Tuesday, June 20, 2023

UTHRAM BIRTH STAR TREE ARALI - 73. ‘உத்தரம்’ ஜன்ம நட்சத்திர மரம் அரளி


             

உத்தரம்’ ஜன்ம நட்சத்திர மரம்
அரளி

கோயில் பூஜைகளின் பூவாகப் பயன்படுத்தினாலும் காலங்காலமாக உபயோகப்படுத்தப்படும்  மூலிகை மரமாக இருந்தாலும்  உத்தரம் ன்ம நட்சத்திர மரமாகவும்  சிவத்தலங்களின் கோவில் மரமாகவும், வீட்டுத்தோட்டங்களின் மரமாகவும் இருந்தது, இன்று இந்திய நெடுஞ் சாலைகளின் அழகு மரமாக மாறி உள்ளது அரளி;.

தாவரவியல் பெயர்: நீரியம் ஒலியாண்டர் (NERIUM  OLEANDER)

தாவரக் குடும்பம் பெயர்: அப்போசயனேசி (APOCYANACEAE)

தாயகம்: இந்தியா, ஈரான், மற்றும் சீனா

அரளியின் பிற மொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

தமிழ்: அரளி, அலரி, கரவீரம், செவ்வரளி (ARALI, ALARI, KARAVIRAM, SEVVARALI)

இந்தி: கனேர் (KANER)

மணிப்புரி: கேபிரி (KABIRE)

பெங்காலி: ரத்தகராபி (RARTA KARABI)

ஆப்ரிகன்: செலன்ஸ்ரூஸ் (SELONSROOS)

ஆரபிக்: டிப்லா (DIFLA)

பின்னிவு;: ஒலியாண்டரி (OLEANDERI)

பிரென்ச்: லாரியர் ரோஸ் - (LAURIER ROSE)

nஐர்மன்: ஒலியாண்டர் (OLEANDER)

இத்தாலியன்: ஒலியான்ட்ரியோ (OLEANDRIO)

கன்னடா: சண்டாத்தா (SANDATHO)

மலையாளம்: அலரி (ALARI)

மராத்தி: கனேர் (KANER)

சமஸ்கிருதம்: அஸ்வமரகா (ASWAMARAKA)

போர்ச்சுகீஸ்: லோயண்ட்ரோ (LOYANDRO)

ஸ்பேனிஷ்;: அடல்பா (ADALPA)

தெலுங்கு: கஸ்தூரி பட்டி (KASTURI PATTY)

துர்கிஷ்: செக்கும் – ஆ (ZEKKUM A)

கொங்கணி: கர்வீரா (KARVIRA)

தல மரமாக அரளி

திருக்கரவீரம், சிவநந்தீஸ்வரர் ஆகிய திருக்கோவில்களில் அரளி தலமரமாக உள்ளது அரளி மரம்.

திருக்கரவீரம் திருக்கோவில் காவிரியின் தென் கரையி;ல் அமைந்துள்ள 91 வது சிவத்தலம்.  திருஞான சம்மந்தரின் பாடல் பெற்ற இந்தத் தலம் தஞ்சை மாவட்டத்தில் கரையுபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.  வீரம் என்ற சொல்லுக்கு பொன் அலரி என்று அரித்தம்.

தொண்டை நாட்டு சிவத்தலம்

அருள் மிகு சிவநந்தீஸ்வரர் திருஞான சம்மந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவத்தலம்.  இந்தக் கோவில் திருவள்ளுர் மாவட்டத்தில்> திருக்கண்டலம் என்றும் ஊரில் அமைந்துள்ளது. 

இங்கு சிவபொருமான் திருமணக் கோலத்துடன், உமையம்மை மற்றும் முருகனுடன், அகத்திய முனிவருக்கு காட்சி தந்தார் என்பது ஐதீகம்.

பெருமாள் கோவில் வளாகங்கள்

நான் பெரும்பாலும் பெருமாள் கோவில் வளாகங்களில் தான் அரளிச் செடிகளைப் பார்த்திருக்கிறேன்.  கிராமங்களில் வீட்டுத் தோட்டங்களிலும் அரளிச் செடிகளை நிறைய பார்த்திருக்கிறேன். 

இன்னொரு முக்கியமான சமாச்சாரம் வருவுத்தில் ஒருத்தராவது அரளிக் கொட்டையை அரைத்துக் குடித்து விட்டு செத்துப் போவார்கள்.  அன்று கிராமங்களில் தற்கொலை செய்து கொள்ளுவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் பொருள்.

வாய்க்கால் கரை குவளைச் செடிகள்

 அரளிக் கொட்டையை இது நாள்வரை நான் பார்த்தது இல்லை.  இதே போல குவளைக் கொட்டையையும் இதற்காக பயன்படுத்துவது உண்டு.  குவளைச் செடிகள் குத்து செடியாக வாய்க்கால் கரைகளில் முளைத்துக் கிடக்கும். 

அதுவும் அரளி மாதிரி இரண்டும் கெட்டான் மரம். மரமும் இல்லை செடியும் இல்லை, ஆனால் அது மஞ்சள் பூ பூக்கும்.  இலை, காம்பு, பூ,  காய் என எதை உடைத்தாலும் பால் வடிக்கும்.

 நெடுஞ்சாலைச் செடிகள்

குவளைச் செடிகள் கிராமத்து ஓடைக் கரைகளைத் தாண்டி வரவில்லை.  அரளிச் செடிகள்  நெடுஞ்சாலைச் செடிகளாகி விட்டன.  அந்தி சந்தி எந்த நேரமும் சாலையில் மாசுக்கள் மற்றும் தூசுக்களை வடிகட்டும் வேலை பார்த்துக் கொண்டுள்ளன.

வெள்ளை சிவப்பு அரளி

தோட்டங்களில் வளர்க்கும் அழகுச் செடிகளிலேயே ஆபத்தான நச்சுத்தன்மை கொண்டது அரளிதான்.  ரளியில் பொதுவாக வெள்ளை அரளி. செவ்வரளி என இரண்டு வகைகள் முக்கியமானவை

ஆனால் இன்று இதில் ஏகப்பட்ட நிறத்தில் புதுப்புது ரகங்களை உருவாக்கி விட்டார்கள்.  அரளியில் மட்டும் சாகுபடி ரகங்கள் என 400க்கு மேல் வந்துவிட்டன.  அரளிச் செடிகள் பெரும்பாலும் அழகுக்காகவே வளர்க்கப்படுகின்றன.

மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்ஸாண்டரின் படை முகாமில் அரளி மரத்தின் குச்சிகளைக் கொண்டு சமைத்ததால் சில வீர்ர்கள்  இறந்து போனதாக ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.  அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. (லண்டன் கியூ கார்டனின் செய்தி ஒன்று இதனை தெரிவித்துள்ளது)

ஹிரோஷிமாவின் முதல் பூ

அரளிப் பூ,  ஹிரோஷிpமா நகரின் அரசு மலரும் கூட.  ஹிரோஷிமா ஐப்பானின் மிகப் பெரிய தீவு.  அத்தோடு இரண்டாம் உலகப் போரின் போது.  அமெரிக்கா வீசிய முதல் அணுகுண்டு விழுந்து சாம்பலாக்கிய நகரம் இதுதான். குண்டு வெடிப்பில் சாம்பலான பின்னால் 1945 ம் ஆண்டு, அந்த மண்ணில் முதன் முதலாக பூத்த பூ அரளி, அதனால்தான் இன்று அரளி ஹிரோஷிமாவின் அரசு மலர்.

அத்துடன் பாக்கிஸ்தான் சிந்து மாநிலத்தின் மாநிலமலரும் அரளிப்பூதான்.  சிந்து பாகிஸ்தானின் நான்கு மாநிலங்களில் ஒன்று.

மஞ்சள் அரளி

நான் குவளை என்று சொன்னதை. எல்லோ ஒலியாண்டர் அல்லது மஞ்சள் அரளி என்கிறார்கள். 

அதன் தாவரவியல் பெயர் கேஸ்காபெலா தெவீஷயா (CASCABELA THEVITIA) அரளிச் செடியின் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் கொஞ்சம் நீலம் கலந்தது போல இருக்கும். 

மஞ்சள் அரளியின் இலைகள் பச்சைப் பசேல் என பளபளவென இருக்கும்.  இலைகளின் அகலம் குறைவாக இருக்கும்.

அப்போசயனேசி குடும்பம்

பொதுவாக அப்போசயனேசி குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான தாவரங்களின் பூக்கள் நச்சுத்தன்மை உடையவை.  இதன் இலைகள் மற்றும் குச்சிகளை எரிக்கும் போது ஏற்படும் புகை கூட சிலரை பாதிக்கும் என்று சொல்லுகிறார்கள்.

குதிரைகொல்லி மரம்

 சமஸ்கிருத மொழியில் அஸ்வம் அரகா என்கிறார்கள்.  அதற்கு அர்த்தம் ஹார்ஸ் கில்லர் (HORSE KILLER) அதாவது அரளி செடிகளை சாப்பிட்ட குதிரைகள் 7 முதல் 8 மணி நேரத்தில் இறந்து போகும் என்கிறார்கள்.

இலைகள் அல்லது பூக்களை அரைத்து> அதனை வீக்கம்> அரிப்பு> சரும நோய்கள்> மற்றும் தொழுநோய் பாதித்த இடங்களில் தடவ அவை குணமாகும்.

ஆண் குறியில் ஏற்படும் கிரந்தி

இதன் வேர்களை துண்டுகளாக நறுக்கி, நீர்விட்டு அரைத்து எடுத்த சாந்தினை ஆண் குறியில் ஏற்படும் கிரந்தி அல்லது மேகப் புண்களின் மீதுத் தடவ அவை விரைந்து குணமாகும்.

இஸ்லாமிய மருத்துவர்கள்> இதனை மருந்தாக வெளிப்புறத்தில் மட்டும் பயன்படுத்தலாம்.  சாப்பிட பிராணிகளுக்குக் கூட தரக்கூடாது. அது நச்சாக அமையும் என்கிறார்கள்.

பாம்புக்கடி விஷம் முறிக்கும்

பிராணிகள் மற்;றும் மனிதர்களுக்கு விஷமாக இருக்கும் அரளி> பாம்புக்கடியினால் ஏற்படும் விஷத்தை முறிக்கும் சக்தி உடையது என்கிறார்கள்.

ஏக்கர் கணக்கில் சாகுபடி

தமிழ் நாட்டில் கதம்பப் பூ மாலை கட்டவும் பூஜை புனஸ்காரங்களுக்கும் பயன்படுத்தும் அரளிப் பூ அனைத்தும் திண்டுக்கல்> மதுரை மாவட்டங்களில்தான் உற்பத்தி ஆகிறது.  இப்போது அரளிச் செடிகளை ஏக்கர் கணக்கில், சாகுபடி செய்கிறார்கள்.

உத்தரம் நட்சத்திரம்

அரளிமரம், உத்திரம் என்னும் ன்ம நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய  நட்சத்திர மரம்.  இந்திய பஞ்சாங்க முறைப்படி சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது> உத்திர நட்சத்திர கோணல் பிளிவுக்குள் இருக்கும் காலம்தான் உத்தர நட்சத்திற்கு உரிய காலம்.

ஜன்ம நட்சத்திரம்  

இந்தக் காலத்தில் பிறக்கும் ஒருவருடைய பிறந்த நட்சத்திரம்தான் ன்ம நட்சத்திரம் உத்தரம்.  உத்தர நட்சத்திற்கு உரியோர் அதற்குரிய அரளி மரத்தை நட்டு வழிபட்டு வந்தால் வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.  முக்கியமாக தோங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

FOR FURTHER READING

WWW.FLICKR.COM –‘CHEVARALI’

WWW.TA.WIKIPEDIA.ORG ‘ARALI’

WWW.TA.WIKIPEDIA.ORG-“JMKANOLALAM SIVANAMDEESWARAKOIL.

WWW.TA.WIKIPEDIA.ORG –“KASAYAPURAM KARA VEESESWARAR TEMPLE”

WWW.EN.WIKIPEDIA.ORG ‘CASCABELA THEVITIA’

WWW.EN.WIKIPEDIA.ORG ‘SINDH’

WWW.EN.WIKIPEDIA.ORG ‘HIROSHIMA’

WWW.EN.WIKIPEDIA.ORG ‘NERIUM COLOURS & VARITIES’

WWW.IU.FF.CUNI.CZ / PANDANUS DATA BASE OF PLANTS

WWW.TA.WIKIPEDIA.ORG ‘UTHARAM – PANCHANGAM’

WWW.POWO.SCIENCE.KEW.ORG – NERIUM OLEANDER

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

     

     

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...