Tuesday, June 13, 2023

THE GREAT SECRET OF RAJASTHAAN ராஜஸ்தானின் ரகசியம்

ராஜஸ்தானின் ரகசியம்


8888888

தனி மனிதராக தொடங்கி 5000 கிராமங்களில் தண்ணீர் தன்னிறைவை சாதித்துள்ளார் ராஜேந்தர்சிங்.

கூடுதலான தண்ணீர் பெற்ற கிராமங்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்து இருநூறு.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பல மேலைநாடுகளுக்கும் கூட தண்ணீர் வைத்தியம் பார்க்கிறது  இந்த தண்ணீ.ர் சிங்கம்.

சிங் வெட்டிய குளங்களாலும் அதில் சேமிக்கப்பட்ட தண்ணீரினாலும் அரை நூற்றாண்டு காலமாக தண்ணீரை பார்த்தறியாத கிராமங்கள் ஆசிர்வதிக்கப்பட்டன.

அவருடைய சாதனைக்கு அடிப்படையாக ருந்தவை ஜோகாத் என்ற நீர் சேமிப்புக் குளங்கள்.

ராஜஸ்தானில் குளங்கள் என அழைக்கப்படும் ஜோகாத்கள் அங்கு மட்டுமல்ல ஹரியானா பஞ்சாப் உத்திரப்பிரதேசம் ஆகிய ,டங்களிலும் புழக்கத்தில் உள்ளன.

ஜோகாத்கள் பெரும்பாலும் ஒரு கிராமத்திற்கு சொந்தமானவைகளாக ,ருக்கும்.

மழை அறுவடை செய்வதும் அதன் மூலம்  நீரை சேமிப்பதும் நிலத்தடி நீரை கூட்டுவதும்தான் இவற்றின் முக்கியமான நோக்கம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அந்த பகுதியில் மொத்தம் 5000  ஜோகாத்கள் ருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு அதைவிட கூடுதலாக ருக்கலாம் என்று என்று நான் நம்புகிறேன்

ஆனால் தமிழ்நாட்டில் நமது முன்னோர்கள் வெட்டிய ஏரிகள் அல்லது குளங்களை  மட்டும் 39000 ஏரிகள் என தமிழ்நாட்டின் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

தமிழ்நாட்டில் குளங்களில் ஏரிகளில் மழைநீரை சேமித்தால் நிச்சயமாக தண்ணீர் பிரச்சினையை தீர்த்து விடலாம். தமிழ்நாட்டின்  மழை ராஜஸ்தானைவிட மிக அதிகம் என்கிறார் சிங்.

இந்த இடத்தில் ராஜஸ்தானின் ஆண்டு சராசரி மழையை தெரிந்து கொள்ளலாம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கிடைக்கும்  ஆண்டு சராசரி மழை 200 முதல் 400 மி.மீ. மட்டுமே. சில இடங்களில் குறைந்தபட்சமாக 100 மி.மீ. மழையும் கிடைக்கிறது.;

ராஜஸ்தானின் மேற்குப் பகுதி, குஜராத்தின் கட்ச் பகுதி ஆகியவைதான் இந்தியாவில் மிகவும் குறைவான ஆண்டு சராசரி மழை பெறும் இடங்கள்.

இன்னொரு முக்கியமான செய்தி; ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தின் பலோடி என்னும் இடம்தான் இந்தியாவிலேயே மிகுந்த வறட்சியான நகரம்.

ராஜஸ்தானில் பெறும் மழையைவிட தமிழ்நாட்டில் பெறுவது ஏறத்தாழ இரண்டு பங்கு அதிகம்; தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை 945 மி.மீ.

தமிழ்நாடு மட்டுமல்ல ந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து விட முடியும்.

அதற்கு வேண்டியது நம்மிடையே ருக்கும் ஏரிகளையும் குளங்களையும் மழை அறுவடை செய்வதற்காக மழை சேமிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தான்.

நமது கிராமங்களில் ருக்கின்ற சிறு சிறு ஓடைகளை எல்லாம் செப்பனிட வேண்டும். காரணம் ந்த ஓடைகள் தான் ந்த ஏரி குளங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கின்றன.

அவைதான் ந்த ஆறுகளுக்கும் தண்ணீரைக் கொண்டு சேர்க்கின்றன. ஆகையினால் கிராமங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் ஓடைகள் செப்பனிட்டு தண்ணீர் சேமிப்பது மட்டும் தான் நமது தண்ணீர்ப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கும் என்று என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் அவர்கள்.

குளிக்க> துணி துவைக்க> ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட், தங்கள் வீட்டு தேவைகளுக்கும் எடுத்துக்கொள் எல்லாவற்றிற்கும் ராஜஸ்தான் மக்களுக்கு பயன்படுவது இந்த ஜோகாத்கள்தான் என்று சொல்லும் ஏரிகள் மற்றும் குளங்கள்தான்.

ஆண்டு முழுவதும் அதாவது வருஷம் 365 நாளும் ஜோகாத்தில் தண்ணீர் தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர்வளம் சுலபமாக அதிகரிக்கிறது.

ராஜஸ்தானின் ஆண்டு சராசரி மழை வெறும் 200 முதல் 400 மில்லி மீட்டர் மட்டுமே ஆனால் தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை 945 மில்லி மீட்டர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மழை பெய்கிறது ,ந்த மழையை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் சேகரிக்கிறார்கள்> சேமிக்கிறார்கள்

ந்த மூன்று மாதங்களில் பெய்த மழையை சேமித்து அதனை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதுதான் ராஜேந்தர்சிங் ராஜஸ்தானுக்கு தந்திருக்கும் ரகசிய பார்முலா. இந்த ரகஸ்ய ஃபார்முலா நமக்கும் பொருந்தும் என்று நான் சொல்லுகிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

PLEASE POST A COMMENT, REGARDS GNANASURIA BAHAVAN D (AUTHOR);

33333333333333333333333333333333333

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...