புற்று நோய் சிகிச்சையில் நீர்நொச்சி |
நீர் நொச்சி கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியுள்ள மரம். அவை இந்தியா பாக்கிஸ்தான்> ஸ்ரீலங்கா> மியான்மர் மற்றும் மலேசியா. இது
இலை உதிர்க்கும் சிறு
மரம்> அதிகபட்சமாக 15 மீட்டர் அல்லது
சுமார் 50 அடி உயரம்
வளரும். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் “வைடக்ஸ் - லியூகோக்சைலான்
(VITEX
LEUCOXYLON) என்பது> நீர் நொச்சியின்
பூக்கள் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும்> இந்த நொச்சி மரத்தின்
வேர்கள் மருத்துவத்தில் “துவர்ப்பி” யாகப்
பயன்படுத்துகிறார்கள். மரங்களின் போத்துகளும் சிம்புகளும்> கூடைகள்> தட்டிகள்> போன்றுவற்றைச் செய்ய உதவியாக இருக்கும்> நீர் நொச்சி மரங்கள்> உறுதியானவை> கடினமானவை> நொச்சி மரங்களில்
செய்த மரச்சாமான்கள் நீண்ட நாட்கள் உழைக்கும்.
பொதுப் பெயர்கள்:
ஒயிட் வுட் சேஸ்ட் ட்ரீ> வாட்டர்
பீகாக்ஸ் புட் ட்ரீ, ஒயிட் வுட்டட் வால்ரோத்தியா (WHITE
WOOD CHASTE TREE, WATER PEACOCK’S FOOT TREE, WHITE WOODED WALLROTHIYA)
தாவரவியல் பெயர்:
வைட்டக்ஸ் லீயூகோசைலான் (VITEX
LEUCOXYLON)
தாவரக் குடும்பம்
பெயர்: லேமியேசி (LAMIACEAE)
தாயகம்: மேற்கு மலைத்
தொடர்ச்சிப் பகுதி> இந்தியா, ஸ்ரீலங்கா (WESTERN
GHATS-
INDIA, SRILANKA)
பலமொழிப் பெயர்கள்: (VERNACULAR NAMES)
தமிழ்: நீர்நொச்சி> காட்டு நொச்சி (NEER
NOCHI, KATTU NOCHI)
மலையாளம்: பீமிஸ்> வெள்ளநொச்சி> ஆத்துநொச்சி> ஆட்டுநொச்சி> நீர் நொச்சி (BEEMIS, VELLA NOCHI, ATHU NOCHI, ATTU NOCHI, NEER
NOCHI)
மராத்தி: சோன் கர்பி> ஷேராஸ் (SONA
GARBI, SHERAS)
தெலுங்கு: கஜவாவிலி. கொண்டவாலி (GAJAVAVILI, KONDAVAALI)
கன்னடா: ஹோலிநெக்கி> செங்கேணி> ஹொல்லக்கி (HOLENEKKI,
SENGENI, HOLLALAKKI)
சமஸ்கிருதம்:
பரவதப்படி (PARAVATAPADI)
கொங்கணி: சோன்கார்பி (SONGARBI)
நீர் நொச்சியும் காட்டு நொச்சியும்
நீர் நொச்சிக்கு காட்டு நொச்சி என்ற பெயரும் உண்டு. நீர்நொச்சியின் தாவரவியல் பெயர் வைடக்ஸ் லியூகோக்சைலான் என்பது.
இந்த மரத்தின் பட்டைகள் காவி நிறமாக இருக்கும். இலைகள் கூட்டிலை யாக இருக்கும். பூங்கொத்துக்கள் வெள்ளை மற்றும் ஊதா நிறமாக இருக்கும்.
இதன் பழங்கள் கருப்பும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும். பழம் ஒவ்வொன்றிலும் நான்கு விதைகள் இருக்கும்.
நீர் நொச்சி மரங்கள் 15 மீட்டர் வரை உயரமாக வளரும். பாரம்பரிய மருந்துகள் தயாரிப்பதற்காக இந்த மரங்களை காடுகளிலிருந்து வெட்டிக் கொண்டு வருவார்கள்.
புற்று நோய்க்கு சிகிச்சை தருவதற்காக பாரம்பரிய மருத்துவத்தில் இந்த நீர்நொச்சியை பயன்படுத்தி வருகிறார்கள்.
பரவியுள்ள இடங்கள்
பல வீடுகளில் நீர்நொச்சியை அழகுக்காக தோட்டத்தில் வளர்த்து வருகிறார்கள்.
நீர் நொச்சி மரங்கள் காடுகளிலும், ஓடைக் கரைகளிலும், கடல் மட்டத்திற்கு மேல் 900 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வளரும்.
நீர் நொச்சி, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, மியான்மர், மலேசியா ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
நீர் நொச்சி கட்டைகள்
இதன் கட்டைகள் லேசான சாம்பல் நிறமும் காவி நிறமும் கலந்தது போல் இருக்கும்.
நடுத்தரமான உறுதியுள்ள இந்த மரங்களில் இருந்து வண்டிகளுக்கான சக்கரங்களை செய்யலாம். மேலும் மேஜை நாற்காலி போன்ற மரச் சாமான்கள் செய்யலாம்.
ஆண்டு முழுவதும் பூக்கும்
நொச்சி வகை மரங்களில் ஒரே பூவில் ஆண் மற்றும் பெண் உறுப்புகள் இருக்கும். இரு பாலினப் பூக்கள்.
நொச்சி மரத்தின் பூக்கள் பொதுவாக ஆண்டு முழுவதும் பூக்கும். பூச்சிகளின் மூலமாகவும் பிராணிகள் மூலமாகவும் மகரந்த சேர்க்கை நடைபெறும்.
விதைகள் பரவுவது என்பது பறவைகள் பிராணிகள், மற்றும் காற்றின் மூலமாக நடைபெறும்.
தோட்டத்து பச்சிலை
தமிழில் “தோட்டத்து
பச்சிலைக்கு மரியாதை இல்லை” என்பது பரவலாகப் பயன்படுத்தும் பழமொழி> ஆனால் நொச்சி மட்டும் எப்போதுமே மதிக்கப்பட்ட ஒரு தோட்டத்து
பச்சிலைதான். இன்றுக் கூட தமிழ்நாட்டு கிராமங்களில்
பரவலாக இருக்கும் மரங்களில்
முக்கியமானது நொச்சி.
ஒரு காலத்தில் அப்படி
கை;கெட்டும் தூரத்தில்
இருந்த மரங்கள் என்றால் நான்கு மரவகைகளை குறிப்பாகச் செய்லலாம். அவை நொச்சி> நுணா> ஆடாதோடை மற்றும் வேம்பு.
நொச்சித் திணை
“எதிரி மன்னன் கோட்டையை முற்றுகையிட்டு
போர் செய்வான். அப்படி முற்றுகையிடும்
வீரர்கள் உழிஞை மலர்மாலை அணிந்து போர் செய்வார்கள். அப்படி போரிடும் போது அரண்மனைக் கோட்டையைப்
பாதுகாக்க வீரர்கள் உள்ளே இருந்து போர் செய்வார்கள். அந்த வீரர்கள் நொச்சி மலர் மாலை அணிந்து சண்டை
இடுவார்கள்.
தமிழ் இலக்கியம் சொல்லும் விளக்கம்
நொச்சித்திணை
என்பதற்கு தமிழ் இலக்கியம் சொல்லும் விளக்கம் இது. தமிழ் மக்களுக்கு> தமிழ்
கலாச்சாரத்திற்கு நொச்சி எவ்வளவு நெருக்கம் என்பதை சொல்லும் செய்தி இது.
இந்த
நொச்சித் திணையில் ஒன்பது பகுதிகள் இருக்கு. அதை விளக்கும்
அற்புதமான தமிழ் பாட்டு இது, இதன் பெயர் புறப்பெயர் வெண்பாமாலை
சூத்திரம்.
“ நுவல் அருங் காப்பின் நொச்சி,
ஏனை
மறனுடைப் பாசி ஊர்ச்செரு என்றா
செருவிடை வீழ்தல், திண் பரிமறனே,
எயிலது போரே, எயில்தனை அழித்தல்.
அழிபடை தாங்கல், மகள்மறுத்து
மொழிதல், என
எச்சம் இன்றி எண்ணிய ஒன்பதும்
நொச்சித் திணையும், துறையும் ஆகும்”
1.நொச்சி, 2. மறனுடைப்பாசி, 3. ஊர்ச்செருதல் 4. செருவிடை வீழ்தல், 5. குதிரை மறம், 6. எயிலது போர், 7. எயில்தனை அழித்தல் 8. அழிபடை தாங்கல், 9. மகள்மறுத்து மொழிதல், இவைதான் அந்த ஒன்பது துறைகள்.
ஒன்பது துறைகள் விளக்கம்
மறனுடைப்பாசி
என்றால் போரில் வீர் மரணம் அடைவது,
ஊர்ச்செருதல்
அகழிகளை அழிக்காமல் காத்து போரிடுவது,
செருவிடை
வீழ்தல் அகழிகளை காத்து வெற்றி பெறுவது,
குதிரை
மறம்,
மதில்களின்மீது பாய்ந்தோடும் குதிரைகளின் திறத்தினைச் சொல்வது,
எயிலது
போர்,
மதில்மீது நின்று போரிடுவது,
எயில்தனை
அழித்தல் என்பது மதில்காத்த வீர்ர்கள் வீரமரணம் அடைவது,
அழிபடை
தாங்கல் என்றால் ஒற்றை வீரனாக நின்று எதிரிகளை எதிர்த்து போரிடும் வீரம்,
மகள்மறுத்து
மொழிதல்,
வெற்றிபெற்ற வீரன் நொச்சி வேந்தனின் மகளை மணம் முடிக்க வேண்டுவதும் நொச்சி
மன்னர் அதனை மறுத்தலையும் விளக்கும் பகுதி. ஆச்சரியமான தமிழ்
கலாச்சாரம் ! உடல் சிலிர்க்கிறது !
பல நொச்சி வகைகள்
நம்முடைய கிராமங்களில்
இருக்கும் நொச்சியின் தாவரவியல் பெயர் வைடக்ஸ் நெகுண்டோ (VITEX NEGUNDO).
நொச்சி வகைகளில் மிகவும் விசேஷமாக சொல்லப்படுவது> “கரு நொச்சி” இதன் தாவரவியல் பெயர்
ஜெண்டாரூசா வல்காரிஸ் (JENDARUSSA VULGARIS).
இதுபற்றி நமது “தினம் தினம் வனம்
செய்வோம்” தொடரில் எழுதினேன்.
கருநொச்சியின்
பூக்கள் வெள்ளை> மற்றும் ஊதா நிறத்தில் அள்ளது ஊதா
நிறப்புள்ளிகளுடன் இருக்கும். இதே மூன்று
வகை நொச்சிகளும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளாக
அறியப்பட்டுள்ளது.
நொச்சியில் பதினெட்டு வகைகள்
நொச்சி தாவரக்
குழுவில் ஏறத்தாழ 18 வகையான வகைகள் இருக்கின்றன.
இவற்றில் அழகு மரங்களும் இருக்கின்றன. சிpல வகைகள்
மரச்சாமான்கள்> மேஜை, நாற்காலி வகை பொருட்களையும் செய்ய உதவும். சிலவகை மரங்களின் போத்துகளும் சிம்புகளும்> கூடைகள்> தட்டிகள்> போன்றவற்றைச் செய்ய
உதவியாக இருக்கும். சிலவகைச் செடிகளின்
இலைகளை கொசு விரட்டியாக
பயன்படுத்தலாம்.
நீர் நொச்சி அல்லது
காட்டு நொச்சி
நீர் நொச்சி இலை உதிர்க்கும் சிறு
மரம்> அதிகபட்சமாக 15 மீட்டர் அல்லது
சுமார் 50 அடி உயரம்
வளரும். இந்த மரத்தின் தாவரவியல் பெயர் “வைடக்ஸ் - ஆக்னஸ் -
கேஸ்டஸ்”
(VITEX
AGNUS CASTUS) என்பது. இந்த மரத்தை நான் அமெரிக்காவில்
பார்த்தேன்.
நீர் நொச்சியின்
பூக்கள் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும்.
இலை உதிர்க்கும் சிறு
மரம்
நீர் நொச்சி> இலை உதிர்க்கும் சிறு மரம்> அதிகபட்சமாக 15 மீட்டர் அல்லது
சுமார் 50 அடி உயரம்
வளரும். இந்த மரங்களை ஆங்கிலத்தில் “ஒயிட் வுட் சேஸ்ட்
ட்ரி” என்று
சொல்லுகிறார்கள். இந்த மரங்கள்
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதிலும் பரவியுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்காவிலும் அதிகம்
காணப்படுகின்றன.
இந்தியாவில்
பெரும்பாலும் மூலிகைக்காவும்> மர
உபயோகத்திற்காகவும் வளர்க்கிறார்கள்.
சிறிய மரமாகவும்> அழகான பூக்களை
உடையதாகவும் இருப்பதால் அழகு மரமாகவும் வளர்க்கிறார்கள்.
அமெரிக்காவில்
வைட்டக்ஸ் அக்னஸ் கேஸ்டஸ் மரங்களை அழகுமரமாக பயன்படுத்துகிறார்கள். டல்லஸ் நகரில் போர்ட்வொர்த்
என்றும் இடத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் நொச்சி மரங்களுக்கான ஒரு தனி இடத்தையே ஒதுக்கி
உள்ளார்கள்;. நீளமான
ஒரு நடை பாதை அமைத்து அதன் மீது நொச்சி மரங்களை அழகிய கூடாரம் போல அமைத்திருக்கிறார்கள்.
மருத்துவப் பயன்கள்
இந்த நொச்சி மரத்தின்
வேர்கள் மருத்துவத்தில் “துவர்ப்பி” யாகப்
பயன்படுத்துகிறார்கள். விட்டுவிட்டு வரும்
காய்ச்சலை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இதன் இலைகளில் சுருட்டு தயாரித்துக் குடிப்பதனால். ஜலதோஷம் மற்றும்
மண்டைவலி அல்லது மண்டை குடைச்சல் குணமாகும்.
இதன் இலைச்சாற்றுடன்
உப்பு சேர்த்து. நெற்றியில் பூச கடுமையான
தலைவலியும் குணமாகும். ருமாட்டிசம் என்று
சொல்லப்படும்> மூட்டுப்பிடிப்பு> மூட்டுவலி> போன்றவற்றையும் இதன்
இலைச்சாறு குணப்படுத்தும்> வயிற்றில் ஏற்படும் புழுத்தொல்லையைக்
குணப்படுத்த இதன் பழங்களை பயன்படுத்துகிறார்கள்.
மரக்கட்டைகள்
நீண்ட நாள் உழைக்கும்
நீர் நொச்சி மரங்கள்> உறுதியானவை> கடினமானவை> நொச்சி மரங்களில் செய்த மரச்சாமான்கள் நீண்ட நாட்கள் உழைக்கும்.
இதன் மரங்கள்> வெளிர் சாம்பல் நிறத்திலும்> காவி நிறத்திலும்
இருக்கும். நடுத்தரமான கடினத்தன்மை உடையவை. வண்டிச் சக்கரங்கள் போன்ற> கடினமான மரச்சாமான்களை செய்யலாம்.
மேஜை. நாற்காலி.
ஸ்டூல்கள்> மரப்பெஞ்சுகள்> இதர வகைகளையும்
செய்யலாம்.
நீர் நொச்சி
பரவியிருக்கும் இடங்கள்
நீர் நொச்சி மரங்கள்> கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியுள்ளது. அவை இந்தியா பாக்கிஸ்தான்> ஸ்ரீலங்கா> மியான்மர் மற்றும் மலேசியா.
போகிறபோக்கில் ஒரு
தகவல்:
மாலை ஆறுமணி வாக்கில்
வீடுகளில் நொச்சி இலை புகை போட்டால் கொசுத் தொல்லை இருக்காது. அன்பர்களே ! அதற்காவது வீட்டுக்கொரு
நொச்சி நடுங்கள் !
TO
READ FURTHER
WWW.EN.M.WIKIPEDIA.ORG
/ VITEX LEUCOXYLON
WWW.INDIABIODIVERSITY.ORG
/ VITEX LEUCOXYLON
WWW.FLOWERSOFINDIA.NET
/ WHITE WOOD CHASTE TREE
WWW.TROPICAL.THEFERNS.INFO
/ VITEX LEUCOXYLON – USEFUL TROPICAL PLANTS
WWW.PUMED.NCBI.NIM.NIH.GOV
/ GENRAL PHARMACOLOGY OF
PLEASE
POST A COMMENT, REGARDS- GNANASURIA BAHAVAN D (AUTHOR)
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment