Monday, June 26, 2023

VATHANARAYANAN TREE ELDERS SPECIAL 124. முதியோர் ஸ்பெஷல் வாதநாராயணன் மரம்

முதியோர் ஸ்பெஷல்
வாதநாராயணன் மரம்


மூட்டுக்களில் வீக்கம், வலி. கைமுட்டி கால்முட்டி நீட்டமுடியாமை மடக்க முடியாமை. நடக்க முடியாமை இவை  எல்லாமே முதியோர் ஸ்பெஷல். சில பேருக்கு இவற்றை இங்லீஷில் சொன்னால்தான் புரிகிறது.   ஆர்த்ரைட்டிஸ், ருமேட்டிக் ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ பொராசிஸ் என்று சொல்ல வேண்டும்.. இவை எல்லாவற்றையும் முடக்குவாதம் என்று பொதுவாகச் சொல்லுகிறார்கள். இவை எல்லாவற்றையும் குணப்படுத்தும் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது இந்த மர மூலிகை. ஆதனால்தான் இதன் பெயர் வாதமடக்கி என்னும் வாதநாராயணன்.

உணவு மருந்து மரத்தேவை பூர்த்தி செய்யும்

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாதநாராயணன் இலைகளில் குழம்பு மற்றும் துவையல் வைக்கும் பழக்கம் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை இதனை சமையலில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் உடையாது. மூட்டுக்கள் பிசகாது.  அது சம்மந்தமான நோய்கள் தலைகாட்டாது என்கிறார்கள்.

பஞ்ச காலங்களில் மக்கள், இதன் விதைகளை வறுத்தும் அவித்தும் சாப்பிட்டு பசி அடங்கியதாகச் சொல்லுகிறார்கள்.

மயில்கொன்றையும் வாதநாராயணனும் ஒரே ஜாதி மரங்கள். அது டிலானிக்ஸ் ரீஜியா. இது டிலானிக்ஸ் லேட்டா. ஐந்து முதல் பதினைந்து  மீட்டர் உயரம் வரை வளரும். உணவு, மருந்து, மரத்தேவை என முக்கிய மூன்று பயன்களுக்கு பிரதானமானது.

சொந்த இடம், டிஜிபவுட்டி, எகிப்து, எத்தியோப்பியா, கென்யா, சவூதி அரேபியா, சொமேலியா, சூசான், தான்சானியா, யுனைட்டட் ரிபப்ளிக் ஆப் உகாண்டா மற்றும் ஏமன்.

இந்த மரங்கள் அதிகம் காணப்படும் இடங்கள், கிழக்கு ஆப்ரிக்காவின் வெப்பமான பகுதிகள், எகிப்து, சூடான், எத்தியோப்பியா, சொமாலியா, உகாண்டா, கென்யா, மற்றும் தான்சானியா.

பல மொழிப் பெயர்கள்

தமிழில்  வாதநாராயணன், வாதமுடக்கி, வறட்டி (VATHANARAYANAN, VATHAMUDAKKI, VARATTI)

இந்தியில் வேகரன், சம்ஸ்ரோ, சனிஸ்ரோ, சன்டேஷ்ரா  (WAYKARAN, SAMRSRO, SANESRO, SANDESHRA)

கன்னடத்தில் கெம்புகெஞ்சிகா, நிரங்கி, வடநராயணா (KEMPUKENJIGA, NIRANGI, VADHANARAYANA)

தெலுங்கில் சின்னசெரிபிசெரி, சித்திகேஷ்வராமு (CHINNA SERIBISERI, CHITTI KESHWARAMU)

இதன் தாவரவியல் பெயர்    டிலானிக்ஸ் எலேடா (DELONIX ELATA) பொதுப்பெயர் அல்லது   ஆங்கிலப்பெயர்: ஒயிட் குல்மோகர் (WILD GULMOGAR

தாவரக்குடும்பம்   சிசால் பினியேசி (CAESALPINIACEAE)

மரவகைப் பொருட்கள் செய்யலாம்

மரம், மஞ்சள்நிற சாயை உள்ளது. பலவிதமான பொருட்கள் செய்ய இழைத்து, கடைந்து செய்ய ஒத்தாசை தரும் மரம். கத்தி, சுத்தி, அரிவாள் அதற்கான பிடிகள் செய்ய, பீர் போன்ற மதுவகை சேமிக்கும் மரத்தொட்டிகள் செய்ய, பால் புட்டிகள், தேனிப்பெட்டிகள், மேஜைக் கரண்டிகள், அகப்பைகள், கோப்பைகள் மற்றும் இதர வகைப் பெட்டிகள் செய்ய  உதவும்.

மரங்கள், நீர் தேங்காத நிலங்களில் வளரும். பாறைகள், சிறு கற்கள், மற்றும் கூழாங்கற்கள்  நிறைந்த கல்லாங்கரடுகளில் கூட வளரும். இதன் வேர்களில் உள்ள வேர்முடிச்சுக்கள் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும்.

வெரிக்கோஸ் வெயின் பிரச்சினை தீரும்

இதன் வேர்களை அவித்து அதிலிருந்து எடுத்த சாற்றை விஷமுறிவுக்கு பயன்படுத்தலாம். வேர்களை விழுதுபோல அரைத்து கட்டிகளில் பூச அவை பழுத்து உடைந்து விரைவாக குணமாகும். மரத்தின் சிம்புகளை, குச்சிகளை நன்கு மென்று விழுங்க வாய்ப்புண் குணமாகும்.

வாதநாராயணன் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கிப் பொறுக்கும் சூட்டில் நரம்பு முடிச்சு உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வெரிக்கோஸ் வெயின் பிரச்சினை நாளடைவில் குணமாகும்.

மரங்கள், தான்சானியா நாட்டில் நிழலுக்காகவும், வேலிகளில் வளர்க்கிறார்கள். ஓடை மற்றும் ஆற்றங்கரைகளில் நட்டு கரைகளை பலப்படுத்த அற்புதமான மரம். மண் அரிமானத்தைத் தடுக்க ஏற்றது. இதன் இலைதழைகளை பரவலாக இந்தியாவில் தழை உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.

விதைகள் நன்கு முளைக்க விதைகளை 12 முதல் 24 மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து விதைக்கலாம்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

2 comments:

Yasmine begam thooyavan said...

பிரமிப்பாக இருக்கிறது மரத்திலிருந்து மருத்துவம் வரை அழகிய முறையில் தங்களின் தகவல்கள் அனைத்தும் அருமை சார். இன்றைய கால கட்டத்தில் மூட்டு வலி என்பது முதியோரை மட்டுமில்லை. கணினியில் உட்க்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களும் அதிகம். இப்படி மருத்துவ குணம் கொண்ட மரங்களை வளர்த்தாலே போதும் நோய்க்கு இவ்வுலகில் ஏது இடம்.

அருமை. தொடர்ந்தது எழுதவும்.

By
எழுத்தாளர் ஏ. யாஸ்மின் பேகம்(தூயவன்)

கே.நஜீமாஜமான். said...

அருமையான தகவல் வாதநாராயணன் மரம் பற்றி இதுவரை தெரியாத செய்திகள் தொடர்ந்து எழுதவும் நன்றி!!
கே. நஜீமாஜமான்.

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...