மனித குடிக்கும் மூத்த குடி பெரணி மரங்கள் |
பெரணி செடிகளை மரம் என்று சொல்லுவதே ஆச்சரியமான
செய்திதான். நமக்கு தெரிந்தவரை பெரணி என்பது செடிகள். மயிலிறகு செடிகள்.
ஊட்டி கொடைக்கானல் என்று சொட்டர் போட்ட பிரதேசங்களில் வளரும் செடிகள்.
காலை வைத்தால் அட்டைகள் கவ்விப் பிடிக்கும் சதுப்பு நிலங்களில் வளரும் செடிகள்.
மூச்சினை பலமாய் விட்டால்கூட முறிந்துபோகும் பலவீனமான செடிகள்.
இங்கு நாம் பார்க்கப்போவது மரங்கள் ! மனித குடிக்கும்
மூத்த குடியாக விளங்கிய பெரணி மரங்கள்.
தாவரவியல் பெயர்: சையாத்தியா கிரினிட்டா (CYATHEA CRINITA)
தாவரக்குடும்பம் பெயர்: சையாத்தியேசி (CYATHEACEAE)
நானூறுக்கும் மேற்பட்ட பெரணி இனங்கள்
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் ஸ்ரீலங்காவில்
அழிந்து வரும் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம்.
இவை பெரும்பாலும் நஞ்சை நிலக் காடுகளில் (WETLAND FORESTS) விரும்பி வளர்கின்றன.
மலைப் பகுதிகள்,
நிழல் மண்டிய ஒடைக் கரைகளில் வளப்பமாக
வளர்ந்திருக்கும் பெரணிச் செடிகளை யோசித்துப் பாருங்கள். அந்த பெரணிச் செடிகளை நாம் மயிலிறகு செடிகள்
என்றும் சொல்லுவதுண்டு. இதனைப் பெரணி மரம் (FERN TREE) என அழைக்கிறார்கள்.
இந்தத் தாவரப்பிரிவில் (GENUS) 470 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள்
உள்ளன. இவை பெரும்பாலும் வெப்ப மண்டல
மழைக் காடுகளிலும்> (TROPICAL RAIN FORESTS) மற்றும் குளிர்ப் பகுதி மரக்காடுகளிலும் (TEMPERATE FORESTS). மேற்குத் தொடர்ச்சி மலைப்
பகுதிகளில் 1500 முதல் 2200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளில் இந்த மரங்கள் காணப்படுகின்றன.
நான்கு பெரணி தாவர வகைகள் (SPECIES), மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு சொந்தமானவை. அதில் உள்ள ஒரு வகை உலகின் வேறு எந்தப்
பகுதியிலும் இல்லாத வகை.
ஏ நியூ லீஃப்
(A NEW LEAF) என்ற ஒர் ஆங்கிலப்படம் 1971 ம் ஆண்டு
வெளியானது. ஆந்தப் படத்தின் நாயகி ஒரு
புதிய பெரணி வகையைக் கண்டுபிடித்து அதற்கு தன்னுடைய புதிய கணவனின் பெயரை அதற்கு சூட்டுவாள். அவள் ஒரு தாவரவியல்
நிபுணர் என்று கதை போகிறது, அது ஒரு நகைச் சுவைப் படம்.
நீலகிரி பெரணி மரம்
நீலகிரி பெரணி மரத்தின் தாவரவியல் பெயர் சையாத்தியா நீலகிரியென்சிஸ் ஹால்டம். (CYATHIA NILGRIENSIS HOLTTUM) கூடுதலான
நிழலிலும்> சதுப்பு நிலங்களிலும் வளரும் ஒரு பெரணி மரம். தென்னிந்தியாவின் மறைந்து வரும் மரம் என அறிவிக்கப்பட்டுள்ள மரம்.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் என தென்னிந்தியாவில் காணப்படும் பெரணி மரம். இன்றும் குறிப்பாக சொல்ல தென்றால்> மேற்குத்
தொடர்ச்சி மலைப்பகுதியின் வடக்குப் பகுதியில் அதிகம் தென்படுகின்றன.
கர்நாடகாவில்,
சிக்மகளுர், மெர்காரா, பாகமண்டலம், தலைத் காவேரி, குடகு, சக்லேஷ்பூர், ஹாசன், உத்தரகன்னடா மற்றும் மத்திய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும்
காணப்படுகின்றன.
மறைந்து வரும் சதுப்பு நிலப் பகுதிகள்
இதுவும் பனை, தென்னை போல கிளைகள் இல்லாமல் வளரும். அதிகப்படியாக 2 முதல் 4 மீட்டர் உயரமும் 12 முதல் 13 செ.மீ குறுக்களவுமாக வளரும் அழகு
மரங்கள்.
கூடுதலான நிழல்தன்மை,
சேறும் சகதியமான சதுப்பு நிலம் மற்றும்
அதிகப்படியான ஈரத்தன்மையும் உடைய ஒடைக் கரைகளை ‘மிரிஸ்டிகா ஸ்வேம்ப்ஸ்’(MYRISTICA SWAMPS) என்று சொல்லுகிறார்கள்.
இது போன்ற சதுப்பு நிலப் பகுதிகள் வெகுவாகக் குறைந்து வருவதால் நீலகிரி
பெரணி மரங்கள் முமுவதுமாக அருகி மறைந்துவிடும் என தாவரவியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.
மாநில அரசுகள் இதுபோன்ற அழகிய தாவரவகைகள் அழிந்தும் மறைந்தும்
போகாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவப் பண்புகள்
இது ஒட்டுண்ணி
எதிர்ப்பி, மிகையான கொலஸ்ட்ரால் எதிர்ப்பியாக, சக்கரை நோய் எதிர்ப்பியாக, புரோட்டேசோவா
எதிர்ப்பியாக, ரத்த சக்கரை குறைப்பியாகவும், செயல்படும் மருத்துவப் பண்புகளைச்
கொண்டுள்ளது, இந்த நீலகிரி பெரணி மரம்.
இமயமலைப் பகுதி பெரணி மரங்கள்
சிக்கிம் இமாலயன் பகுதிகளில் முக்கியமான சில பெரணி மரங்கள் உள்ளன. அந்த பெரணி மரங்களின் தாவரவியல் பெயர்களைப் பார்க்கலாம்.
சயாத்தியா புரூனோனியானா (CYATHEA
BRUNONIANA)
சயாத்தியா கைனென்சிஸ் (CYATHEA
CHINENSIS)
சயாத்தியா ஸ்பைனுலோசா (CYATHEA SPINULOSA)
சயாத்தியா ஜைஜாண்டியா (CYATHEA GIGANTEA)
இந்த பெரணிமரங்களின் நாற்றுக்கள் எல்லாம். சாலை ஒரங்களில் அழகு மரங்களாக (AVENUE
TREES) நடவும் கால்நடைகளுக்கு தீவனமாக (FODDER
FOR CATTLE) போடவும் பெருமளவு அழித்துவிட்டார்கள்.
இந்த பெரணி மரங்கள். மிகவும்
பழமையான சரித்திரப் பின்புலம் உடையவை என்று சொல்லுகிறார்கள். இவற்றை உயிருடன் உள்ள புதை படிம மரங்கள் (LIVING FOSSILS) என்கிறார்கள். இவை
இப்போதுள்ள உயர்வகை தாவரங்கள் மற்றும்
மனிதர்களை விட பழமையானவை.
“ஜுராசிக்” காலத்து
மரங்கள்
டைனோசரஸ்கள் வாழுந்த “ஜுராசிக்” காலத்தைச் சேர்ந்தவை. இந்த பெரணி மரங்கள் மனித இனத்திற்கும் மூத்த குடி என்று சொல்லலாம். டைனோசரஸ் குட்டிகள்
சுற்றிவந்து விளையாடிய மரங்கள் இந்த பெரணி மரங்கள் என்று சொல்லுகிறார்கள் பேராசிரிய
பெருமக்கள்.
இந்தியாவின் பெரணி மரங்கள்
இந்தியா மொத்தம் 13 வகையான பெரணி பேரினங்களைக் (SPECIES) கொண்டது. அவற்றின் 12 பேரினங்கள் சையாத்தியா பேரினத்தைச் சேர்ந்தவை. இன்னொன்று டிக்சோனியேசி (DICSONIACEAE) என்ற
தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
இவற்றில் பெரும்பாலானவை, வடகிழக்கு இந்தியா, கிழக்கு இமாலயன் பகுதி, மத்திய இந்தியா, தென்னிந்தியப்
பகுதிகள், மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், இவற்றில் சையாத்தியா ஸ்பைனுலோசா (CYATHEA SPINULOSA) என்ற பெரணி மரவகை மட்டும் உத்ரகாண்ட் மாநிலத்தின் இமாலயப்
பகுதியைச் சேர்ந்தது.
அந்தமான் நிகோபார் தீவுகளின் பெரணி
இந்த பெரணி மரங்களில் சையாத்தியா அல்போசிடேசியா, சையாத்தியா
நிகோபாரிகா (CYATHEA ALFOSIDAEAE,
CYATHIA NICOBARICA) ஆகிய இரண்டு பெரணி மரங்களும்
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின், மறைந்து வரும் மரவகைகளாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மருத்துவத்தில் பெரணி
மிகவும் பழமையான காலத்திலிருந்து, இந்தியாவில் இந்த பெரணி மரங்களை
பயன்படுத்தி வந்துள்ளார்கள். குறிப்பாக
பாரம்பரிய மருத்துவ முறைகளில் பல்வேறு நோய்களையும்,
உடல் உபாதைகளையும்> உடலில் ஏற்படும்
காயங்கள் மற்றும் புண்களை குணப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உணவாக உபயோகமாகும்
மிளகு சாகுபடி நிலங்களில் நிழல் தருவதற்கும் கொடிகளை
ஏற்றுவதற்கும். பூக்கள் சாகுபடியிலும்
இந்த மரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
மாவுப் பொருள் நிறைந்த பெரணி மரத்தின் மையப்பகுதி
உணவாக உபயோகமாகிறது. அதிலிருந்து அற்புதமான மதுவகை ஒன்றையும், கூந்தல் தைலமும் தயாரிக்கிறார்கள்.
மரத்தின் தண்டுப்பகுதியினை சிறுசிறு துண்டுகளாக நறுக்கியும், அவித்தும், அரைத்து
மாவாக்கியும், கோதுமை, ஒட்ஸ், பார்லி போன்ற தானியமாவுடன் சேர்த்து ரொட்டிகளும் தயாரிக்கிறார்கள்.
சிக்கிமில்
பெரணி மரங்கள்
பெரணி மரங்களின் தளிர் இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்துகிறார்கள்.
சமீபகாலமாக பெரணி மரங்கள், தோட்டங்கள், பூங்காக்கள், சாலை ஒரங்கள், மற்றும் பொது
இடங்களில் நிழல் தரும் மரங்களாகவும், அழகு மரங்களாகவும்
பயன்படுத்துகிறார்கள்.
உலகம் முழுவதுமே பெரணி மரங்கள், மிகுதியான உபயோகத்தால் பல இடங்களில்
அழிந்துவரும் இனமாக மாறிவருகிறது. ஆனால்
அந்த நிலை சிக்கிமில் வராது என்கிறார்கள் தாவரவியல் அறிஞர்கள்.
காரணம், அங்கு இயற்கையாக உள்ள காடுகளின் பரப்பு அதிகம். இங்கு பெரும்பாலான பெரணி மரங்கள், 500 லிருந்து 2300 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில், அதுவும் ஏலக்காய் சாகுபடி பகுதிகளில்
இந்த மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன.
FOR
FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG/CYATHEA
CRINITA (HOOK) SPECIES
WWW.INATURALIST.ORG/ CYATHEA GIGANITA
WWW.INDIANBIODIVERSITY.ORG/CYATHEA CRINITA
WWW.MINDAT.ORG/
CYATHEA CRINITA MINDAT.ORG
WWW.RESEARCHGATE.NET/SIKKIM HIMALAYAN TREE FERNS.
WWW.THREATENEDTAXA.ORG/
A THREATENED TREE FERN FROM CENTRAL WESTERN GHATS
A
REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment