Monday, June 19, 2023

TSUNAMI RESISTANT TREE ASIATIC MANGOROVE 38. கண்டல் சுனாமி தடுப்பு மரம்

கண்டல்   சுனாமி தடுப்பு மரம் 


கண்டல் மரம்
, சுனாமிக்குப்பிறகு பிரபலமானது  இது, இதன் தமிழ் பெயர் அலையாத்தி மரம். அலைகள் வந்துபோகும் முகத்துவாரப் பகுதியில் வளரும், அலைகளின் வேகத்தை குறைக்கும் வேலையைச் செய்வதால் இதன் பெயர் அலையாத்தி மரம், இது சுனாமியை கட்டுப்படுத்துவதோடு, கடல் அரிமானத்தையும் மட்டுப்படுத்தும், இறால்கள்,  மீன்கள், நண்டு நத்தைகள் எனும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு  உதவும், விவசாயத்துக்கு தழை உரம் தரும், கால்நடைகளுக்கு தீவனம் தரும், மரச்சாமான்கள் செய்ய மரங்கள் தரும், அடுப்பெரிக்க விறகு தரும், மொத்தத்தில் இது ஒரு கடலோர கற்பகவிருட்சம். சுலபமாக நினைவில் கொள்ள இதனை சுனாமி மரம் என்றும் செப்பலாம். 

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் :--  ஏசியாட்டிக் மேங்ரோவ், ரெட் மேங்குரோவ், லூப் ரூட்

மரத்தின் தமிழ்ப் பெயர் :--  கண்டல், பேய்க்கண்டல், சொரி

தாவரவியல் பெயர்  :--  ரைசோபோரா முக்ரொனேடா (RHIZOPHORA     MUCRONATA)

மேங்குரோவ் (ASIATIC MANGOROVE)

தாவரக்குடும்பம்  :--  ரைசோபோரேசி (RHIZOPHORACEAE)

மரத்தின் வகை  :--  கடல் சதுப்புநில மரம்   

பலமொழிப்பெயர்கள்:

பெங்காலி: பாரா (BARA)

குஜராத்: கரோட் (KARROD)

கன்னடா: கண்டேல் (KANDALE)

கொங்கணி: கொம்டாலம் (KOMDALAM)

மலயாளம்: பனச்சிக்கண்டல் (PANACHIKKANDAL)

மராத்தி: டும்பி (DUMBI)

ஒரியா: காச்சா (GACHHA)

தமிழ்: கண்டல், பேய்க்கண்டல் (KANDAL, PEYKANDAL)

தெலுங்கு: அடவிப்பொன்னா (ADAVIPONNA)

துளு: காண்ட்லா (KANDLA) 

அலையாத்தி மரங்களின் தமிழ் பெயர்கள்; 

சதுப்பு நிலக்காடுகளை நாம் அலயாத்தி என்றும் ஆங்கிலத்தில் மேங்குரோவ் என்றும் அழைக்கிறோம். தமிழில் இதற்கு நிறைய பெயர்கள் வழங்குகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம். அவை, உப்பட்டம், கண்டல், வெண்கண்டல், பூக்கண்டல், கருங்கண்டல், மற்றும் பன்றிகுத்தி. 

உங்கள் ஊர் கடலோரத்தில்  நிறைய இந்த கண்டல் மரங்களை நடுங்கள். நட்டு வைத்தால்நீங்கள் சுனாமிபற்றி கவலைப்பட வேண்டாம். சுனாமி அலைகள் தென்னைமர உயரத்திற்கு சுற்றிசுற்றி வந்தாலும்  அவற்றை காற்றுபோன பலூன் ஆக்கிவிடும் இந்த கண்டல் மரங்கள்.. 

இந்த கண்டல் மரங்கள் ஆற்றங்கரைகளில் அதிகபட்சமாக 70 முதல் 80 அடி உயரம் வளரும், கடலோரங்களில் 30 முதல் 50 அடி உயரம்வரை வளரும்,

மூன்றுவகை வேர்கள் 

இந்த மரங்களில் முக்கியமான சமாச்சாரம் இதன் வேர்கள், ஆச்சரியப்பட வேண்டாம், இந்த வகை மரங்களில் மூன்று வகை வேர்கள் உண்டு,

எல்லா மரத்திற்கும் இருப்பது மாதிரி, அடிமரத்திலிருந்து நிலத்தடிக்குள் இறங்கும் சராசரி வேர், அப்படி இப்படி மரம் சாயாமல் பிடிக்க  நடுமரத்திலிருந்து வளர்ந்து தரைக்குள் இறங்கும் தாங்கி பிடிக்கும் வேர்கள் இரண்டாம் வகை. 

மூன்றாம் வகை மூச்சுவேர், மரத்தடியில் அதனச் சுற்றிலும் முளைக்குச்சிகள் மாதிரி முளைத்திருக்கும். இந்த வேர்கள் காற்றிலிலிருந்து ஆக்சிஜனை கிரகித்து வேர்களுக்கு அனுப்பும். 

குட்டி போடும் மரங்கள் 

பச்சை இலைகளோடு செறிந்து, பச்சைக் கலந்த வெண்மை நிறத்தில், பளிச்சென் வெள்ளைப் பூக்களை மரம் முழுவதும் போர்த்தி நின்று, சுற்றுப்புறத்திற்கு அழகூட்டும் அலங்கார அழகுமரமும் கூட. 

ஜூன் முதல் அக்டோபர் வரையான மாதங்களில்  தேனீக்களுக்கு திகட்டும் அளவு  தேன் தரும் இதன் பூக்கள். 

கண்டல் மரங்கள் பாலூட்டிகள் மாதிரி குட்டிகள் போட்டு இனப்பெருக்கம் செய்யும் அதிசயப்பிறவிகள். ஆகஸ்டு முதல் ஜனவரி வரை ஆறு மாதங்களில் காய்க்கும். 

இதன் காய்கள் கருப்பு நிறத்தில் 40 முதல் 50 செ.மீ. நீளம் இருக்கும், அதில் ஒரே ஒரு விதை இருக்கும். இந்த கனிகள் மரத்தில் இருக்கும்போதே விதைகள் முளைக்கும். 

மரத்தில் இருந்தபடி 60 செ.மீ. நீளம் வரை குட்டிக் கன்றுகளாக வளரும். பின்னர் இந்த கன்றுகள் மரங்களிலிருந்து உதிரும். உதிர்ந்த கன்றுகளை அலைகளில் எடுத்து சென்று உரிய இடத்தில் சேர்க்கும். அங்கு அது புதிய மரமாக அவதரிக்கும். 

பல பயன் மரம் 

கண்டல் மரம், கடலிலிருந்து நிலத்தை மீட்டுத்தரும். கடல் அரிப்பைத் தடுக்கும், சுமார் 30 வகை இறால்கள்,  30 வகை நண்டுகள் 20 வகை நத்தைகள், மற்றும் ஏகப்பட்ட மீன்களின் இனப்பெருக்கத்திற்கு  உதவுகின்றன இந்த கண்டல்  மரங்கள். இந்த மரங்களிலிருந்து உதிரும் இலைகள், தளிர்கள், துளிர்கள், பூக்கள் போன்றவைதான் கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகின்றன.  

கால்நடைகளுக்கு தீவனம் தரும் மரம்.  தோல் பதனிட டேனின் நிறைந்த பட்டைகள், இலை, கிளை, மரம் எனஅடுப்பெரிக்க விறகு தரும் மரம், இப்படி பலவகை பயன் தரும். 

சூழலை காக்கும்

மரம், வேளாண்மைக்  கருவிகள் கம்பங்கள் முட்டுக் கட்டைகள் பந்தல் கால்கள் தூண்கள் செய்ய மரம் தரும், காகிதம் தயாரிக்க மரக்கூழ் தரும் மரம்.     

இந்த மரங்கள், அடுப்பெரிக்க விறகாகும்.  காற்றின் வேகம் தடுக்கும், தூசியினை வடிகட்டும். காற்றை சுத்தப்ப்படுத்தும்  சுற்றுச் சூழலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். 

மருத்துவப்பயன்கள்

இதனை மருத்துவத்தில் துவர்ப்பியாக பயன்படுத்துகிறார்கள், ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, சீதக்கடுப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், போன்றவற்றிற்கு இதனை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தோசைனா, சீனா, ஜப்பான், மலேஷியா, மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் இந்த அலையாத்தி வகை மரங்களை வெகுகாலமாக நோய்களை குணப்படுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.

பிச்சாவரம் அலையாத்தி காடுகள் 

பிச்சாவரம் காடுகளின் முக்கியமான அலையாத்தி என்பது சிவப்பு அலையாத்தி மரங்கள்தான். இதில் ஏழு வகையான அலையாத்தி மரங்களை சொல்லுகிறார்கள்.

அவை ரைசோபோரா முக்ரனேட்டா (RHIZOPHORA MUCRONATA), ரைசோபோரா எப்பிகுலேட்டா (RHIZOPHORA APICILATA), ரைசோபோரா மேங்கில் (RHIZOPHORA MANGLE), ரைசோபோரா ஹரிசோனி (RHIZOPHORA HARISONII), ரைசோபோரா ரெசிமோசா (RHIZOPHORA RACEMOSA), ரைசோபோரா சமோயென்சிஸ் (RHIZOPHORA SAMOENSIS), ரைசோபோரா ஸ்டைலோசா (RHIZOPHORA STYLOSA). இவை எல்லாமே அந்த மரங்களின் தாவரவியல் பெயர்கள். 

பெரிய அலையாத்தி காடு

உலகின் இரண்டாவது பெரிய அலையாத்தி காடு என்னும் பெருமைக்கு உரியது பிச்சாவரம் காடுகள்.இது வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் முகத்துவாரங்களுக்கு இடையே அமைந்துள்ளது  பிச்சாவரம் அலையாத்திக் காடுகள். 

போகிறபோக்கில் ஒரு செய்தி

உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் என்பது சுந்தர்பன் காடுகள். 1,40,000 எக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதில் 60 சதம் வங்காள தேசத்திலும் 40 சதம் இந்தியாவிலும் உள்ளது. கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா ஆறுகளின் முகத்துவாரப் பகுதியில் உள்ளது இந்த சுந்தர்பன் அலையாத்திக் காடுகள். 

இது வங்காளதேசத்தில் பலேஷ்வர் மற்றும் ஹரின்பங்கா ஆறுகளுக்கு இடையே உள்ளது. சுந்தர்பன் அலையாத்தி காடுகள். 

FOR FURTHER READING 

WWW.EN.M.WIKIPEDIA.ORG / RHIZOPHORA MUCRONATA

WWW.FLOWERSOFINDIA.NET / RHIZOPHORA MUCRONATA

WWW.ITIS.GOV / RHIZOPHORA MUCRONATA

WWW.PZA.SANBI.ORG / RHIZOPHORA MUCRONATA

WWW.NPARKS.GOV / RHIZOPHORA MUCRONATA LAMK – NATIONAL PARKS BOARD

WWW.TROPICAL.THEFERNS.INFO / RHIZOPHORA MUCRONATA – USEFUL TROPICAL PLANTS.

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...