Sunday, June 18, 2023

WEST INDIAN ELM A HERB TREE 32. ஆயுர்வேத மருத்துவ மரம் தேன் பூச்சி மரம்

 

ஆயுர்வேத மருத்துவ மரம்
தேன் பூச்சி மரம்


தேன் பூச்சி மரம், கரிபியன் தீவுகள் தென் அமெரிக்கா, சென்ட்ரல் அமெரிக்காமற்றும் மெக்சிகோ ஆகிய இடங்களில் இந்த மரங்கள் பெருமளவு பரவியுள்ளன, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இந்த மரம் புழக்கத்தில் உள்ளது.  இதன் மரக் கட்டைகளை பல்வேறு மரச்சாமான்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பட்டைகள்வேர், இலைகள் போன்றவற்றை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.  இந்த மரங்களின் பூக்கள் தேனீக்களுக்கு அபரிதமான தேனும் மகரந்தமும் அளிப்பதால் நாம் இதனை தேன் மரம் என்றும் தேன்பூச்சி மரம் என்றும் அழைக்கிறோம்.

பொதுப் பெயர்கள்: வெஸ்ட் ண்டியன் எல்ம், பாஸ்டர்ட் செடார், பேசெடார்பீஜியன் செடார் (WEST INDIAN ELM, BASTARD CEDAR, BAY CEDAR, PIGEON CEDAR)

தாவரவியல் பெயர்: குவாசுமா உல்மிபோலியா (GUAZUMA ULMIFOLIA)

தாவரக்குடும்பம் பெயர்: ஸ்டெர்குலியேசி (STERCULIACEAE)

தாயகம்: அமெரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகள் 

பிறமொழிப் பெயர்கள்:

தமிழ்: தேன் மரம்> தேன் பூச்சி மரம்> காட்டு ருத்ராட்சம் (THEN MARAM, THENPOOCHI MARAM, KATTU RUDRATCHAM)

மலையாளம்: ருத்ராக்ஷம் (RUDRAKSHAM)

தெலுங்கு: பத்ராக்ஷா (BHADRAKSHA)

கன்னடம்: ருத்ராக்ஷி (RUDRAKSHI)

மலையாளம்: ருத்ராக்ஷம் (RUDRAKSHAM)

சமஸ்கிருதம்: ருத்ராக்ஷா (RUDRAKSHA)

இந்தி: ருத்ராக்ஷி (RUDRAKSHI)

குஐராத்தி: பத்ராக்ஷா (BHADRAKSHA)

பரவி இருக்கும் இடங்கள்

கரிபியன் தீவுகள் தென் அமெரிக்கா, சென்ட்ரல் அமெரிக்கா, மற்றும் மெச்சிகோ ஆகிய இடங்களில் இ;ந்த மரங்கள் பெருமளவு பரவியுள்ளன. வெஸ்ட் இண்டியன் எல்ம் (INDIAN ELM) என்று சொல்லும் இவை கொலம்பியா,ஈக்குவேடர், பெரு,  பொலிவியா, பேராகுவே, அரிஜெண்டினா மற்றும் பிரேசில் நாட்டிலும் அதிம் தென்படுகின்றன.   நூறு ஆண்டுகளுக்கும் மேலா இந்தியாவில் இந்த மரம் புழக்கத்தில் உள்ளது. 

மரத்தின் பயன்கள்      

இதன் மரங்கள் சிறியவை மற்றும் நடுத்தரமானவை.  நல்ல சூழலில் 30 மீட்டர் வரை உயரமாகவும் 60 செ.மீ அகலமாகவும் வளரும்.    

இதன் மரக் கட்டைகளை பல்வேறு மரச்சாமான்கள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.  அவை கம்பங்கள், பொதுவான மர வேலைகள்>,கட்டிடங்களின் உட்புற கட்டுமான வேலைகள், மேஜை நாற்காலி வகையறா> பெட்டிகள், கருவிகளின் கைப்பிடிகள், துப்பாக்கிக் கட்டைகள்>,விறகு மற்றும் எரிபொருளாகப் பயன்படும் கரி ஆகியவை, ஆனால் இது சராசரி தரம் கொண்ட மரம்தான்.  அதுமட்டுமல்ல இதனை உலர் மரக்கரையான்கள் (DRY WOOD TERMITES) சுலபமாகக் தாக்கும். 

மருத்துவப் பயன்கள்      

ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பட்டைகள்> வேர்> இலைகள் போன்றவற்றை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.  இந்தியா உட்பட பல பாரம்பரிய மருத்துவ முறைகளிலும், இதனை பயன்படுத்தி ருகிறார்கள்.    

மலேரியா காய்ச்சல், சிபிலிஸ் உட்பட பலவிதமான பால்வினை நோய்கள்,யானைக்கால் நோய், மார்பக நோய்கள்தொழுநோய், மார்புச்சளி, மூச்சுக் குழாய் அழற்சி,  கருப்பையில் தோன்றும் நார்க்கட்டிகள், ஆகியவற்றை குணப்படுத்த இந்த மரத்தின் பயிர்ப்பாகங்களை பயன்படுத்துகிறார்கள்.   

இந்த மரத்தில் உட்புறப் பட்டையை பயன்படுத்தி> வெஸ்ட் இண்டிஸ் நாட்டினர் யானைக்கால் நோயை குணப்படுத்துகிறார்கள்.    

லேட்டினோ ஹீலர்ஸ் (LATINO HEALERS) என்ற மருத்துவக் குழுவினர், கர்ப்பப் பைகளில் இருக்கும், நார்கட்டிகளை குணப்படுத்த இதனை உபயோகப்படுத்துகிறார்கள்.    

இதன் விதைகளைப் பொடித்து அதில் பானம் தயாரித்துக் கொடுத்து> வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு. சளி, காய்ச்சல் மற்றும் இருமலை குணப்படுத்துகிறார்கள்.

இளவயது ழுக்கை     

இப்போதெல்லாம் 25 வயதைத் தாண்டினாலே இளைஞ்ர்களின் தலையில் பெரும்பாலும் வழுக்கைதான் மிஞ்சுகிறது.  இதற்கு முக்கியமான காரணம் அதிகமாக பயன்படுத்தும் ஷாம்பு என்கிறார்கள்.  அன்றாடம் ஷேம்புவை பயன்படுத்தும் போது முடியின் பருமன் மெல்ல மெல்ல குறைந்து அது வேகமான உதிர்வு;க்கு வழி வகுக்கிறது.  என்கிறார்கள்.      

அதனால் மீப காலமாக இளைஞர்கள் முடிஉதிர்வில் கவனம் அல்லது அதிகமான அக்கறை காட்டுகிறார்கள்.    

இந்த தேன் பூச்சி மரத்தில் பட்டைகள், பழங்கள், மற்றும் விதைகளில் முடி உதிர்வு மற்றும் இளவயது வழுக்கையைத் தடுக்கும் சக்தி வீரியமாக இருக்கிறது என்கிறார்கள்.

ருத்ராட்ச கொட்டைகள்

இதன் பழங்கள் அச்சாக அசலாக ருத்ராட்சம் மாதிரியே இருக்கும்.  பழங்கள் தொட்டுப் பார்த்தால் மரக்கட்டை போலவே இருக்கும்.  சாதுக்களும் சாமியார்களும் அணிந்திருப்பது தேன் பூச்சி மரத்தின் கொட்டைகள்தான் என்கிறார்கள்.  இவற்றை முகர்ந்தால் சாக்லெட் வாசைன விசும்.   

இதன் பட்டைகளில் நார்ப்பகுதி அதிகம் உடையதாக இருக்கும்.  இதில் கயிறுகள் மற்றும் உறுதியான நூல்களையும் தயாரிக்கலாம்.    

மாயா நாகரீக காலத்தில் சாக்ட் டிரிங்க்ஸ் மாதிரி இது ஒரு முக்கியமான பானமாக இருந்தது கவுட்டிமாலாவில்.  அங்கு சக்கரை  நோய் உட்பட கிட்டத்தட்ட ஒரு டஐன் நோய்களை குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

இதன் விதைகளை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடலாம்.

விதைகள் மற்றும் கிளைகளை பயன்படுத்தலாம் (PROPAGATION BY SEEDS AND CUTTINGS)    

புதிய கன்றுகளை உருவாக்க நேரடியாக விதைகளை விதைக்கலாம்.  கிளைகளை வெட்டி நடவு செய்யலாம்.  விpதைக் குச்சிகள்> மற்றும் வேர்ச் செடிகளை எடுத்து நடவு செய்யலாம்.  ஒரு கிலோ விதையில்> ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் விதைகள் இருக்கும்.    

இந்த மரங்களின் பூக்கள் தேனீக்களுக்கு அபரிதமான தேனும் மகரந்தமும் அளிப்பதால் நாம் இதனை தேன் மரம் என்னும் தேன்பூச்சி மரம் என்றும் அழைக்கிறோம்.  ஆனால் இதுபற்;றிய ஆய்வுகள் ஏதும் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. 

TO READ FURTHER

WWW.FLOWERSOFINDAI.ORG / GUAZUMA ULMIFOLIA

WWW.EN.WIKIPEDIA.ORG / GUAZUMA ULMIFOLIA

WWW.ECOCROP.FAO.ORG / GUAZUMA ULMIFOLIA

WWW.MAYAETHNOBOTANY.ORG /”GUAZUMA ULMIFOLIA

WWW.TROPICAL.THEFERNS.INFO / GUAZUMA ULMIFOLIA

PLEASE POST A COMMENT, GNANASURIA BAHAVAN D (AUTHOR)

999999999999999999999999999999999999

 

    

     

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...