Monday, June 12, 2023

YELLOW DRAGON’S WONDER LAND COLOMBIA மஞ்சள் டிராகன் பழங்களின் மகத்துவ பூமி கொலம்பியா

கொலம்பியாவின்
மஞ்சள் டிராகன் பழங்கள்

 

கொலம்பியா தென் அமெரிக்கவைச்  சேர்ந்த நாடு. மஞ்சள் டிராகன் பழங்களின் அதிசய பூமி கொலம்பியா. இது ஒரு பெரிய நாடு, 50 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடு, 70 வித்தியாசமான மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்டது என்றாலும் ஸ்பேனிஷ் மொழிதான் இங்கு அரசு மொழியாக உள்ளது.

ஆனால் கூட, இதர 68 மொழிகளுக்கு அந்தந்த பகுதிகளின் அரசு மொழியாக அந்தஸ்து தந்திருக்கிறார்கள். ஆங்கிலம் இரண்டு பகுதிகளில் அரசு மொழியாக உள்ளது.

பனாமா, வெனிசுலா, பிரேசில், ஈக்குவேடர், பெரு ஆகியவை கொலம்பியாவின் அருகமைந்த நாடுகள். கரிபியன் கடல் மற்றும் பசிஃபிக் பெருகடல் ஆகியவை கொலம்பியாவின் அருகமைந்த சமுத்திரங்கள்.

பழங்குடி மக்களின் பாரம்பரிய பழம் (TRADITIONAL FRUIT)

பல நூறு ஆண்டுகளாய் டிராகன் பழங்கள், பழங்குடி மக்கள் உணவாகவும், அன்றாட அசவுகரியங்களுக்கான கை வைத்தியமாகவும் தென் அமெரிக்க நாடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.

முக்கியமாக கொலம்பியா, ஈக்குவேடர், மற்றும் பொலிவியா, பெரு விலும் சாகுபடி செய்து வருகிறார்கள்.

மெஃக்ஸிகோ மற்றும் கலிஃபோர்னியா மற்றும் ஃபுளொரிடா –ஆகிய இடங்களில் மஞ்சள் ரகத்தை குறைவாக சாகுபடி செய்கிறார்கள். சந்தைகளிலும் விற்பனை ஆகிறது. 

மஞ்சள் டிராகன் பழ மரங்கள் (YELLOW DRAGON)

தென் அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் மஞ்சள் ரக டிராகன் பழங்களை பல நூறு ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்கள்.

தோல் மஞ்சள் தசை வெள்ளை (YELLOW SKIN WITH WHITE FLESH)

கவர்ச்சிகரமான மஞ்சள் நிறமான இந்த பழங்களின் தசை வெ ண் மை யா க இருக்கும். உள்ளே வெள்ளை வெளியே மஞ்சள். அதுதான் மஞ்சள் டிராகன்.

வெள்ளை தசையின் ஊடாக இதன் விதைகள் கருப்பாக இருக்கும். அவற்றை சாப்பிடலாம்.

அதிக சாறு, இனிப்பு (MORE JUICE & SWEET)

மஞ்சள் ரக பழங்களில் அதிக சாறுடையதாக இருக்கும், மற்ற ரகங்களைவிட மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

தாவரவியல் பெயர் (BOTANICAL NAME)

இந்த மஞ்சள் ரக டிராகன் பழங்களின் தாவரவியல் பெயர் செலினிசெரியஸ் மெகலாந்தஸ் (SELENICEREUS MAGALANTHUS).

இவற்றின் பொதுப்பெயர்கள், எல்லொ பித்தஹாயா, மற்றும் பித்தாயா அமரில்லொ (YELLOW PITAHAYA, PITAHAYA AMARILLO).

இருமுனை குவிந்த பழங்கள் (OBLONG SHAPED FRUITS )

மஞ்சள் ரகங்கள் ஒப்லாங் வடிவத்தில்,  பழங்களின் இருமுனைகள் குவிந்தும்  நடுப்பகுதி பருமனாகவும் இருக்கும்.

இதர ரக டிராகன் பழ ரகங்களைவிட மஞ்சள் ரக பழங்கள் கொஞ்சம் சிறிய அளவு பழங்களாக இருக்கும். சிவப்பு மற்றும் ஊதா ரகங்கள் பெரிய பழங்களாக இருக்கும்.

இந்த பழங்களின் நீளம் 10 செ.மீ ம், குறுக்களவு 7 செ.மீ. ம் இருக்கும்.

தொல்லை தராத முட்கள் (HARMLESS SPINES)

இந்த பழங்களின் மீது இருக்கும் முட்கள் சிறியதாக இருக்கும். பழங்கள் முதிரும்போது அவை தானாக உதிர்ந்து போகும். இந்த முட்கள் அறுவடையின் போது சிரமம் தராது.

இந்த முட்கள் பார்க்க சப்பாத்தி கள்ளிகளின் மீது இருக்கும் முட்களைப் போல கொத்தாக இருக்கின்றன.

ந்த மஞ்சள் ரகம் கொலம்பியா, பொலிவியா, ஈக்குவேடொர், பெரு, வெனிசுலா ஆகிய நாடுகள் மற்றும் மத்திய அமெரிக்க   நாடுகளில் சாகுபடி ஆகிறது.

பன்னிரண்டு மாதமும் அறுவடை (HARVEST ROUND THE YEAR)

ஃபிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்கள், பின்னர் ஜூன் முதல் ஆகஷ்டு வரை 3 மாதங்கள், செப்டெம்பர் முதல் டிசம்பர் வரை 4 மாதங்கள் இப்படி ஓர் ஆண்டில் 11 மாதங்கள் எந்த பயிர் அறுவடை ஆகும் ?

சொல்லப் போனால்  கொலம்பியாவில் வருஷத்தில் 12 மாதங்களும் அறுவடை ஆகிறது. ஆச்சரியமான வெப்ப மண்டல பழப்பயிர்.

ஊட்டச்சத்துக்கள் (NUTRIENT STATUS)

இதனைகற்றாழை செடிதானேஎன்று சிலர் இதை அலட்சியமாக நினைப்பார்கள். ஆனால் பொதுவாக எல்லா டிராகன் பழ ரகங்களுமே ஊட்டச்சத்து நிரம்ப உடையவை. 

வைட்டமின் தாது உப்புக்கள் (VITAMINS & MINERALS)

மக்னீசியம், பாஸ்பொரஸ், பொட்டாசியம், கால்சியம் ஆகிய தாதுஉப்புக்கள் நிரம்ப உள்ளன,

புரதச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ, சி, நயசின் ஆகியவையும் அபரிதமாய் உள்ளன.

நார்ச்சத்து (DIETRY FIBRE)

சிவப்பு ரகங்களைவிட அதிக டயட்டரி ஃபைபர் எனும் நார்ச்சத்து, மற்றும்  கணிசமான அளவு ஆண்டி ஆக்சிடெண்ட்டுகள் (ANTI OCCIDENTS), நன்மை தரும் ஃபேட்டி ஆசிட்கள் (FATTYACIDS)ஆகியவை மஞ்சள் ரகத்தில் நிறைய உள்ளன.

அதிக அளவு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் (OMEGA 3 FATTY ACIDS), மஞ்சள்  ரக   விதைகளில் ஆச்சரியப்படும் அளவில் உள்ளன.

எப்படி சாப்பிடலாம் ?

பறித்தவுடன் சாப்பிடலாம். ஒரு இரண்டுமணி நேரம் ரெஃப்ரிஜெரேட்டரில் வைத்தும் சாப்பிடலாம்.

தோலை சட்டை மாதிரி கழற்றலாம் (LOOSE JACKET SKIN )

மஞ்சள் ரகத்தின் தோலை ஒரு சட்டையை கழற்றுவது போல கழற்றலாம் என்கிறார்கள். அவ்வளவு சுலபமாம். அதன் பிறகு நம் இஷ்டம்தான். துண்டுதுண்டாக்கி சாப்பிடலாம்.

பழத்துண்டுகளை   நன்றாக காய வைத்தால்  நல்ல சிப்ஸ் கிடைக்கும்.

இதன் விதைகள் எள் விதைகளைப்போல மிகவும் சிறுசாய் இருக்கும். விதைகளை முகர்ந்தால் மனதைக் கவரும் பழ வாசனை வீசும்.

ஃப்ரூட் சாலட்- காக்டெயில் (FRUIT SALAD - COCKTAIL)

ஃப்ரூட் சாலடாக இதர பழங்களுடன் சேர்த்தும், சாஸ், சிரப், ஸ்மூத்திஸ், காக்டெயில்ஸ், சார்பெட், கிரானிட்டாஸ், ஃபிளேவர் பேஸ்ட்ரீஸ் ஆகியவை தயாரித்தும் சாப்பிடலாம்.

அறுவடை செய்த பழங்களை 2 முதல் 3 நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். ரெஃப்ரிஜெரேட்டரில் என்றால் ஒரு வாரம் வரைகூட வைத்திருக்கலாம்.

கொலம்பியா பழப்பயிர்களின் சொர்கம் (COLUMBIA HEAVEN OF FRUITS)

கொலம்பியா பழங்களின் சொர்கம், வட அமெரிக்கா, ஐரோப்பியாவில் கூட அவ்வளவு பழங்கள் இல்லை, அதுவும் வெப்ப மண்டல பழங்களின் சொர்கம்.

அங்கு விளையும் முக்கியமான வெப்பமண்டல பழங்கள்வாழைஅவக்கேடோஎலிமிச்சைபைன்ஆப்பிள்மற்றும் மா.

இவை சுவை, மலிவு, அதிக அளவில் கிடைக்கும். பயோ டைவர்சிட்டியில் உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்தபடியான நாடு. இங்கு இதுவரை 56000 தாவர இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன



 

 

 

 

 

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...