Tuesday, June 13, 2023

WE CAN PROTECT CHENNAI FROM FLOODS வெள்ளத்திலிருந்து சென்னையை பாதுகாக்க முடியும்

வெள்ளத்திலிருந்து சென்னையை   
பாதுகாக்க முடியும்

"தமிழக ஆறுகளின்  இணைப்புக்  கால்வாய் திட்டங்கள்"  என்ற நூலின்  ஆசிரியர் பொறியாளர்   தீ .நடராஜன்  சென்னையில் வெள்ளத்தை  தடுக்க மூன்று முக்கியமான வழிமுறைகளை தனது நூலில் குறித்துள்ளார்.

2015 ஆம்ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தை சுலபமாக மறக்க முடியுமா  காரும் பஸ்ஸ_ம் போன சாலைகளில்   படகுகள்  போனவற்றை  மறக்;;க      முடியுமா  தரைத்தளம் தண்ணீரில் மூழ்கிஇருந்தது.  மொட்டைமாடியில்ஹெலிகாப்டரின்   உணவுப்  பொட்டலங்களுக்காக  குழந்தைகளுடன் காத்திருந்த மக்களை மறக்க முடியுமா  பிணமான  அவன் மனைவியின்  பிணத்தோடு   கண்ணீர் வடித்தபடி   தண்ணீர் வடிவதற்காக  காத்திருந்த  கணவனை  மறக்க      முடியுமா  ?  

முக்கியமான மூன்று கருத்துக்களை முன்வைக்கிறார்.  ஒன்று  குடிமராமத்து முறையை மீணடும் செயல்பாட்டிற்கு       கொண்டு வருவது. இரண்;;டாவது  நீர் ஆதாரங்களின்  கரையோர குடிசைகளை  அப்புறப்படுத்தி அவர்களை மாற்று இடங்களில்  குடி அமர்த்துதல்;.  மூன்றாவது மிகையான வெள்ளநீர்க் காலங்களில் நீர் தங்கு  தடையின்றி கடலில்  சேர்ப்பதற்கு  ஏற்ப ஆறுகளை சீர் செய்வது. 

இந்த மூன்றையும்  சரிவர  செய்துவிட்டால், வெள்ளம் வந்தால்கூட சென்னை வாசிகள்   எப்போதும்; போல  பல்லவனில்  பயணம்செய்து  ஆபீசுக்குப் போய்வரலாம். 

குடிமராமத்து:  வீட்டிற்கு ஒரு ஆள் என்று  ஒன்று சேர்ந்து  ஊருக்கு பொதுவான வேலைகளை  ஊதியம் வாங்காமல் செய்வதுதான்குடிமராமத்து. திருவிளையாடற் புரராணத்தில் பிட்டுக்கு  மண்சுமந்த  சிவபெருமான்  போய்  பிரம்படி பட்டதுகூட  குடிமராமத்து வேலையின்  போது தான்.

சேர, சோழபாண்டியர்கள்  மற்றும்  பல்லவர்  காலத்திலும் கூட மக்கள் அமைப்புக்களே  இயற்கை   வளங்களை  பாதுகாத்தனர். 

அறநிலையங்கள்நீதிநெறிமுறை ஆகியவற்றை பராமரிக்க சர்வாதிகார  வாரியம் இருந்தது. ;நாணயங்கள்  தொடர்பான   வற்றை  கவனிக்க  பொன் வாரியம். வரித்தண்டல் செய்ய பஞ்ச வாரியம்நீர் நிலைகளை கவனிக்க ஏரி வாரியங்களும் இருந்தன.  ஆட்சி முடியாட்சியாக இருந்தாலும்   குடியாட்சி யாகவே  அது செயல்பட்டது  என எழுதுகிறார்  தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்  இறையரசன்.

நூறுநாள் வேலைத்திட்டத்தின்  நிதியை இதற்கு பயன்படுத்தலாம்.  நகர்ப்புறங்களில் கூட  நீர்நிலைகளை பராமரிக்கும்  வேலைகளை  இத்திட்டத்தின்கீழ் செய்யலாம்.  இதுபோன்ற வேலைகளைச்  செய்வதற்காக  உடல்  உழைப்பு தரக்கூடிய  இளைஞர்களைத்  திரட்டலாம். 

