்; பாக்கு கஷாயத்தைத் தந்து கருப்பை வீக்கம்> பெண்உறுப்பில் வெள்ளைப்படுதல்  (LEUCORRHOEA)  போன்ற நோய்களையும் குணப்படுத்த முடியும்; எலுமிச்சைச் சாற்றுடன் உப்புத்தூள் கலந்து தந்து பசியின்மை மற்றும் குமட்டுதல் (ANOEREXIA, NAUSEA) ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கலாம். பாக்குப்பொடியை பல்பொடியாக பயன்படுத்த பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்; பாக்கிலிருந்து எடுக்கும் சாற்றினை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுவதன் மூலம் கிரந்தி அல்லது மேகப்புண் (SIPHILIS)  நோயைக் கட்டுப்படுத்தலாம்; பாக்குக் கொட்டைகளைப் போட்டு ஊறவைத்த எண்ணையைத் தடவி இடுப்பு வலி முதுகு வலி போன்றவற்றைக் குணப்படுத்தலாம்.;

பாக்கு> மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சொந்தமான மரம் என்று தெரிகிறது; இது வெஸ்ட் இண்டிஸ் முதல் ஆப்பிரிக்காவின் கிழக்குக்கரை வரை> பங்களாதேஷ்> சீனா> ஸ்ரீலங்கா> மலேசியா ஆகிய இடங்களில் அதிகம் சாகுபடி செய்கிறார்கள்.

பாக்கு மெல்லும் பழக்கம் வியட்நாம் மற்றும் மலேசியாவிலிருந்து பிற நாடுகளில் பரவியதாக சொல்லுகிறார்கள்; ஆயினும் ஆயுர்வேத மருத்துவம் காலம் காலமாக இதனை மருந்துப் பொருளாக பயன்படுத்தி வருகிறது; மேலும் வேத காலங்களுக்கு (PREVEDIC PERIOD)  முன்னதாகவே தாம்பூலம் என்ற வார்த்தை இங்கு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.; இந்திய கலாச்சாரத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா முக்கிய குடும்ப மற்றும் இதர விழாக்களிலும் முக்கிய இடமுண்டு வெற்றிலைப் பாக்குக்கு.

அழைப்பிதழுக்கு பதிலாக ஒரு காலத்தில் வெற்றிலை பாக்கு வைப்பதுதான் பழக்கம்;. இரண்டு வெற்றிலையும் அதன்மீது இரண்டு பாக்கும் வைத்துத் தருவதுதான் அந்தகாலத்து அழைப்பு.

கர்ண மோட்சம் தெருக்கூத்தில்> கர்ணன் போருக்கு செல்லும் போது> தன் மனைவி பொன்னுருவியிடம் தாம்பூலம் கேட்பது ஒரு முக்கியமான காட்சி; நீ அரச குலத்தை சேர்ந்தவன் இல்லை. அதனால் தரமாட்டேன் தாம்பூலம்  என  தாம்பூலம் தர மறுப்பாள்; இந்த விவாதம்; மட்டுமே அந்தத் தெருக்கூத்தில் இரண்டு மணி நேரம் கூட நடக்கும்; மயிர்கூச்செரியும்படியானது அந்தக்காட்சி;. ஆக இந்திய கலாச்சாரத்தில் தாம்பூலம் என்பது தவிர்க்கமுடியாத ஒரு அம்சம். எங்காவது கர்ணமோட்சம் தெருக்கூத்து நடந்தால் பொன்னுருவி கர்ணனுக்கு தாம்பூலம் தரும் காட்சியைப் பாருங்கள்; மனத்தை உருக்கி கண்ணீரைப் பெருக்கும் காட்சி அது.

www.easyayurveda.com / Betelnut – Areca catechu, uses, research, medicines, side effects.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE   A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...