தண்ணீருக்கான செலவு மிச்சம் |
888888888888888888888888888888888888888888888888
குன்றிருக்கும்
இடங்களில் எல்லாம் குமரன் இருப்பான். அது போல கூரை இருக்கும் இடமெல்லாம் மழை நீரை
அறுவடை செய்யலாம்.
இது தனியார்
வீடுகள், அரசு மற்றும்
தனியார் அலுவலகக் கட்டிடங்கள், தொழிற் கூடங்கள,; பள்ளிக் கூடங்கள,; கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் - இப்படி எல்லா கட்டிடக் கூரைகளிலும் மழை
அறுவடை செய்யலாம். அவர்கள் தண்ணீருக்காக செய்யும் செலவு மிச்சம்.
குறிப்பாக
அங்கிருக்கும் கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க முடியும். பொது மக்கள் வந்து செல்லும்
அலுவலகங்களில் (மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் உட்பட) உள்ள கழிப்பறைகளில் உள்ளே
நுழைய முடிவதில்லை. இதற்கெல்லாம் தீர்வு மழைநீர் அறுவடை ஒன்றுதான்.
01.அறுவடை செய்யும்
மழை நீரின் அதன் கார அமிலத்தன்மை எப்படி இருக்கும் ..?
அறுவடை செய்த
நீர் காரத்தன்மை இல்லாமல், (ணுநசழ ர்யசனநௌள) நடுநிலையான கார அமிலத் தன்மையுடன்
(யேவரசயட Pர்) இருக்கும். இதனை வீடுகளில், தொழிற்சாலைகளில்;, இதர
நிறுவனங்களில் அப்படியே பயன்படுத்தலாம். சில இடங்களில் லேசான அமிலத் தன்மையுடன்
இருக்கும்.
02. கூரைநீர்
அறுவடையை நகர்ப்புறத்தில் செய்வதால் என்ன மாற்றம் நிகழும் ..?
வெள்ள அபாயம்
குறையும். குடிநீர் பிரச்சனை தீரும். குடிநீருக்காக செய்யும் செலவு மிச்சப்படும்; நீர் எடுப்பது, விநியோகம்
செய்வது, ஆகியவற்றிற்கு
செலவு செய்யும் மின்சாரம் மற்றும்
எரிபொருள் மிச்சமாகும். பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும்
வேலைப்பளு மிச்சமாகும். பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் அலுவலகங்களில் உள்ள
கழிப்பறைகளில் தைரியமாக உள்ளே நுழைய லாம். ஊராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சிகளின் குழாய் நீருக்காக நீண்ட வரிசைகளில்
தாய்மார்கள் குடங்களுடன் காத்திருக்க வேண்டாம். குற்ற உணர்ச்சி இல்லாமல்
செடிகளுக்கு நீர் ஊற்றலாம்;
சைக்கிள்
கழுவலாம்;, டுவீலர் கழுவலாம்;,மற்றும் கார்
கழுவலாம்.
03.வெளி நாடுகளில்
மழை நீரை அறுவடை செய்து பயன்படுத்துகிறார்களா ?
சீனா, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய
நாடுகளில் மழை நீரை சேமித்து குடிக்க, குளிக்க, துவைக்க, சமைக்க, கழுவ, செடி வளர்க்க என்று பயன்படுத்துகிறார்கள்.
04. இஸ்ரேலில் அதிகம்
மழை நீரை அறுவடை செய்து பயன்படுத்துவதாகச் சொல்லுகிறார்களே ?
ஆமாம், இஸ்ரேல்
நாட்டினர் பயன்படுத்தும் மொத்த நீரில் 10 முதல் 12 சதவிகித நீர் மழை நீரை அறுவடை செய்தது. உலகிலேயே மழை நீரை சேமித்து
பயன்படுத்துவதில் முதல் நிலையில் இருப்பவர்கள் தாய்லாந்து நாட்டினர்.
888888888888888888888888888888888888
No comments:
Post a Comment