இசைக்கருவி செய்ய தோதான மரம் தோதகத்தி |
தோதகத்தி
மரத்தில் நகைப்பெட்டிகள், கட்டில்கள், இசைக்கருவிகள்,
போன்ற விலை மதிப்புமிக்க மரச்சாமான்கள் செய்ய, மேஜை ,
நாற்காலி, பீரோ, செய்ய, கட்டிட கட்டுமானப்பொருட்கள்
செய்ய, ரயில் பெட்டிகள், ஒட்டுப்பலகைகள்,
வேளாண்கருவிகள், செய்ய, காகிதம்
செய்ய மரக்குழம்பு தயார் செய்ய மரக்கட்டைகள்
தரும், அற்புதமான நறுமணம் மிக்க இதன்
எண்ணை புதிய திசுக்களை வளர்க்க உதவும், பழைய திசுக்களை புதுப்பிக்கும்,.
தோலின் மீது ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை சரி செய்யும்,
அக்கி எனும் தோலின் மீது ஏற்படும் நோயை குணப்படுத்தும், தோலின் மீதுள்ள வறட்சியை நீக்கி ஈரப்பசையுடன் கூடிய பளபளப்பான சருமத்தை பராமரிக்கும். இதன் பொதுப்பெயர் இண்டியன் ரோஸ் வுட்(INDIAN ROSE WOOD), தாவரவியல் பெயர் டால்பெர்ஜியா லேட்டிஃபோலியா (DALBERGIA LATIFOLIA).
தோதகத்தி ஓர் உறுதியான மரம்
உளி, இழைப்புளி, ரம்பம் பொன்றவை மர வேலை செய்ய பயன்படுத்தம் கருவிகள். இந்தக் கருவிகளை தோதகத்தி மரத்தில் பயன்படுத்தும் போது பயபக்தியுடன் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் இந்தக் கருவிகள் முனை மழுங்கலாம். இல்லை உடையலாம். அவ்வளவு உறுதியான மரம் தோதகத்தி.
அரண்மனைகளை அலங்கரித்த மரம்
சாதாரண
மனிதர்கள் எல்லாம் தோதகத்தி மரம் கொண்டு வீடு கட்டுவது சாதாரண சமாச்சாரம் இல்லை.
காரணம் தோதகத்தி ஒரு மாண்பு மிகு மரம். ஒரு காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகளில் கதவு
ஜன்னல் என்று வைத்துக்
கட்டினார்கள். அதற்குப் பிறகு ஜமீன்தாரர்கள் கட்டினார்கள்.
இப்போதுகூட
போட்டிபோட்டுக் கொண்டு தோதகத்தி மரம் வைத்துக் கட்ட பெரும்புள்ளிகள் இருக்கிறார்கள். ஆனால் போதுமான மரங்கள்தான்
இல்லை. அழிந்துவரும் மரங்கள் பட்டியலில் தோதகத்தியையும் சேர்த்துள்ளார்கள்.
இப்போது ‘ஏழைக்கேற்ற
எள்ளுருண்டை’ என்பது போல தோதகத்தி மரத்திற்குப் பதிலாக சிசு மரத்தை சிபாரிசு
செய்கிறார்கள். சிசுவும் தோதகத்தியும் ஒன்றுவிட்ட பங்காளிகள். இரண்டும் பேபேசி
என்னும் தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றின் இலை, கிளை,
மரம் என இரண்டுக்கும் ஒரே மாதிரி முகஜாடைதான்.
தோதகத்தியின் பல மொழிப் பெயர்கள்
தமிழ்
: தோதகத்தி, ஈட்டி,
நூக்கம் (THOTHAGATHTHI, YEETI, NOOKKAM)
இந்தி:
கலாசிசாம் (KALASISAM)
மராத்தி:
கலாருக் (KALARUK)
மலையாளம்:
கரிவிட்டி (KARIVITI)
தெலுங்கு: இருகுடு
செட்டு (IDUGUDUSETTU)
கன்னடம்:
பெட்டி (PETTI)
தாவரவியல்
பெயர் : டால்பெர்ஜியா லேட்டிஃபோலியா (DALBERGIA LATIFOLIA)
பொதுப்பெயர்
/ ஆங்கிலப்பெயர் : ரோஸ்வுட் (INDIAN ROSEWOOD) தாவரக்குடும்பம் : பாபேசி (FABACEAE)
தோதகத்தி மரத்தின் பயன்கள் :
தழை
: கால்நடைகளுக்கு தீவனமாகும்
பட்டை :
டேனின் சத்து நிறைந்தது. தோல் பதனிட உதவும்.
தோதகத்தி மரத்தில் நகைப்பெட்டிகள், கட்டில்கள், இசைக்கருவிகள்,
போன்ற விலை மதிப்புமிக்க மரச்சாமான்கள், செய்வார்கள். மேஜை , நாற்காலி, பீரோ, கதவு, ஜன்னல், கட்டிடப்
பொருட்கள், ரயில் பெட்டிகள், ஒட்டுப்பலகைகள்
வேளாண்கருவிகள், மற்றும் காகிதம்
செய்ய மரக்குழம்பும் தயார் செய்வார்கள்.
தோதகத்தி ஒரு மருத்துவ மரம்
தோதகத்தியின் கட்டைகளில் எண்ணை எடுக்கலாம். இந்த எண்ணை பலவிதமான மருத்துவ பயன்களை உள்ளடக்கியது.
இது புதிய திசுக்களை வளர்க்க உதவும்,
பழய திசுக்களை புதுப்பிக்கும். தோலின் மீது ஏற்படும்
கோடுகள் மற்றும் சுருக்கங்களை சரி செய்யும்,
அக்கி எனும் தோலின் மீது ஏற்படும் நோயை குணப்படுத்தும், தோலின் மீதுள்ள வறட்சியை நீக்கி ஈரப்பசையுடன் கூடிய பளபளப்பான
சருமத்தை பராமரிக்கும்.
ஈரச் செழிப்புள்ள ஆழமான மண்கண்டம் வேண்டும்
இந்தியாவை தாயகமாகக் கொண்ட தோதகத்தி மரம் ஈரச்
செழிப்புள்ள ஆழமான மண்கண்டத்தில் நன்கு வளரும். விதை, நாற்று, நார்க்குச்சி, வேர்ச் செடி ஆகியவற்றைப் பயன்படுத்தி புதிய மரங்களை உருவாக்கலாம். மரங்கள் அதிகபட்சமாக 39 மீட்டர்
உயரம் வரை வளரும்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment