Tuesday, June 6, 2023

UPPARU RIVER OF TIRUPPUR DISTRICT உப்பாறுஆறு திருப்பூர் மாவட்ட ஆறு

 

உப்பார்ஆறு திருப்பூர் மாவட்ட ஆறு, அமராவதி நதியின் துணை ஆறு, தாராபுரம் பகுதியில் பாயும் ஆறு, .இது ஒரு வித்தியாசமான ஆறு,. சமவெளிப் பகுதிகளில் உபரியாக சேகரமாகும் நீரினால் உருவாகும் ஆறு,  

சமவெளியில் உருவாகும் ஆறு(ORIGIN  IN PLAIN LANDS)

பொதுவாக ஆறுகள் எல்லாமே மலைப்பகுதிகளில் தான் உருவாகும்..ஆனால் இந்த உப்பனார்ஆறு சமவெளி பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஓடைகள் எல்லாம் ஒன்று சேர்த்தபடி ஓடும்  ஆறு.

கோவை மாவட்டத்தின் உபரி நீர் (SURPLUS WATER OF COIMBATORE)

கோவை மாவட்டத்தின் சக்கரபாளையம், அரசூர், பரம்பிக்குளம் ஆழியார் பாசன கால்வாய் உபரிநீர், கொசவன் பாளையம் ஆமந்த கடவு, சிக்கனூத்து பெரியபட்டி, பூளவாடி, உட்பட பல இடங்களின் உபரி நீரும் உப்பாறு அணையில் சேருகின்றது.

அதுமட்டுமல்ல, கோவைமாவட்டத்தில், அப்பநாயக்கன்பாளையம் பூரண்டாம்பாளையம், செஞ்சேரிமலை, கிருஷ்ணாபுரம், மற்றும் சுல்தான்பேட்டையில் திரளும் உபரி  நீரும் உப்பாற்றினை அடைகிறது. 

திருப்பூர் மாவட்ட உபரி  நீர் (TIRUPPUR DISTRICT SURPLUS

அதுபோல திருப்பூர் மாவட்டத்தில் கோழிக்குட்டை, ஜல்லிப்பட்டி, கோமங்கலம், உபரி நீரும் பொதப்பம்பட்டி, கொண்டாம்பட்டி வழியாக ஓடி உப்பாற்றை அடைகிறது. 

இப்படி முக்கியமாக இந்த மூன்று பகுதிகளில் உள்ள பிரதானமான ஓடைகள் அனைத்தும் சேர்ந்து திரண்டு ஓடுவது தான் இந்த உப்பாறு.

பனைமரத்துப்பாளையம் அணை (PANAIMARATHTHUPALAYAM DAM)

பனைமரத்துப்பாளையம் என்ற ஊரில் உப்பாற்றின் மீது ஒரு அணை கட்டி இருக்கிறார்கள். இங்கு கெத்தல்ரேவ் என்ற இடத்தில்  1100  ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது இந்த அணை.

தாராபுரம் அருகில் (NEAR THARAPURAM)

தாராபுரத்தில் இருந்து பனைமரத்துப்பாளையம் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணையும் காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது கட்டியதுதான். 1965 ஆம் ஆண்டில் தொடங்கி 1968 ஆம் ஆண்டில்தான் கட்டி முடித்தார்கள்.

நீர்பிடிப்புப்பகுதி (WATERSHED AREA)

இந்த அணையின் உயரம் 30 அடி, நீளம் 2300 மீட்டர், நீர்பிடிப்புப்பகுதி 300 சதுரமைல். அணையின் மூலமாக நேரடியாக 6 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக பதினைந்தாயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 

உப்பாற்று அணையின் மீன்வளம் (TASTY DAM FISH)

இந்த உப்பாற்று அணையில் மீன்வளம் அதிகம் என்கிறார்கள். இங்கு தினமும் 500 முதல் 800 கிலோ வரை மீன் பிடிக்கிறார்கள். இங்கு பிடிக்கப்படும் மீன்களுக்கு தனிச்சுவை உண்டு என்கிறார்கள். இந்த மீன்களை சமைத்தால் அதை சாப்பிட இரண்டு நாக்கு வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இதனை அந்த ஊர்க்காரர்கள் ஊர்ஜிதம் செய்ய வேண்டும். 

வங்க கடலுடன் கலக்கிறது (BAY OF BENGAL)

இந்த அணையின் உபரி நீர் வெளியேறி அமராவதி ஆற்றுடன் சேர்ந்து காவிரி ஆற்றுடன் வங்க கடலுடன் கலக்கிறது.

உப்பாறு ஓடையின் வரத்து கால்வாய்கள், தூர்வாரப்படாமல் இருக்கின்றன. அதுமட்டுமல்ல இந்த ஓடைகளில் வழித்தடம் மற்றும் பாதைகள் அமைத்தல் போன்ற ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன என்கிறார்கள். இதனால் பல இடங்களில் இந்த வரத்துக் கால்வாய்கள் மற்றும் போக்குக் கால்வாய்கள் எனும் ஓடைகள் காணாமல் போய்விட்டன என்கிறார்கள். 

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மற்றும் உள்ளாட்சித்துறை அமைப்புகளும், இந்த பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளவில்லை என்ற மனக்குறை இப்பகுதி மக்களுக்கு இருக்கிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்கள் பலவும் தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லுகிறார்கள். ஆனால் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு ஒத்தாசையும் இல்லாமல் இந்த மாதிரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சுலபம் இல்லை என்கிறார்கள் அரசுத் துறை அலுவலர்கள். 

இந்த மாதிரி ஆறுகளின் வரத்து கால்வாய்களில் போக்கு கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன செய்யலாம் ? உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பகுதியில் பதிவிடுங்கள்.

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...