Tuesday, June 13, 2023

WHAT IS THE FOOT PRINT OF WATER ? அது என்ன நீரின் காலடித்தடம் ?

 

அது என்ன நீரின்
காலடித்தடம் ?

ஒரு பட்டுப்புடவை  தயார் செய்ய  28,000.  லிட்டர்  நீரை  செலவு செய்ய வேண்டும் என்கிறார்கள்ஆக ஒரு பட்டுப்புடவையின் காலடித்தடம் அது.  ஒரு வேஷ்டியை  தயார் செய்ய  3,000.  மி.லி.   லிட்டர்  நீர்  தேவை.  ஆக பட்டுப்புடவைக்கு நீரின்  காலடித் தடம்வேஷ்டியைவிட அதிகம்.

WHAT IS THE FOOT PRINT OF WATER ?

அது என்ன நீரின் காலடித்தடம் ?

88888888888888888888888888888888888888888888888888 

எப்போதும் தாகத்தோடு இருக்கும் உலக  நாடுகளில்  முதல் வரிசையில் இருப்பது  இஸ்ரேல்.  அதனால்தான் அதிகபட்ச சாம்பல்நீரை  பயன்படுத்தி தங்களின், தண்ணீர்த் தேவையை  சமாளிக்கிறார்கள். விவசாயத்திற்கு  பாய்ச்சுகிறார்கள்.  தொழிற் சாலைகளில் இயந்திரங்களை குளிர்விக்க  பயன்படுத்துகிறார்கள்.

சாம்பல்நீரை (குளியலறை நீர்கழிவறை அல்ல)  சுத்தம்செய்து  குடிக்கவும்  செய்கிறார்கள் என்பது  நம்பமுடியாத செய்தி.  ஆனாலும் உண்;மை .  

மழைநீர்  மாதிரி  வருமா 

அது ஒன்றும் பெரிய  சமாச்சாரம்  இல்லை.  நாங்கள் 1929  லிருந்து  சாம்பல்நீரை  சுத்தப்படுத்தி பயன்படுத்துகிறோம். எங்கள் பார்க்குகளுக்கும்கோல்ஃப்பந்து மைதானங்களுக்கும் இதைத்தான் பாய்ச்சுகிறோம். விவசாயத்திற்கு  பாய்ச்சுவதும்  இந்தத்தண்ணீர்தான்”  என்கிறது  லாஸ்ஏஞ்சல்ஸ். 

நாங்கள்  கொஞ்சம் லேட்…  ஆனால் 1932 ஆம்  ஆண்டிலிருந்தே பயன்படுத்துகிறோம்  ஆனால்  நாங்கள் குடிப்பதில்லை” - இது  கல்போர்னியா.   

சிங்கப்பூரில்  அதிநவீன தொழில்  நுட்பத்தினால், சாம்பல்நீரை அற்புதமான தண்ணீராக  மாற்றிவிடுகிறார்கள். மறைமுகமாக  நாங்கள்  குடிக்கவும் பயன்படுத்துகிறோம் என்கிறார்கள்.

என்னதான்  ஆர்.வோ.  என்றாலும்அறுவடை செய்த மழைநீர்  மாதிரி  வருமா”,  என்கிறார்கள், விஷயம் தெரிந்த விஞ்ஞானிகள். 

யு.எஸ்.ஏ.,   யூ.கே.   போன்ற நாடுகளில்பெரிய ஹோட்டல்கள் மற்றும்   தங்கும் வீடுதிகள், சாம்பல்நீரை  மறுசுழற்சி செய்கின்றன. 

டாய்லெட்களில்  பிளஷ்  செய்ய பயன்படுத்துகிறார்கள்.  இதற்கு  ஆகும் செலவு  அதிகம். ஆனாலும் செலவு  பாதியாகக்  குறைகிறது.  இன்னும்கூட வீடுகளில் பயன்படுத்த தயக்கம் இருக்கிறது.

மிகக்குறைவான செலவில்  மறுசுழற்சி  கருவிகளை  வெள்ளோட்டம்  விட்டிருக்கிறது,        ‘ரீ அக்குவாஎன்னும் நிறுவனம். இதை வாங்கிப் போட்டால்உங்கள் வாட்டர் பட்ஜெட்  30 சதம் கட் என்கிறது. 

ஒரு வீட்டில்பொருத்த எவ்வளவு செலவாகும் என்று கேட்டால்அதிகமில்லை   ஜென்டில்மேன்ஒரேஒரு  லகரம்தான்இன்ஸ்ட்டாலேஷன்  சார்ஜ்   30,000.   மெய்ண்ட்டனன்ஸ்  ஒரு  3,000 என்கிறார்கள் (இந்திய  ரூபாயில்தான்).

இன்னும்  இரண்டே  வருஷம்தான்.    இதன்விலை  300 அல்லது  400  பவுண்டுக்கு   வந்துவிடும் என்கிறார்கள். (1  பவுண்டு  என்றால்    100  இந்திய  ரூபாய்)

நீரின் காலடித்தடம்   (WATER FOOT PRINT)

குளிக்க, சமைக்கதுவைக்கநெல் பயிரிடகோதுமை பயிரிட, கார் செய்யகமப்யூட்டர் செய்யஎல்லாவற்றிற்கும்  வேண்டும்  தண்ணீர்.

ஒருபொருள்செய்ய, அல்லது   காரியம்  ஆற்ற  எவ்வளவு நீரை பயன்படுத்துகிறோம்அல்லது  மாசுபடுத்துகிறோம்  என்று கணக்கிடுவதுதான் நீரின் காலடித்தடம்ஒரு டன்  தானியம்  உற்பத்திசெய்ய எத்தனை  கியூபிக்மீட்டர்  (அ) கன அடி  தண்ணீரை  பயன்படுத்தினோம்  என்பதுதான்  அதன் காலடித்தடம். 

ஒரு பட்டுப்புடவை  தயார் செய்ய  28,000.  லிட்டர்  நீரை  செலவு செய்ய வேண்டும் என்கிறார்கள்ஆக ஒரு பட்டுப்புடவையின் காலடித்தடம் அது. 

ஒரு வேஷ்டியை  தயார் செய்ய  3,000.  மி.லி.   லிட்டர்  நீர்  தேவை.  ஆக பட்டுப்புடவைக்கு நீரின்  காலடித் தடம்வேஷ்டியைவிட அதிகம்.

பசுமைநீர்  நீலநீர்  சாம்பல்நீர்  என  மூவகை  நீர்பற்றி  முன்னரே  பார்த்தோம். 

நேரடியாக  பயன்படுத்தும்  மழைநீர்  பசுமைநீர்.    ஏரிகுளம், குட்டை ஆறுகள்அணைகள்நீர்த்தேக்கங்கள்,   இவற்றில்  சேகரம்   ஆவது  நீலநீர்.    குளியலறைநீர், துவைக்கும்  நீர்சமைக்கும்  நீர்ஆகியவை  சாம்பல்நீர். 

விவசாயம், வன வளர்ப்புகாரியங்களுக்;கு பயன்படுத்தப்படும் மழைநீரினை அளப்பது பசுமைகாலடித்தடம்.

இயற்கை விவசாயம்தொழிற் கூடங்கள், வீட்டு உபயோகம்  ஆகியவற்றால்    செலவழிக்கப்படும், மாசுசெய்யப்படும் நீரை அளப்பது  நீலநீர் காலடித்தடம்.

சாம்பல்நீரில்  உள்ள  மாசுவினை சரிசெய்து  உபயோகிக்கும்  அளவுக்குதரமாக மாற்றுவதற்கு  ஆகும் நீரின் அளவை  அளப்பது  ,சாம்பல்நீர்   காலடித்தடம்.

நீர் காலடித்தடங்களுக்கு  சில உதாரணங்கள்:

1.ஒரு கிலோ  மாட்டு இறைச்சி  உற்பத்தி செய்ய ஆகும்  நீர்ச்செலவு  15,000 லிட்டர்.

2. 150 கிராம்    சோயா பர்கர்   செய்ய ஆகும்  நீர்   160 லிட்டர்.

3. 150 கிராம்  மாட்டிறைச்சி  பர்கர்  செய்ய ஆகும்  நீரின்  காலடித்;தடம்  1,000 லிட்டர்.

4. ஒரு ஜப்பானியரின்  ஓராண்டு  நீர்காலடித்தடம்  --  1380  கன மீட்டர். 

5. ஒரு அமெரிக்கரின்  ஓராண்டு  நீர்காலடித்தடம்  2840  கன மீட்டர்.

வாட்டர் புட் பிரிண்ட் அல்லது அல்லது நீரின் காலடித்தடம் என்னும் கொள்கையை  முதன்முதலாக உருவாக்கியவர்  ஆர்ஜென்  ஓல், ஹோக்ஸ்ட்ரா  என்பவர் யுனெஸ்கோவைச்சேர்ந்த நீரியல் நிபுணர், 2002 ஆம் ஆண்டு இதனை    உருவாக்கினார் .

சில முக்கிய பொருட்களின்  நீரின் காலடித்தடம் எவ்வளவு என  எவ்வளவு என கணக்கிட்டுள்ளார்கள்.  அவை  உற்பத்திசெய்யும் நாடுகள்  போன்றவற்றை அடிப்படையாகக்  கொண்டு  வேறுபடும். 

v  மாட்டிறைச்சி 1 கிலோ  உற்பத்திக்கு  ஆகும் நீர் 15415 லிட்டர். 

v  சாக்லெட் 1 கிலோ உற்பத்திக்கு ஆகும் நீர் 17896   லிட்டர்.

v  பால் 1 லிட்டர்; உற்பத்திக்கு ஆகும் நீர் 1021 லிட்டர்.

v  கோதுமை ரொட்டி 1 கிலோ உற்பத்திக்கு ஆகும் நீர் 1608லிட்டர். 

அகில  உலக அளவில்   ஒரு தனிநபர்ஓர் ஆண்டில்  சராசரியான நீரின்காலடித்தடம்   1385  கன மீட்டர்.  

ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும்  ஒரு  நபரின்  ஓராண்;டின்  நீரின் காலடித்தடத்தை  கீழ்க்கண்டவாறு   கண்டறிந்துள்ளனர்.

v  சீனா      --     1 071    கனமீட்டர்.                  .     

v  பின்லாந்து  --     1733    கனமீட்டர். 

v  இந்தியா   --     1089    கனமீட்டர்.                                 

v  யுனைட்டட் கிங்டம்  -- 1695 கனமீட்டர்.                  

v  யூ.எஸ்.ஏ.  -- 2842 கனமீட்டர்.  

தண்ணீரை ஊதாரித்தனமாக செலவு செய்யும் தர வரிசைப் பட்டியலில் உலக அளவில் நாம் முன்றாவது இடத்தில் உள்ளோம்.

8888888888888888888888888888888888888

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...