சிவப்பு வெள்ளை டிராகன் ரகம் |
ஒருகாலத்தில்
களைச்செடியாகக் கருதப்பட்ட பழச்செடி, கற்றாழை பழச்செடி,
இன்று ஏற்றுமதிக்குரிய பழச்செடியாக மாறி விட்டது. இதில் ஏகப்பட்ட ரகங்கள் இருந்தாலும் சிவப்பு, பிங்க்,
மஞ்சள், நீலம் என நான்கு ரகங்கள் முக்கியமானவை,
அவற்றில் சிவப்பு மேல் தோலும் வெள்ளை உள் தசையும்
உடைய ரகம் பற்றி பார்க்கலாம்.
சில முக்கிய
தகவல்கள் (BASIC FACTS OF RED & WHITE DRAGON)
1.பொதுப்பெயர்: டிராகன் ஃப்ரூட் கேக்டஸ், ஒயிட் ஃப்லெஷ்டு பித்தஹாயா, குயின் ஆஃப் த நைட்,
நைட் ப்லூமிங் செரியஸ் (DRAGON FRUIT CACTUS, WHITE
FLESHED PITAHAYA, QUEEN OF NIGHT OR NIHT BLOOMING SEREUS)
2. தாவரவியல்
பெயர்:
ஹைலொசெரியஸ் அண்டேடஸ் (HYLOCEREUS UNDATUS)
3. சூரிய
ஒளி தேவை:
குறைந்த பட்சம் 6 மணி நேர பளிச்சென்ற சூரிய ஒளி.
4. சொந்த மண்: எல் சால்வடார், கவுட்டிமாலா,
ஹோண்டுராஸ், மற்றும் மெக்சிகோ.
5. தாவரக் குடும்பம்:கேக்டேசி (CACTACEAE)
7. கொடிகளின்
தன்மை:
அ. கொடியாக மரங்கள் மற்றும் பாறைகளில் ஏறும்
ஆ. இலைக்கணு வேர்கள் (AERIAL ROOTS)மூலம்
பற்றி ஏறும்.
இ. இந்த வேர்கள் வானீரப்பசையிலிருந்து (HUMIDITY) ஈரத்தையும், சிறு மண் துகள்களிலிருந்து ஊட்டச்சத்தையும்
(NUTRIENTS) உறிஞ்சிக் கொள்ளும்.
ஈ.மரங்களில் ஏறும்போது அதிலிருந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துக்களை உறிஞ்சி(EPIPHYTES)
எடுத்துக்கொள்ளும்.
உ.இதன் கொடித்தண்டுகள் முக்கோண வடிவில் இளம் பச்சை அல்லது கரும் பச்சை நிறத்தில்
இருக்கும்.
ஊ. கொடித்தண்டுகளில் கூர்மையான ஒரு சென்டிமீட்டர் நீளமான முட்கள் இருக்கும்.
நான்கு முதல் ஆறு முறை பூக்கும் (FLOWERING)
அ. இளங்கோடை அல்லது நடுக்கோடையில் பூக்கும்.
ஆ. பூக்கள் ஒரு நாள் மட்டும்தான் மலர்ந்திருக்கும்.
இ. இரவில் மட்டுமே பூக்கும்.
ஈ. பூக்கள் அழகாக 35 செ.மீ. நீளம் உடையதாக, வெள்ளை நிற இதழ்களுடன், மெல்லிய இனிமையான வாசம் வீசும்படியாக இருக்கும். ஹைலொசெரியஸ் அண்டேடஸ் (HYLOCEREUS UNDATUS) என்பது இதன் தாவரவியல் பெயர். இதன் பழங்கள் மிகவும் கவர்ச்சியானவை. நடவு செய்த இரண்டாம் ஆண்டிலிருந்து பூத்து காய்த்து பழங்களைத் தரும்.
சிவப்பு
மேல்தோல் வெள்ளை தசை (RED SKIN WITH WHITE FLESH)
இது கவர்ச்சிகரமான
சிவப்பு மேல்தோலும் வெள்ளை தசையும் உடைய ரகம். பழங்கள் சதைப்பற்று
உடையதாக இருக்கும். சாறு நிறைந்ததாக இருக்கும்,
இரு முனைகளும்
சிறுத்தும் நடுப்பகுதி பருத்தும் இருக்கும். பழங்கள்
6 முதல் 12 செ.மீ.நீளமும் 4 முதல் 9 செ.மீ. பருமனாகவும் இருக்கும்.
தன்
மகரந்தசேர்க்கை (HAND POLLINATION)
டிராகன்
பழச்செடிகளில் கைகளினால் தன் மகரந்தச் சேர்க்கை செய்வதனால் பெரிய பழங்கள் கிடைக்கின்றன. அயல்மகரந்த சேர்க்கையினால் உருவாகும் பழங்கள் அளவில் சிறியதாக எடை குறைவாக இருக்கும்.
ஒரு பூவில்
இருக்கும் மகரந்தத்தை ஒரு பிரஷ்ஷினால் எடுத்து இன்னொரு பூவின் சூலகத்தில் சேர்ப்பதன்
(DUSTING
POLLEN BY BRUSH) மூலம் மகரந்தசேர்க்கை உண்டாகும்.
உலகம்
முழுவதும் உள்ள வியாபார ரீதியாக டிராகன் பழங்களை சாகுபடி செய்பவர்கள் இதனை வெற்றிகரமாக
செய்கிறார்கள். இதனால் பெரிய அளவு எடை உள்ள பழங்களை நிறைய லாபகரமாக
உற்பத்தி செய்கிறார்கள்.
மகரந்தத்
துகள்களை சேகரிக்கலாம் (COOLLECTION OF POLLEN GRAINS)
இதில்
இன்னொரு ஆச்சரியமான செய்தி ! முதல் பருவத்தில் பூத்த டிராகன்
பழ பூக்களின் மகரந்த துகள்களை சேகரித்து ஒன்பது மதங்கள் வரை சேமித்து வைத்திருந்து
அடுத்தப் பருவத்து பூக்களின் மகரந்தசேர்க்கைக்கு பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
நானூறு
கிராம் எடையுடைய பழங்கள் (BIG FRUITS)
ஒரு பழம்
சராசரியாக 350 முதல் 400 கிராம் எடை
உடையதாக இருக்கும். அதிகபட்சமாக சில பழங்கள் 900 கிராம் கூட இருக்கும்.
ஒரு
காலத்தில் களைச்செடி (IT WAS A WEED)
மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவின் மற்றும் வட பகுதிதான்
இந்த ரகத்தின் சொந்த மண். அங்கெல்லாம் இது களைச்செடியாகவே கருதப்பட்டது.
சமீபத்தில்கூட
இந்த கற்றாழை கொடி மரங்கள் சீனாவில் களைச்செடியாகவே பட்டியலிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்
கொடிமரம் (VINE TREE FOR EXPORT)
ஆனாலும்
இன்று எல்லா நாடுகளிலும் இது லாபம் தரும், வணிக மரமாக,
ஏற்றுமதிக்குரிய மரமாக மாறியுள்ளது.
இதன்
பூக்கள் மிகவும் அழகானவை. இதில் உள்ள ஐந்து இனங்கள் மட்டுமே பழங்களை தரக்கூடியவை.
இவை வேகமாக அதிகபட்சம் 10 மீட்டர் வரை நீளமாக வளரக்கூடியவை.
இதன்
கொடிகள்
3 முதல் 5 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும்.
பெரும்பாலான வகைகளின் கொடிகள் திருக்கள்ளியைப்போல மூன்று பக்கங்களை கொண்டதாகவே
இருக்கின்றன.
கொடிகளில்
கொத்துக் கொத்தாக முட்கள் இருக்கும். ஒரு கொத்தில்
ஒன்று முதல் மூன்று முட்கள் வரை இருக்கும். அவை சிறிய முட்களாய்
இருக்கும்.
அதிகமாய்
பரவியுள்ள இடங்கள் (DISTRIBUTION)
இந்த
ரகம் அதிகமாய் பரவியுள்ளது ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ்,
ஹவாய், லா ரி யூனியன், நியூ
கலிடோனியா, மற்றும் ஃபுளோரிடா.
கிழக்கு
ஆஸ்திரேலியாவில் ஒரு சமயம் களைக் கற்றாழையாக கருதப்பட்டது. இது ஒரு ஒட்டுண்ணி செடியும்கூட.
பிற மரங்களிலிருந்து
தனது வேர்களின் மூலம் தனக்கு தேவைப்படும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும்
தன்மையுடையது.
ஒரு ஏக்கரில் 4 முதல் 6 டன் பழங்கள் கிடைக்கும், வளர்ந்த பழ மரங்களிலிருந்து 8 டன் வரை கூட கிடைக்கும்.
இந்த
சிவப்புத்தோல் வெள்ளைத்தசை டிராகன் ரகத்தைப்பற்றிய முக்கியமான பண்புகள், பூக்கும் தன்மை,
காய்ப்பு, பழங்கள், கவாத்து, அறுவடை, அத்தனையும் சொல்லியிருக்கிறேன்,
வேறு
உங்களுக்கு என்ன தேவை என்று சொல்லுங்கள், ‘கமெண்ட்ஸ்’ பகுதியில் உங்கள் கருத்தினை எழுதுங்கள்,
உங்களோடு கருத்திசைவு கொண்ட நண்பர்களுக்கு இந்த பதிவினை ‘ஷேர்’ செய்யுங்கள், நன்றி வணக்கம்.
GNANASURIA BAHAVAN D
gsbahavan@gmail.com
No comments:
Post a Comment