Friday, June 16, 2023

THORN APPLE 25. ஊமத்தை மரம்

 

மருத்துவச்செடி ஊமத்தை

ஊமத்தையின் பூ> இலை> காய்> எதை சாப்பிட்டாலும் புத்தி மாறிவிடும்.  புத்தி பேதலித்து விடும். பைத்தியம் புடிச்சிடும்…” என்று பெரியவர்கள் எச்சரிப்பார்கள்> அமெரிக்கா> மெக்சிகோ> மற்றும் கவுட்டிமாலாவுக்கு சொந்தமான இந்த ஊமத்தை இந்தியச் செடியாகவே மாறிவிட்டது. பல்லாண்டு காலமாக> ஊமத்தை> பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  வேறிநாய்க் கடியினால் ஏற்படும் ரேபிஸ் என்னும் வெறிநோயை கட்டுப்படுத்தலாம். விவண்டுக் கடியின் நச்சத்தன்மையை முறிக்கவும்> இது பயன்படுகிறது. சில வகை ஊமத்தை வகைகள் பாலுணர்வுத் தூண்டியாக பயனாகிறது. ஆயுர்வேதம்> பாரம்பரிய மருத்துவம் மற்றும் நவீன மருத்துவ முறைகளிலிலும் ஊமத்தை பயன்படுகிறது. திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாகவும் உள்ளது இது..

பொதுப் பெயர்கள்: தார்ன் ஆப்பிள்> ஜிம்ம்சன்வீட்> டெவில்ஸ் டிரம்பட்> மூன் பிளவர்ஸ்>டெவில்ஸ் வீட்> ஹெல்ஸ் பெல்ஸ்>    (THORN APPLE, DEVILS’ TRUMPHET, JIMSON WEED, DEVIL’S TRUMPET, MOON FLOWERS, DEVIL’S WEED, HELL’S BELLS).    

தாவரவியல் பெயர்: டேட்டுரா ஸ்ட்ரமோணியம் (DATURA STRAMONIUM)

தாவரக் குடும்பம் பெயர்: சொலானேசி (SOLANACEAE)

தாயகம்: அமெரிக்கா> மெக்சிகோ> கவுட்டிமாலா

பல மொழிப் பெயர்கள்:

தமிழ்: வெள்ளை ஊமத்தை> வெல்லம் மட்டை (VELLAI UMATHTHAI, VELLAM MATTAI)

மலையாளம்: உன்மந்தா (UNMANTHA)

மணிப்புரி: சகோல் ஹிடாக் (SAGOL HIDAK)

சமஸ்கிருதம்: தட்டுரா (DHATURA)

ந்தி: சபேத் டாட்டுரா (SAFED DATURA)

கன்னடா: பிலி உம்மட்டி, உம்பட்டி (BILI UMMATTI, UMBATTI)

ஊமத்தை சொலனேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.  இதில் ஒன்பது வகையான தாவர வகைகள் உள்ளன.

படம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள்    

எல்லோருமே பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது> ம் வரைந்து பாகங்களைக் குறியுங்கள் என்று சொல்லித்தான் ஊமத்தம் பூக்களைத்தான் தருவார்கள்.  பார்த்து படம் வரைய சுலபமாக இருக்கும்.  ஒரு பூவில் அல்லிவட்டம் எது ? புல்லிவட்டம் எது? மகரந்த கேரங்கள் எவை ? சூலகம் எது? மாரந்த சேர்க்கை என்றால் என்ன ? மகரந்தத்தூள் என்பது எது? இதை யெல்லாம் விளாவாரியாக தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது ஊமத்தம் பூக்கள்தான். நானும் அப்படித்தான் தெரிந்துகொண்டேன், ஊமத்தம் பூக்களுக்கு உளமார்ந்த நன்றிகள் !

வெள்ளை ஊமத்தை மற்றும் கரு ஊமத்தை    

கிராமங்களில் அதிகம் கண்ணில் அகப்படுவது வெள்ளை ஊமத்தைதான்.  வெள்ளாவில் வைத்து வெளுத்தது போல பூக்கள் வெளேர் என இருக்கும். இதில் கரு ஊமத்தை என்று ஒரு வகை உண்டு.  அது ரொம்ப விசேஷமானது.  அதை அதிகம் பார்க்க முடியாது.  அதன் தண்டுகள்> இலை நரம்புகள்> எல்லாம் அர்த்தியான கருநீல நிறத்தில் இருக்கும்.  ஆனாலும் அதனை கரு ஊமத்தை என்றுதான் சொல்லுவார்கள்.

ஊமத்தம் பூ> இலை> காய்>தை சாப்பிட்டாலும் புத்தி மாறிவிடும்.  புத்தி பேதலித்து விடும். பைத்தியம் புடிச்சிடும்…” என்று பெரியவர்கள் எச்சரிப்பார்கள். துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பது மாதிரி, ஊமத்தம் செடிகளைப் பார்த்து பயபக்தியுடன் நாங்கள் விலகிப்போன காலம் உண்டு.

படம் வரைந்து பாகங்களைக் குறிக்கத்தான் நாங்கள் முதன் முதலாக ஊமத்தம் பூவை தொட்டுப் பார்த்தோம்.

சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள்

ஒரு காலத்தில் பழங்கள்> காய்கள்> பூக்கள்.  எல்லாம் தான் சிறுவர் சிறுமிகளின் விளையாட்டுப் பொருட்களாக இருந்தன.  ஊதாரணம் நுங்குக் காய் வண்டி> பனை லைக் காற்றாடி> பூ வரசம் பூவின் நாதஸ்வரம்> பூ வரசங்காய் பம்பரம்> கல்யாண முருங்கையின் சூடுகொட்டை> பல்லாங்குழி விளையாட்டுக்கான புளிய முத்துக்கள்> ஈச்சங் கொட்டைகள், இலுப்பைக் கொட்டைகள்  மற்றும் ஆமணக்கு விதைகள்.  இப்படி இந்தப் பட்டியல் நீளும்;.

வீரசாகசத்துக்கு உதவும்  ஊமத்தங்காய்கள் 

ஊமத்தங்காய்களை உயரே தூக்கி எறிந்து விளையாடு வது ஒரு வீ விளையாட்டு.  ஊமத்தங் காய்களின் மேற்புறம் சிறிய முட்கள் இருக்கும்.  அந்தக் காய்களை மேலே எறிந்துவிட்டு உள்ளங் கையின் பின்புறம் வாங்கும் போது> புள்ளிபுள்ளியாக  ரத்தம் துளிர்க்கும். அப்போது பயத்தில் உடல் சிலிர்க்கும். ஆனாலும் வீரம் கொப்பளிக்கும்.

எல்லோரும் அதனை செய்ய மாட்டார்கள்.  கொஞ்சம் வீரமான பையன்கள் மட்டும்தான் இந்த வீர சாகசத்தை செய்து காட்டுவார்கள்.  யாரும் இல்லாத சமயம் நான் கூட ஒரு நாள் ரகசியமாக இந்த வீர விளையாட்டை னியாக நிகழ்த்திப் பார்த்தேன். அதன் மூலம் அப்பாவிடம் உதைபட்டதுதான் மிச்சம்.

குற்றுச் செடியாக வளரும் செடிகள்      

வெண் ஊமத்தைச் செடிகள்> ஆண்டுச் செடியாகவும்> பல்லாண்டுச் செடியாகவும் வளரும்.  இதன் பூக்கள் பெரியதாக> வெண்மை நிற நாதஸ்வரம்> மற்றும் டிரம்பட் போல இருக்கும்> 12 முதல் 19 செ.மீ. நீளமாக இருக்கும். 

இதன் பழங்கள் பச்சை முள்முட்டை போல இருக்கும்.  பழங்களின் மேற்புறம் முட்கள் இருக்கும்.  அதிக பட்சமாக 5 செ.மீ. நீளம் இருக்கும்.  பழங்கள் கனிந்ததும் அவை வெடித்து விதைகளை வெளியேற்றும். 

இதன் பழங்களின் மீது வளைந்த கொக்கி போன்ற முட்கள்> பிராணிகளின் உடல் ரோமத்தில் ஒட்டிக் கொண்டு பல இடங்களுக்கும் பரவும்.

இந்தியச் செடியாக மாறிவிட்ட அமெரிக்க செடி      

அமெரிக்கா> மெக்சிகோ> மற்றும் கவுட்டிமாலாவுக்கு சொந்தமான இந்த ஊமத்தை இந்தியாவில் அறிமுகமாகி ஏறத்தாழ இந்தியச் செடியாகவே மாறிவிட்டது.

பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படும் ஊமத்தை     

பல்லாண்டு காலமாக> ஊமத்தை> பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  வேறிநாய்க் கடியினால் ஏற்படும் ரேபிஸ் என்னும் வெறிநோயை கட்டுப்படுத்தலாம்.

விவண்டுக் கடி

விவண்டுக் கடியினால் உடலில் சேரும் நச்சத்தன்மையை முறிக்கவும்> இது பயன்பட்டு வருகிறது.  இதன் விதைகள் மற்றும் அனைத்து தாவரப் பகுதிகளிலும் இந்த சக்தி அபரிதமாக உள்ளது.  முள்ளை முள்ளால் எடுப்பது போல விஷத்தை வித்தால் முறிக்கும் முறை இது.  ஆனால் இது ஒவர் டோஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  அப்படி அதிகமானால்  நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ல்லாவிதமான ஊமத்தை வகைகளும் மிகவும் நச்சுத்தன்மை உடையவை.  சிpல வகை ஊமத்தை வகைகள் பாலுணர்வுத் தூண்டியாகவும் பயனாகிறது.  ஊமத்தைச் செடிகளின் விதைகள் மற்றும் பூக்கள் மிகவும் நச்சுத்தன்மையுடையவை.   

ஆயுர்வேதம்> மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் மட்டுமின்றி நவீன மருத்துவ முறைகளிலிலும் ஊமத்தை பயன்படுகிறது.

இமையமலை ஊமத்தை      

இந்தியாவில் இமையமலைப் பகுதியில் இது அதிகம் பரவியுள்ளது.  தற்போது ஊமத்தை உலகம் முழுவதும் காணப்படுகின்றன.  மெரிக்காவில் பாலைவனப் பகுதிகளில் இவை வளர்ந்துள்ளன.

திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரம்      

சீனாவை சொந்த ஊராகக் கொண்டது கரு ஊமத்தை.  சீனாவின் முக்கியமான 50 மூலிகைகளில் ஒன்று. இந்த கரு ஊமத்தை.  வெள்ளை ஊமத்தைப் போலவே இதுவும் காட்டுச் செடியாக வளர்ந்திருக்கும்.  இதன் தாவரவியல் பெயர் டேட்டுரா மெட்டல் (DATURA METEL).

திருமணஞ்சேரி திருத்தலத்தின் தலமரமாக உள்ளது ஊமத்தைச் செடி.  திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில் அப்பர் மற்றும் திருஞான சம்மந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம்.  இந்தக் தலம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.

TO READ FURTHER

WWW.FLOWERSOFINDIA.NET / DATURA STRAMONIUM

WWW.EN.WIKIPEDIA.ORG / “DATURA MATEL”

WWW.EN.WIKIPEDIA.ORG / DATURA STRAMONIUM”

WWW.EASYAYURVEDA.COM /”DATURA METEL”

WWW.EUL.ORG /COMMON THORN APPLE.

WWW.INDIANBIODIVERSITY.ORG - DATURA STRAMONIUM

PLEASE POST YOUR COMMENTS, REARDS- GNANASURIA BAHAVAN D (AUTHOR)

999999999999999999999999999999999999

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...