கடற்கரைப் பகுதிகளில்
ஆற்றங்கரைகளில் விரைவாக பசுமைப் போர்வையை உருவாக்குவதற்கு ஒரு வரப் பிரசாதமாக
அமைந்த இந்திய மரம், மரத்தின் உட்புறப் பட்டை வலுவான நார் தரும், கயிறு மற்றும் மீன் வலைகள்
செய்யலாம். அட்டைக் காகிதம் தயாரிக்கலாம், இதன் அகன்ற இலைகள் சாப்பிடும்
தட்டாகிறது, கால்நடைகளுக்கு
தீவனமாகிறது; இளம் வேரும் குருத்துக்களும் தின்பண்டமாகிறது; மஞ்சள் மலர்களால் மரமெல்லாம் நிறைத்து சாலை ஓரங்களில், தோட்டங்களில் நின்று
சுற்றுப்புறத்திற்கு அழகூட்டுகிறது, படகுகள், கட்டுமரங்கள் செய்ய காகிதம் செய்ய மரக்குழம்பு தருகிறது, ஆற்றங்கரை கடற்கரைப் பகுதி, சதுப்புநிலம், உப்பு நிலம் நீர் தேங்கும் நிலம் அனைத்திலும் அற்புதமாய் வளரும், உடல் ஜூரம், இருமல், சீதக் கழிச்சல், போன்றவற்றைக் குணப்படுத்த இலைகள், பூக்கள், பட்டை, வேர் மரம் போன்றவை பயன்படுகிறது இந்த நீர்ப்பருத்தி.
பொதுப்பெயர் :
ஆங்கிலப்பெயர் :சீ ஹைபிஸ்கஸ், மஹோ, காட்டன் ட்ரீ, பீச் ஹைபிஸ்கஸ், காட்டன் வுட் ஹைபிஸ்கஸ், கிரீன் காட்டன் வுட், சீ கோஸ்ட் ரோஸ் மேலோ, ட்ரீ மேலோ, எல்லோ மேலோ ட்ரீ (SEA HIBISCUS, MAHOE, COTTON TREE, BEACH HIBISCUS, COTTON WOOD HIBISCUS, GREEN
COTTON WOOD, SEA COAST ROSE-MALLOW, TREE MALLOW, YELLOW MALLOW TREE )
தாவரவியல் பெயர் : ஹைபிஸ்கஸ் டீலியேசியெஸ் (HIBISCUS TILIACEUS)
தாவரக்குடும்பம் :
மால்வேசியே (MALVACEAE)
மரத்தின் வகை :
அலங்கார அழகுமரம்
பிறமொழிப் பெயர்கள்:
அசாமிஸ்: ரட்னகரா புலா (RATNAKARA PHULA)
பெங்காலி: போலா (BOLA)
இந்தி: போலா (BOLA)
கன்னடா: பில்லிபட்டா (BILIPATTA)
கொங்கணி: பெலிபட்டா (BELIPATTA)
மலையாளம்: தாய்பருத்தி (THAIPARUTHI)
மராத்தி: பேல்பட்டா (BELPATTA)
ஒரிசா: பனியா (BANIYA)
சமஸ்கிருதம்: பாலா (BALA)
தமிழ்: நீர்பருத்தி, தாளிப்பருத்தி (NIRPARUTHI, THALIPARUTHI)
தெலுங்கு: செரிகோகு (CHERRY GOGGU)
நீர்பருத்தி மரத்தின் தாயகம்
இந்தியா
ஏற்ற இடங்கள் : ஆற்றங்கரை, கடற்கரைப் பகுதி, சதுப்புநிலம், உப்பு நிலம், நீர் தேங்கும் நிலம்.
குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்களின் தின்பண்டம்
இலைகள் : நீர்பருத்தியின் அகன்ற இலைகள்தான் ‘தாஹித்தி’ தீவில் சாப்பிடும்
தட்டாக உதவுகிறது; கால்நடைகளுக்கு தீவனமாகிறது; குயின்ஸ்லாந்தின் பழங்குடி மக்களுக்கு இதன் இளம் வேரும் குருத்துக்களும்
தின்பண்டமாகிறது.
பட்டை : நீர்பருத்தி மரத்தின் உட்புறப் பட்டை வலுவான நார் தரும்> கயிறு மற்றும் மீன் வலைகள் செய்யலாம். அட்டைக் காகிதம் தயாரிக்கலாம்.
வாசமுடைய பூக்கள்
பூக்கள் : பூவின் மையப் பகுதி
சிவப்பு நிறத்துடன் கூடிய பளிச்’ சென்ற மஞ்சள் நிற
இதழ்களை உடையது; மாலைக்குள் மஞ்சள் ஆரஞ்சாகி> ஆரஞ்சு சிவப்பாகி உதிர்ந்து போகும் மனதை மயக்கும் வாசமுடைய பூக்களை நீர்பருத்தி ஆண்டு முழுவதும் பூக்கும்.
மரம் : நீர்பருத்தி பசுமை மாறா மரம், 25 அடி உயரம் வரை வளரும் சிறு மரம், பந்து
போன்ற தழையமைப்பு கொண்டு, மஞ்சள் மலர்களால், மரமெல்லாம் நிறைய சாலை
ஓரங்களில், தோட்டங்களில் நின்று சுற்றுப்புறத்திற்கு
அழகூட்டும் மரம், படகுகள், கட்டுமரங்கள், செய்ய காகிதம் செய்ய மரக்குழம்பு தரும்
இலைகள், நீளமான காம்புகளில் இதய வடிவில் கூர்மையான இலை நுனி உடையவை, கிளைகள், மரமும் அடுப்பெரிக்க விறகாகும்.
காற்றை தூய்மைப்படுத்தும்
சுற்றுச்சூழல் : நீர்பருத்தி வீசும் காற்றின் வேகத்தை
தடுத்து> தூசியினை வடிகட்டி. காற்றை தூய்மைப்படுத்தும்.
நடவுப் பொருள் : விதை, போத்துக்கள்
மரத்தின் உயரம் : 8 முதல் 10 மீட்டர்
உயர்ந்தும் படர்ந்தும் வளரும்.
மருத்துவப்பயன்: உடல் ஜூரம், இருமல், சீதக் கழிச்சல், கட்டி, காது சம்மந்தமான உபாதைகள் போன்றவற்றைக் குணப்படுத்த இலைகள்> பூக்கள், பட்டை, வேர் மரம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
TO
READ FURTHER
WWW.MYBAGEECHA.COM /HIBISCUS TILIACEUS VARIEGATA
WWW.PZA.SANBI.ORG / HIBISCUS TILIACEUS VARIEGATA
WWW.CABI.ORG / HIBISCUS TILIACEUS VARIEGATA
WWW.NPARKS.GOV.SG / HIBISCUS TILIACEUS VARIEGATA
WWW.INDIABIODIVERSITY.ORG / HIBISCUS TILIACEUS VARIEGATA
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS
ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE
SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT
WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU
CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D
(AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment