தேக்கு
மரத்திற்கு சமமான மரம். இனிப்பும் புளிப்புமான ஆரஞ்சு நிற
பழங்க, கேரள மாநிலத்தின்
ஓணம் பண்டிகை படகுபோட்டி புகழ் பாம்புப் படகுகள்
செய்ய மரக்கொடையும், ஆண்மைப்பெருக்கியான மருந்தும் தரும் மகத்துவம் கொண்ட மேற்குத்தொடர்ச்சி
மலைமரம் அயினிப்பலா. பலவகை மரச்சாமான்கள் செய்ய> வீடுகள் மற்றும் இதர
கட்டிடங்களின் கட்டுமான வேலைகளுக்கும் அயினிப்பலா பயன்படும்.
பொதுபெயர்: ஒயில்டு ஜாக் (WILD JACK)
தாவரவியல் பெயர்:
அர்டோகார்பஸ் ஹிர்சுட்டஸ் (ARTOCARPUS HIRSUTUS)
தாவரக் குடும்பம்
பெயர்: மோரேசியே (MORACEAE)
தாயகம்: இந்தியாவிற்கு சொந்தமான மரம் இது.
பல மொழிப் பெயர்கள்
தமிழ்: அயினிப்பலா, அக்கினி,
அஞ்சலி, சக்கை, கானல்பலா,
காட்டுப்பலா, பேய்ப்பலா, குரங்குபலா (AYINI
PALA, AKKINI, ANJALI, SAKKAI, KANAL PALA, KATTU PALA, PEY PALA, KURANGU PALA)
கன்னடா: ஹெப்பலசு (HEBBALASU)
மலையாளம்: அஞ்சிலி, அயனி, (ANJILI, AYANI)
மராத்தி:அம்ஜெலி, பகோடியோ,
பால்பனாஸ் (AMJELI,
BAKODYO, PALPANAS)
சமஸ்கிருதம்: லக்கூச்சா, பனாசா
(LAKUCAH,
PANASAH)
தெலுங்கு: அடவிப்பனாசா (ADAVI
PANASA)
இந்தி: கத்தல் (KATHAL)
அயனிப்பலா.
பசுமைமாறா மரம்
அயனிப்பலா. பசுமைமாறா மரம். 50 மீட்டர் உயரம் வரை
வளரும்.
இலைகள் பசுமையானவை. எதிரெதிர் ஒழுங்கில் அமைந்தவை. அகலமான மற்றும்
நீள்வட்ட வடிவில் அமைந்தவை. அடிப்பகுதி கூர்மையாகவும் நுனிப்பகுதி
அகன்றும் இருக்கும்.
ஆண் பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும். அவை சிறு சிறு பூக்களாக
இருக்கும். பசுமையான மஞ்சள் நிறமாக இருக்கும்.
பழங்கள் மஞ்சள் நிறமாக எலுமிச்சம்பழ அளவு இருக்கும்.
சாதாரண பலாப்பழம்
போல முள் தோலால் மூடியிருக்கும்.
ஜனவரியில்
பூ பூக்கும்
அயனிப்பலா மரங்கள் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் பூ
எடுக்கும். மே – ஜூpன் மாதவாக்கில்
பழங்கள் தயாராகிவிடும்.
கேரளாவின்
பிரபலம்
கேரளா மாநிலம்
மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிரபலமானது அயினிப்பலா. அளவில் சிறியது பலா.
மகாராஷ்;டிரா மாநிலத்தில்> மேற்குத் தொடர்ச்சி
மலைத் தொடர் பகுதியின் பசுமை மாறாக் காடுகளிலும் இந்த அயினிப்பலா மரங்களைப்
பார்க்கலாம்.
கன்னியாகுமரி
மாவட்டத்தில் மாத்தூர்> திருவட்டார்> திற்பரப்பு ஆகிய
இடங்களின் மலைப்பகுதிகளில்> அதிக அளவில் அயினிப்பலா மரங்களைப் பார்க்கலாம்> குறிப்பாக ரப்பர் மரக் காடுகளில் அதிகம் வளர்ந்துள்ளன.
அருகிவரும்
அயினிப்பலா
மேற்குத் தொடர்ச்சி
மலைப் பகுதிகளில் அருகி வரும் இந்த அயினிப்பலா மரங்கள்
அங்கு உள்ள பசுமை
மாறாக் காடுகளின் உள்ளன.
மங்களூர்
பலா
இந்த அயினிப்பலாவின்
படங்களை பலமுறை ‘வாட்ஸ் அப்’ல் பார்த்தும் கூட
அது அயினிப்பலா என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஒராண்டிற்கு முன்னால்
மங்களுர் சென்றிருந்தேன். அங்கு பார்த்தால்
ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் ஒரு அயினிப்பலாவை பார்க்க
முடிந்தது.
இந்தியாவில் கேரளா> கர்நாடகா> மஹாராஷ்டிரா மற்றும்
தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது.
கொடுக்கில்லா
தேனிக்கள்
ஆண் பெண் பூக்கள்
தனித்தனி. ஆண் பூக்கள் 14 செ.மீ. நீளத்திற்கு சரமாகத் தொங்கும். பெண் பூக்கள் கோள வடிவில் கணுக்களில் பூக்கும்.
அயினிப்பலாவின்
மகரந்த சேர்க்கைக்கு கொடுக்கில்லாத ஒரு வகைத் தேனி டெட்;ரகோனெல்லா இரிடிபென்னிஸ் என்னும் தேனீக்கள்
உதவுகின்றன.
இந்த
கொடுக்கில்லா தேனீக்கள் சேகரிக்கும் தேன் மருத்துவப்பயன் மிக்கது என்கிறார்கள்.
சிறிய
சைஸ் பலா
அயினிப்பலா அசப்பில்
பலாமாதிரியே இருக்கும். ஆனால் பழங்கள அளவில்
சிறியதாக இருக்கும். பசுமையான காய்கள்
பழுத்ததும் அதன் முள்தோல் மஞ்சளாக மாறிவிடும்.
உள்ளே இருக்கும்
சுளைகளும் மிகவும் சிறுசாக புளியம்பழம் போல இருக்கும். சுளைகள் கொத்துக் கொத்தாக இருக்கும். ஆரஞ்சு நிறத்தில்
இருக்கும். பழங்கள் இனிப்பும் பளிப்புமாக இருக்கும்.
பலா கொட்டைப்பொடி
சுளைக்குள் இருக்கும்
கொட்டைகள் கருப்பு நிறமாய் இருக்கும்: கொட்டைகளை வறுத்தும் வேறு வகைகளில்
சமைத்தும் சாப்பிடலாம்.
இந்த அயினிப்பலாவின்
கொட்டைகளை உலர வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுகிறார்கள். இந்த பலா கொட்டைப் பொடி ஆஸ்துமா இருப்பவர்களுக்கு அற்புதமான சுகம் தரும்
என்கிறார்கள்.
விதைகளில் 16 முதல் 17 சதவிகிதம்
எண்ணெய் உள்ளது:
எண்ணெயும் மருந்துகள் செய்யப்
பயன்படுகிறது.
மரம்> தேக்குக்கு இணையானது. ஆனால் கொஞ்சம் லேசானது. படகு கட்ட> கப்பல் கட்ட> கட்டுமான வேலைகள்> மரச்சாமான்கள்> மேஜை நாற்காலி> வேளாண்மைக் கருவிகள்
அத்தனையும் செய்யலாம்:
ஓணம்
பண்டிகை படகுப்போட்டி
கேரளாவில் படகுப்போட்டி
என்பது மிகவும் விமரிசையானது. ஒணம் பண்டிகை சமயம் படகுப்போட்டிகளை பல இடங்களில்
நடந்துகிறார்கள்.
இந்தப்
படகுப்போட்டியில் பயன்படுத்தும் கேரளா ஸ்நேக் போட்ஸ் (KERALA
SNAKE BOATS) என்ற படகுகள் பிரபலமானவை.
சுண்டன்வள்ளம்
இதனை மலையாள மொழியில் ‘சுண்டன் வள்ளம்’(CHUNDAN
VALLAM) என்று
சொல்லுகிறார்கள். இந்த ‘பாம்புப் படகுகள்’ பாரம்பரிய மான தொழில்
நுட்பங்களின் முறைப்படி செய்கிறார்கள்.
ஊருக்கு
ஒரு பாம்புப் படகு
ஆக சுண்டன்வள்ளத்தின்
பாம்புப் படகுகள் அத்தனையும் அயினிப்பலா மரங்களில்தான் தயாராகின்றன.
இந்த பாம்புப்
படகுகள் 100 முதல் 138 அடி நீளம்
இருக்கும்: படகின் பின்புறம் 20 அடி உயரம் இருக்கும். இதனைப் பார்க்க ஒரு பாம்பு தலையை உயர்த்தி படம் எடுத்து ஆடுவது போலத்
தோன்றும்:
பாரம்பரிய கேரளாவில்
ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு பாம்புப்படகு சொந்தமாக
இருக்கும். அந்தப் படகினை அவர்கள் தெய்வமாக வழிபடுவார்கள்.
இருகண்
போதாது
பாம்புப்படகில்
பக்கத்திற்கு 64 என மொத்தம் 128 துடுப்புகள்
இருக்கும்;. கோரஸாக பாடிக்கொண்டு படகினை செலுத்துவதைப்
பார்த்து பரவசப்பட இருகண் போதாது.
படகுப்பாட்டு
இந்த கோரஸ்வகை படகுப்
பாட்டுக்கு ‘லஞ்சப்பாட்டு’ என்று பெயர். ஒவ்வொரு பக்கமும் 64 பேர் துடுப்பு போடுவார்கள். அந்தத் துடுப்பு போடும் இரண்டு வரிசைக்கு இடையே நடுவே மூன்றாவது வரிசையாக
25 பேர்
உட்கார்ந்திருப்பார்கள். அந்தப் பாடல் குழுவிற்கு
ஒரு தலைவர் இருப்பார். அவருக்கு கேன்டர் ;(CANTOR) என்று பெயர்.
கூடுதலான
மழை
இதற்குக் கொஞ்சம்
கூடுதலான மழையும்> மண்கண்டத்தில் ஈரப்பசையும் இருக்க வேண்டும். அதிக பட்சமாக அயினிப்பலா மரங்கள் 35 மீட்டர் உயரம் வரை வளரும். பருமன் கூட 4.5 மீட்டர் சுற்றளவு இருக்குமாறு பருத்து வளரும்.
பாரம்பரிய
மருத்துவ முறைகள்
பொதுவாக பலா வகை
மரங்களில் பலவகை மருத்துவப் பண்புகளைக் கொண்டது. அதனால் இதனை
சித்தமருத்துவம்> ஆயுர்வேத மருத்துவம்> மற்றும் பாரம்பரிய
மருத்துவ முறைகளில் பல நோய்களை குணப்படுத்துகிறார்கள்.
மரத்தின் பட்டைகள்> உலர்ந்த இலைகள்> பசும் இலைகள்> பழங்கள் கொட்டைகள்> வேர்கள் அனைத்தும் மருந்தாகப்
பயன்படுத்தப்படுகின்றது.
முகப்பருக்கள்
முகத்தில் ஏற்படும் முகப் பருக்கள். தோலில் ஏற்படும் வெடிப்புகள்> புண்கள்> வயிற்றுப்போக்கு> சரும நோய்கள்> மிகையான ரத்தப்போக்கு> விஷக்கடிகள்> ஆகியவற்றுக்கு
சிகிச்சை அளிக்க உதவுகிறது அயினிப்பலா.
போத்துக்களை
நடலாம்
அயனிப்பலாவில் புதிய
மரங்களை உருவாக்க விதைகளை நடலாம்: கிளைகள் அல்லது போத்துக்களை வெட்டி நடலாம்:
அல்லது பதியன்களை நடவு செய்யலாம்:
அயினிப்பலா
முக்கியமான ஒரு மூலிகை மரமாகவும் கருதப்படுகிறது: அதற்கு முக்கியக் காரணம்> இதில் இருக்கும் பிளேவனாய்ட்ஸ்> ஸ்டில் பினாய்ட்ஸ்> ஆரிட்பென்சோ பியூரான்ஸ்> ஜகாலின் மற்றும்
லெக்டின் (FLAVANOIDS,
STILBINOIDS, ARYTBENZO FURANS, JACALIN, & LECTIN).
பழங்கள்
சாப்பிடுவதால் உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை உண்டாக்கும். முக்கியமாக அயினி பலாப்பழங்கள் ஆண்மைப் பெருக்கியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் பட்டைகள் குடற்புண்கள்> வயிற்றுப்போக்கு> மற்றும் முகப்பருவைத்
குணப்படுத்துகிறது.
ஆஸ்துமா
குணமாகும்
அயினிப்பலா பொடியினை
தேனுடன் குழைத்து சாப்பிடுவதால் ஆஸ்துமா நோய் குணமாகும். பலாகொட்டை எண்ணெய் சரும நோய்களை அற்புதமாகக் குணப்படுத்தும்:
இதன் விதையிலிருந்து
எண்ணெய் எடுப்பது சுலபம். விதைகளை தண்ணீரில்
போட்டு 15 நிமிடம்
கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் ஒரு நாள்
அதனை அப்படியே வைத்திருக்க வேண்டும். அடுத்த நாள்> விதை எண்ணெய்
தண்ணீரின் மேல் மிதக்கும்: அந்த எண்ணெயை மேலாக வடித்து எடுத்து அதனைப் பயன்படுத்தலாம்.
நெடு
நாளைய கனவு
ஒரு நாளாவது
இந்த அயினிப்பலா பாம்புப்படகில் செல்லவேண்டும். அந்த கோரஸ் பாட்டை கேட்கவேண்டும்,
என்பது எனது நெடு நாளைய கனவாக இருக்கிறது, உங்களுக்கு ?
WWW.HEALTHY
LIVING.NATURELOC.COM – “THE WILD JACK FRUIT OF KERALA”
WWW.TA.WIKIPEDIA.ORG
“AYAM MANAM”
WWW.EN.WIKIPEDIA.ORG-“CHUNDAN
VALLAM – “SNAKE BOATS”
WWW.EN.WIKIPEDIA.ORG-“ARTOCARPUS
HIRSUTUS”
WWW.FLOWERS OF
INDIA.NET/”ARTOCARPUS HIRSUTUS”
WWW.INDIAN
BIODIVERSITY.ORG”ARTOCARPUS HIRSUTUS”
WWW.SCIENCEDIRECT.COM-JOURNAL
OF ETHNO PHARMACOLOGY – “ARTO CARPUS” (779 words)
PLEASE
PST A COMMENT, REGARDS – GNANASURIA BAHAVAN D (AUTHOR)
9999999999999999999999999999
No comments:
Post a Comment