சுனாமி தடுப்பு மரம் பன்றிக்குத்தி |
பன்றிக்குத்தி
இன்னொரு சுனாமி மரம், இந்தியாவைத் தாயகமாக் கொண்டது. ஆனாலும் பல நாடுகளில் பரவியுள்ளது இயற்கை சீற்றங்களின்
போது ஆர்த்து எழும் அலையை அடக்கும் சக்தி உடைய மரங்கள்> ஆறுகள் மற்றும்
ஒடைகள் கடலில் சேரும் முகத்துவாரங்களில் வளரும் மரம், அந்தப் பகுதியில் மீன்கள். இறால்> நண்டு> நத்தைகள் மற்றும் இதர கடல் வாழ்
உயிரினங்களில் இனப் பெருக்கத்தை
அதிகப்படுத்த உதவும் மரம்.
நீடித்து உழைக்கக்
கூடியமரம். வீடுகள் கட்டுவதற்கான மரங்களைத்
தரும். நல்ல விறகாகப் பயன்படும்.
பொதுப் பெயர்கள்: எல்லோ மேங்குரோவ், ஸ்பர்டு மேங்குரோவ், (YELLOW
MANGROVE, SPURRED MANGROVE)
தாவரவியல் பெயர்:
செரியாப்ஸ் கேண்டல்லியானா (CERIOPS
CONDOLLEANA)
தாவரக் குடும்பம் பெயர்: ரைசோபோரேசி (RHIZOPHORACEAE), தாயகம்: இந்தியா
இந்திய மாங்குரோவ்
மரத்தின் பிறமொழிப் பெயர்கள்.
மலேசியா: டெங்கர் (TENGAR)
இந்தோனேசியா: பிடோ பிடோ (BIDO - BIDO)
பிலிப்பைன்ஸ்: டங்கல் (TANGAL)
மியான்மர்: மேடமி (MADAME)
வியட்நாம்: டா வாய் (DA VOI)
தாய்லாந்து: பிராங் (P PRONG)
கம்போடியா:
சுமெர்க்ரோ ஹாம் (SMERKRO HORM)
தமிழ்: பன்றிகுத்தி
(PANRI
KUTHTHI)
ஆங்கிலம்: எல்லோ மேங்குரோவ் (YELLOW MANGROVE)
இந்தி: கோரன் (GORAN)
மலையாளம்: ஆனக்காண்டல், கண்டல், மன்னகன்டல் (ANAKKANDAL,
KANDAL, MANNAKANDAL)
பெங்காலி: மாத்
கோரன் (MATH GORAN)
கன்னடா: சவுரி, கிராரி (CHOURI, KIRARI)
ஒரியா: காரி கோரன் (KAARI GORAN)
குஜராத்: கனாரி (KANARI)
இந்திய அலையாத்தி
மரங்களில் ஒன்று. நடுத்தரமான
அளவுள்ளது. அதிகபட்சம் 25 மீட்டர் உயரம் வரை
வளரும். மரத்தின் விட்டம் 45 செ.மீ. அளவுக்கு பருக்கும். மரத்தி;ன் பட்டை பளபளப்பான சாம்பல் நிறத்தில்
இருக்கும்.
தரைக்கு மேல்
தெரியும் தடிமனான வேர்களாக கீழே இறங்கும். இலைகள் இளமஞ்சள் நிறத்தில் மினுமினுக்கும். பழங்கள்; 3 செ.மீ. அளவில் கோள வடிவில் இருக்கும். இளம் பிஞ்சுகள் காவி
நிறமாய் இருக்கும். பூக்கள் பசுமையான பருமனான இதழ்களை உடையவை.
பயன்கள்
நீடித்து உழைக்கக்
கூடியமரம். வீடுகள் கட்டுவதற்கான
மரங்களைத் தரும். நல்ல விறகாகப்
பயன்படும். கரிகள் (CHARCOAL) தயார் செய்யலாம். பட்டைகளிலிருந்து சாயம் எடுக்கலாம். பட்டையில் இருக்கும் டேனின்’ ஐப் பயன்படுத்தி தோல்
பதனிடலாம்.
இயற்கை சீற்றங்களின்
போது ஆர்த்து எழும் அலையை அடக்கும் சக்தி உடைய மரங்கள் இவை. அதனால்தான் தமிழில்
இவற்றைப் பொதுவாக அலையாத்தி மரங்கள் என்று சொல்லுகிறோம். ஆங்கிலத்தில் இந்த மரங்களை ‘மாங்குரோவ்’ என்று அழைக்கிறோம்.
இந்த அலையாத்தி
மரங்கள் அலைகள் வீசும் நிலப்பரப்பில் வளரக் கூடியவை. ஆறுகள் மற்றும் ஒடைகள் கடலில் சேரும் முகத்துவாரங்களில் எல்லாம் இந்த அலையாத்தி
மரங்கள் நன்கு வளரும். இந்த மரங்கள்
வளரும் இடங்கள் பெரும்பாலும் எப்போதும் ஈரக் கசிவுடன் இருக்கும் சதுப்பு
நிலமாக இருக்கும்.
பண்டிகுட்டி
அலையாத்தி இருக்கும் நாடுகள்
செரியாப்ஸ் கேண்டலீனா
இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இந்த இந்திய அலையாத்தி மரம் பல நாடுகளில்
பரவியுள்ளது. அவை மொசாம்பிக்> கிழக்கு ஆப்ரிக்கா> மேற்கு பசுபிக்> தென் கிழக்கு ஆசியா> சிங்கப்பூர்> ஆஸ்திரேலியா> டைவான். மற்றும் பப்புவா
நியூகினியா.
அலையாத்தி மரங்கள்
எங்கு வளரும்
அலையாத்தி மரங்களை
நட்டு உருவாக்குவது என்பது சுலபமான காரியம் இல்லை. 2004 ம் ஆண்டு சுனாமி வந்து போன பின்னால் நிறைய
தொண்டு நிறுவனங்கள் அலையாத்தி மரக் கன்றுகளை நட்டு உருவாக்கும் பணயில்
ஈடுபட்டன. அவற்றில் பெரும்பாலான
முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.
அந்தப் பட்டியலில் எங்கள் பூமி நிறுவனமும் ஒன்று.
தோல்விக்கு
முக்கியமான காரணம் அலையாத்தி மரங்கள் நடுவதற்கு பொருத்தமான இடத்தைத் தேர்ந்
தெடுக்கும் அனுபவம் இல்லாமை தான்.
அலையாத்தி
மரங்களுக்கு உரிய மண்ணில் எப்போதும் ஈரப்பசை இருக்க வேண்டும். அந்த மண்ணில் வடிகால் வசதியும் இருக்க
வேண்டும். அது உப்பு மண்ணாக (ளுயுடுஐNநு ளுழுஐடுளு) இருக்கலாம்.
அடிக்கொரு முறை உப்பு
நீரை தெளித்துச் செல்லும் அலை வாசலாக
இருக்கலாம். அலையாத்தி மரங்கள் வரை கடல்
நீர் போல அதிக உப்பும் கூடாது. ஆற்றுநீர் போல நல்ல
தண்ணீரும் கூடாது. இரண்டும் கலந்தது போன்ற
பாசனம் இதற்கு வேண்டும். பூமியின்
அனுபவத்தில் நீர்பரப்பிற்கு கடல் நீரும் நல்ல நீர் கலந்த (BACK WATERING) நடுவே அமைந்துள்ள தீவுகள்
பொருத்தமானவை.
ஆறுகள் மற்றம் ஒடைகள்
சங்கமம் ஆகும் இடங்களில் அலையாத்தி மரங்கள் இருந்தால்
அந்தப் பகுதியில் மீன்கள். இறால்> நண்டு> நத்தைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்களில் இனப் பெருக்கத்தை அதிகப்படுத்த உதவுகிறது.
மரக்கட்டையின் பயன் (TIMBER USES)
இதன் கட்டை மரம் மிகவும்
கடினமானது. மிகவும் உறுதியானது.
கூடுதலான எடை உடையது. சுலபமாக மரங்களைப்
பிளந்து வேலை பார்க்கலாம். ஆனால்
உலர்த்தினால் அதிகமாக சுருங்கும். மரங்கள்
பலவற்றிற்கும் பயன்படும்.
வீடுகள் மற்றும்
கட்டிடங்கள் கட்ட ரயில் பாதைகளில் போடும் அடிக்கட்டைகள் (WOODEN SLEEPERS) செய்ய> கருவிகளின் கைப்பிடிகள் செய்ய> இதர வகைகளிலும்
உபயோகம் ஆகும். கட்டைகள் நீண்ட நாட்கள்
உழைக்கும்.
உப்பு நீரில் மூழ்கி
இருந்தாலும் பாதிப்படையாது. மிக உறுதியான அலையாத்தி மரங்களில்
ஒன்று.
கிழக்கு
ஆப்ரிக்காவின் கடலோரப்பகுதியில் உள்ள நாடுகள் அலையாத்தி
மரங்களை பெர்சியன் வளைகுடா பகுதிகளில்
நீண்டகாலமாக விற்பனை செய்து வருகிறார்கள்.
மருத்துவப்
பயன்பாடுகள்
பட்டையிலிருந்து
எடுக்கும் சாற்றினைப் பயன்படுத்தி அதிகப்படியான ரத்தப்போக்கினை கட்டுப்படுத்தவும்> அப்ஸ்டெட்ரிகல் (OBSTETRICS)
என்னும் மகப்பேறு தொடர்பான
பிரச்சினைகளை சரி செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
குடலில் ஏற்படும் புண்கள்> வயிறு சம்மந்தமான உபாதைகள்> சக்கரை நோய் ஆகியவற்றை குணப்படுத்த மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இதன் பட்டைகள் பயனாகிறது மேலும் பட்டைகள் மருந்துகள் தயாரிப்பதில் துவர்ப்பியாக (ASTRINGENT) உபயோகப்படுகிறது. மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதிலும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதிலும் ஹிமோஸ்டேட்டிக்காக (HEMOSTATIC) பயனாகிறது.
இந்திய மருத்துவத்தில்
பண்டிகுட்டி
இதன் பட்டை> வேர்> இலைகள் போன்றவற்றை இந்திய மருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது. இவற்றை அலையாத்தி எனப் பொதுவாக அழைத்தாலும் இந்த மரத்தை பண்டி
குட்டி என்கிறார்கள்.
அத்துடன் பால்நிகுட்டி> கண்டல்> சிரா என்னும் பெயர்களில் இந்திய மருத்துவத்தில்
குறிப்பிடப்படுகிறது.
பிச்சாவரம் அலையாத்திக் காடு
உலகின் இரண்டாவது
பெரிய அலையாத்தி காடு
உங்களுக்கு
தெரியுமா
? தமிழ்நாட்டில்
உள்ள பிச்சாவரம் ‘மாங்குரோவ்காடு’ தான் உலகின்
இரண்டாவது பெரிய அலையாத்திக்
காடு. பிpச்சாவரம் மாங்குரோவ்
காட்டின் பரப்பு சுமார் 1100 எக்டர்.
இங்கு அவிசீனியா மற்றும் ரைசோபோரா (AVICENNIA &
RHIZOPHORA) என்னும் இரண்டு தாவரக் குடும்பக்களைச் சேர்ந்த அலையாத்தி
மரங்கள் உள்ளன.
கொசுறு
உலகின் மிகப்பெரிய அலையாத்திக்காடு சுந்தரவனம் காடுகள், இது வங்காள தேசத்தில் 60 சதமும் மற்றும் இந்தியாவில் 40 சதமுமாக பரவியுள்ளது, இதன் மொத்தப் பரப்பளவு 1,40.000 எக்டர்.
TO
READ FURTHER
WWW.HRALTHYLIFE
LIVE.ORG ‘CERIOPS CONDOLLEANA’
WWW.WIKIPEDIA.ORG-
‘CERIOPS CANDOLLEANA’
WWW.EN.M.WIKIPEDIA-
‘CERIOPS TAGAL’ (SYN)
WWW.FLORAFAUNA
WEB.NPARICS.GOV.SG – ‘CERIOPS TAGAL’(AN)
WWW.INDIA
BIODIVERSITY.ORG ‘CERIOPS CANDOLLEAUA (699 WORDS)
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS
ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE
SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT
WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU
CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D
(AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment