Tuesday, June 20, 2023

WILD ANIMALS ARE MAD ON FRUIT MARULA 68. விலங்குகள் விரும்பும் ஆப்ரிக்க பழம் மரூலா

மரூலா (சாராய) பழம் பறிக்கும்
ஆப்ரிக்க யானை
மரூலா
சாராயம்

மரூலா பழங்கள், யானைகள், குரங்குகள், கரடிகள், நெருப்புக்கோழி ஆகியவற்றிற்கு சாராயம் மாதிரிஇந்த பழங்களிலிருந்து தயார் செய்யும்அம்ரூலாமற்றும்மரூலாமேனியாஎன்னும் பிராந்தி வகை மதுபானங்கள் ஆஃப்ரிக்காவில் மிகவும் பிரபலமானவை, மரூலா மரத்தின் இலைகள், பட்டைகள், வேர் ஆகியவற்றில் பாரம்பரிய மருந்துகள் செய்ய உதவுகிறது. இது ஆஃப்ரிக்க நாட்டு காட்டு மரம்.

தமிழ்ப்பெயர்: மரூலா (MARULA)

பொதுப் பெயர்கள்: மரூலா, ஜெல்லி பிளம், கேட் தார்ன், சிடர் ட்ரீ (MARULA, JELLY PLUM, CAT THORN, CIDER TREE)

தாவரவியல் பெயர்: ஸ்கெலிரோகேரியா பிர்ரியா (SCLEROCARYA  BIRREA)

தாவரக்குடும்பம் பெயர்: அனாகார்டியேசி (ANACARDIACEAE)

தாயகம்: தென் ஆப்ரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா, மடகாஸ்கர்

மரூலா மரத்தின் பல மொழிப் பெயர்கள்

போர்ச்சுகீஸ்: கேன் ஹீரோ (CANHEDRO)

ஸ்வாகிலி: மங்காங்கோ (MAGONGO)

ஜூலு: உம்கானு (UMGANU)

கென்யா: போரான், டிடிசா, கம்பா (BORAN, DIDISSA, KAMBA)

அங்கோலா: என்காங்கோ (N CONGO)

வாட்ஸ்அப்சமூக கம்   

சமீபத்தில், ‘வாட்ஸ்அப்சமூக டகத்தில், யானைகள், நெருப்புக் கோழிகள், பபூன்ஸ் என்னும் குரங்குகள், காட்டுப்பன்றிகள், போன்றவை மரத்தின் பழங்களை சாப்பிட்டுவிட்டு, குடிகாரன்களைப்போல ஆடுவது போல ஒரு வீடியோ படக்காட்சி வைரல் ஆக சுற்றி வந்ததுஆனால் என்ன மரம் என்ன பழம் என்று தெரியவில்லை.

அந்த வீடியோ படக்காட்சியில் யானைகள் மரங்களைப் பிடித்து உலுக்கும்: அந்த பழங்கள் மாம்பழங்கள் போல உதிர்கின்றன, உதிரும் பழங்களை யானைகள், மான்கள், ஒட்டச் சிவிங்கிகள், மான்கள், குரங்குகள், பன்றிகள் போட்டிப் போட்டபடி சாப்பிடுகின்றன, அடுத்த காட்சியில் அத்தனை மிருகங்களும் குடிகாரர்களைப் போல தள்ளாடியடி தரையில் விழுத்து புரளருகின்றன.   

அனிமல்ஸ் ஃப் பியூட்டிபுல் பீப்பிள்

இரண்டு மூன்று நாள் தேடலுக்குப் பின், அது ஒரு ஆப்ரிக்கமரம், என்றும் அதன் பெயர் மரூலாஎன்றும் தெரிந்தது.

1974 ம் ஆண்டு அனிமல்ஸ் ஃப் பியூட்டிபுல் பீப்பிள்என்று ஒரு டாகுமெண்டரிப் படம் வெளிவந்தது. ஜேமி உய்ஸ்’ (JAMIE UYS) என்பவரால் எடுக்கப்பட்டது.

இந்தப்படம், இது நமீப் மற்றும் கலகாரி பாலைவனங்கள்; மற்றும், ஒக்கவாங்கோ ஆற்றுப் படுகைகளில் படமாக்கப்பட்ட இந்தப்படத்திற்கு, ‘கோல்டன் குளோப்அவார்ட் (GOLDEN GLOBE AWARD) வழங்கப்பட்டது

ஆனால் மரூலாபழம் சாப்பிட்ட மாதிரி படத்தில் நடித்த, யானைகள் மற்றும் இதர மிருகங்களும் ஒவராக்ட்பண்ணிட்டதுங்க என்கிறார்கள், வனத்துறை வல்லுநர்கள். பழத்தில் அப்படி ஒன்றும் கிக் இல்லை என்கிறார்கள்.

 ஆனா பழங்கள் புளிச்சதுன்னாக் கண்டிப்பா மயக்கம் வரும்என்றும் சொல்லுகிறார்கள்.

பரவியிருக்கும் இடங்கள்

ஆப்பிரிக்காவின் பெரும் பகுகளிலும் பரவியுள்ளது,  மரூலா பழ மரங்கள்.

அவை, மாரிவியானா, செனிகல் முதல் எத்தியோப்பியா வரை, எரித்திரீனா, நம்பியாவின் தென் பகுதி, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், தென் ஆப்ரிக்கா மற்றும் சுவாசிலேண்ட்

இவை தவிர, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, இந்தியா, ஒமன் ஆகிய நாடுகளில் மரூலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாட்டின் விலங்குகளை பறவைகளை தன் பழங்கள் மூலம் உற்சாகம் தரும் விச்சித்திரமான மரம் மரூலா.

மரூலா மேனியா

மரூலா பழத்தசையுடன் சக்கரை மற்றும் கிரீம்சேர்த்து ம்ரூலாஎன்னும் பானம்தயாரிக்கிறார்கள்இதில் 17 சதம் ஆல்கஹால் உள்ளது

பீர்மது வகைகளில் கூட 4 % ஆல்கஹால்தான் உள்ளதுஇதில் கிக்கொஞ்சம் தூக்கலாக இருக்கும்மரூலா மேனியா (MARULA MANIA) என்று இன்னொருவகை பானம் கூட மரூலா பழங்களின் உபயம்தான்

இது தவிர மரூலா பழங்களின் கொட்டைகளிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள்அந்த எண்ணெயை வைத்து, நம்ம ஊா் பேர் அண்ட் லவ்லிமாதிரி பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் தயார் செய்கிறார்கள்.    

மரூலா, தென் ஆப்ரிக்காவின் வேகமாக வளரும் மரங்களில் ஒன்று. செப்டெம்பர் முதல் நவம்பர் வரை பூத்து, ஐனவரி முதல் மார்ச் வரை காய்க்கும். ஆண், பெண் பூக்கள் தனித்தனியானைவை

நாள்பட்ட பழங்கள்

ஆண் பூக்கள், அடர்த்தியான சிவப்பில் தொடங்கி, ஊதா நிறமாக நிறம் மாறி வெண்மையாக மலரும்.

பெண்பூக்கள் ரத்தச் சிவப்பாய் தொடங்கி ஊதா நிறமாக நிறம் மாறி வெண்மை நிறமாக மலரும்.

பழங்கள் ஏறத்தாழ ஆப்பிள் மாதிரி உருண்டையாக அல்லது கொஞ்சம் நீளமான உருண்டை போல கோள வடிவத்தில் இருக்கும். நாள்பட்ட பழங்கள் உதிர்ந்தபின்னால் அருவருப்பான வாடை வீசும்.

விதைகள் பெரும்பாலும் மூன்று அல்லது இரண்டு விதைகளின் தொகுப்பாக இருக்கும்விதைகள் கடினமான ஒடு கொண்டு பாதுகாப்பாக மூடி இருக்கும்ஒரு கிலோ எடையில் சுமார் 400 விதைகள் இருக்கும்.    

வறண்ட நிலங்களில் வளரும்.      

கடல் மட்டத்திலிருந்து 500 முதல் 800 மீட்டர் உயரம், பனிப் பொழிவு இல்லாத வெப்பமான தட்ப வெப்பநிலை, சுமாரான அளவு வறட்சியைத் தாங்கும் தன்மை, நல்ல சூரிய ஒளி, மணற்சாரி, சரளை மண், மற்றும் பரவலான வறண்ட நிலங்களில் வளரும்.      

கடினமான விதையுறை கொண்டவை இதன் விதைகள்நன்கு முளைக்க 48 மணிநேரம் தண்ணீரில் முக்கி வைத்திருக்க வேண்டும்அதன் பின்னர் விதைத்தால் 100க்கு 60 விதைகள் முளைக்கும்முளைப்பு முடிய குறைந்தபட்சம் 16 நாட்கள் ஆகும்.    

இஸ்ரேல் மரூலா பழத்தோட்டங்கள்

விதைகளை விதைக்கலாம், பெரிய கிளைகளை வெட்டி நடலாம், கிளை துண்டுகளை (STEM PIECES) நடலாம், வேர்ச்செடிகளை எடுத்து நடலாம்.   

இஸ்ரேல் நாட்டில் சிறுசிறு மரூலா பழத்தோட்டங்களை அமைத்துள்ளார்கள்இதற்கான விதைகளை, போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்ரிக்காவின், குரூகர் தேசிய பூங்காவிலிந்து, வரவழைத்துள்ளனர்

இந்த மரங்கள் 3 ஆண்டுகளில் காய்க்கின்றன.

உப்புத் தண்ணீரில் வளரும்

மரூலா மரங்களுக்கு கடினமான மண் சரிப்படாது, நல்ல வடிகால் வசதி வேண்டும், மழைக்காலத்து நீர் தேக்கத்தை ஒரளவு தாங்கும். இஸ்ரேல் நாட்டில் உப்புத் தண்ணீரில் வளர்ந்து மரூலா வர்களை ஆச்சரியப் படுத்துகிறது.   

மரூலாவின் மரங்கள், தரமும் வலுவும் இல்லாதவை. அப்படியே மரச்சாமான்கள், எது செய்தாலும் அவை நீடித்து உழைக்காது. அத்தோடு 1962 ம் ஆண்டு, “இனி இந்த மரத்தை வெட்டுவது சட்டப்படி குற்றம்என்று அறிவித்தது, தென் ஆப்ரிக்க அரசாங்கம்.   

பழமாக விற்பனை செய்வதோடு, ‘அமரூலாஎன்றும் பீர், ஒயின், குளிரூட்டப்பட்ட ஜூஸ் போன்றவற்றை அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்

அழகு சாதனப் பொருட்கள்

இவை தவிர ஐாம், ஐல்லி போன்றவைகளையும் தயாரிக்கிறார்கள்மரூலா கொட்டைகளிலிருந்து எண்ணெய் எடுத்து, நமிபியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள்அவர்கள் மரூலா எண்ணெயிலிருந்து அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.

செனிகல் மற்றும் தென் ஆப்ரிக்காவில் இதன் மரங்கள் மரச்சாமான்கள் செய்ய, பாரம்பரியமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது

சிறுசிறு கருவிகள், உரல், உலக்கை, மாவு அரைக்கும் இயந்திரங்கள், கிண்ணங்கள், குவளைகள், போன்ற பாத்திரங்கள், டிரம்கள் போன்றவற்றை செய்ய பயன்படுத்தினார்கள்விறகாகவும் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.   

இதன் இலைகள் மற்றும் தழைகள், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறதுஆனால் கால்நடைகளும், காட்டு விலங்குகளும், அதன் பழங்களையே விரும்பிப் சாப்பிடுகின்றன.    

பாரம்பரிய மருத்துவம்

மரூலா மரத்தின் இலைகள், பட்டைகள், வேர், ஆகியவற்றை பாரம்பரிய மருத்துவ முறைகளில் பலவிதமான நோய்களை குணப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள்

வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்று உபாதைகள், காய்ச்சல், குடற்புண், கண்நோய்கள், கம்பளிப் பூச்சிகளால் தோலில் ஏற்படும் கொப்புளங்கள், போன்றவற்றை குணப்படுத்தும்.   

காய்ச்சி வடித்து மது தயாரிக்கலாம்

ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளாக மரூலா உணவுப் பொருளாக பயன்பட்டு வருகிறது, பழமாக சாப்பிடலாம், பழத்தை கசக்கி மாம்பழம்போல சாற்றை மட்டும் அருந்தலாம், பழத்தை புளிக்க வைத்து பீர் தயாரிக்கலாம், அதையே காய்ச்சி வடித்து ஆல்கஹால் அதிகரித்த மதுவாகவும் தயாரிக்கலாம்.

விதைப் பருப்பினை எடுத்து சாப்பிடலாம், அவற்றை இடித்து மாவாக்கி கேக், பிஸ்கட், போன்றவை தயாரிக்கலாம், விதை எண்ணெயை, இறைச்சியை சேமிப்பதற்கான பிரிசா்வேட்டிவ்வாகவும், சமைக்கவும், சருமப் பாதுகாப்புக்கான அழகு சாதனமாகவும் உபயோகிக்கலாம்.    

FOR FURTHER READING

WWW.ECOPORT.ORG”SCLEROCARYA BIRREA SOUN-

WWW.EN.M.WIKIPEDIA.COM / SCELEROCARYA BIRREA

WWW.SCIENCEDIRECT.COM / SCELEROCARYA BIRREA

WWW.TROPICAL.THEFERNS.INFO / SCELEROCARYA BIRREA

WWW.FEEDIPEDIA.ORG / MARULA (SCELEROCARYA BIRREA)

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

 

 

                

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...