மூட்டுவலியை குணப்படுத்தும்
காட்டுநாரத்தை
காட்டுநாரத்தை> கடாநாரத்தை> காட்டு எலிமிச்சை> காட்டு நாரங்கம் என பல
பெயர்களில் அழைக்கப்படும், இந்திய மரம், தமிழகத்தில் சங்க காலத்தில் குறுந்தம்> குரா என
அழைத்த மரம், மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றிற்கு காலம்
காலமாக மருந்து தரும் மரம்> கொஞ்சம்
ஆராய்ச்சிகளை> முடுக்கி விட்டால் எதிர்காலத்தில்
ஏகப்பட்ட நோய்களை குணப்படுத்த முடியும். காட்டு
நாரத்தை வீட்டு நாரத்தை ஆகும். தோட்ட நாரத்தை ஆகும்.
தாவரவியல் பெயர்:
பேம்புரூஸ் மிஷனிஸ் (PAMBURUS
MISSIONIS)
தாவரக் குடும்பம்
பெயர்: ரூட்டேசி (RUTACEAE)
தாயகம்: இந்தியா
மற்றும் ஸ்ரீலங்கா
பொதுப் பெயர்கள்: (WILD
ORANGE)
காட்டு நாரத்தையின்
பல மொழிப் பெயர்கள் (VERNACULAR
NAMES)
தமிழ்: காட்டுநாரத்தை> கடாநாரத்தை> குறுந்தம்> காட்டு எலிமிச்சை> காட்டு நாரங்கம், குரா .(KATTU NARATHTHAI, KADAA NAARATHTHAI,
KURUNTHUM, KATTU ELIMICHCHAI, KATTU NARANGAM, KURA )
ஆங்கிலம்: ஒயில்ட் டேஞ்சரைன்> பாம்புரஸ் (WILD
TANGERINE, PAMBURUS)
தெலுங்கு: அடவி
நிம்மா (ADAVI
NIMMA)
இலங்கை: பாம்ப்புரா (PAMPURA)
இலங்கயில்
பேம்புரா
நாரத்தை வகையைச் சேர்ந்த முள்ளுடைய
சிறிய மரம். ஆறு மீட்டர் உயரம் வரை
வளரும். ஸ்ரீலங்காவில் அதிகம் பரவியுள்ள
மரம். அங்கு இதன் பெயர் பேம்புரா.
அந்த
காலத்துப் பெயர் குருந்தம்
இதன் இலைகள்.
பட்டைகள் பாரம்பரிய மருந்தாகி பல நோய்களை குணப்படுத்த உதவும். இந்தியாவின் முக்கிய மூலிகை மரங்களில் ஒன்று.
குருந்து
குருந்தம் எது சரி ?
குருந்து
என்பதை காட்டு எலுமிச்சை என்றும் ஆங்கிலத்தில் “ஒயில்டு லைம்”
என்றும் லிஃப்கோவின் தமிழ் தமிழ் ஆங்கில அகராதியில் குறிப்பிடுகிறார்கள்.
குருந்து
பரவி இருக்கும் இடங்கள்
தமிழ்
நாட்டில்,
சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி,
தர்மபுரி, விழுப்புரம், மற்றும்
கடலூர் மாவட்டங்கள்.
ஆந்திரப்பிரதேசத்தில், நெல்லூர், கடப்பா, சித்தூர் மாவட்டங்கள்.
மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டம்.
மகாராஷ்ட்ராவில்
மட்டும் அனைத்து மாவட்டங்களிலுல் குருந்து என்னும் இந்த காட்டு நாரத்தை மரங்களைப் பார்க்கலாம்.
சங்க இலக்கியத்தில் ‘குருந்து’ என்றும்
குரா என்றும் அழைக்கப்பட்ட இது ஒரு தல
விருட்சமும் கூட.
ஆயுர்வேத
மருத்துவம்
மூலம்> எலும்பு முறிவு> பாம்புக்கடி> ஆசனவாய் வெடிப்பு> குழந்தைப் பேற்றுக்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் உடல்
அசௌகரியங்களை தீர்க்க இந்த மரத்தின் கட்டைகள் மற்றும் இலைகளை ஆயுர்வேத மருத்துவம் பயன்படுத்துகிறது.
அரிதாக பயிர் செய்கிறார்கள்
மார்ச் மற்றும்
ஏப்ரல் மாதங்களில் பூக்கும். ஆகஸ்ட்
செப்டெம்பர் மாதங்களில் காய்க்கும்.
இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் மரம்.
தமிழ்நாடு மற்றும்
ஆந்திரப்பிரதேசத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.
அரிதாக இதனை பயிர் செய்கிறார்கள்.
கட்டை
மரமாகவும் பயன்படும்
காட்டு நாரத்தை மரங்களை
கட்டைமரமாகப் (TIMBER
WOOD) பயன்படுத்தலாம்.
நடுத்தரமான கடினத்தன்மை உடைய மரம்.
அதனால் பலவகையான மரவேலைகளுக்கும் இதனைப் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக மேஜை நாற்காலி போன்ற மரச்
சாமான்கள் மற்றும் பொருட்களை பேக்கிங் செய்யும் மரப்பெட்டிகள் செய்ய மரங்கள் தரும்.
மூட்டுவலி
நீக்கும்
இதன் பழத்திலிருந்து
எடுக்கும் எண்ணெய் மருந்தாகப் பயன்படுகிறது.
கடுமையான மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் போன்றவற்றிற்கு இதன் எண்ணெயைக்
காலம் காலமாக மருந்தாகக் கொடுக்கிறார்கள்.
கைகால் வீக்கம்> எலும்பு முறிவு> மூலம்> ஆசனவாய்க் கட்டிகள் ஆகியவற்றை இதன் இலைச் சாற்றினைப் பயன்படுத்தி
வெற்றிகரமாக குணப்படுத்துகிறார்கள்.
பெண்களுக்கு
கஷாயம்
இலைகளில் தயாரிக்கும்
கஷாயத்தை மருந்தாகக் கொடுத்து> பிரசவம் ஆனப் பெண்களுக்கு
அவர்களின் உடல்பலவீனத்தைப் போக்குகிறார்கள்.
ஜுரம் மற்றும் சளித் தொல்லையைப் போக்கவும் இதனையே மருந்தாகத் தருகிறார்கள்.
பாக்டீரியாக்களை எதிர்க்கும்
சக்தி போதுமான அளவு காட்டு நாரத்தையில் உள்ளது என கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் நாகர்
கோவிலில் உள்ள எஸ்.டி. இந்து காலேஜ் (ST.HINDHU
COLLEGE) மற்றும்> களியகாவிளையில் உள்ள மரகாரா கத்தோலிக் கல்லூரிகளைச் (MARAKARA
CATHOLIC COLLEGE) ஆராய்ச்சியாளர்கள் இதனை
கண்டுபிடித்துள்ளார்கள்.
அதுபோல மூட்டுவலி மூட்டுப்பிடிப்பு போன்ற ஆர்த்தைரைடிஸ் தொடர்புடைய பிரச்சினைகளை
தீர்ப்பதற்கும் காட்டுநாரத்தையின் இலைகளை அற்புதமான பலன் தரக்
கூடியது என ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுகின்றன.
இது குறித்த
ஆராய்ச்சியை ஆந்திரப் பிறதேசத்தின் அனந்தப்பூர் ஜவஹர்லால் நேரு> டெக்னலாஜிகல் யுனிவர்சிட்டி மற்றும் ஆயில் டெக்னாலாஜிpகல் அன்ட் பார்மசூட்டிகல் ரிசர்ச் இன்ஸ்டியூட்
இணைந்து இந்த செய்து முடித்துள்ளார்கள்.
தல மரம் எனும்
தல விருட்சம்
நாகப்பட்டினம்
மாவட்டத்தில் கோடியக்காடு, கோடிக்கழகர் கோயில்,
திருவிடைச்சுழி காமேஸ்வரர் கோயில் இரண்டிலும் இது தலமரம்.
இந்த மரத்தின்
பழந்தமிழ்ப் பெயர் குருந்த மரம். இது
திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலின் தலமரம்.
முள்ளுள்ள இந்த
நாரத்தை மரத்தை> காட்டு எலுமிச்சை என்னும் காட்டு நாரங்கம்
என்னும் சொல்லுகிறார்கள்.
இதில் சிறு குருந்தம் மற்றும் பெருகுருத்தம் என இரண்டு வகைகள்
உள்ளன. இதன் இலை> பழம்> பட்டை ஆகியவை மருத்துவப்பலன் உள்ளவை என
தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
உடல் வெப்பம்
அகற்றுதல்> பசித் தூண்டுதல்> வாய்வகற்றுதல் போன்ற மருத்துவக் குணங்களைக் கொண்டது என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“மரம் வாழ்சிறைவண்டு
பெடைபுல்கிக்
செய்வழிபாசிங் குற்றாலம்…….”
1.99. வழ.
‘திருமுறை’
யில் பல இடங்களில்
குருந்த மரத்தைக் குறிப்பிட்ட பல பாடல்களைப் பார்க்க முடிகிறது. சங்க இலக்கியங்களிலும் ‘குருத்தம்’ பற்றிய பல பாடல்கள்
உள்ளன.
அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்து வாதவூரார் கீழக்கரைக்குக்
குதிரை வாங்கச் சென்றபோது குருந்த மரத்தின்
கீழிருந்து இறைவன் ஆட் கொண்டு அவரை மாணிக்கவாசகராக்கினார்.
அதற்குரிய தலம்தான் திருப்பெருந்துறை
ஆவுடையார் கோவில்> இது புதுக்கோட்டை
மாவட்டத்தில்> அறந்தாங்கிக்கு அருகே அமைந்த ஊர்.
அந்த நாட்களில்
திருப்பெருந்துறை. குருந்தம் மரங்கள் நிறைந்த
வனமாக இருந்தது.
ஆதனால்தான் திருப்பெருந்துறையின் பழம்பெயர் ‘குருந்தவனம்’
TO
READ FURTHER
1. WWW.PITCHANDIULAMFOREST.ORG
“PAMBURUS MISSIONIS”
2. WWW.INDIA BIODIVERSITY.ORG’ PAMBURUS MISSIONIS’.
8. திருப்பனந்துறை
ஆவுடையார் கோயில்; (WWW.SHAIVAM.ORG)
PLEASE
POST A COMMENT, REGARDS- GNANASURIA BAHAVAN D (AUTHOR)
999999999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment