நீலச்சடை செடார் அழகு கொடிமரம் |
நீலச்சடை செடார் மரம், இது ஒரு வித்தியாசமான மரம்.
அழகு மரமாக வளர்க்க ஏற்ற அற்புதமான மரம். உயரமாக வளராத ஒரு சிறுமரம், இந்த மரத்தை எந்த வடிவத்திலும் மாற்றி அமைக்க முடியும், இதன் கன்றுகளை உருவாக்குவது சுலபம், விதைகள் மூலம் கன்றுகளை
உற்பத்தி செய்யலாம், ஆனால் இளம்
கன்றுகளை எலிகள், அணில்கள் மற்றும் இதர பிராணிகளின்
மேய்ச்சலிலிருந்து பாதுகாக்க வேண்டும், ஆனல் இந்த மரம் மான்கள்
மேயாத மரம்.
தமிழ்ப்பெயர்:
நீலச்சடை செடார் (WEEPING
BLUE ATLAS CEDAR)
பொதுப் பெயர்கள்:
வீப்பிங் புளு அட்லஸ் செடார் (WEEPING BLUE ATLAS CEDAR)
தாவரவியல் பெயர்: கிளாகா பெண்டுலா (GLAUCA PENDULA)
தாவரக்
குடும்பம் பெயர்: பைனேசியே (PINACEAE)
தாயகம்: வடக்கு ஆப்ரிக்காவின் அட்லஸ் மலைத் தொடர் (ATLAS MOUNTAINS OF NORTH AFRICA)
செடார்
மரங்களில் பலவகை உண்டு. எல்லா செடார்
மரங்களுமே இலைஉதிர் மரவகைகள் எல்லாமே
ஊசிபோன்ற இலைகளை உடையவை. எல்லாமே பெரிய
பெரிய மரங்கள். ஆனால் பெரிய தோட்டங்கள்>
பெரிய பூங்காக்கள், பெரிய சாலைகள் போன்றவற்றிலேயே நட முடியும்.
வேலி
மரங்களாக நடலாம். காற்று தடுக்கும்
மரங்களாக நடலாம். ஆனால் இந்த புளு அட்லஸ்
செடார் மரம் அதிகபட்சமாக 12 அடி உயரம்தான் வளரும்.
பொதுவாக செடார் மரங்கள் எல்லாம் வேகமாக
வளரும். பரவலான பருவநிலை, கால நிலை
உள்ள இடங்களில் எல்லாம் வளரும்.
தேவதாரு ஒரு செடார் மரம்
செடார்
மரவகைகளில் நான்கு வகைகளை முக்கியமானவை என்று வகைப்படுத்துகிறார்கள். லெபானான் செடார், அட்லஸ்
செடார், டியோடர் செடார், சைப்ரஸ்
செடார் என நான்கு வகை. இவற்றில் டியோடர்
செடார் என்பது இமையமலையின் மேற்குச் சரிவுகளுக்கு
சொந்தமானவை. இதைத்தான் நாம் “தேவதாரு”
மரம் என்று சொல்லுகிறோம். இது
உலகம் முழுவதும் பரவியுள்ளது.
இந்த
நான்குவகை அல்லாமல் “சைபீரியன்
செடார்” என ஒரு
வகையும் சொல்லுகிறார்கள். அந்த மரங்கள்
பைன்மர வகையைச் சேர்ந்தவை. உண்மையாக இது
செடார் மரவகைளை சேராதவை. இதன்
தாவரவியல் பெயர் பைனஸ் சைபீரிகா (PPINUS
SIBERICA)
இந்திய
செடார் மரம்
இமாலயன்
செடார் என்றும் டியோடர் செடார் எனவும் அழைக்கப்படும் செடார் மரவகை> இந்தியா>
ஆப்கானிஸ்தான்> பாகிஸ்தான்> திபெத்து> நேப்பாளம் ஆகிய நாடுகளைத்
தாயகமாகக் கொண்டது. இந்த மரங்கள்
5000 அடி முதல் 11000 அடி வரை உயரம் உள்ள பகுதிகளில் வளரும். இதுதான் தேவதாரு மரம் என்று பார்த்தோம்.
ஒரு
வித்தியாசமான செடார் மரம்
இது ஒரு
வித்தியாசமான செடார் மரம். அழகு மரமாக
வளர்க்க ஏற்றது. உயரமாக வளராத ஒரு சிறுமரம். இயற்கையாக மெல்ல வளரும். இதன் கிளைகள் கொடிமாதிரி தவழ்ந்து ஓடும். ஒட்டுமொத்தமாக இந்த மரத்தைப் பார்த்தால் ஒரு
நீர் ஊற்று போல
தோற்றம் தரும். களிமண்ணில் பொம்மை செய்வது போல இந்த மரத்தை எந்த வடிவத்திலும் மாற்றி அமைக்க முடியும்.
இந்த
மரத்தின் இலைகள் ஊசி இலைகள் போல இருந்தாலும் இதன் வண்ணம் கவர்ச்சிகரமானவை. நீலம், பச்சை, மற்றும்
வெள்ளை என அனைத்தையும் ஒரு சரியான அளவில் கலந்தது மாதிரியான நிறம். இலைகளுடன்
சேர்த்து கிளைகளோடு
பார்த்தால் பூச்சரத்தை தொடுத்து தொங்க
விட்டது போல தோன்றம். தனது கிளைகளை இலைகளைக்
கொண்டே தன்னை அலங்கரித்துக் கொள்ளும் மரம்
இது.
எல்லா மரங்களுமே அப்படித்தான் தனது கிளை, வேர், விழுது, பட்டை, இலை, பூ, பிஞ்சு பழம் என தன்னைத்தானே சீவி சிங்கரித்துக் கொள்ளுகின்றன. அதற்கு சோப்பு சீப்பு கண்ணாடி எதுவும் வேண்டாம், சிவப்பழகு
கிரீம் வேண்டாம். வெள்ளழகு கிரீம் பாடி லோஷன் எதுவும் வேண்டாம்.
எங்கு
வளரும்?
முழுமையான
சூரிய வெளிச்சம். இதற்குப் பிடிக்கும்> நல்ல
வடிகால் வசதி பிடிக்கும். சுமாரான ஈரப்பசையுடன் இருக்கும் நிலவாகு பிடிக்கும். வெப்பமான தட்ப வெப்ப நிலை பிடிக்கும்.
அத்தோடு
வறட்சியைத் தாங்கியும் வளரும். மரம் இது
குறைந்தபட்சம் 3 அடி அதிகபட்சம் 12 அடி உயரமும் வளரும். கவாத்து செய்யாமலே கணக்காகவும் வளரும், நாம் விரும்பும் உயரத்திலும் பராமரிக்கலாம். நாம் விரும்பும் படுக்கைவச பரப்பளவிலும்
பராமரிக்கலாம். நாம் விரும்பும் வடிவத்திலும் பராமரிக்கலாம்.
நீல
சடைச் செடார் மரம்
இந்த
அழகு மரத்தை நான் முதல் முதலாக டல்லஸ் நகரத்தின் தாவரவியல் பூங்காவில்தான்
பார்த்தேன். தொலைவிலிருந்து பார்க்கும்
போதே அழகாய்த் தென்பட்டது. இதனை நான் கொடி
என்றே நினைத்தேன். அருகில் போய் பார்த்த போதுதான் அது கொடிமரம் எனத் தெரிந்த்து.
இதன்
இலைகள் ஒரு வித்தியாசமான வண்ணம் கொண்டது. சடை
சடையாய் இலைகளுடன் தொங்கும்.
புதிய
கன்றுகளை உருவாக்கும் முறை
செடார் மரக்கன்றுகள் உருவாக்குவது என்பது சுலபம். விதைகள் மூலம் கன்றுகளை உற்பத்தி
செய்யலாம். இளம் கன்றுகளை எலிகள்> அணில்கள் மற்றும் இதர பிராணிகளின்
மேய்ச்சலிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
செடார்
மரக் கன்றுகளின் பட்டைகளை இந்தப் பிராணிகள் பிரியணி மாதிரி பிரியமாக
சாப்பிடும். நாம் “சீவிங்-கம்”
மெல்லுவது
மாதிரி மென்று தள்ளிவிடும். அதனால் இளங்கன்றுகளை
அவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுவது மிகவும்
அவசியம்.
மான்களால்
மேயப்படாத மரம்
இந்த மரம் மான்களால் மேயப்படாத மரம். நம்ம ஊரில் மரம் வளர்ப்பது என்றால் அது ஆடு மான்களால் மேயப்படாத மரமாக இருக்க வேண்டும். அமெரிக்கா போன்ற இடங்களில்
மாங்களால் மேயப்படாத மரமாக இருக்க வேண்டும், இல்லையென்றால்
அவற்றின் மேய்ச்சலிலிருந்து மரக்கன்றுகள் தப்பிக்க முடியாது.
வெள்ளாடுகள். முன்னங்கால்களை மரங்களின் மீது ஊன்றி
மரங்களின். துளிர்ப்
பகுதிகளை துவம்சம் செய்வதை நான் பல முறைப் பார்த்திருக்கிறேன்.
கிட்டத்தட்ட
10 அடி உயரம் உள்ள இரண்டு ஈச்ச மரங்களின் மேல் ஏறி உச்சிக்குப்போய் ஒரு
வெள்ளாட்டுக் குட்டி மேய்வது போல ஒரு வீடியோ படத்தைப் பார்த்தேன்.
அதனால்
இந்தியாவில் ஆடுகளை காடுகளின் எதிரி என்று சொல்லுவார்கள். அதுபோல மரக்கன்றுகளை விற்பனை செய்யும் “நர்சரி” வியாபாரிகள்”
இது மான்களால் மேயப்படாதது என் கூட விளம்பரம் செய்கிறார்கள் அமெரிக்காவில்.
அந்த
வகையில் நம் நீல சடைச் செடார் மரமும்
மான்களால் மேயப்படாத மரம்.
இந்த
மரங்கள் நேராக நெட்டுக்குத்தாக வளர வேண்டும்
என்றால் இளங்கன்றுகளாக
இருக்கும்போதே கொம்புகளைக் கொண்டு முட்டு (SUPPORT STAKE)
கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த
மரங்கள் தரையினில்> பக்கவாட்டில் தவழ்ந்து வளர
ஆரம்பித்து விடும்.
ஆஸ்திரேலியாவில்
கர்ட்டன் பிக் ட்ரீ (CURTAIN
FIG TREE) என்று ஒரு மரம் உள்ளது.
மிகவும் பிரபலமான மரம். இது ஒரு
அத்திமரம் அந்த ஒரு மரமே அந்த ஊரை சுற்றுலாத்தலமாக மாற்றி உள்ளது. நம்ம ஊரில் அதன் பெயர் கல் அத்தி மரம். சங்க
இலக்கியம் இதனை இச்சி மரம் என்கிறது.
அதுபோல கூட இந்த செடார் மரத்தை வளர்க்க முடியும். எந்த ஒரு சிறிய கிராமத்தையும் ஒரு சுற்றுலாத் தலமாக
மாற்ற முடியும்.
கொசுறு
இந்த
வீப்பிங் பூளு அட்லஸ் செடார் மரத்திற்கு நான் சூட்டி இருக்கும் நாமகரணம் “நீலச்சடை செடார்
மரம்”. இந்தப் பெயரை அந்த மரத்தின் காதில் மூன்றுமுறை சொல்லிவிட்டு வந்தேன்.
FOR FURTHER READING
WWW.GARDENINGKNOWHOW.COM
–“CEDAR TREE CARE” – TIPS FOR HOW TO GROW CEDAR TREES”
WWW.MISSOURIBOTANICALGARDEN.ORG /-“CEDRUS ATLANTICA/GLAUCA PENDULA”
WWW.GARDENIA.NET/-“CEDRUS ATLANTICA/GLAUCA PENDULA(ATLAS
CEDAR)
WWW.CONIFERS.ORG
/
SOCIETY.ORG/AMERICAN CONIFER SOCIETY – “CORUS ATLANTICA”
WWW.BOETHINGTREELAND.COM / “CEDRUS ATLANTICA”
WWW.HOMEGUIDES.SFGATE.COM
/ “HOW TO PLANT CEDRUS ATLANTICA”
WWW.HORTULF.EDU – “CEDRUS ATLANTICA”
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS
USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW
MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE
READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE
YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment