Friday, June 2, 2023

THIRUNELVELI DISTRICT RIVER SERVALARU திருநெல்வேலி மாவட்ட ஆறு சேர்வலாறு

 

சேர்வலார் ஆறு திருநெல்வேலி மாவட்டத்துக்கு சொந்தமான ஆறு மட்டுமல்ல, அது தாமிரபரணியின் துணை ஆறும் கூட. சேர்வலாறு அணையின் முக்கியமான நோக்கம் ஒன்று நீர் மின்சாரம் இரண்டாவது விவசாயத்திற்கான நீர் விநியோகம்..

சேர்வலாறு நீர் மின்சார உற்பத்தி கேந்திரம் (HYDRO ELECTRICAL POWER PLANT)

 நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக சேர்வலாற்றின் குறுக்கே 1986 ஆம் ஆண்டு ஓர் அணை கட்டப்பட்டது. இதில் 156 அடிக்கு உயரத்திற்கு நீர் தேக்க முடியும். இதில் உள்ள டர்பைன்கள் மற்றும் ஜெனரேட்டர் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். 

நீர் மூலம் தயாரிக்கும் மின்சாரம் (HYDEL POWER GENERATION)

இப்படி நீர் மூலம் தயாரிக்கும் மின்சாரத்தை கிளீன் எனர்ஜி (CLEAN ENERGY)என்றும் ரினிவபிள் எனர்ஜி (RENEWABLE ENERGY)என்றும் சொல்லுகிறார்கள். இது காலநிலை மாற்றத்திற்கு பாதுகாப்பானது. 

சேர்வலாறு அணை (SERVALARU DAM)

இந்த  அணையின் நீளம் 1525.59 அடி. அணையின் கொள்ளளவு 28007 ஏக்கர் அடி. இந்த அணைக்கட்டில் இருந்து வடிக்கப்படும் நீரைச் சேமித்து விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இந்த அணை காரையாறு அணையுடன் 3323 மீட்டர் சுரங்க பாதையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சேர்வலாறு அணையின் அடிவாரத்தில் இந்த மின் கேந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் (KALAKKAD MUNDANTHURAI TIGER RESERVE)

திருநெல்வேலி மாவட்டத்தில் முண்டந்துறை புலிகள் சரணாலயம் பகுதியில்தான் இந்த சேர்வலாறு நீர்மின்சார உற்பத்தி கேந்திரம் இயங்குகிறது.

தமிழ்நாடு அரசு & மின்சாரத்துறை (TAMILNADU ELECTRICITY BOARD).

சேர்வையாட்டின் குறுக்காக கட்டியுள்ள அணைக்கட்டின் அடிவாரத்தில்தான் இந்த மின்சார உற்பத்தி கேந்திரம் அமைக்கப்பட்டுள்ளது  இந்த சேர்வலாளர் மின்சார உற்பத்தி கேந்திரத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு இதனை பராமரித்து வருவது தமிழ்நாட்டின் மின்சாரத்துறை. இந்த மின் உற்பத்தி கேந்திரத்தில் உள்ள டர்பைன் மற்றும் ஜெனரேட்டரை தயாரித்தது பெல் (BHARATH HEAVY ELECTRICAL LIMITED )நிறுவனம். 

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் (KALAKKAD MUNDANTHURAI  TIGER RESERVE )

இந்த புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரையிலும் 795 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது இது இந்தியாவின் 17 வது புலிகள் காப்பகம். 

ஆறுகளின் நீர் வடிப்பகுதி(WATERSHED  AREAS OF RIVERS)

ஆறுகளின் நீர் வடிப்பகுதி தாமிரபரணி, ரமாநதி, காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, பச்சைஆறு, கொடையாறு, கடனாநதி மற்றும் கல்லாறு உட்பட 12 நதிகளின் நீர்வடிப் பகுதியாக உள்ளது இந்த முண்டந்துறை புலிகள் சரணாலயம் பகுதி. 

மேகமலை காடுகள் (MONTANE FORESTS)

மேகமலை காடுகள் இந்த பகுதியில் உள்ள காடுகளை மேகமலை காடுகள் என வகைப்படுத்துகிறார்கள். உயரம் அதிகமான மலைப் பிரதேசங்களில் உள்ள காடுகளை மோன்டேன் காடுகள் என்று சொல்லுகிறார்கள் இது. போன்ற பகுதிகளில் எப்போதும் மேகம் சூழ்ந்தபடி இருக்கும். இவற்றை மலைப்புற மழைக்காடுகள் என்று சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இம்மாதிரி மழைக் காடுகள் மட்டும் 30 ஆயிரத்து 725 சதுர கிலோமீட்டர் பரப்பில் உள்ளது என்று கணக்கெடுத்து உள்ளார்கள்.

இந்த பகுதியில் சுமார் 102 கனி இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களின்  குடும்பங்கள் வசிக்கின்றன கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகம் வசிப்பவர்கள் இந்த பழங்குடிகள்.

சேர்வலாறு, அதில் இருக்கும் அணை, நீர் மின்சாரம் உற்பத்திக் கேந்திரம், களக்காடு முன்டந்துறை புலிகள் சரணாலயம், இங்கு இருக்கும் அடர்ந்த மழைக்காடுகள் அத்தனையும் பார்க்க முடியும். 

உங்கள் குழ்ந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுகளுக்கு, காடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள், மரங்களைக் காட்டுங்கள், பறவைகளை விலங்குகளை அறிமுகப்படுத்துங்கள். 

குடும்பத்தோடு ஒரு டிரிப் சேர்வலாறு எப்போது கிளம்பப் போகிறீர்கள் ?

 GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...