Thursday, June 15, 2023

YELLOW SILK COTTON 10. மஞ்சள் இலவு மரம்


 


அதிகபட்சமாக 7.5 மீட்டர் வரை மட்டுமே வளரும் அடக்கமான மரம், உலகின் முதல் தரமான படுக்கை மற்றும் தலையணை செய்ய பஞ்சு தரும் மரம், நோய்களை குணப்படுத்தும் மரம்> அழகான தங்க நிறமும்> நாசியை வருடும் மென்மையான  மணமும் கொண்ட மஞ்சள் நிற பூக்கள் தரும் மரம். கோவில் ஆராதனைகளுக்குப் பயன்படும் தெய்வீகத்தன்மை. சங்க இலக்கியக் காலம் முதல் அறியப்படும் தொன்மை> எல்லாவற்றையும் விட இந்திய மரம். இவை எல்லாம் சேர்ந்ததுதான் கோங்கம் எனும் மஞ்சள் இலவு மரம்.

பொதுப்பெயர்கள்: பட்டர் கப் ட்ரீ> எல்லோ சில்க் காட்டன் ட்ரீ> கோல்டன் காட்டன் ட்ரீ (BUTTER CUP TREE, YELLOW SILK COTTON TREE, GOLDEN COTTON TREE)

தாவரவியல் பெயர்: கோச்லோஸ்பெர்மம் ரெலிஜியோசஸம் (COCHLOSPERMUM RELIGIOSUM)

தாவரக்குடும்பம் பெயர்: பிக்சேசி (BIXACEAE)

தாயகம்: இந்தியா> பர்மா> தாய்லாந்து>

மஞ்சள் இலவு மரத்தின் பிறமொழிப் பெயர்கள்:

தமிழ்: ஈங்கை> மஞ்சள் இலவு> காட்டுப்பருத்தி (ENGAI, MANJAL ILAVU, KATTU PARUTHI)

இந்தி: கால்கால் (GALGAL)

மராத்தி: கணேரி (GANERI)

கொங்கணி: கொண்டகோகு (KONDAGOGU)

பெங்காலி: சொனாலி சிமுல் (SONALI SIMUL)

கன்னடா: அரசினா புருகா (ARASINA BURUGA)

மலையாளம்: செம்பண்ணி (CHEMPANNI)

தெலுங்கு: கொண்டகோகு (KONDAGOGU)

புரிந்து கொள்ள சில விவரங்கள்

மரங்கள் 7.5 மீட்டர் உயரமாக வளரும். இலையுதிர் காடுகளுக்கு சொந்தமான மரம். பசுமையான பெரிய இலைகள், கை விரல்கள் போல அமைந்தவை. பூக்கள் பளிச்சென்ற மஞ்சள் நிறம் உடையவை. பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கும். காய்கள், முரட்டு தோலுடையவை.  பசுமையான காய்கள். உலர்ந்தால் அழுக்கு மஞ்சள் நிறமாக மாறும். நீள் வட்ட வடிவில் இரு முனையும் கூர்மையான முனையுடன் இருக்கும். ஐந்தறைகளாக இருக்கும் காய்க்குள் வெண்மையான பஞ்சும் கருப்பு அல்லது பழுப்பு நிற விதைகள் நிறைய பொதிந்திருக்கும்

சங்க காலத்து பாடல்களில் மஞ்சள் இலவு

அந்த காலத்து தங்க வியாபாரிகள் தங்கப் பொடியை செப்புக் குப்பிகளில்  நிரப்பி விற்பார்கள். அந்த தங்கப்பொடி போல இருக்கிறது இந்த மஞ்சள் இலவின் மகரந்தப் பொடிகள் என்று சொல்கிறது அநானூற்றின் பாடல் ஒன்று.

 “சினைப்பூங் கோங்கின்  நுண்தாது பகர்நர்

பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன .. அகநானூறு -25

கோங்க மரங்களின் பூக்கள் நூண்ணிய அதன் பூந்துகள்களை உதிர்க்கும். அவ்வாறு உதிர்ந்த பூந்துகள்கள் அவ்விடத்து இருந்த இலவம்பூக்கள் மீது உதிர்ந்து கிடக்கும். அவை பொன் விற்பவர் பவளச் செப்பில் பொன்பொடியை சொரிந்து வைத்தாற்போன்று தோன்றும்.

இதுதான் அந்த பாடலின் பொருள்.

ஐஸ்கிரீம் பிரியர்கள் கவனிக்க..

ஐஸ்கிரீம் தயாரிப்பில் டிரகாகான்த் என்னும் பிசினைப் பயன்படுத்தி வருகிறார்கள்.  அதற்கு பதிலாக மஞ்சள் இலவு பிசினைப் பயன்படுத்தலாம். 

டிரகாகான்த் பிசின்.  ஆஸ்ட்ராகாலஸ் டிரகாகான்தா (ASTRAGALUS TRAGACANTHA) என்றும் ஆடுகளுக்கு பிடித்தமான முட்செடிகளிலிருந்து எடுக்கிறார்கள்.  இந்த ஆட்டுச்செடி பிசினை அதிகம் உற்பத்தி செய்வது ஈரான் நாடு.        

அந்த காலத்து கப்பல் கயிறுகள்

ஒரு காலத்தில் கோங்கு மரப்பட்டைகளிலிருந்து எடுத்த நாரினைகார்டேஜ் ரோப்ஸ்(CORDAGE ROPES) என சொல்லப்படும் கப்பல்களில் பயன்படுத்தும் கயிறுகளைத் தயாரிக்க இதன் பட்டைகளை பயன்படுத்தினார்கள்.

புல்ரோப்> போல்ட் ரோப்> புட்ரோட்> டில்லர் ரோப்> பெல் ரோப்> பேக் ரேஸ்> மேன் ரோப் (PULL ROPE, POLT ROPE, FOOT ROPE, TILLER ROPE, BELL ROPE, BACK ROPE, MEN ROPE) என ஏழு விதமான கயிறுகள் கப்பல்களுக்கு  அத்தியாவசியமான கயிறுகள்.  இவற்றைப் பொதுவாக கார்டேஜ்; ரோப் என அழைக்கிறார்கள்.

பாரம்பரியமாக> கப்பல் அல்லது படகுகளை செலுத்துவதில் கயிறுகளுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.  ஒரு கைதேர்ந்த மாலுமிக்கு கயிறுகளை எப்படி பயன்படுத்துவது என்ற பயிற்சி அவசியம் என்கிறார்கள். 

நட்ட இடம் பூ பூக்கும்

ஈரச் செழிப்பான மற்றும் நல்ல வடிகால் வசதி கொண்ட மண் இதற்கு ஏற்றது: சாலை ஒரங்களில்> வீட்டுத் தோட்டங்களில்> பூங்காக்களில்> அலுவலக மற்றும் தொழிலக வளாகங்களில் அழகுக்காக நடலாம். 

ஆண்டு முழுவதும் இந்த மரங்கள்.  பூக்கும் என்பது இதன் சிறப்பு.  இன்னொன்று இந்த மரம் அநியாயத்திற்கு மிகவும் மிருதுவானவை.   

பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள் இலவு மரத்தின் இலைகள்> பூக்கள் மற்றும் பிசின் ஆகியவை பயன்படுகிறது. சீதபேதி> வயிற்றுப்போக்கு மற்றும் இருமல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

பஞ்சணை மரம் பல பயன் மரம்

இந்த மரத்தில் வடியும் பிசின் பல வகைகளில் பயனாகிறது: அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க> காலிகோ பிரிண்டிங் செய்ய> மிட்டாய்கள் செய்ய> மருந்துகள் செய்ய> பஞ்சணை மற்றும் தலையணை செய்ய. அத்தனைக்கும் மஞ்சள் இலவு பயன்படும்.    

இதன் எண்ணெயில் சோப்பு செய்யலாம்: பிண்ணாக்கை கால்நடைகளுக்கு தீவனமாகக் தரலாம்: பயிர்களுக்கு உரமிடலாம்> மரங்களை விறகாக பயன்படுத்தலாம்.

அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து    

சாதாரணமாக> அறுவை சிகிச்சையின்போது வலியினை தாங்குவதற்காக மக்க மருந்து தருவார்கள்.  அறுவை செய்யும் இடத்தை மட்டும் மரத்துப் போகும்படி செய்துவிட்டு> வலிக்குதா? லிக்காது. எரும்பு கடிக்க மாதிரி இருக்கும் என்று பேசிக்கொண்டே வெற்றிகரமாக அறுத்து முடித்துவிடுவார்கள்.  எனக்கு இதில் நிறைய அனுபவம் உண்டு பேண்ட் டாக.

மேஜர் சர்ஜரி    

உடைந்துபோன தொடை எலும்பை சரி செய்வதற்கான மேஐர் சர்ஐரி.  எனக்குத்தான். மயக்க  மருந்து கொடுத்துவிட்டு சர்ஐரி நடந்து கொண்டிருந்தது.  அப்போது டாக்டர்கள் சுவாரஸ்மாக பேசிக்கொண்டே எனக்கு சர்ஐரி செய்து கொண்டிருந்தார்கள்.  எனக்கு  ஆச்சரியமாக இருந்தது. அது என் காதிலும் அரசல் பொரசலாகக் கேட்டது.  அது ஒரு பரபரப்பான செய்தி.  அது ஒரு ஆன்மிகப் பெரியவரை கைது செய்தது பற்றியது. மயக்க மருந்து என்றதும் ஞாபகம் வருது.    

அதுபோல மயக்க மருந்துகள் தயார் செய்ய> இந்த மஞ்சள் இலவு மரத்தின் பிசினை பயன்படுத்தலாம்.  இதன் பட்டை> இலைகள்> வேர்கள்> பல விதமான நோய்களை குணப்படுத்தப் பயன்படும் என பார்த்தோம்.    

தூக்கி எறிந்தாலும் துளிர்விட்டு வளரும்

எல்லா மரங்களும் கிளைகளை வெட்டி வைத்தால் புதிய மரமாக வளராது.  ஆனால் சில மரங்களின் கிளைகளை வெட்டி வைத்தால் கூட வேகமாக வளரும்.  அப்படிப்பட்ட மரங்களில் இதுவும் ஒன்று. 

மஞ்சள் இலவின் ஒரு கிளையை எங்காவது தூரத் தூக்கி எறிந்தாலும் துளி ஈரம் இருந்தாலும் துளிர்விட்டு வளரும்.

தூசுதட்டி எடுத்த பழங்காலப் பெயர்கள்    

கோவில்களில் பூஜைக்கு உரிய பூக்களைத் தருவதால் இந்த மரங்களை கோவில் வளாகங்களில் வளர்ப்பதுண்டு.  சங்க இலக்கிய காலத்தில் பழக்கத்தில் இருந்த பல மரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. 

அந்த வகையில் தூசுதட்டி எடுத்த மஞ்சள் இலவின் பழைய பெயர்கள் கோங்கம் கணிகாரம்> மற்றும் குயாபவனி.

FOR FURTHER READING

(WWW. FLOVAFAUNAWEB.NPAICS.GOV.SG-COCHLO SPERMUM RELIGLOSUM)

PLEASE POST YOUR COMMENTS, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)

99999999999999999999

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...