Wednesday, June 28, 2023

VANNI TREES STHALAVRIKSHA IN TEMPLES 148. கோயில் தல விருட்சம் வன்னி மரம்

 

கோயில் தல விருட்சம்  வன்னி மரம்

(VANNI MARAM, INDIAN MESQUITE TREE, PROSOPIS CINERARIA, FABACEAE)

தாவரவியல் பெயர்: புரசாபிஸ் சினரேரியா (PROSOPIS CINARARIA)

தாவரக் குடும்பம்:  ஃபேபேசியே (FABACEAE) 

உலகிலேயே 363 பேர் உயிர் தந்து  காப்பாற்றிய மரம் இந்த வன்னிமரம். இந்திய அரசால் 1998 ல் அஞ்சல்தலை வெளியிட்டு பெருமைப் படுத்தப்பட்டது வன்னி மரம்.

ராஜஸ்தான்  மாநிலத்தில் பாலைவனத்தில் பிஷ்னாய் என்ற வகுப்பினர்  வசித்து வந்தார்கள். அவர்கள் வசித்த இடத்தின் பெயர் மார்வார் என்பது.

அதுவும் ஒரு பாலைவனப்பகுதிதான். ஆனால் அங்கு நிறைய வன்னி மரங்கள் இருந்தன. வன்னி மரத்தழையும் நெற்றுக்களும்தான் அவர்களுக்கும் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும் ஒட்டகங்களுக்கும் உணவாக இருந்தது.

அந்த நாட்டின் அரசனின் உத்தரவின் பேரில் அந்த மரங்களை வெட்டுவதற்காக சிப்பாய்கள் வந்தார்கள். மரங்களை வெட்டக் கூடாது என்று அந்த சிப்பாயுடன் அந்த மக்கள் மல்லு கட்டினர்.

ஒரு கட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாயும் அவருடைய மூன்று மகள்களும் மரங்களை வெட்ட விட மாட்டோம். வேண்டுமானால் எங்களை வெட்டுங்கள்என்று வெட்ட வந்த மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

சிப்பாய்கள் அந்த நான்கு பெண்களையும் வெட்டி சாய்த்தார்கள். அவர்களைத் தொடர்ந்து அந்த கிராமத்துக்காரர்கள் அத்தனைபேரும் சிப்பாய்களின் வாளுக்கு இறையாகினார்கள். அப்படி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 363 பேர்.

உலகிலேயே வேறு எந்த மரத்திற்காகவும் இத்தனை பேர் உயிர்த் தியாகம் செய்ததில்லை என இன்றும் பெருமிதமாகச் சொல்லுகிறார்கள் பிஷ்னாய் இன மக்கள். 

வன்னி மரத்தின் பலமொழிப் பெயர்கள்:

தமிழ்: வன்னி, பரம்பை (VANNI, PARAMBAI)

தெலுங்கு: ஜம்மி செட்டு (JAMMI CETTU)

கன்னடம்: பெரும்பை (PERUMBAI)

இந்தி: கெஜ்ரி (KHEJRI)

மராத்தி;: ஷெமி (SHEMI)

ஒடிசா: ஷாமி (SHAMI)

ராவணனுடன் போர்புரியச் சென்றபோது, ராமன் தொட்டு வணங்கி ஆசிபெற்று சென்ற மரம் வன்னி மரம்.

மகாபாரதத்தில், பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தில், தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த மரப்பொந்துவன்னி மரத்திற்கு சொந்தமானது. மகாபாரதத்தில் இதன் பெயர் 'ஷாமி விருட்சம்".

இப்படி ஒரு நம்பிக்கை உண்டுஅரச மரத்தை விட  பிள்ளை பாக்கியத்திற்கு, மகத்துவமானது வன்னி மரம்.

ராஜா ராணி காலத்தில், அரச குடும்பத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது; போருக்கு செல்லும் அரசர்கள் தங்கள் வாளை வன்னியின் அடிமரத்தில் வைத்து வணங்கிச் சென்றால், அது வெற்றியை உறுதிப்படுத்துமாம்..!

இது தமிழகத்தின் நம்பிக்கை. பிள்ளையார் சிலை வைக்க வேண்டுமென்றால்முன்னதாக அங்கு நட வேண்டியது வன்னி மரம்.  வன்னி மரத்தடி பிள்ளையார் வாரித் தருவதில் வள்ளல்!

தமிழகத்தின் கோர்ட்டுக் கூண்டில் ஏற்றப்பட்ட சீமைக் கருவைக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா வன்னி மரம்;   சீமைக் கருவைக்கு தாவரவியல் பெயர் புரொசாபிஸ் ஜூலிஃபுளோரா. வன்னிமரத்துக்கு புரசாபிஸ் சினரேரியா..

ராஜஸ்தான் பாலைவனங்களில், பசுமை மாறாமல் இருக்கும் ஒரே மரம்ஆடுகளுக்கும் ஒட்டகங்களுக்கும் தீவனம் தரும் மரம். மனிதர்களுக்கு ரொட்டி சுட்டு சாப்பிட மாவு தரும் மரம் இது.

பாலைவனத்தில் வசிக்கும் மக்கள் வசிக்கத் தோதான சோலைவனமாவது வன்னி மரத்தோப்புகள்தான்.

வன்னிமர  கொட்டைமாவு, தட்டுப்பாடு என்றால் கூட, கவலை இல்லை.   அதன் பட்டைகளே போதும். பஞ்சக் கால சாப்பாடு அதுதானே”  என்கிறார்கள் ராஜஸ்தான் மாநில மக்கள்.  பட்டைகளையம் உலர்த்தி மாவாக்கி  பணியாரம் சுடலாம்.

கட்டிடம் கட்ட மரம் வேண்டுமா ..?

விறகு வேண்டுமா ..?

தேரி (மணல்) நிலத்தை சீராக்க  வேண்டுமா ..?

வன்னி மரத்தை நடுங்கள்,  அல்லது நாடுங்கள்,  அல்லது தேடுங்கள் ..!

அடிக்கடி  கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு அற்புதமான மருந்து இது; வன்னிப் பூக்களை இடித்து, சர்க்கரையுடன் சேர்த்துக் கொடுங்கள்; கருச்சிதைவு  என்பது கனவில் கூட  நேராது !

தரிசாக கிடக்கும் நிலங்களில் எல்லாம், நடவு செய்ய, பரிசாக கிடைத்த நம்மஊர் மரம் வன்னி. 'மேட் இன் இண்டியா"

இந்த வகை மண்ணில் மட்டும்தான் வளருவேன் என்று அடம் பிடிக்காது; நட்ட இடத்தில் வளரும்; ஆனாலும் மணல் பூமிதான் இதற்கு  சொர்க்க  பூமி .!

சிறு முள் உடைய மரம் இது.  ஓங்கி வளராது.  சுமார் 30 அடி உயரத்திலேயே 30 கிளைவிட்டு வளரும். அதனால் விஸ்தாரமான இடங்களில் நடலாம்கோவில்களில் நட்டு வளர்த்தால், பிள்ளையாரின் முழுக்கண் கடாட்சமும் கண்டிப்பாய் சித்தி ஆகும் !

தொழிற்சாலைகள்  வைத்திருப்போர் வன்னியை நட்டால் புண்ணியம் கிடைக்கும். புகையை வடிகட்டும்.  இதர தீ வளிகளின் தீநாக்கு (பசுமை இல்ல வாயுக்கள்) நம்மைத்  தீண்டாமல் பாதுகாக்கும் !

கால்நடை வளர்க்க தீவனம் இல்லை என கவலைப் படுவோர் கவனியுங்கள். வன்னியை வைத்து தீவன வங்கியை நிலம் இருக்கும் அத்தனை கிராமத்திலும் உருவாக்கலாம். தீவன வங்கி என்றால் தீவனத் தோப்பு.  

புதற்காடுகளாக  நலிந்து மெலிந்து போன காடுகளை மீட்டெடுக்க கண்கண்ட மரம் இது. அற்புதமான மரம்  மட்டுமல்ல இது.   கிடைப்பதற்கு அரிய வரம் இது!

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...