Monday, July 31, 2023

GAMBOGE WESTERN GHATS FRUIT TREE 290.இரவேற்சின்னி மேற்கு தொடர்ச்சி மலை பழமரம்



இரவேற்சின்னி மேற்கு தொடர்ச்சி மலை
பழமரம்
GAMBOGE WESTERN GHATS
FRUIT TREE

இரவேற்சின்னி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு சொந்தமான ஒரு பழமரம். இதன் பழங்களை சாப்பிடலாம். இதன் பழத்தோலில் தோல் பதனிடலாம். விதை எண்ணையை சமைக்க பயன்படுத்தலாம். இதன் செடிகளை மங்குஸ்தான் பழ செடிகள் உற்பத்திக்கு வேர் செடிகளாக பயன்படுத்தலாம்.

தாவரவியல் பெயர்::கார்சீனியா மோரெல்லா (GARCINIA MORELLA) 

தாவரக் குடும்பம்: குளூசீனேசி (GLUCIACEAE)

பொதுப்பெயர்: கேம்போஜ்  (GAMBOGE) 

பலமொழிப் பெயர்கள்:

அசாமிஸ்: குசிதெக்கேறா (KUZI THEKERA)

தமிழ்: இறவேற்சின்னி, மக்கி.(IRAVERSINNI, MAKKI) 

மலையாளம்: இரவி, சிகிரி  (IRAVI, CHIGIRI)

கன்னடா:: அர்தலா (ARDALA)

சிங்களீஸ்: கோகாட்டியா (KOKATIYA)

பயன்கள் (USES)

முதிர்ந்த கனிந்த பழங்களை சாப்பிடலாம். ஆனால் புளிப்பு ஏக்கத்தப்பாக இருக்கும்.

இதன் பழங்களை துண்டுதுண்டாக நறுக்கி சூரிய ஒளியில் உலர்த்தி வெகு நாட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பழங்களில் புளிப்பு சுவை இருப்பதால் இதில் ஊறுகாய் தயார் செய்யலாம் அஸ்ஸாமின் போடோ இனத்து மக்கள், இளம் காய்களை பறித்து மீன் குழம்பு வைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்த பழங்களை வேகவைத்து அதிலிருந்து ஒருவகை சட்டினி தயார் செய்கிறார்கள். உலர்ந்த இதன் பல துண்டுகளைக் கொடுத்து சீதபேதி மற்றும் வாயு தொல்லையினால் ஏற்படும் வலியினை குணப்படுத்துகிறார்கள்.

இதன் பட்டைகளை காயப்படுத்தினால் அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் ஒன்று வடியும், அந்த திரவத்தின் பெயர் காம்போஜ் (GAMBOJE)என்பது. இதனை உணவுப்பொருட்களுக்கு பெயிண்ட் மற்றும் மருந்துகள் தயாரிப்பில்  நிறம் தருவதற்காக பயன்படுத்துகிறார்கள்.

இந்த இரவேற்சின்னி பழச்செடிகளை மங்குஸ்தான் பழச் செடிகள் உற்பத்திக்கு வேர்ச்செடியாக பயன்படுத்துகிறார்கள்.

கர்நாடகாவில் மலநாடு பகுதியில், தீர்த்தஹள்ளி மற்றும் சிக்மகளூர் பகுதிகள் மீன் சமைப்பதில் மிகவும் பிரபலமானவை.  இதற்கு ஒட்டுளி (ODDULI)என்ற ஒரு பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த இரவேற்சின்னி பழங்களை வேகவைப்பதன் மூலம் இந்த ஒட்டுளியை தயார் செய்கிறார்கள்.. இந்த ஒட்டுளியை எவ்விதமான பிரசர்வேட்டிவ்ஸ்’சும் சேர்க்காமல் பல ஆண்டுகள் கூட சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

பொதுப்பெயர்கள்: இந்தியன் காம்போஜ், மைசூர் காம்போஜ், ஸ்ரீலங்கா காம்போஜ்..

மரங்கள் பசுமை மாறா மரங்கள், 18 மீட்டர் உயரமாக வளரும். மரத்தின் பட்டைகள் காவி நிறத்துடன் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். மரத்தை காயப்படுத்தினால் அதிலிருந்து பளிச்சென்று மஞ்சள் நிறப் பால் நிறைய வடியும்.

பூக்கள்

ஆண் பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும். பெண் பூக்கள் ஆண்  பூக்களை விடப் பெரியதாக இருக்கும். பூக்கள் கணுக்களில் தோன்றும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான காலகட்டத்தில் பூத்துக் காய்க்கும்.

மூன்று சென்டிமீட்டர் குறிப்பிட உள்ள பழங்களாக இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் நான்கு முதல் 12 விதைகள் வரை இருக்கும். மே ஜூன் மாதங்களில் காய்க்கும். பறவைகள் பிராணிகள் மற்றும் மனிதர்கள் மூலம் விதைகள் பரவுகின்றன.

பரவி இருக்கும் இடங்கள்

இந்தியா மற்றும் மலேசிய நாடுகளில், இந்த இரவேற்சின்னி பழ மரங்கள் பரவியுள்ளன தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் நீலகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பரவி இருக்கின்றன.

கர்நாடகாவில் சிக்மகளூர் ஹாசன் மைசூர் வடகானரா தென்கானரா மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களிலும், கேரளாவில் இடுக்கி கண்ணனூர் கொல்லம் கோழிக்கோடு மலப்புறம் பாலக்காடு திருவனந்தபுரம் திருச்சூர் மற்றும் வீநாடு பகுதிகளிலும் பரவி உள்ளன.

ஆசியாவில் இந்தியா பங்களாதேஷ் மலேசியா மியான்மர் சிங்கப்பூர் ஸ்ரீலங்கா மற்றும் தாய்லாந்து பகுதிகளில் பரவியுள்ளன.

இந்தியாவில் தமிழ்நாடு அசாம் கர்நாடகா மற்றும் கேரளா மேகாலயா ஆகிய மாநிலங்களில் இரவேற்சின்னி பழமரங்கள் பரவியுள்ளன.

சித்த மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி சேவா ரிக்வா யுனானி சீனமருத்துவம் ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகள் இரவேற்சின்னி  பழமரத்தை மூலிகையாக பயன்படுத்துகின்றன.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

  

SOUR CURRENT VEGETABLE FRUIT & HERB 289.காயாக பழமாக மருந்தாக ஆசாரிப்புளி

காயாக பழமாக மருந்தாக
ஆசாரிப்புளி

SOUR CURRENT
VEGETABLE FRUIT &  HERB 


ஆசாரிப்பு
ளி ஒரு சிறு மரம், 6 மீட்டர் வரை உயரமாக வளரும், நம்ம ஊர் மரம் மரம்போல தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவி இருக்கும் மரம், தமிழில் ஆசாரிப்புளி மற்றும் காட்டுக்கொய்யா என அழைக்கப்படுகிறது, இலைகள் காய்கறியாக பயன்படுகிறது, பழங்களும் புளிப்பாக இருக்கும். அதனையும் சாப்பிடலாம், இதன் தளிர் இலைகளை கீரையாக சமைத்து சாப்பிடலாம், ஆசாரிப்புளி மரத்தின் அனைத்து பகுதிகளையும் மூலிகையாகப் பயன்படுத்தி நோய்களை குணப்படுத்துகிறார்கள்.

தாவரவியல் பெயர்: ஆன்ட்டிடெஸ்மா டயன்ட்ரம் (ANTIDESMA DIANDRUM)

பொதுப் பெயர்கள்:  ரோகி டாக்கா, சோர் கரண்ட் ட்ரீ (ROHI TAKA , SOUR CURRENT TREE)

தாவர குடும்பம்:  பில்லாந்தேசி (PHYLLANTHACEAE)

மொழிப் பெயர்கள்:

தமிழ்: ஆசாரிப்புளி, காட்டு கொய்யா  (ASARIPULI, KATTUKOYYA)

அசாமிஸ்: அபுடெங்கா (ABUTENGA)

பெங்காலி: அர்ச்சாலி (ARCHALI)

ஹிந்தி: மெரி (AMERI)

காசி:வ்டிங் (CHOWDING)

மலையாளம்: ரிப்பழம், ஆசாரிப்புளி(ARI PAZHAM, ASARIPULI)

மராத்தி: கோண்டு ரூலி (KONDU RULI)

நேபாளி: அரிச்சல் (ARCHAL)

தெலுங்கு: பெல்ல குமுடு (PELLA KUMUDU)

உருது: நுனியாரி (NUNIARI)

பயன்கள் (USES)

மரத்தின் இலைகள் உணவு பொருட்களின் மணமூட்டியாக பயன்படும்.

இதன் இலைகள் காய்கறியாக பயன்படுத்துகிறார்கள் லேசாக புளிப்பாக இருக்கும். இதன் பழங்களும் புளிப்பாக இருக்கும். அதனையும் சாப்பிடலாம். இளம் தளிர் இலைகளை கீரையாக சமைத்தும் சாப்பிடலாம்.

இதன் இலைகள் மற்றும் வேர்களை வயிற்று கடுப்பு, மற்றும் பித்தப்பை தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கவும் பயன்படுத்துகிறார்கள்.

ஆசாரிப்புளி மரத்தின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தி  நீர்கோர்த்த வீக்கம், தசைவலி, நிமோனியா என்னும் நுரையீரல் தொற்று, மற்றும் நாய் கடித்தால் ஏற்பட்ட காயங்களையும் குணப்படுத்துதலாம்.

வளரியல்புகள் (DESCRIPTION)

மரங்கள் சிறு மரம் 6 மீட்டர் வரை உயரமாக வளரும் ஆனால் கூட பெருஞ்செடி என்றே குறிப்பிடுகிறார்கள் கிளைகள் படர்ந்து வளரும் இலைகள் மற்றும் தண்டு பகுதிகள் ரோமங்களால் மூடி இருக்கும்.

இலைகள் நீள் வட்டமாக தலைகீழாக பொருத்திய ஈட்டி முனை போல, அழுத்தமான பசுமை நிறமாக, பளபளப்பாக இருக்கும், இலைகள் உதிர்வதற்கு முன்னால் சிவப்பு நிறமாக மாறும்.

பூக்கள் ஏப்ரல் மே மாதங்களில் பூக்கும், பூக்கள் மிகவும் சிறியவை, பசுமை கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும்.ஜூன் முதல் ஜனவரி வரையான காலங்களில் காய்க்கும்,.

பழங்கள்

சிறிய அளவு பழங்கள், பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில், வழு வழுப்பாக நீள் வட்ட வடிவமாகவும், முதிரும்போது ஊதா நிறமாகவும் சிவப்பு நிறமாகவும் மாறிவிடும்.

வளர் இடங்கள் (HABITAT)

அடர்ந்த காடுகள், காடுகளின் எல்லப்பகுதிகள், பகுதியான பசுமை மாறா காடுகள், ஈர மிகுதியான இலையுதிர் காடுகளிலும், ஆசாரிப்புளி மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

மலையடி வரங்கள் இமயமலையின் வெப்பமண்டல பகுதியில் 1200 மீட்டர் உயரம் வரை உள்ள மலைப்பகுதிகளிலும் ஆசாரிப்புளி மரங்கள் காணப்படுகின்றன.

பரவி உள்ள இடங்கள் (DISTRIBUTION)

ஆசாரிப்புளி, அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதிகள், மற்றும் ஆற்றங்கரைகளில் முழுமையாகப் பரவியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள், சிக்கிம், மேற்கு வங்கப் பகுதிகள் மத்திய பிரதேசம், மற்றும் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவி உள்ளது.

சர்வதேச அளவில் பங்களாதேஷ் பூட்டான் கம்போடியா சைனா இமையமலை, இந்தியா ஜாவா லாவோஸ் மியான்மர் நேபாளம் பாகிஸ்தான் தாய்லாந்து மற்றும் வியட்நாம் பகுகளில் ஆசாரிப்புளி பரவியுள்ளது.

மகாராஷ்டிராவில் கோலாப்பூர் பூனா ரத்தனகிரி சிந்துதுர்கம் தாணே, ஆகிய இடங்களிலும், கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும், ஆசாரிப்புளி  பரவி உள்ளது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் தர்மபுரி திண்டுக்கல் நாமக்கல் நீலகிரி சேலம் தேனி கரூர் மதுரை புதுகோட்டை, திருவண்ணாமலை விழுப்புரம், வேலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பரவியுள்ளன.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR)

999999999999999999999999999999999999999

 

 

TIGER’S CLAW CURES HUMAN DISEASES 288.மனித நோய்களை குணப்படுத்தும் புலிநகக்கொன்றை




புலிநகக்கொன்றை

TIGER’S CLAW  CURES
HUMAN DISEASES 

இந்தியாவில் சொந்த மரம் போல மாறிப்போனது புலிநகக்கொன்றை, எனும் பேய்கொன்றை, மூன்றடி உயரம் வரை செங்குத்தாக வளரும் பெருஞ்செடி, பார்க்க புலி நகம் மற்றும் பாம்பின் தலை மாதிரியும் தோன்றும். பார்க்க அமானுஷ்யமாக இருப்பதால் இதனை பேய் நகம் என்றும் அழைக்கிறார்கள், ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் மருத்துவ முறைகளில் பலவிதமான நோய்களை கட்டுப்படுத்த வெகுகாலமாக பயன்படுத்து வருகிறார்கள்.

தாவரவியல் பெயர்; மார்ட்டீனியா டயாண்றா (MARTINIYA DIANDRA)

தாவரக் குடும்பம்: பெடலியேசி அல்லது மார்ட்டினியேசி (PEDALIACEAE / MARTINIACEAE)

தாயகம்: மத்திய அமெரிக்காவிற்கு சொந்தமானது ஆனால் இந்தியாவில் சொந்த மரம் போல மாறிப்போனது

பொது பெயர்கள்: டைகர்ஸ் கிளா, ஸ்னேக்ஸ் ஹெட், டெவில்ஸ் கிளா, கேட்ஸ் கிளா (TIGER’S CLAW, SNAKE’S HEAD,DEVIL’S CLAW, CAT’S CLAW )

மொழிப் பெயர்கள்

தமிழ்:பேய்நகம் புலிநகம், தேள்கொடுக்கி, காக்காமூக்குசெடி (PULINAGAM, THELKODUKKI, KAKKAMUKKUSEDI)

பெங்காலி: பாக்நாக்கி (BHAGNAKHI)

இந்தி: பாக்நாக் (BAGHNAKH)

கன்னடா: கருடமுகமுள்ளு(GARUDAMUGAMULLU)

மலையாளம்: புலிநகம் (PULINAGAM)

மராத்தி: வின் சாவி (VINCHAVI)

நேபாளி: பிர்லொநக்ரி (BIRLONAGRI)

ஒரியா: பகநாக்கி (BAGHA NAKHI)

சமஸ்கிருதம்: காக்கநாசா (KAKASASA)

தெலுங்கு: கருடமூக்கு (GARUDAMUKKU)

புலி நக கொன்றை வளரியல்புகள்

புலிநகக்கொன்றை ஒரு பெருஞ்செடி, மூன்றடி உயரம் வரை செங்குத்தாக வளரும். செடிகளின் மீது சுரப்பியுடன் கூடிய ரோமம் மூடி இருக்கும். பூக்கள் 7 முதல் 14 பூக்களை கொண்ட பூங்கொத்தாக இருக்கும். பூக்கள் நீவட்டமாக பூவிதழ்கள் சிவப்புகூடிய ஊதாநிறமாக இருக்கும். பூவின் தொண்டைபகுதியில்  மஞ்சள்நிற புள்ளிகள் இருக்கும். பூக்கள் ஆண்டு முழுவதும் பூக்கும்..

இதன் பழங்கள் நீள் வட்டமாக, கொஞ்சம் தட்டையாக, இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர் நீளமுடையதாக, அதன் நுனியில் கொக்கி மாதிரியான இரு முள்ளுடன் ருக்கும். மொத்தத்தில் பார்க்க புலி நகம் மற்றும் பாம்பின் தலை மாதிரியும் தோன்றும். பார்க்க அமானுஷ்யமாக கூட தோன்றும். அதனால் தான் அதனை பேய் நகம் என்றும் அழைக்கிறார்கள்.

தாயகம்: மெக்சிகோ, சென்ட்ரல் அமெரிக்கா, மற்றும் கருபியன் ஆகிய நாடுகள் தான் புலிநகத்தின் சொந்தமண். ஆனால் உலகம் முழுவதும் வெப்பமண்டல பகுதிகளில் பரவியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கிராமப்புற முழுவதிலும் பரவி உள்ளது. இந்தியாவில் மணிகள் மற்றும் இதர அணிகலன்கள் செய்ய வெகு காலமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள். தவிரவும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் வெகுகாலமாக இந்திய துணை கண்டம் முழுக்க பயன்படுத்தி வருகிறார்கள்.

புலிநகக் கொன்றை பழங்களில் உள்ள கொக்கிகள் அங்கு மேயவரும் ஆடு மாடுகளின் உடலில் ரோமங்களில் மாட்டிக்கொள்ளும். அதன் மூலம் இந்த விதைகள் பல இடங்களுக்கும் பரவும்.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் மருத்துவ முறைகளில் பலவிதமான நோய்களை கட்டுப்படுத்த புலிநகக்கொன்றையை பலவிதமாக பயன்படுத்துகிறார்கள்.

சிகிச்சை தரும் நோய்களின் பட்டியல்

வலிப்புநோய், தொண்டைப்புண், எரிகாயங்கள், அரிப்பு, சருமநோய்கள், தேள்கடி, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்த இயற்கை மருத்துவ முறைகளில் புலிநகக்கொன்றையைப் பயன்படுத்துகிறார்கள்.

புலிநகக்கொன்றைக்கு என்னென்ன பெயர்கள் வைத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். பேய்நகம், பாம்புதலை, புலிநகம் மற்றும் பூனைநகம். நாட்டு வைத்தியர்கள் இதனை பாம்புகடிகுக் கூட விஷமுறிப்பானாக பயன்படுத்துகிறார்கள்.

இதன் பழங்கள் முதிரும் சமயம் தசையுடன் கூடியதாக இருக்கும். காய்ந்து நெற்றுக்காக மாறிய பின்னர்தான் அதனுடைய புலி நகத்தோற்றம் அதிலிருந்து வெளிவரும்.

புலி நகக் கொன்றையின் இலைகள், சிறுநீரகங்கள் மாதிரி தோராயமான வட்ட வடிவில், 6 முதல் 15 சென்டிமீட்டர் அகலமாக இலைகளின் இருபுறமும் ரோமங்களால் மூடி இருக்கும். இதன் காம்புகள் நீளமானவை. ஒன்பது முதல் 14 சென்டிமீட்டர் வரை நீளமாக இருக்கும்.

புலிநகக்கொன்றையின் நெற்றிக்கள் கருப்பு நிறமாக இருக்கும். ஒவ்வொரு நெற்றிலும் இரண்டு கருப்பு அல்லது காவிநிற விதைகள் இருக்கும்.

ஒட்டும் தன்மை கொண்ட ரோம இலைகள் மற்றும் தண்டுகளின் மேல் ரோமங்கள் மூடி இருக்கும். இவை ஒட்டும் தன்மையுடன் இருக்கும். தொட்டுப் பார்த்தால் பிசுபிசுவென கைகளில் ஒட்டிக் கொள்ளும்..

குழாய் போன்ற அமைப்பு உள்ள பூக்கள் அடிப்பக்கம் குறுகலாகவும் நுனிப்பக்கம் அகலமான வாயுடனும், அழகான ஊதா மற்றும் வெண்மை நிற இதழ்களுடன், தொண்டையின் உட்புறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற புள்ளிகளுடனும் இருக்கும். 

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. WRITTEN BY GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

  

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...