வடஅமெரிக்காவில்   1930 வாக்கில்  இயற்கை வளங்களை பாதுகாக்க இளைஞர்படை ஒன்றை  (CIVILIAN CONSERVATION CORPS)  என்பது அதன் பெயர்.  வனங்கள் பாதுகாப்பு ராணுவம் (TREE ARMY) மண்பாதுகாப்பு வீரர்கள். (SOIL SOLDIERS) என்று அமைப்புக்கள் எல்லாம்  செயல்பட்டன.  பண்டை தமிழர் வாழ்க்கை முறையில்  பரிச்சயத்தில்  இருந்தவை  அனைத்தும் வெள்ளைக்காரர்களின்  ஆட்சியில்  வழக்கொழிந்து  போயின.    இப்போது உழவுத்தொழிலுக்கு  முன்னுரிமை  அளிக்கப்படவில்லை.  இயற்கை வளங்கள்  பாதுகாக்கப்  படவில்லை.

இதனால் 1866 -- 1876  ஆண்டுகளில்  பஞ்சங்கள் ஏற்பட்டன.  தமிழ்நாட்டில்  பஞ்சத்திற்கு   ஆயிரக்   கணக்கானோர்  பலியாயினர்.  இதில் அதிகம் பலியானது  வட ஆற்காடு   மாவட்டத்தினர்.    அங்கு மக்கள் நாட்டுக்கீரையையுமகளிமண்  உருண்டைகளையும் தின்றனர்  என  சரித்திர ஆசிரியர்கள்  எழுதுகின்றனர்.

இரண்டாம் பிரச்சனை  நீர்பிடிப்பு பகுதிகளில்  கால்வாய்களின் ஓரத்தில்குடிசைகளை  குடியிருப்புக்களை அகற்றுவது . அவர்களுக்கு மாற்று இடங்களை  வீடுகட்ட ஒதுக்குவது . அவர்களுக்;கு   பட்டா கொடுக்கலாம். அந்தமனைகளை அவர்களுக்கு     குறைச்சலான வட்டிவிகிதத்தில்  கடன் கொடுக்கலாம்.  பதினைந்து அல்லது 20 ஆண்டுகளில்  அதனை வட்டியும் முதலுமாக  வசூல் செய்யலாம்.  ஆக்கிரமிப்புக்களை அகற்ற அருமையான யோசனை இது.

ஆனால் சிலர் இந்த மனையை கடனில் வாங்கி அதில் வீடுகட்டி   வாடகைக்கு விட்டுவிட்டு  மறுபடியும்  கால்வாய் ஓரத்தில் கால் கிரவுண்ட்  கிடைத்தாலும்  ஆட்டையை  போட்டுவிடுவார்கள்.  ஏரிகளுக்கும் குளங்களுக்கும், அந்தக் கால்வாய் மூலம்தான்  தண்ணீர்  வரும் .  அந்த வரத்துக் கால்வாயில் ஆக்கிரமிப்பு  இருந்தால்சொட்டு தண்ணீர் கூட  ஏரிக்கு வராது .  இது குளங்களுக்கும் பொருந்தும். 

அப்போதெல்லாம்  ஒரு மழை  பேஞ்சா  எங்க  ஏரி ரொம்பி   கோடி போவும்  இப்போல்லாம்  எவ்ளோ மழை பேஞ்சாலும்  ஏரிக்கும்  கையளவு  தண்ணீகூட சேரமாட்டேங்குதுங்க" பல  கிராமத்து  பெரியவர்கள் சொல்லுவதை நான்  கேட்டிருக்கிறேன்.  இதற்கு முக்கிய காரணம்  ஆக்கிரமிப்பு.

