Sunday, June 18, 2023

WILLOW - LEAVED WATER CROTON) 34. பாலின நோய்களை குணப்படுத்தும் காட்டலரி

 

பாலின நோய்களை குணப்படுத்தும்
காட்டலரி

அரளிச் செடிகள் போல, உடல் உபாதைகளுக்கு உரிய மருந்தாகப் பயன்படுத்தலாம், ற்றங்கரைகளில் வளரும் சிறுமரம், சிறுநீர்ப்பைகளில் கற்கள் உருவாவது, பாலின நோய்களை குணப்படுத்துவது உட்பட பல நோய்களுக்கு கைமருத்துவம் செய்ய கைகொடுப்பது இந்த கட்டலரி.

பொதுப் பெயர்: வில்லோ லீவ்டு வாட்டர் குரோட்டன் (WILLOW LEAVED WATER CROTON)

தாவரவியல் பெயர்: ஹோமோனியா ரிப்பேரியா (HOMONOIA RIPARIA)

தாவரக் குடும்பம்: ஈப்போர்பியேசி (EUPHORBIACEAE)

தாயகம்: இந்தியா கம்போடியா, சைனா

பிற மொழிப் பெயர்கள்:

தமிழ்: காட்டலரி (KATTALARI)

இந்தி: ஷெர்னி (SHERNI)

மலையாளம்: நீர்வஞ்சி, புழவஞ்சி (NEER VANJI, PUZHA VANCHI)

மராத்தி: ரான் கனேர், ஷெர்னி (RAANKANER, SHERNI)

தெலுங்கு: அடவி கண்ணேரு (ADAVI GANNEDU)

கன்னடா: ஹோலி நாகி, நீரு கனிகலு (HOLE NAGE, NIRU KANIGALU)

ஒரியா: தோத்தோரி (THOTHORI)

அசாமீஸ்: ஹில் கடம் (HILL KADAM)

சமஸ்கிருதம்: வேட்டசா (SHALALETTASA)

வீட்டரளி நம் எல்லோருக்கும் தெரியும், ஒரு காலத்தில் வீட்டரளியாய் இருந்தது இன்று ரோட்டரளியாக ஆகிவிட்டது, தேசிய நெடுஞ்சாலையில் இன்று திரும்பிய பக்கம் எல்லாம் அரளிதான். இது காட்டலரி.

அரளி என்பதும் அலரி என்பதும் ஒன்றா? வேறுவேறா? நிறைய பேருக்கு இந்தச் சந்தேகம் இருக்கும்.  எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.  இரண்டும் ஒன்றுதான் என்றுதான் நானும் உறுதியாக நம்பினேன். 

ஆனால் காட்டலரி பற்றிய தகவல்களைத் திரட்டும்போது, அதுபற்றி எனக்கு சந்தேகம் எழுந்தது. 

காரணம், அரளிச் செடிகள் அத்தனையும், அப்போசயனேசி (APOCYANACEAE) குடும்பத்தைச் சேர்ந்தவை.  ஆனால் இந்தக் காட்டலரி ஈப்போர்பியேசி (EUPHORBIACEAE) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.    

என்னிடம் புராதனமான லிஃப்கோ தமிழ் கையகராதி ஒன்று உள்ளது.  அதில் பார்த்தேன்.  அதுப்படி அரளியும் அலரியும் ஒன்றுதான்.  சரி காட்டலரி இருக்கிறதா என்றும் பார்த்தேன்.  காட்டெருமை உள்ளது.  காட்டேரி உள்ளது.  காட்டலரி இல்லை.    

அதனால் நாம் அரளி என்பதும் அலரி என்பதும் வேறுவேறு செடிகள் என்று புரிந்து கொள்ளுவோம்.  ஆனால் இதன் இலைகள் அதேமாதிரி.  இலைகள் நீளநீளமானவை.  இலை நுனி கூர்மையானவை.  இலைகளின் மேற்புறம் பளிச் சென்ற பச்சை நிறமானவை. இலையின் அடிப்புறம் கொஞ்சம் வெளிர்பச்சையும் சாம்பல்  நிறமும் கலந்த மாதிரியானவை

பரவியுள்ள இடங்கள்       

நீர் நிலைகளில் குறிப்பாக ஆற்றங்கரைகளில் வளரும் சிறுமரம் அல்லது பெருஞ்செடி.  இதனை மாங்குரோவ் இனம் என்றும் சொல்லுகிறார்கள். 

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த காட்டலரி அதிகமாகக் காணப்படுகிறது. அவை, கம்போடியா, சைனா, இந்தோனேசியா,லாவோஸ்பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, டைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம்..

மருத்துவப் பயன்கள்      

அரளிச் செடிகளைப்போல இதனையும் உடல் உபாதைகளுக்கு உரிய மருந்தாகப் பயன்படுத்தலாம்.  இதன் வேர்களிலிருந்து தயாரிக்கும் வேர்க்கஷாயத்தைக் குடித்தால் மலச்சிக்கலை குணப்படுத்தும்,  லமிளக்கியாக செயல்படும்,  சிறுநீர் கழிப்பதில் இருக்கும் சிரமத்தைப் போக்கும்.  

இது மூல நோயையும் குணப்படுத்தும்.  சிறுநீர்ப்பைகளில் கற்கள் உருவாவதைக் கட்டுப்படுத்தும். அதுபோல் பாலியில் நோயான மேகவெட்டை (GONORRHOEA) நோயை குணப்படுத்தலாம்.  அதுமட்டும் இல்லாமல் மிகவும் தீவிரமான பால்வினை நோய் சிபிலிஸ்சைக் கூட கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது இந்த காட்டலரி.

 “மலேரியாவை குணப்படுத்தும்      

இதன் மரக் கட்டைகளிலிருந்து கஷாயம் தயாரித்தும் குடிக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.  உடலில் ஏற்படும் ஸ்கேபிஸ் என்று சொல்லும் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களையும் அது குணப்படுத்தும்.

நீர் ஆதாரங்களின் கரைகளை பலப்படுத்தும்      

ஆற்றங்கரைகள், மற்றும் ஒடைக்கரைகளில் மண்அரிப்பைத் தடுக்க காட்டலரியைப் பயன்படுத்தலாம்.  காட்டலரி மரங்களை ஒரு முறை நட்டுவிட்டால் அவை புதர் போல மண்டிவிடும். 

ஏறத்தாழ இவையும், அரளிச் செடிகள் போலவே வளரும், ஆழமான மற்றும் பரந்துபட்ட வேர் அமைப்பினை உருவாக்கிக் கொள்ளும் ஒருமுறை கன்றுகள் வளர்ந்துவிட்டால், அவ்வளவு சுலபமாக அவை மடித்து போகாது. 

ஆனால் இதற்கு ஈரச் செழிப்புடைய் நிலவாகு அவசியம் வேண்டும்.  இந்த அடிப்படைப் பண்புகளினால், ஜாவா மற்றும் சுமத்திரா ஆகிய தீவுகளில் ஆற்றங்கரைகளைப் பாதுகாக்க காட்டலரியைப் பயன்படுத்தி வருகிறார்கள். 

எப்படிப்பட்ட மண்வகைகளில் வளரும்?    

மணல், கிரேனைட் கற்கள் மற்றும் சுண்ணாம்புக்கற்கள்  நிறைந்த மண்கண்டம் எரிமலையினால் வெளித்தள்ளப்பட்ட மண்கண்டம் என அனைத்திலும் நன்றாக வளரும். 

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கூட சாகாது.  ஆச்சரியமான ஒரு செய்தி நம்புவதற்குக் கூட கடினமாக உள்ளது.  வெள்ள நீரில் 9 மாதங்கள் வரை மூழ்கி இருந்தாலும் அது வடிந்த பின்னாலும் செடிகள் சாகாது என்று சொல்லுகிறார்கள். 

