Wednesday, June 14, 2023

SEA OF GALILEE - கலிலீ

 

கடல்நீரை  நன்னீராக்கும்  ஆலை

WORLD'S WATER GIANT ISRAEL

11. உலகின் வாட்டர் ஜெயண்ட்  

இஸ்ரேல்

8888888888888888888888888888888888888888888 

 “தேவையைவிட  எங்களிடம் அதிகமான தண்ணீர்  இருக்குஅதுக்கு முக்கியமான காரணம்  இரண்டு….  ஒன்று  சாம்பல் நீரை  சுத்திகரிச்சி  பயன்படுத்தறதுஇரண்டாவது  கடல்  நீரை  நன்னீராக  மாற்றுவது உலகத்திலேயே  பெரிய  நன்னீராக்கும்  ஆலை  எங்ககிட்டத்தான்  இருக்கு, தெரியுமா உங்களுக்கு….? ”  என்கிறார்கள்  இஸ்ரேல்காரர்கள். 

வாட்டர் ஜெயண்ட்  

ரிவெர்ஸிபிள்   ஆஸ்மாசிஸ்  டீசல்  பெசிலிட்டி’  என்னும் தொழில் நுட்பத்தைப்   பயன்படுத்துகிறார்கள். இஸ்ரேல் வீடுகளுக்குத் தேவையான மொத்த நீரில்   55 சதம் கடல்நீரை  சுத்திகரிப்பு செய்வதனால் கிடைக்கிறது.  

உலகின் வறண்ட பிரதேசமாக இருந்த  இஸ்ரேல்  நாடு  இன்று வாட்டர் ஜெயண்ட்’. 

ஜூக்கர்பர்க்  டீசலைனேஷன்  பிளாண்ட்தான்   கடல்நீரை நன்னீராக்கும் உலகின் மிகப் பெரிய  ஆலை.  மிகக்குறைவாக  தண்ணீர் பயன்படுத்தும்  முறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் இங்கு நடக்கின்றன.  முக்கியமாக   சொட்டுநீர்ப்பாசனம்நீர் சுத்திகரிப்பு, மற்றும்  நன்னீராக்கும்  தொழில்நுட்பம் (DESALINATION TECHNOLOGY)  

எங்கள் ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கம்நெகேவ்  பாலைவனத்தை (NEGAVE DESERT)  மேம்படுத்துவதுதான். ஆனால் அதற்கான கண்டுபிடிப்புக்கள், பலநாடுகளுக்கும் பொருத்தமாக உள்ளன என்று சொல்லும் ஜூக்கர்பர்க்  டீசலைனேஷன்  ஆராய்ச்சி  நிலையத்தின் விஞ்ஞானி  ஆஸ்நாட்  ஜில்லர்  இன்று கடுமையான வறட்சியினால் பாதிக்கப்படாத  ஒரே  நாடு  இஸ்ரேல் என்கிறார்.  

ஆப்பிரிக்க  கிராம மக்களின்    தண்ணீர்  பஞ்சத்தையும்  போக்குவதற்;கு    ரீசைலண்டு  வெல் சிஸ்டம்  மற்றும் பயாலஜிக்கல்  டைஜஸ்டர்ஸ்   என்பவற்றை   உருவாக்கி  உள்ளனர்  ஜூக்கர்பர்க்  விஞ்ஞானிகள்.

2008 ஆம் ஆண்டு கடுமையான வறட்சியில் சிக்கியது இஸ்ரேல்.  நீரைப்பொருத்தவரை  சீ  ஆப்   கலிலீ’ (SEA OF GALILEE) என்பதுதான்  இஸ்ரேலின்  சொர்க்க பூமி. கலிலீ ஏரியின் பரப்பு 166 சதுர கி.மீ. கடல் மட்டத்தைவிட 209 மீட்டர் கீழ்மட்டத்தில் அமைந்துள்ளது. இதற்கு தேவையான நீர் ஜோர்டான் ஆற்றிலிருந்து கிடைக்கிறது. ஓரளவு நிலத்தடி ஊற்றும் இதற்கு உதவுகிறது.

அதன் நீர்மட்டம்  அபாயகரமான  குறியைத் தொட்டு பயமுறுத்தியது.  நிறைய தடை உத்தரவுகள்  போடப்பட்டன. விவசாயிகளின் வயல்களில் விளைந்தது எதுவும் வீடுவந்து சேரவில்லை. 

இஸ்ரேலின் அண்டை தேசமான  சிரியாவை  வறட்சி வாட்டி எடுத்தது. நிலத்தடி நீர்மட்டம் கைக்கு எட்டாத ஆழத்தில், ஒளிந்து கொண்டது. 1600 அடிகள் துளையிட்டாலும்தண்ணீருக்கு பதிலாக காற்று மட்டுமே  வீசியது.  கிணறுகள் அனைத்தும் வறண்டு போயின. வயல்களில் புழுதிப்புயல் சுழன்று வீசியது. 

விவசாயிகள்  பஞ்சம் பிழைக்க  பட்டினம் போனார்கள்.  நகரங்களில் விதிகள் மீறிய குடியிருப்புக்கள்            காளான்களாய்   முளைத்தன.  வேலையில்லா திண்டாட்டம்  அதிகரித்தன.  குற்றங்கள்  மலிந்தன.  சிரியா அரசு செய்வதறியாது  தவித்தது.  

இஸ்ரேலின் அருகமைந்த  மிடில் ஈஸ்ட்  ஈரான்,  ஈராக், ஜோர்டான்  ஆகிய நாடுகளும் தப்பவில்லை.  வறட்சி  வறுத்தெடுத்தது.  இதில்   ஆச்சர்யமாக  தப்பிப்  பிழைத்தது  இஸ்ரேல் மட்டும்தான்;. 

இஸ்ரேலின்  தேவையைவிட இப்போது  கை வசம் இருக்கும்       தண்ணீர்  அதிகம்

நீருக்காக போராடுவது  என்பது  வார்த்தையில் மட்டும் இல்லாமல்அங்கு செயல்வடிவம் பெற்றும் உள்ளது.  

இஸ்ரேல் நாடு முழுவதிலும் பயன்படுத்தும்   கழிப்பறை மற்றும்  குளியலறைகளில் பயன்;படுத்தும்  தண்ணீரின்  அளவைக் குறைக்க என்ன செய்யலாம் ? யோசித்தார்கள்.  நாடு முழுவதும் ஒரு சிறு கருவியினை பொருத்தினார்கள்.  அதில் வெளியேறும் நீரை  சுத்திகரித்தார்கள். 86 சதவீதநீர் கிடைத்தது. அப்படியே அதனை பயிர்களுக்கு பாய்ச்சினார்கள்.

இன்று    உலகத்திலேயே அதிக அளவு  கழிவுநீரை  சுத்திகரித்து  பயன்படுத்தும் நாடுகளில் முதல் நிலையில்  உள்ள இஸ்ரேல்.  அதற்கு அடுத்து ஸ்பெயின் நாடு. இரண்டாம் நிலையில் இருக்கும் ஸ்பெயின்நாடு உபயோகிப்பதே வெறும் 19 சதம்தான்.

ஆயினும்  ஆண்டுக்கு இஸ்ரேலுக்குத்  தேவைப்படும்  சுத்தமான நீர்   1.9  பில்லியன்  கன  மீட்டர்.  கைவசம்   உள்ள 1.4  பில்லியன்   கன மீட்டர்  நீரை, இயற்கையான நீர் வளங்கள் தருகின்றன.  இன்னும் 500 மில்லியன்  கன மீட்டர்  நீர்  தேவை.

இதுவரைஇஸ்ரேல் அமைந்துள்ள  கடல்நீரிலிருந்து  நன்னீர்   உற்பத்தி  கேந்திரங்கள்   (க.ந.உ.கே.)   கணிசமான அளவு நீரை ஓராண்டில்  சுத்திகரித்துத் தருகின்றன. 

இந்த  க.ந.உ.கே.  அனைத்தும் முழுமையாக இயங்கும்போது, அவர்கள் தேவைக்கும்   அதிக  நீரை கைவசம் வைத்திருப்பார்கள்.   அப்படி உபரியாக  இருக்கும்  தண்ணீரை  என்ன செய்யலாம் என்று  இப்போதே திட்டமிட துடிக்கிறார்கள்.

1990 ஆண்டிலிருந்தே   நீரிலிருந்து உப்பு நீக்கும் (டீசலைனேஷன்)  தொழில் நுட்பத்தை  கையாளுகிறார்கள். ஆனால் அப்போதைய உற்பத்தி செலவைவிடஇப்போது  கணிசமாக  குறைந்துள்ளதாம். டீசலைனேஷன்  பிளாண்ட்களில்  ஆயிரம்  லிட்டர் தண்ணீர்  உற்பத்தி  செய்ய  ஆவது  வெறும் 58  செண்ட்தானாம்.

இஸ்ரேலியர்கள் ஒரு குடும்பத்திற்கு, தண்ணீர் விநியோகத்திற்கு  அரசு  30  யூ.எஸ்.  டாலர்  வசூல்  செய்கிறது.  இது   அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரைவிட நகரைவிட குறைவு.  எங்கள் ஊரில் தண்ணீர்  ரொம்ப சீப் என்கிறார்கள் இஸ்ரேலியர்கள். 

நீரை சேதம் செய்யா தேசம் எங்களுடையது”  என்று மார்தட்டுகிறார்கள்  இஸ்ரேல்காரர்கள்.

சொட்டுநீர்ப்பாசனம்நீர் சுத்திகரிப்பு, மற்றும்  நன்னீராக்கும்  தொழில்நுட்பம் (DESALINATION TECHNOLOGY) , இந்த மூன்று அம்சங்களிலும் நாமும் கவனம் செலுத்தினால் நாமும் வாட்டர் ஜெயண்ட் ஆகலாம்.  

நான் சொல்லுவது சரியா ?

PLEASE POST A COMMENT ON THIS CONTENT AND ITS USEFULNESS, REGARDS - GNANASURIA BAHAVAN D (AUTHOR)

888888888888888888888888888888888888888888888

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...