நபிகள் நாயகம் பல்துலக்கிய மரம் உகா |
உகா மரம் என்றும்
பல்குச்சி மரம் ஒரு மூலிகை மரமும் கூட, இந்தியா மட்டுமின்றி, ஆப்ரிக்கா, சவூதி அராபியா உட்பட ஒரு டஜனுக்கு மேற்பட்ட நாடுகளை சொந்தமாகக்
கொண்டது,
முகம்மது நபி அவர்கள்
விரும்பிப் பல் துலக்கியது என்பதால் இது சர்வதேச பல்குச்சி மரம். சங்ககாலம் தொட்டு தமிழ்
நாட்டில் பேசப்பட்ட மரம். பாலுணர்வுத் தூண்டி மரம். சிறுநீரகத்தில்
ஏற்படும் கோளாறுகள்> கீல்வாதம் அல்லது
முடக்குவாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் மூலிகை மரம்.
பொதுப்பெயர்: சால்ட் புஷ்
ட்ரீ, டூத் பிரஷ்; ட்ரீ, மஸ்டர்ட் ட்ரீ (SALT
BUSH TREE, TOOTH BRUSH TREE, MUSTARD TREE)
தாவரவியல் பெயர்:
சால்வடோரா இண்டிகா (SALVADORA
PERSICA)
தாவரக்குடும்பம்
பெயர்: சால்வடோரேசியே (SALVADORACEAE)
தாயகம்: இந்தியா
உகா மரத்தின் பல
மொழிப் பெயர்கள்
தமிழ்: உகா, கோட்டுமாவலி, சிட்டுவா, பெருவிளா (UKA,
KOTTUMAVALI, CITTUVA, PERUVILA)
சமஸ்கிருதம்: பிலு ( PILU)
இந்தி: பிலு, ஜாக் (PILU,JHAK)
பெங்காலி: பிலு (PILU)
மலையாளம்: உகா (UKA)
மராத்தி: கக்கான், பிலு (KHAKAN, PILU)
தெலுங்கு: கோகு, வரகோகு, குனியால (GOGU, VARAGOGU, GUNIA)
கன்னடா: கோனிமரா (GUNIMARA)
இந்திய
மரமும் கூட
தாயகம்: இந்தியா
மட்டுமின்றி, ஆப்ரிக்கா, சவூதிஅராபியா, ஈரான், இஸ்ரேல்,ஜோர்டான்,கென்யா, ஸ்ரீலங்கா, சூடான், எகிப்து, சிலோன், பாக்கிஸ்தான், அல்ஜீரியா, அங்கோலா,,தான்சானியா, உகாண்டா, ஏமன், சோமாலியா, ரிபப்ளிக் ஆப்
சாம்பியா,மற்றும் ஐpம்பாப்வே.
நபி நாயகம்
விரும்பிய டூத் பிரஷ்
முகம்மது நபி அவர்கள்
உகா மரத்தின் குச்சிகளில்தான் விரும்பிப் பல் துலக்குவார்கள். உலகம் முழுக்க இதனைத் தெரிந்து வைத்துள்ள முஸ்லிம் பெரியவர்கள்> இன்னும்கூட உகா மரத்தின்
குச்சிகளில் பல்விளக்குபவர்கள் உண்டு என்கிறார்கள். அதனால் இதனை
ஆங்கிலத்தில் ‘டூத் பிரவு; ட்ரீ’ என்றும்
அழைக்கிறார்கள்.
சங்க
இலக்கியம் பாடிய மரம்
சங்ககாலம் தொட்டு தமிழ்
நாட்டில் பேசப்பட்ட மரம் இது. சங்க இலக்கியங்களில்
இது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
உகாய் மரத்தின்
விதைகள் காரமானவை என்பது ஊரறிந்த செய்தியாய்
இருந்தது. இதன் காய்கள் வெடித்து விதைகளை சிதறவிடும். இதன் விதைகள் நெல் மணிகளைப் போல மிகவும் சிறியவை.
இது நற்றிணைப்
பாட்டு
ஆனால் மிளகைப்போல
காரமானவை> பறவைகள் இந்த காரத்தையும் மீறி சாப்பிடும், பின்னர் காரம் தாங்காமல்
அவதிப்படும். அதுபற்றி இனிசந்த நாகனார் என்னும் புலவர் ‘நற்றிணை’ என்னும் நூலில் அருமையான
ஒரு பாடலை எழுதி உள்ளார். அந்தப் பாடலின்
பொருளை கீழே படியுங்கள்:
தவறு
என அறிந்தும், புறா உகாய் விதையைத் தின்று
வருந்தியதுபோல, தவறு என்று அறிந்தும் தன்னை விரும்பும் தலைவனைத் தேடி
கூடிச் சென்றுவிட்டாளெ தன் மகள் என அவளின் தாய் வருந்துவதாக அமைந்தது இந்த நற்றிணையின் பாடல்.
‘மிளகு பெய்தனைய சுவைய புன்
காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி,
புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,
நயந்த காதலர் புணர்ந்தனள் ஆயினும்….
-
இனிசந்த நாகனார்.
உகாய்
பெயரில் ஒரு புலவர்
சங்க காலத்தில் உகாய்
மரத்தின் பெயரில் ஒரு ஊர் இருந்தது. அதன் பெயர் உகாய்குடி. அந்த ஊரில் ‘உகாய்குடி கிழார்’ என்னும் புலவர்
ஒருவர் இருந்தார்: அவர் ‘குறுந்தொகை’ என்றும் சங்க இலக்கிய
நூலில் 63 வது பாடலை அவர்
எழுதி உள்ளார்.
மெஷ்வாக்
தார்பாலைவன மரம்
மேற்கு
இந்தியாவிலிருந்து ஆப்ரிக்கா வரை பரவி இருக்கும் குறுமரம். தார்பாலை வனத்துக்குரிய ஒரு முக்கியமான மரம். லத்தீன் மொழியில் இதன் பெயர் மெஷ்;வாக் மரம் (MESHWAK TREE).
இந்த
குச்சியில பல் விளக்குங்க ப்ளீஸ்
‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பது போல உகா மர குச்சிகளும்
பல்விளக்குவதற்காக பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தி
வருகிறார்கள். முகம்மது நபி அவர்களே பல்விளக்க இதன்
குச்சிகளைத்தான் பயன்படுத்தினார் என்பது இந்த மரத்திற்கு பெருமை சேர்க்கும்
செய்தி.
“இந்த குச்சியினால்
பல் விளங்குங்க உங்க பல்லுக்கு எந்த பிரச்சினையும் வராது” என்று வேர்ல்ட்
வெறல்த் ஆர்கனைசேஷன்> உகாய் மரத்திற்கு
சான்றிதழ்; தந்துள்ளது.
உகா மரங்கள்> எப்போதும் பசுமை மாறா மரங்கள். அதிகபட்சமாக 10 மீட்டர் உயரம் வரை
வளரும்: ஒரு அடிக்கும் மேலாக விட்டம் கொண்டதாக அடி மரம் பருக்கும்: கிளைகள் கன்னா
பின்னாவென குறுக்கும் நெடுக்குமாக அதிக எண்ணிக்கையில் வளரும்.
டிசம்பர் மாதம் பின்
பகுதியில் இலைகள் உதிரத் தொடங்கும். ஏப்ரல் மாதம் புதிய
இலைகள் தோன்றும். சிறிய பசுமையான
மஞ்சள் நிற பூக்கள் பூக்கத் தொடங்கும்.
ஃபுளொரைட் + சிலிகா + கால்கியம் = உகாய்
உகா மரம் முக்கியமாக
வாய் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்: உலகப் பிரசித்தி பெற்ற
பல்குச்சி மரம் என்று சக்தி நிறைந்துள்ளது. அதற்கு ஏற்ற
ரசாயனங்கள் இதில் உள்ளன. அவை புளோரைடு, சிலிகா, குளோரைடு, டேனின் போன்றவை போதுமான அளவில் உள்ளன.
விளம்பரங்களில்
அதிகமாக சொல்லப்படும் பல்குழி நோய் (DENTAL
CAVITIES) வராமல் தடுக்கும் அளவு போதுமான
புளோரைடு அதில் உள்ளது. இதில் இருக்கும்
சிலிகா சத்து> பற்களில் இருக்கும் காரை மற்றும் கறைகளைப்
போக்கும் சக்தி கொண்டது. பற்குழி மற்றும்
இதர நோய்களை கடுமையாகக் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது> இதில் இருக்கும் டேனின் சத்து.
பற்களையும்.
ஈறுகளையும் பாதுகாக்கிறது
தொடர்ந்து உகாய்
மரத்தின் குச்சிகளை பயன்படுத்துவதால். அது நமது உடலில்
கால்சியம் மற்றும் குளோரைடுவின் அளவை அதிகப்படுத்துகிறது. இந்த கால்சியம் பற்களில் ஏற்படும் எனாமல் இழப்பை ஈடு செய்கிறது. மற்றும் பற்களையும். ஈறுகளையும் தாக்கும்
அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துகின்றன, இதன் பல்குச்சிகள்.
புற்றுநோய்
போயே போச்
இருமல், ஆஸ்துமா, மூலநோய்கள், புற்றுநோய்க் கட்டிகள், ஸ்கர்வி நோய்
அனைத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி இதன் இலைகளில் உள்ளன: மேலும் எல்வாவகையான விஷங்களுக்கும் விஷ முறிப்பானாக இலைகளைப் பயன்படுத்தலாம்.
இருமல்> ஜலதோவும்> ஆஸ்துமா> போன்றவற்றிற்கான சிகிச்சையாகவும் விட்டமின் ‘சி’ குறைபாட்டிற்கும் இலைச்
சாற்றினைத் தரலாம். இதன் இலைகளை சூடுபடுத்தி ஒத்தடம்
கொடுப்பதன் மூலம் மூட்டுப்பிடிப்பு> மூட்டுவலி
போன்றவற்றைக் குணப்படுத்தலாம்.
முக்கியமான பாலுணர்வுத் தூண்டி
இதன் பழங்களை
சாப்பிடலாம்: இது முக்கியமாக பாலுணர்வுத் தூண்டியாகவும், சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள்> கீல்வாதம் அல்லது
முடக்குவாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.
இதன் விதையிலிருந்து
எண்ணெய் எடுக்கலாம்: இந்த எண்ணெய்> மூட்டுவலி, சக்கரை நோய், மண்ணீரலில் ஏற்படும்
பிரச்சினைகள், வயிற்றுக் கோளாறுகள், ஆகியவற்றை சரி செய்யும்.
மார்பக நோய்கள், வயிற்றுவலி, தலைவலி, முதுகுவலி, பொதுவான உடல்வலி, பெண்களுக்கான வெள்ளைப்படுதல்> போன்றவற்றைக்
குணப்படுத்த இந்த மரத்தின் வேர் மற்றும் வேர்ப்பட்டைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
உங்கள் பற்பசையில் உகா இருக்கா ?
‘உங்கள் பற்பசைகளில்
அது இருக்கா? அது இருக்கா?” என்று கேட்கும் பல பற்பசை கம்பெனிகளும் இந்த
மரத்தின் இலை, பட்டை, வேர் என அனைத்தையும்
பயன்படுத்தி பற்பசை தயாரிக்கிறார்கள். இனி
பற்பசை வாங்கும்போது உகா இருக்கான்னு பாரூங்க !
வணிக ரீதியில்
வளர்க்க எற்ற மரம் இது. வறண்ட, நிலப் பகுதிகள், கடலோர மணற்காடுகள், உப்பு பூத்த மண் கண்டங்கள், தரிசு நிலங்கள், அனைத்திலும் நன்கு வளரும். இதன் இலைதழை கால்நடைகளுக்கு
தீவனமாகும். பழங்கள் உணவாக உட்கொள்ள ஏற்றவை. விதை எண்ணெயை மருந்தாக உபயோகிக்கலாம். சோப்பு தயாரிக்கும்
தொழிற்சாலையில் உபயோகமாகிறது.
கொசுறு
உகா என்பதும்
உவா என்பதும் வேறுவேறு மரங்கள், சங்க இலக்கியத்தில்
பல நூல்களில் ஒமை என்னும் மரம் குறிப்பிடப்படுகிறது. அது யானைகளுக்குப்
பிடித்தமான மரம். உகா
மரம் புறாக்களுக்கு பிடித்தமான மரம்.
FOR FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG / SALVADORA
PERSICA
WWW.POW.SCIENCE.KEW.ORG / SALVADORA
PERSICA L/ PLANTS OF THE WORLD ONLINE
WWW.FLOWERSOFINDIA.NET / TOOTH BRUSH TREE - SALVADORA
PERSICA
WWW.NCBI.NLM.NIH.GOV / SALVADORA
PERSICA
WWW.FEEDIPEDIA.ORG / SALT
BUSH (SALVADORA PERSICA)
I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS
ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE
SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT
WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU
CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D
(AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment