பாரம்பரிய மருத்துவ மரம் கள் குருவி |
கள்குருவி மரம்> இந்திய
மரம்,
தமிழ் நாட்டிலும், மகாராஷ்ட்டிராவிலும் பரவலாக
பரவியிருக்கும் மரம், கண்ணைப்பறிக்கும் வண்ணக்கலவையான இதன் பூக்கள்
இதற்கு வாங்கித் தந்த பெயர் மிக்கி மவுஸ் மரம், இதன் இலைகள், பட்டைகள், வேர்கள், வேர்ப்பட்டைகள் அத்தனையும்
பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு உதவியாக இருக்கும் மரம்.
தாவரவியல் பெயர்:
ஆச்னா அப்டுசாட்டா (OCHNA
OPTUSATA)
தாவரக் குடும்பம்
பெயர்: ஆச்னேசியே (OCHNACEAE)
தாயகம்: இந்தியா
பொதுப் பெயர்கள்: ராம்தான் சம்ப்பா,
கள்குருவி மரத்தின்
பிறமொழிப் பெயர்கள்
தமிழ்: கள்குருவி> சிலந்தி (KALKURUVI, SILANTHI)
கன்னடா: கனக சம்பகா (KANAKA CHAMPAKA)
தெலுங்கு: சுனாரி, தம்மி> எர்ர ஜுவ்வி, குக்கமோவி (SUNARI,
THAMMI, ERRA JUVVI, KUKKAMOVI)
இந்தி: ராம்தான் சம்பா (RAMDHAN CHAMPA)
இந்தியாவின் கிழக்கு
மாநிலங்களுக்கு சொந்தமான மரம்.
சிறுமரவகையைச் சேர்ந்தது. இலைகள்
பளபளப்பான பசுமை நிறத்தில் இருக்கும்.
டிஸ்னியின்
மிக்கி மவுஸ்
பூக்கள்
கவர்ச்சிகரமான மஞ்சள் வண்ணத்தில் பூக்கும்.
விதைகள் பளிச்சென்ற சிவப்பு நிற இதழ்களால் மூடப்பட்டு
இருக்கும். இந்த விதை விதைக்கிண்னத்துடன்
சேர்த்துப் பார்க்க டிஸ்னியின் மிக்கி மவுஸ் போல இருக்கும்.
அதனால் இதற்கு ஆங்கிலத்தில் ‘மிக்கி மவுஸ் பிளாண்ட்’ என்ற சிறப்புப்
பெயரும் உண்டு. விதைகள் மற்றும் முதிர்ந்த மரங்களில் எடு;க்கும் கிளைகளை
வெட்டி நடுவதன் மூலம் புதிய மரங்களை உருவாக்கலாம்.
வாசமுள்ள
பூக்கள்
பூக்கள், பக்கவாட்டுக் கிளைகளில் பூங்கொத்துக்களாகப்
பூக்கும். மஞ்சள் நிறப் பூங் கொத்தக்கள், 2.5 செ.மீ நீளமான காம்புகளில்
தொங்கும். ஒரு விதைப் பழங்களாக
உருவாகும். பூக்கள் வாசமுடையவை, அழகானவை. பார்க்க பரவச
மூட்டும்.
மேற்குத்
தொடர்ச்சி மலைப்பகுதி
இந்தியாவில்
குறிப்பாக அஸ்ஸாம் மற்றும் ஒரிசா ஆகிய மாநிலங்களில்
இந்த மரங்கள் பரவியுள்ளன.
மேற்குத் தொடர்ச்சி
மலைப்பகுதியில் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளிலும், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், சஹ்யாத்ரி (SAHYATHRI) பகுதிகளிலும் கூட இந்த மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
ஐலதோஷம் தும்மல் இருமல்>
ஐலதோஷம், தும்மல், இருமல், காய்ச்சல், மூச்சு விடுதலில் சிரமப்படுதல்> ஆகிய சுவாசம் தொடர்பான நோய்களை குணப்படுத்தும்.
வயிற்று உப்பிசம், ஏப்பம், வாந்தி, செரியாமை, பேசும் போது வாயிலிருந்து துர்;நாற்றம் வீசுதல் போன்றவை குறித்த நோய்களைச்
சரிசெய்யும்.
மிகையான
உதிரப்போக்கு
பொதுப் பலவீனம், கால்வலி, வாந்தி, படபடப்பு, தசைப்பிடிப்பு, உடல் எடை கூடுதல், ரத்தத்தில் உரைக் கட்டிகள் தென்படுதல், இடுப்புவலி, மிகையான உதிரப்போக்கு, போன்ற மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும்.
அகோரப்பசி, அடித்துபோட்டது மாதிரி உடல் அசதி, பொதுவான பலவீனம்>,தெளிவில்லாத
கண்பார்வை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கைகால்களில் உணர்வின்மை, ரத்தத்தில் மிதமிஞ்சிய சக்கரை, படபடப்பு ஆகிய அறிகுறிகளை உடைய சக்கரை நோயைக்
குணப்படுத்தும்.
அத்துடன் உடல்வலி, காலரா, உடல்சூடு, காய்ச்சல், வீக்கம், தலைவலி,தசைப்பிடிப்பு, >கைகால்களை அசைக்க
முடியாமை போன்றவற்றையும் சரி செய்யும் மருத்துவ குணங்களைக் கொண்டது.
இந்த மரங்கள் அதிகம்
உள்ள இடங்களில் காலம் காலமாக இதன் இலைகள், பட்டைகள், வேர்கள், வேர்ப்பட்டைகள்
ஆகியவற்றை மருத்தாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் பட்டைச்சாற்றினக் கொடுத்து, வயிற்றுக் கடுப்பினை குணப்படுத்துகிறார்கள். மரப்பட்டைகளைக் கூழாக்கி பூசுவதால் கட்டிகளுக்கு சிகிச்சை
அளிக்கிறார்கள்.
செரிமானத்திற்குக்
தரும் மருந்தாக, துவர்ப்பியாக, உடல் உரமூட்டும் ‘டானிக்’காக, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, மாதவிடாய் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இதன் வேர்கள். மற்றும் பட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
மாதவிடாய் சமயத்தில்
ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க இதன் வேர்களிலிருந்து
எடுக்கும் சாற்றினைத் தருகிறார்கள்.
இந்தியாவில், உத்தாப்பிரதேசம், பிஹார், ஒரிசா, வெஸ்ட் பெங்கால், அசாம். திரிபுரா, மத்தியப்பரதேசம், மஹாராஷ்ட்ரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா,,தமிழ்நாடு, கேரளா, போன்ற இடங்களில் இந்த மரங்கள் பரப்பியுள்ளன.
இந்தியா உட்பட
நேப்பளம், ஸ்ரீலங்கா, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலும்
இந்த மரங்கள் உள்ளன.
பல மாநிலங்களிலும் இந்த மரங்களை
தோட்டங்களில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஒரு
காலத்தில் இந்த மரம் பிரபலமாக இருத்திருக்க வேண்டும். அதனால்தான் இதற்கு 28 தமிழ்ப் பெயர்களை
பட்டியலிட்டுள்ளார்கள்.
இதற்கு சிலந்தி என்ற
பெயரும் இதற்கு உண்டு. இந்தச் சிலந்தி
மரம் திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோவிலின் தலவிருட்சம். காவிரியின் தென்கரையில் உள்ளவற்றில் 78 வது சிவத்தலம்
இது.
இக் கோவிலில் உள்ள
இறைவன் திருப்பயற்றுநாதர். இறைவி
காவியங்கண்ணி. ஜலரவ மகரிஷி வழிபட்ட
திருத்தலம் இது. தேவாரப்பாடல் பெற்ற தலம்
இது.
பங்ளாதேஷில் இதனை ‘மிக்கிமவுஸ்’ பூக்கள் என்றே
அழைக்கிறார்கள். அங்கு இது மூலிகை மரமாகவும்
பிரபலம்.
இதன் வேர்களை ‘சான்டல்ஸ்’ என்னும் பழங்குடி
மக்கள்> பாம்புகடிக்கு மருந்தாகப்
பயன்படுத்துகிறார்கள்.
வீட்டுக்கொரு
கள்குருவி மரம் இருந்தால் போதும் நாளுக்கொரு டாக்டர் தேடி நகரங்களில் அலைய வேண்டாம்
என்கிறார்கள் விஷயம் தெரிந்த பழங்குடி மக்கள்.
FOR
FURTHER READING
WWW.FLOWERS OF INDIA.NET –
“RAMDHAN CHAMPA”
WWW.INDIAN BIODIVERSITY.ORG
–“OCHNA OBTUSATA’
WWW.HERBPATHY.COM
–“OCHNA OBTUSATA’ HERB USES, BENEFITS, CURES, SIDE EFFECTS NUTRIENTSE
REPERTORY.
WWW.PICHANDIKULAM –
HERBANUM.ORG – OCHNA OPTUSATA –(HUMAN USES/ MEDICINAL)
I
LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS
ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A
COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE
WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL
BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment