ஆஸ்பென் மரம், உலகின் ஆச்சரியமிக்க மரங்களில் ஒன்று, அமெரிக்காவில் ஊட்டா மாநிலத்தில் இருக்கும் இந்த மரங்களின் வயது எண்பதாயிரம் ஆண்டுகள், என்று மிரட்டுகிறார்கள். அவர்கள் சொல்லும் கணக்கு சரியாகத்தான் உள்ளது. இந்த கணக்கு சரியா தப்பா ? கட்டுரையை வாசியுங்கள். உங்கள் முடிவை சொல்லுங்கள்.
தமிழ்ப்பெயர்: நடுங்கும் ஆஸ்பென் மரம்
பொதுப் பெயா்: குவாக்கிங் ஆஸ்பேன், டிரெம்ப்ளிங் ஆஸ்பென், அமெரிக்கன் ஆஸ்பன். மவுண்டெய்ன் ஆஸ்பென், கோல்டன் ஆஸ்பென், பாபளார், ஒயிட் பாப்ளார், (QUAKING
ASPEN, TREMBLING ASPEN, AMERICAN ASPEN, MOUNTAIN ASPEN, GOLDEN ASPEN, POPLAR,
WHITE POPLAR) இப்படி பல பெயா்களை இதற்கு வைத்திருக்கிறார்கள்.
தாவரவியல் பெயா் – பாப்புலஸ் ட்ரிமுலாய்டஸ் (POPULUS
TREMULOIDES)
தாவரக்குடும்பம்: சாலிக்கேசியே
(SALICACEAE)
வட அமெரிக்கா – கனடா – மெக்சிகோ
ஆஸ்பென் மரம், வட அமெரிக்கா முழுவதும் பரவி, கனடா மற்றும் மெக்சிகோவிலும் அதிகம் தென்படும் பிரபலமான மரம்.
ஆஸ்பென் மரம், உலகின் ஆச்சரியமிக்க மரங்களில் ஒன்று இந்த மரம் பற்றி நான் சொல்லும் ஒரே ஒரு தகவலே உங்களை மிரள வைக்கும்,
அப்படி என்ன ஆச்சாியம்? அப்படி என்ன அதிசயம்?
சொல்லுகிறேன், கேளுங்கள் ! அமெரிக்காவில் ஊட்டா மாநிலத்தில் இருக்கும் இந்த மரங்களின் வயது, எண்பதாயிரம் ஆண்டுகள். அல்லது இரண்டாயிரம் தலைமுறை மரங்கள்.
ஊட்டா மாநிலத்தின் அரசு மரம்
வட அமெரிக்காவில் ”ஊட்டா” என்பது ஒரு மாநிலம். அந்த மாநிலத்தின் அரசு மரம் இந்த ”குவாக்கிங் ஆஸ்பென்” தான்.
ஊட்டா மாநிலத்தில் இருக்கும் இந்த மரங்களின் வயது, எண்பதாயிரம் ஆண்டுகள். அல்லது இரண்டாயிரம் தலைமுறை மரங்கள்.
இரண்டாயிரம் தலைமுறை மரங்கள்
ஒரு தலைமுறை என்பது 40 ஆண்டுகள் ! ”ஊட்டா’வில் இருக்கும் மரங்களின் வயது 80,000 ஆண்டுகள் என்றால், கணக்கு பண்ணிப் பாருங்கள். இந்த குவாக்கிங் ஆஸ்பென் (QUAKING ASPEN) மரங்களின் வயது 2000 தலைமுறைகள்.
பாப்ளார் மரங்கள்
குறிப்பாக மேலை நாடுகளில் இருக்கும் ஒக், செடார், எல்ம், ஜூனிப்பர், இப்படி பல வகை மரங்களில் இது பாப்ளார் என்னும் மரவகையைச் சோ்ந்தது. உலகத்திலேயே 80,000 ஆண்டு வயதுடைய ஒரு உயிரினத்தை பார்க்க வேண்டும் எனில் நீங்கள் போக வேண்டிய இடம் வட அமெரிக்காவின் ”ஊட்டா” மநிலம்.
ஒரு வேரில் உற்பத்தி ஆன மரங்களை குடும்பம் என்கிறார்கள், அந்த குடும்பத்திற்கு பெயர் உண்டு, அப்படி இந்த குறிப்பிட்ட குடும்பத்திற்கு பாண்டோ என்று பெயர். இந்த பாண்டோ குடும்பத்தைச் சோ்ந்த பாப்ளார் மரங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
வாழ்த்துக்கள்.
