Wednesday, June 28, 2023

VAGAI MARAM A TREE HERB FOR MENTAL HEALTH 141.மன நிலை பாதிப்பையும் குணப்படுத்தும் வாகை மரம்

 




வாகை மரம், தமிழ் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது, வெற்றிபெற்ற மன்னர்கள் மற்றும் போர்வீர்ர்கள் வெற்றியின் அடையாளமாக அணிவது வாகைப்பூ, ஃப்ளூ காய்ச்சல், வயிற்றுக்கட்டிகள், இருமல், கண்ணோய், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றை சரி செய்ய, மற்றும் மனநிலையை பாதிக்கும் பல நோய்களையும் குணப்படுத்தும் சக்தி உள்ளது, வீடுகள் தொடர்பான கட்டுமான சாமான்கள், மரச் செக்குகள், மேஜை நாற்காலி மற்றும் காகிதம் தயாரிக்க மரக்கட்டைகள் தரும், இதன் ஆங்கிலப்பெயர் உமன்ஸ் டங் ட்ரீ (WOMEN’S TONGUE TREE), தாவரவியல் பெயர் அல்பீசியா லெபெக் (ALBESIA LEBBEK)

யானைக்கு துதிக்கை  நேர்த்தி, பூனைக்கு மீசை நேர்த்தி, மயிலுக்கு தோகை நேர்த்தி. குயிலுக்கு அது பாடும் குரல் நேர்த்தி, வாகைக்கு  அதன் நெற்றுக்கள் சலசலக்கும் ஓசை நேர்த்தி.

கோடை வந்தால் போதும் முதல் வேலையாக இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு நெற்றுக்கள் நேர்த்தியாக பேச ஆரம்பித்துவிடும். அதனால்தான் யாரோ ஒரு புண்ணியவாளன் இதற்கு பெண்களின் நாக்குஎன்று நாமகரணம் சூட்டி உள்ளார்.

வீட்டில் வளர்க்கும் ஒரு செடிக்கு மாமியார் நாக்கு (MOTHER-IN-LAW’S TONGUE) என்று பெயர் வைத்துள்ளார்கள் தெரியுமா உங்களுக்கு ? யாராவது ஒரு மறுமகள் வைத்திருக்க வேண்டும். அதன் ஆங்கிலப் பெயர் சான்சிவைரியா (SANSIEVIERIA).  

மரம் முழுக்க நெற்றுக்களை வைத்துக் கொண்டு விதைப் பந்து தயாரிக்கும் தன்னார்வலர்களுக்காகக் காத்திருக்கும் மரங்களில் முன்னணியில் இருப்பது வாகை.

வாகை மரத்தின் பலமொழிப் பெயர்கள்:

தமிழ்:  வாகை மரம் (VAAGAI MARAM)

தெலுங்கு: டிராசனா (DIRASANA)

கன்னடம்:பாக்கி (BAAGE)

மலையாளம்: வாகா (VAGAA)

இந்தி: சரஸ் (SARAS)

மணிப்புரி: கோக் (KOKKE)

நேப்பாளம்: காலோ சிரிஸ் (CALO SIRIS)

உருது: டினியா (TINIA)

தாவரவியல் பெயர் :  அல்பீசியா லெபக் (ALBESIA LEBBEK)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : உமன்ஸ் டங் ட்ரீ, லெபெக் ட்ரீ, ஃப்ரை உட் ட்ரீ VUMAN’S TONGUE TREE, LEBEKK TREE, FRYWOOD TREE

தாவரக்குடும்பம் :  மைமோசி (MIMOCEAE)

மரத்தின் வகை :  இலை உதிர்க்கும் மரம்

மரத்தின் பயன்கள் :--

தழை:  கால்நடைகளுக்கு தீவனமாகும்.

பட்டை: டேனின் நிறைந்தது; தோல் பதனிடலாம்.

பிசின்: கோந்து தயாரிக்கலாம்.

பூக்கள்: தேனீக்களுக்கு 'வாகைத்தேன்"  தரும், நறுமணத்    தைலம் தரும்.

தமிழ் கலாச்சார அடையாளம்

வாகை மரம், தமிழ் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது, பழந்தமிழ் கலாச்சாரத்தில் வெற்றிபெற்ற மன்னர்கள் மற்றும் போர்வீர்ர்கள் வெற்றியின் அடையாளமாக அணிவது வாகைப்பூ. அதனால்தான் வெற்றிவாகை சூடினார் என்ற சொல்வழக்கு புழக்கத்தில் வந்தது.

மரம்: வீட்டுத் தூண், உத்திரம்மரச்சாமான்கள், மரச்செக்குகள், மேஜை நாற்காலி செய்ய மரக்கட்டைகள் தரும், காகிதம்  தயாரிக்க மரக்கூழ் தரும், மற்றும் அடுப்பெரிக்க விறகு தரும்.

மருத்துவப்பயன்: ஃப்ளூ காய்ச்சல், வயிற்றுக்கட்டிகள், இருமல், கண்ணோய், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றை சரி செய்ய உதவும், மனநிலையை பாதிக்கும் நோய்களையும் குணப்படுத்தும் சக்தி உள்ளது.

சுற்றுச்சூழல்: வீசும் காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசும் மாசும் வடிகட்டி     காற்றை சுத்தப்படுத்தும்.

மரத்தின் தாயகம் :  ஆசிய மரம்.

ஏற்ற மண் :  பரவலான மண் வகை.

நடவுப் பொருள் : விதைநாற்றுவேர்க்குச்சி.

மரத்தின் உயரம் :  15 - 20  மீட்டர்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...