பல இடங்களில் ஏரிகளில்   திடீர் நகர் ஏற்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  முதல்நாள் காலி ஏரியாக இருக்கும்.  அடுத்த நாள் பார்த்தால் நூறு  குடிசைகள் இருக்குமம். குடிசைகள் ஊடாக  இரண்டு மூன்று அரசியல்  கொடிகள் பறக்கும். 

நரி வலம்  போனா என்ன  ?   நரி  இடம்போனா என்ன  நம்மை  கடிக்காம  போனா சரி ! .  நூற்றுக்கு  தொண்ணூற்று எட்டு  சதவீத அதிகாரிகள்  அப்படித்தான்.  இரண்டு சதவீத அதிகாரிகள் இதையெல்லாம்  கேட்கப்போய்  கடைசிவரை தண்ணீர் இல்லாத  காட்டில் காலம்பூராவும் அலைந்துக் கொண்டிருப்பார்கள்.  

ஆனால்  இப்படிப்பட்ட  பொறுப்புக்கள் மக்கள்கையில் இருக்க  வேண்டும்.  அப்படியிருந்தால் கொடியேற்றும் சால்ஜாப்பு எதுவும் நடைபெறாது.  இந்த வியாதிக்கு   உள்ளுர்க்காரர்கள்தான்  சரியான மருந்தைக்  கொடுப்பார்கள்.

கிராமம் நகரம் என்ற பாகுபாடு  இல்லாமல்  எல்லா இடத்திற்கும் ஏற்ற  சர்வரோக நிவாரணி குடிமராமத்து.  

ஆக்கிரமிப்புக்களை அகற்றிவிட்டால்  கால்வாய்களை சுலபமாக  ஆழப்படுத்தலாம்  அகலப்படுத்தலாம்  கரைகளை பலப்படுத்தலாம்.  நீரோட்டத்தை சீர் செய்யலாம்.  வேலி மீறிய கிளைபோல  தண்ணீர்  கால்வாயை  மீறாது.  

குடியிருப்புக்களில்வெள்ளம் புகாமல் தடுக்கும்  மூன்றாவது ஆயுதம், தங்கு தடையின்றி தண்ணீர் ஓடதடம் ஏற்படுத்தித் தருவதுதான். 

அதற்கு கடந்த 30  ஆண்டுகளில்சென்னை நகரில் பெய்த மழையினை  ஆய்வு செய்ய வேண்டும்.    எத்தனை முறை வெள்ளம் வந்தது  ? எத்தனை முறை  பேரழிவுகளை   ஏற்படுத்தியது  ஆய்வு செய்ய வேண்டும்.

முப்பது ஆண்டு காலத்தில் ஏற்பட்ட  பெரிய வெள்ள நீரின்  அடிப்படையில்  நீர் ஆதாரங்களின்  அளவுகளை கணக்கிடவேண்டும்.   அதற்கேற்றபடி மாற்றங்களை  செய்ய வேண்டும்.  ஆழம் அகலம்  எவ்வளவு  இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்.   

வெள்ளத்தின் கொள்ளிடத்திற்கு ஏற்ப  நீர்வள ஆதாரங்களில்  போதுமான  இடம்அளித்தால், வெள்ளம் கரைக்குள்  அடக்கி  வாசிக்கும்.  குடியிருப்புகளில் புகுந்து  அழிச்சாட்டியம் செய்யாது.

ஏரி வாரியம் போன்ற  நீர் நிர்வாகம்  உருவாக்குவுதுநீர் ஆதார  எலலைக்குள்  அத்து மீறல்களை அப்புறப்படுத்துவதுவெள்ளம் வரும் காலத்திலும்  நிலை குலையாத அனவிற்கு நீர் ஆதாரங்களின் எல்லைகளை  விசாலப்படுத்துவது ஆகிய  மூன்று கவசங்கள் தான்  என்கிறார்  பொறியாளர் தீ.நடராஜன்.

 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள். நடராஜன் சார் சொல்லுவது சரியா ? 

PLEASE POST A COMMENT, REGARDS - GNANASURIA BAHAVAN D, (AUTHOR)

999999999999999999999999999

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...