Tuesday, June 20, 2023

THE MOST ANCIENT FRUIT TREE PEREECHAI 65. பழமரங்களில் கிழமரம் பேரீச்சை

 

பழமரங்களில் கிழமரம்
பேரீச்சை

பேரீச்சை பழமரம், டிம ஆவணங்கள் படி (FOSSIL RECORDS) பேரீச்சையின் வயது 50 மில்லியன் ஆண்டுகள், சரித்திர காலங்களுக்கு முன்னமே, பேரீச்சை சாகுபடி புழக்கத்தில் இருந்து வந்துள்ளது, இஸ்ரேலியர்கள், டேட்சிரப் என்னும் பேரீச்சை பழக்கூழை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.  பேரீச்சை விதைகளை அரைத்து கால்நடைத் தீவனத்துடன் சேர்க்கிறார்கள்,  இதிலிருந்து எடுக்கும் எண்ணெயில் சோப்பு மற்றும் இதர அழகு சாதனப்  பொருட்கள் தயாரிக்கிறார்கள். பழம் அன்றி இதன் மரங்கள், கட்டுமான பணிப் பொருட்களாக, புதிய வனம் உருவாக்க, பழைய வனங்களை மீட்டெடுக்க என பலவகைகளிலும் பயன்படுத்தவாம்.

தமிழ்: பேரீச்சை (PEREECHAI)

பொதுப்பெயர்கள்: டேட், டேட்பாம் (DATE, DATE PALM)

தாவரவியல் பெயர்: பீனிக்ஸ் டேக்டைலிபெரா (PHOENIX DACTYLIFERA)

தாவரக்குடும்பம் பெயர்: அரிகேசி (ARECACEAE)

தாயகம்: ஈராக்

பல மொழிப் பெயர்கள்

ஆங்கிலம்: டேட்,  டேட் பால்ம் (DATE , DATE PALM)

ஆப்ரிகான்ஸ்: டேடல் பாம் (DADEL PALM)

ஆராபிக்: நாச்சி நாக்கியா (NACHI NAKIA)

பின்னிவு; பாட்டெலி, டாட்டெலி பாம் (TAATELI, TAATELI PALM)

பிரென்ச்: டாட்டியர் (DATTIER )

ஜெர்மன்: டேட்டல் பாமி (DATTEL PALME)

இந்தி: காஜூ: காஜூPர் (KAAJI, KHAJUR )

இத்தாலி: பால்மா டா டட்டேரி (PALMA DA DATTERI)

சமஸ்கிருதம்: பிண்டகஜூPரா (PINDAKHAJURA)

ஸ்பேனிஷ்: பல்மீரா டாட்டிரா (PALMEERA DATERA)

ஸ்வீடிஷ்: டேடல் பாம் (DADEL PALM)

துர்கிஷ்: ஹீமா அ (HUMA A)

போர்ச்சுகீஸ்: தமீரா (TAMEIRA)

பிரேசில்: தமீரிரா (TAMEIRA)

பாக்கிஸ்தான்: காஜி, காஜூர் (KHAJI, KHAJUR)    

முஸ்லீம் நாடுகள்

உலக அளவில் பேரீச்சம் பழத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் பெரும்பாலும் முஸ்லீம் நாடுகள்தான் என்பது ஆச்சரியமான செய்தி.  பேரீச்சையை அதிகம் உற்பத்தி செய்வது எகிப்து.  அதற்கு அடுத்தடுத்த நான்கு நாடுகள், ஈரான்,  அல்ஜீரியா, சவூதி அரேபியா, யுனைடட் அராப் எமிரேட்ஸ், ஈராக் மற்றும் பாகிஸ்தான்.

சிந்து சமவெளியின் பிரதான உணவு

டிம ஆவணங்கள் படி பேரீச்சையின் வயது 50 மில்லியன் ஆண்டுகள்: மத்தியக் கிழக்கு மற்றும் சிந்து சமவெளிப் பகுதி மக்களின் பிரதான உணவாக பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது பேரீச்சை.

பேரீச்சை ஒயின்

சரித்திர காலங்களுக்கு முற்பட்ட சமயங்களில், மெசபடோமியா முதல் எகிப்து ரை பேரீச்சை சாகுபடி பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.  எகிப்தில் வசித்த புராதன குடிமக்களிடையே பேரீச்சை ஒயின் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வந்தது.

போரில் வெற்றி பெற்றால் தமிழ் கலாச்சாரத்தில் வாகை மலர்களை சூடுவது வழக்கம்.  அதனால்தான் பரிட்சையில் தேர்வு ஆனால் கூட நாம் வெற்றிவாகை சூடினார்கள் என்று சொல்லுகிறோம். 

பேரீச்சை மட்டை ஊர்வலம்

மிகவும் தொன்மையான எகிப்து நாட்டில் வெற்றியின் அடையாளமாக பேரீச்சை மட்டைகளை ஏற்றியடி ஊர்வலம் செல்லும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

மாவீரன் அலக்ஸாண்டரின் திருமம் குறித்த ஒர் ஒவியத்தில் அவர் வீட்டுத் தோட்டத்தில் பேரீச்சை மரங்கள் இருந்தது என்றும் ஒரு செய்தி உள்ளது. கி.மு.326 ல் கூட அலக்ஸாண்டர் வருடைய  சிப்பாய்களுக்கு பேரீச்சம் பழங்களை வாங்கிக் தந்து அவர்களை சந்தோஷப் படுத்தியதாக  ஒரு செய்தி உள்ளது.

ஆண் பெண் மரங்கள் தனித்தனி

பேரீச்சை மரங்களில் ஆண் பெண் மரங்கள் தனித்தனியாக இருக்கும். 21 முதல் 23 மீட்டர் உயரம் வரை வளரும். பெரும்பாலும் விதைகளால் முளைக்கும்,  மரங்களில் பாதி அளவு ஆண்மரங்கள் பாதி அளவு  பெண் மரங்களாக இருக்கும்.

விதைகளில் வளரும் மரங்களின் பழங்கள் அளவு சிறியதாக இருக்கும். பெரிய பழங்கள் தரும் மரங்களிலிருந்து கிளைகளை எடுத்து நட்டால் தாய்மரம் போலவே காய்க்கும். கிளைகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும்.

காற்றுமூலம் மகரந்தச்சேர்க்கை

வணிகரீதியில் பேரீச்சைமரத் தோட்டங்களை உருவாக்குபவர்கள் பெரும்பாலும் கிளைகளைத்தான் நடுகிறார்கள். பேரீச்சை  மரங்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவுவது காற்றுதான்.

ஆனால் ஒயாசிஸ் என்னும் பாலைவனத்; தோட்டங்கள் மற்றும் வணிகரீதியான தோட்டங்களில் செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்கிறார்கள்.  இதில்  நிபுணத்துவம் உள்ள ஆட்களைக் கொண்டு இதனைச் செய்கிறார்கள்.

இயற்கையாக மகரந்த சேர்க்கை நடக்க பாதி மரங்கள் ஆண் மரங்ளாகவும் பாதி மரங்கள் பெண் மரங்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் செயற்கை முறையில் மகரந்த சேர்க்கை செய்ய 100 பெண் மரங்களுக்கு ஒரு ஆண்மரம் இருந்தால் போதுமானது. 

இதனைச் செய்ய காற்றுவீசும் ஒரு கருவியும், ஒரு ணியும்> வேலை தெரிந்த ஒரு நபரும் தேவை.

பழுக்க பழுக்கப் பறிக்கணும்

விதைக் கன்றுகளிலிருந்து உருவாகும் மரங்கள் காய்க்க  நான்கு முதல் எட்டு ஆண்டுகள் ஆகும்.  வணிக ரீதியாக நல்ல மகசூல் தர ஏழு  முதல் பத்து ஆண்டுகள் கும்.  ஒரு மரம் ஒர் அறுவடையில் 70 முதல் 140 கிலோ வரை காய்க்கும். 

சில மரங்கள் 150 முதல் 300 கிலோவரை கூட காய்க்கும்.  குலை குலையாய் காய்க்கும். இவை ஒரே சமயத்தில் பழுக்காது.  காய்கள் பழுக்கப் பழுக்கப் பறிப்பது வழக்கம்.

மணற்சாரியான இருமண்பாட்டு மண்

பழக்குலைகள், பறவைகள், பூச்சிகள், மற்றும் காற்று, வெய்யில், பன, மழை போன்றவற்றால் பாதிக்காமல் இருக்க பைகளால் மூடி வைக்கிறார்கள்.

பேரீச்சை மரங்களை வளர்க்க ழமான மண்கண்டம் வேண்டும். மணற்சாரியான இருமண்பாட்டு மண் ஏற்றது. கார அமிலநிலை எட்டு முதல் 11 வரை இருத்தல் வேண்டும்: மண்கண்டம்,  ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்: மண்கண்டத்தில் சுண்ணாம்புக் கற்கள் அல்லது சுக்காம்பாறைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

ரமலான் விருந்து

பேரீச்சம் பழங்களில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தின்பண்டங்களை தயார் செய்கிறார்கள்ஃபுரூட்பிரட்,  சிரப்,  தேன்,  பழப்பொடி,  என பலவகைகளில் பயன்படுத்துகிறார்கள். ரமலான் விரதம் இருந்து மாலையில் உணவருந்தும்போது முதலில் பேரீச்சம் பழங்களை சாப்பிடவே முஸ்லீம் மக்கள் விரும்புவார்கள்.

இஸ்ரேலியர்கள், டேட்சிரப் என்னும் பேரீச்சை பழக்கூழை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.  இதனை சிலான் (SILAN) என்கிறார்கள்.  சிலான் டேட்சிரப் ஐ அவர்கள் தேனுக்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். 

கோழி இறைச்சி சமைக்கக் கூட இந்த சிலான் ஐ பயன்படுத்துவார்களாம்.

உலர்த்த பேரீச்சம் பழங்களில் 80 சதம் சர்க்கரை உள்ளது. இதில் மிகையாக இருப்பது பொட்டாசியம். இவை தவிர புரதச் சத்தும்,  நார்ப் பொருளும் கணிசமான அளவில் உள்ளன. இத்துடன் போரான்,  கோபால்ட்,  காப்பர்,  குளோரின,  மக்னீசிபம், மாங்கனீஸ்,  செலினியம்,  துத்த நாகம் போன்ற சத்துக்களும் கணிசமான அளவில் உள்ளன.

பேரீச்சை விதைகளை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து கால்நடைத் தீவனத்துடன் சேர்க்கிறார்கள்.  இதிலிருந்து எடுக்கும் எண்ணெயில் சோப்பு மற்றும் இதர அழகு சாதனப்  பொருட்கள் தயாரிக்கலாம். பழங்களை உதிர்த்தபின் காலியான பழக்குலைகளை துடைப்பமாகப் பயன்படுத்துகிறார்கள்.

பேரீச்சை மர மட்டைகள்

இதன் மட்டைகள் மற்றும் இலைகளில் குடிசைகளுக்கு கூரை, பாய்கள், ஐன்னல், மற்றும் கதவு திரைச் சிலைகள், கூடைகள், விசிறிகள்,  வாக்கிங் ஸ்டிக்ஸ்,  கட்டுமரங்கள்,  கயிறுகள்,  குல்லாய்கள் போன்றவை செய்ய பயனாகிறது.

பழம் அன்றி மரங்கள், பாலங்கள் கட்ட, கட்டுமான பணிப் பொருட்களாக, வேலிமரமாக, நார் எடுக்க, மண்அரிப்பைத் தடுக்க, நிழல் மரமாக மண்ணை மேம்படுத்த,  புதிய வனம் உருவாக், பழைய வனங்களை மீட்டெடுக்க என பலவகைகளிலும் பயன்படுத்தலாம்.

அரபி மொழியில் நக்கல்(NAKHL) என்றால் பேரீச்சை மரம்,  டமர் (TAMAR) என்றால் பேரீச்சம் பழம் என்று பொருள்.

பேரீச்சை மரம் மற்றும் அதன் பழங்கள் இஸ்லாமியர்களின் அடையாளமாக பல ஆயிரம் ஆண்டுகளாகக் கருதப்படுகிறது. 

அன்னை மரியம் ஈசா நபியை ஈன்றெடுக்கும் சமயம்,  அவருடைலிகளிலிருந்து நிவாரணம் அளிக்க அல்லா அவர்களுக்கு பேரீச்சை  சாப்பிடக் கொடுத்ததாகச் சொல்லுகிறார்கள். 

மேலும் பேரீச்சை

பேரீச்சை மரத்தில் அடிமரத்தைப் பிடித்து உலுக்குங்கள்,  அது உங்ககளுக்கு புதிய விளைந்த பழங்களை அருளும்ன்கிறது குரானின் புனித வரிகள் (SURAH MARYAM VERSE 25)

FOR FURTHER READING

 WWW.ARABNEWS.COM -JULY 28, 2018 - DATES IN THE HOLY QURON & THE SUNNA OF THE PROPHET

WWW.EN.WIKIPEDIA.ORG/WIKI/ -“DATE PALM” (TOP TEN DATE PRODUCERS- 2016-(VN FOOD & AGRICULTURE(PAO)

WWW.EOL.ORG- “PHOENIX DACTYLIFERA – DATE PALM.

WWW.EN.SPHINXDATERANCH.COM/  HOW DO DATE PALMS GROW?

WWW.EN.FRONTIERSIN.ORG/ DATE PALM TREE (PHOENIX DACTYLIFERA)

WWW.EN.SCIENCEDIRECT.COM/ PHOENIX DACTYLIFERA – AN OVERVIEW

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE A FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

  

    

       

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...