அதுபோல இதன் விதைகளும் அபூர்வமான சத்தி படைத்தவை.  வெள்ள நீரால் பல இடங்களுக்கும் இதன் விதைகள் எடுத்த செல்லப்படுகின்றன.  இந்த விதைகள் கடலை சென்றடைந்தால் கூட அதன் கரைகளில் உப்புத்தன்மையை சட்டை செய்யாமல் முளைத்து எழும் என்று சொல்லுகிறார்கள். 

அந்த அளவிற்கு இதன் விதைகள் கடினமானவை.  நீண்ட நாட்களுக்கு அதன் முளைப்புத் தன்மை நீடித்த இருக்கும்.

இதர பயன்கள்      

அழகு மரங்களாக> மருத்துவப் பயன்தரும் மரங்களாக> ஆற்றங்கரைகளில்> மண் அரிப்பைத் தடுத்துக் கரைகளை பலப்படுத்தும் மரங்களாக பயன்படுவதோடு வேறுபல பயன்களையும் தருகிறது இந்த காட்டலரி மரங்கள். 

இந்த மரங்கள் தனது எல்லா பாகங்களிலும் டேனின் சத்தினை அதிகம் வைத்துள்ளது.  இதன் விதையில் கொழுப்பு எண்ணெயை (FATTY OIL) வடித்து எடுக்கலாம். 

இதன் பட்டைகளில் உறுதிமிக்க கயிறுகள் தயாரிக்கலாம்.  கம்போடியா நாட்டில் கூந்தல் தைலம் தயாரித்துப் பயன்படுத்துகிறார்கள்.  இதன் வேர்ப்பகுதி மரங்களில், கத்தி சுத்தி போன்ற கருவிகளுக்கு கைப்பிடிகள் செய்யலாம். 

இதன் கிளைகள், மரங்கள், குச்சிகள் மற்றும் சிம்புகள் அடுப்பெரிக்த அற்புதமான விறகாகின்றன.

புதிய கன்றுகள்    

இதன் விதைகள், எப்படிப்பட்ட மண்ணிலும், நீரிலும், தாமதமாக விதைத்தால் கூட வளரும் தன்மை உடையது.  விதைகளுக்காகக் கூட காத்திருக்க வேண்டாம்.  இதன் கிளைகளை வெட்டி நட்டு வைத்தால் கூட அழகாக வளரும் இதன் கன்றுகள்.  ஈரச் சூழலில் மட்டும் இருக்கும் இடங்களில்  நட்டால் போதுமானது.  எவ்விதமான சிரமும் இல்லாமல் சுலபமாக முளைக்கும்.

இலைக்கணு பூக்கள்    

இலைக் கணுக்களில் தோன்றும் ஸ்பைக்ஸ் என்னும் வகையைச் சேர்ந்த பூக்கள்.  பளிச் சென்ற சிவப்பு நிறத்தில் இருக்கும்.  இலைகளை விட பூக்கள் நீளம் குறைவாக இருக்கும்.  எப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து மாதங்கள் பூக்கும்.

தமிழ்நாடு கேரளா

கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல் நாமக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, திருச்சிராப்பள்ளி> திருநெல்வேலி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த காட்டலரி மரங்கள் இருக்கின்றன.  இந்தியாவில் தமிழ்நாடு உட்பட, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மத்தியப்பிரதேசம்; மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளன.

வேண்டுகோள்,  உங்கள் பகுதியில் காட்டலரி இருந்தால் சொல்லுங்கள்.  புகைப்படம் எடுத்து அனுப்பி வையுங்கள்.  விதை சேகரியுங்கள்.  கன்றுகள் உற்பத்தி செய்யுங்கள்.  நடுவதற்குக்  நண்பர்களுக்குக் கொடுங்கள்.

TO READ FURTHER

1.      WWW.EN.WIKIPEDIA.ORG / HOMONEA RIPERIA.

2.      WWW.FLOWERS OF INDIA.NET / “WILLOW LEAVED WATER CROTTON”

PLEASE POST A COMMENT, GNANASURIA BAHAVAN D, (AUTHOR)

999999999999999999999999999999

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...