பாண்டோ குடும்ப மரங்கள்
பாண்டோ குடும்ப மரங்கள் பற்றி கொஞ்சம் கூடுதலாக தெரிந்து கொள்ளலாம். இந்த மரங்கள் பரவியிருப்பது, ஒரு ஏக்கரில் அல்ல !
இரு ஏக்கரில் அல்ல. நூற்றியெட்டு ஏக்கரில் பரவி இருக்கின்றன.
இந்த மரங்களின் எடை ஆறு மில்லியன் டன். உலகிலேயே மிகவும் அதிகமான ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்து வரும் உயிரினம், அதிக எடையுள்ள உயிரினம் இந்த ”பாண்டோ”.
இந்த ”பாண்டோ குளோனல் காலனி யில் எத்தனை மரங்கள் இருக்கின்றன என்ற புள்ளிவிவரத்தையும் தந்திருந்தால் நன்றாக இருக்கும். அந்தத் தகவல் என் கைக்கு கிடைக்கவில்லை.
பாண்டோ உலகின் அதிக எடை உயிரினம்
”பாண்டோ” என்பது ஒற்றை மரம், ஒற்றை வோ் அமைப்பு கொண்டது, 43.6 எக்டா் அல்லது 108 ஏக்கா் பரப்பில் பரவியுள்ளது, இதன் மொத்த எடை 6 மில்லியன் டன், உலகின் அதிக வயதுள்ள மரம், வட அமெரிக்காவில், ஊட்டா மாநிலத்தில் உள்ளது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் பாண்டா உயிரினம் வாழும்?
ஒற்றை வோ் அமைப்பு கொண்ட பாண்டா மரத்தில், ஒரு பக்கம் வயது முதிர்ந்த மரங்கள் உலர்ந்து கொண்டே போகும், இன்னொரு பக்கம் புதிய மரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும்.
வறட்சி, நெருப்பு, கால்நடைகள் அல்லது விலங்குகளின் மேய்ச்சல், மனிதா்களின் செயல் பாடுகள் ஆகியவற்றால், இந்த மரத்தின் பாதுகாப்பு.
கேள்விக்குறி ஆகி உள்ளது.
மான்கள் மற்றும் மாடுகளின் விருப்ப உணவு
பாப்ளார் மரங்களின் பட்டைகள் மிகவும் மிருதுவானவை, சாறு குறைந்தவை, சுலபமாக உறிக்கலாம்.
மான்களும் மாடுகளும் இதர பிராணிகளும் சிரமமில்லாமல் இதன் பட்டைகளை கடித்து,
உறித்து சாப்பிட முடியும்.
எல்க் (ELK) என்னும் ஒருவகையான மான்கள் இதை விருப்பமாக சாப்பிடுகின்றன எல்க் மா னினங்களில் இவை மிகவும் முரட்டு மான்கள்.
”குளோன்” என்றால் நகல்
பாண்டா மரம் பற்றி புரிந்து கொள்ள ”குளோன்” என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.
குளோன் என்றால் நகல், ஜெராக்ஸ் என்று அா்த்தம். ”குளோனிங்” என்றால் நகல் எடுத்தல்,
ஜெராக்ஸ் செய்தல் என்று அா்த்தம்.
உயிரினங்களைப் பொருத்தவரை ஜனிட்டிகலி ஐடென்டிகல் (GENITICALLY IDENTICAL) என்று அா்த்தம். அதாவது குண நலன்கன்களை.
தீாமானிக்கும் ஜீன்கள் ஒரே மதிரி இருப்பது என்று அர்த்தம்.
வேர்க் குடும்பம்
குளோனல் காலனிகள் (CLONAL
COLONIES) என்பதை ஒரு வேர்க்குடும்பம் என புரிந்து கொள்ளலாம், அதாவது ஒரு தாவர பாகத்தின் மூலம் உருவாகும் (VEGETATIVELY EVOPAGATED) செடிகள் அல்லது மரங்கள்.
அதாவது ஒரு வேரில் உற்பத்தியாகும் பல காளான்களை இதற்கு உதாரணமாகச் சொல்லாம்.. ஒரு மரத்திலிருந்து கிளைகளை வெட்டி வைத்து பல மரங்களை உருவாக்க முடியும். ஆனால் அப்படி உருவாக்கப்பட்ட அத்தனை மரங்களும் தாய்மரத்தைப் போலவே இருக்கும். அதுபோலத்தான் இந்த குளோனல் காலனி மரங்கள்.
ஆனால் ஒரே மரத்தின் உற்பத்தி ஆன விதைகளை விதைத்தால் தாய் மரத்திலிருந்து சில அல்லது பல பண்புகள் வேறுபட்டு இருக்கும்.
ஒரு வேரில் பல ஆயிரம் மரங்கள்
ஒரு வேரில் எத்தனை ஆயிரம் மரங்கள் உற்பத்தி ஆனாலும் அவற்றின் குண நலன்கள் அத்தனையும் ஒரே மாதிரி இருக்கும். ஆஸ்பென் மரத்தைப் பொருத்த வரை அந்த ஒரு வேரில் அத்தனை மரங்களும் இணைந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாண்டோ என்னும் வோ்க் குடும்பம்
இப்படி ”பாண்டோ” என்னும் குளோனல் காலனியை தெரிந்தெடுத்துள்ளார்கள், இந்த காலனியில் உள்ள மரங்கள் அத்தனையும் உயிரோடு உள்ளன. உலகிலேயே இதுதான் மிகவும் அதிகப் பழமையான ”குளோனல் காலனி, இதன் எடை ஆறு மில்லியல் டன், இதன் வயது 80,000 ஆண்டுகள். கணக்கு சரியா ?
எங்கே இருக்கு இந்த ”பாண்டோ”
”எண்பதாயிரம் ஆண்டு வயதான மரமா ?
இது எங்கே இருக்கு? இதைப் பார்க்க முடியுமா? இப்படி யெல்லாம் தோன்றும், இதைப் படிக்கும் போது.
வட அமெரிக்காவில் ஊட்டா மாநிலத்தில், மேற்கு முனையில் ஃபிஷ் லேக் நேஷனல் ஃபாரெஸ்ட்” (FISH
LAKE NATIONAL FOREST) என்ற தேசியப் பூங்காவின் அருகில் இந்த 80,000 ஆண்டு வயதுடைய மரம் தனது குடும்ப சகிதமாக ஒரே குழுவாக வசிப்பதை பார்த்து ஆச்சரியப்படலாம்.
நடுங்கும் இலைகள்
நம்ம ஊரில் இலைகள் நடுங்க வேண்டும் என்னோல் காற்று வேண்டும்,
இல்லையெனில் அடிமரத்தைப் பிடித்து யாராவது ஆட்ட வேண்டும், அசைக்க வேண்டும். ஆனால் ”குவாக்கிங் ஆஸ்பென்” இலைகளுக்கு இது எதுவும் தேவையில்லை சும்மாவே நடுங்குமாம். அதனால்தான் இதன் பெயர் ”நடுங்கும் ஆஸ்பென்”. ஆங்கிலத்தில் குவாக்கிங் ஆஸ்பென்.
நன்கு வளா்ந்த மரங்கள் 20 முதல் 25 மீட்டா் வரை வளரும், மரங்களின் விட்டம் 20 முதல் 80 செ.மீ இருக்கும்.
வெண்ணிறப் பட்டைகள்
மரத்தின் பட்டை மிருதுவாக, வெள்ளை நிறத்தில், லேசான பசுமையும் சாம்பல் நிறமும் கலந்தது போல அழகாக இருக்கும்.
குறுக்கு வசத்தில் பட்டைகளின் மேல் கருப்பு நிற சிறு தழும்புகளும், பருமனான முடிச்சுகளும் தென்படும்.
தங்கமுலாம் பூசிய மரங்கள்
வெள்ளை வெளோ் என்ற மரங்களின் உச்சியில் மஞ்சளை அரைத்து தலையில் ஊற்றியதுபோல, இலைகள் அனைத்தும் தங்க முலாம் பூசியது போல இருக்கும்.
வோ்கள் மூலம் பரவும்
ஆஸ்பென் மரங்கள் வோ்ச் செடிகள் மூலமாகவே பரவுகின்றன.
ஒரு வோ் மூலம் ஆயிரக்கணக்கான மரங்கள் உற்பத்தியாக வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.
ஒரு வேரின் மூலம் உருவான மரங்கள் அனைத்தும் ஒன்றுபோல இருக்கும். இவற்றை குளோனல் காலனிகள் (CLONAL
COLONIES) என்று சொல்லுகிறார்கள்.
REFERENCES:
WWW.EN.M.WIKIPEDIA.ORG / POPULUS TREMULOIDES –
WIKIPEDIA
WWW.ARBORDAY.ORG / QUAKING ASPEN TREE ON THE TREE
GUIDE AT ARBOR DAY.
WWW.NWF.ORG / QUAKING ASPEN / NATIONAL WILD
LIFE FEDERATION
WWW.BRITANNICA.COM / QUAKING ASPEN / PLANT
WWW.FS.FS.US / HOW ASPENS GROW – USDA FOREST
SERVICE
A
REQUEST
I
LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS
ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A
COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE
WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL
BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment