பனிவாகை கை வைத்திய மரம் |
பனிவாகை எனும் பன்றிவாகை மரம் ஒரு இந்திய மற்றும் ஆசிய நாடுகளின் மரம்,
ரோஸ்வுட் எனும் தோதகத்தி குடும்பத்தைச் சேர்ந்தது, இது மரக்கட்டைகள் மற்றும் மரப்பட்டைகளுக்கானது,
படகுகள்,. தோணிகள்
செய்ய உதவும், ஆண்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்தது,
பரம்பரிய மருத்துவ முறைகளுக்கு உதவும்,
பல்வேறு விதமான நோய்க்கிருமிகளை, தடுக்கும்
தாவர ரசாயனங்களை தன்னிடத்தே கொண்ட மரம், மியாவாக்கி அடர்வனம் உருவாக்குபவர்களுக்கு உதவும் மரம்.
தமிழ்ப்
பெயர்கள்
அரிவாகை,
வெள்ளுரவை, பனிவாகை, பன்றிவாகை (ARIVAGAI,
VELLURAVAI, PANIVAGAI, PANRIVAGAI)
பொதுப்பெயர்கள்:
பனிவாகை (PANIVAGAI)
தாவரவியல்
பெயா்: டால்பெர்ஐியா பேனிகுலேட்டா
(DALBERGIA
PANICULATA)
தாவரக்
குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)
தாயகம்:
இந்தியா
பிறமொழிப்
பெயர்கள்
இந்தி: தக்கோலி (THAKOLI)
தெலுங்கு:
நாகுல பச்சாரி (NAGULA PACHARI)
அசாமிஸ்:
மேடா லுவா (MEDA LUWA)
மலையாளம்:
மன்னாவிட்டி (MANNAVITI)
மராத்தி:
டேண்டஸ் (DANDUS)
ஒரியா:
டோடிலோ (DODILO)
ராஐஸ்தானி:
பர்பாட்டி (PARBATI)
உருது:
டேண்டஸ் (DANDUS)
இந்திய
மரம்
இந்தியாவை
சொந்த மண்ணாகக் கொண்ட மரம், பூடான், நேப்பாளம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்ளாதேஷ், மியான்மர், தாய்லாந்து,
கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய ஆசிய நாடுகளிலும்
பரவியுள்ளது.
தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் இந்த மரங்கள் பரவியுள்ளன, ஆந்திரப்பிரதேசத்தில் விசாகப்பட்டினம், சித்தூர், மாவட்டங்களிலும், மற்றும் கர்நாடக மாநிலத்தில் உத்தரகன்னடா பகுதிகளிலும் பரவியுள்ளது.
இலை
உதிர்க்கும் உயரமான மரம்.
இலைகளோடும், பூக்களோடும் இருக்கும்போது அழகாக இருக்கும். 15 முதல் 30 மீட்டர்
உயரம் வளரும். பனிவாகை மரம் இதன்
மரக்கட்டைகள் மற்றும் மரப்பட்டைகளுக்கானது.
சுமாரான
கடினமான மரம்
இதன்
கட்டைகள் வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
வயிரப்பகுதி மரம் சுமாரான அளவு உறுதியாக இருக்கும். மரக் கட்டைகளை பலவிதமான மரச்சாமான்கள் செய்யவும் மற்றும் இதர வகைகளிலும் பயனாகிறது.
படகுகள் தோணிகள் செய்யலாம்
இந்த
மரங்களில், படகுகள் செய்வதற்கான பட்டைகள் தரும். தோணிகள் செய்யலாம்.
உத்திரங்கள் செய்யlலாம். மரத்தூண்கள்
செய்யலாம். கருவிகளுக்கான கைப்பிடிகள்
செய்யலாம். பொருட்களை பாதுகாப்பாக வைத்து வெளி இடங்களுக்கு அனுப்ப பெட்டிகள் செய்யலாம்.
இயற்கை மருத்துவம்
சமீபகாலமாக
செயற்கை மருந்துகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எல்லாம்
இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளன.
எல்லாம் ஆர்கானிக்
விளம்பரங்கள்
எல்லாம் இயற்கைப் பொருட்களை தூக்கிப் பிடிக்கின்றன. ‘ஆர்கானிக்’ என்ற
வார்த்தை அடிக்கடி வருமாறு பார்த்துக் கொள்ளுகிறார்கள். மருந்து தயாரிப்பாளர்கள் மூலிகைகளைக் தேடத்
தொடங்கி உள்ளனர். இந்த வகையில் பல்வேறு
ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. ஆக்கப்பூர்வமான முயற்சி இது.
தாவர
ரசாயனப் பொருட்கள்
செடிகள்,
கொடிகள், மற்றம் மரங்களின் இலைகள். பட்டைகள், பூக்கள்,
மரம், பிசின், வேர்கள் ஆகியவற்றில் என்னென்ன தாவரவகை ரசாயனங்கள் (PHYTO CHEMICALS) உள்ளன என்ற ஆராய்ச்சிகள் துரிதகதியில் நடந்து கொண்டிருக்கின்றன.
தாவரங்களில் இயற்கையாக அடங்கியிருக்கும் ரசாயனப் பொருட்களைத்தான் பைட்டோ கெமிக்கல்ஸ்
(PHYTO CHEMICALS) என்று சொல்லுகிறோம்.
நோய்க்கிருமிகளை
கட்டுப்படுத்தும்
உதாரணமாக
பனிவாகை மரத்தின்
பல்வேறு பகுதிகள் சோதித்துப் பார்க்கப்பட்டன.
அதில் டானின்கள், சப்போனின்கள், டெர்பினாய்டுகள்,
ஸ்டீராய்டுகள், கவ்மாரின்கள், ஆந்த்ரோகுய்னோன்கள் (TANNINS,
SAPONINS, TERPENOIDS, STEROIDS, COUMARINS & ANTHROQUINONES) ஆகிய
தாவர ரசாயனங்கள் உள்ளன என
கண்டுபிடித்துள்ளார்கள். பல்வேறு விதமான
நோய்க்கிருமிகளை, இந்த தாவர ரசாயனங்கள் கட்டுப்படுத்தும் சத்தி படைத்தவை என ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஆண்டி ஆக்சிடெண்டுகள்
பொதுவாக ‘டால்பெர்ஜியா’
இனத்தைச் சேர்ந்த தாவரங்களில் பிளாவனாய்டுகள் அத்தோடு தொடர்புடைய
ரசாயனங்கள் கூடுதலாக இருக்கும், என்று எற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக
பிளாவனாய்டுகள் ஆன்டி ஆக்ஸிடெண்ட்டுகளைத் தூண்டவும், நுண்ணியிர்களைக் கட்டுப்படுத்தும் பண்புகளையும் கொண்டது.
மியாவாக்கி அடர் நடவு முறை
இது போன்ற பிரபலமில்லாத அதே சமயம் பயனுள்ள மரங்கள் அருகிப்போகாமல் அழிந்து போகாமல் இருக்க மியாவாக்கி சிறுவனம் அமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.
‘மியாவாக்கி’
முறையில் 30 மரங்கள் நடுவதற்கு, ஆறு சதுர மீட்டர் இடம் போதுமானது. மியாவாக்கி முறையில் நடுவது என்றால் மிகுதியான அடர் நடவு முறை (HIGH
DENSE PLANTING) என்று அர்த்தம். அதாவது ஒரு சதுர மீட்டரில் மூன்று முதல் ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும். இதுதான் மிகுதியான அடர் நடவு முறை.
உலகம் முழுக்க செயற்கையாக காடுகள் உருவாக்குவது என்றால் ஒரு ஏக்கரில் 400 மரங்கள் நட வேண்டும். ஒரு ஏக்கர் என்பது 4000 சதுரமீட்டர்.
இந்த கணக்குப்படி ஒரு மரம் நட 10 சதுர மீட்டர் இடம் வேண்டும்.
மியாவாக்கி முறையில் 10 சதுரமீட்டர் நிலப்பரப்பில்
30 முதல் 50 மரக்கன்றுகளை நடவு செய்யலாம். அதாவது இந்த முறையில் 30 சதம் அதிக மரங்களை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உருவாக்கலாம். பத்து சதவிகிதம் விரைவாக காடுகளை உருவாக்க முடியும்.
விதை
நேர்த்தி செய்ய வேண்டும்
பனிவாகையின்
விதைகள் கடினமான விதையுறை கொண்டவை.
விதைகளின் மேலுறையை மிருதுவாக்கி பின்னர் விதைத்தால் நன்றாக
முளைக்கும். இதற்கு விதைகளை தரையில்
போட்டு நன்கு உரசி பின்னர் விதைக்க வேண்டும்.
விதைகளை
தண்ணீரில் போட்டு, 12 முதல் 24 மணி நேரம் ஊறவைத்தும் விதைக்கலாம்.
இதனால் விதைகள் நன்றாக முளைக்கும்.
இளஞ்செடிகளுக்கு லேசான நிழல் இருப்பது நல்லது. வளர்ந்த மரங்களுக்கு முழுமையான சூரிய வெளிச்சம்
தேவை.
FOR FURTHER READING
WWW.FLORA-PENINSULA-INDICA.CES.LISC.AC.IN
/ DALBERGIA PANICULATA
WWW.INDIABIODIVERSITY.ORG /
DALBERGIA PANICULATA
WWW.TA.M.WICTIONARY.ORG / DALBERGIA PANICULATA
WWW.GLOSBE.COM DALBERGIA PANICULATA IN TAMIL
WWW.TROPICAL.THEFERNS.INFO – “DALBERSIA LANCEOLARIA”
WWW.RESEARCHGATE.NET – “DALBERGIA PANICULATA”
A REQUEST
I LOVE TO SEE
YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment