Wednesday, June 7, 2023

WORLD’S 2ND SWEETEST WATER SIRUVANI உலகின் 2 வது சுவையான நீர் சிறுவாணி

 


உலகத்திலேயே சுவையான தண்ணீர் எது என்று என்னை கேட்டால் சிறுவாணி என்றுதான் நான் சொல்லுவேன் காரணம் நான்கு ஆண்டுகள் கோயம்புத்தூரில் நான் விவசாய கல்லூரியில் படித்த போது அந்த தண்ணீரை தான் குடித்தேன்.

கோயம்புத்தூரிலிருந்து  கூப்பிடும் தூரம் (PROXIMAL TO COIMBATORE)

சிறுவாணி ஆறு கோயம்புத்தூருக்கு கூப்பிடும் தூரத்தில் கேரள மாநிலத்தில் ஓடும் ஆறு. இது நமது பவானி மற்றும் காவிரி ஆற்றின் துணை ஆறு கோயம்புத்தூரில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

உலகின் சுவையான தண்ணீர் (SWEETEST WATER)

உலகின் இரண்டாவது சுவையான தண்ணீர் சிறுவாணி என்று சொல்லுகிறது கூகுள். அதற்கு முக்கியமான காரணம் கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் இருக்கும் மூலிகை மரங்களும் செடிகளும் கொடிகளும் தான் என்கிறார்கள். 

சிறுவாணியில் வரும் தண்ணீர்(HERBAL WATER)

சிறுவாணியில் வரும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் அடர்ந்த காடுகளில் இருக்கும் மூலிகை மரங்களில் செடிகளில் கொடிகளில் தொட்டு தடவி குளித்து அதன் சாராம்சத்தை எடுத்து வருகிறது என்கிறார்கள்.

கோவை நகரின் தாகம் தீர்க்கும் ஆறு (DRINKING WATER FOR COIMBATORE).

கோவை நகரின் குடிநீர் தேவைகளை நிறைவேற்ற வெள்ளைக்காரர்களால் சிறுவாணியில் ஒரு சிறு நீர் தேக்கத்தை அன்று கட்டினார்கள். இன்றும் கூட கோயமுத்தூர் பெருநகரின் தாகம் தீர்ப்பதில் முதல் நிலையில் இருப்பது சிறுவாணி ஆறு தான். 

புதிய அணை (1973 DAM ON SIRUVANI)

வெள்ளைக்காரர்களுடைய ஆட்சிக்கு பின்னால் 1969 ஆம் ஆண்டு தமிழக அரசும் கேரள அரசும் ஆய்வுகள் நடத்தி 1973 ஆம் ஆண்டு ஒரு புதிய அணையை கட்ட முடிவு செய்தார்கள். அதன்படி அந்த அணையை கேரள அரசு கட்டியது. அதன் பராமரிப்பை கேரள அரசு தமிழக அரசிடம் ஒப்படைத்தது. 

சிறுவாணியின் துணை ஆறுகள். (PATTIYAR & PAMBAR)

பல சிறு சிறு ஓடைகள் சிறுவாணிக்கு துணை ஆறுகளாக செயல்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை இரண்டு. அவை பட்டியார் மற்றும் பாம்பார்.

முத்திக்குளம் நீர்வீழ்ச்சி(ORIGIN MUTHIKULAM FALLS)

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் முத்திக்குளம் என்ற இடத்தில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி.இந்த நீர்வீழ்ச்சிக்கு பிறகு தான் சிறுவாணி என்னும் ஆறு உருவாகிறது. 

பவானி ஆற்றுடன் சங்கமம் (CONFLENSE WITH BAVANI RIVER)

கேரளா மாநிலத்தில் பிறக்கும் இந்த சிறுவாணி ஆறு பாலக்காடு மாவட்டத்திலேயே 35 கிலோமீட்டர் ஓடி கூடப்பட்டி என்னும் இடத்தில்

கின்னஸ் அங்கீகரித்த நீர் (GUINNES AWARD)

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியின் நீர் தான் முதல் தரமான சுவையான தண்ணீர் என்று கின்னஸ் அங்கீகரித்துள்ளது. (GUINNES AWARD). இதன் பெயர் டொமாலிஸ்டஸ் நீர்வீழ்ச்சி. இது கைபிரான் என்று சொல்லும் நகராட்சியின் எல்லையில் உள்ளது. இதற்கு அடுத்த சுவையான நீர்தான் சிறுவாணி நீர். 

ஆமாம், நீங்கள் யாராச்சும் பிலிப்பைன்ஸ் போயிறீர்களா ? டொமாலிஸ்டஸ் நீர்வீழ்ச்சி போனீர்களா ? அந்தத் தண்ணிய குடிச்சிங்களா ? எப்படி ? 

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...