Sunday, June 11, 2023

THE FATHER OF ORGANIC FARMING NAMMAZHVAAR இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வார்

EARLIER DAYS OF NAMMAZHVAAR FATHER OF ORGANIC FARMING

இயற்கை விவசாய தந்தை
நம்மாழ்வார்

இன்று தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில்; அரசியல் அல்லாத தலைவர்களின் புகைப்படம் அதிகம் இருப்பது யாருடைய புகைப்படம் ? சொல்லுங்கள் பார்ப்போம். நிச்சயமாக அது இயற்கை விஞ்ஞானி என்று விவசாயிகளால் பிரியமுடன் அழைக்கப்படும் நம்மாழ்வார் அவர்களாகத்தான் இருக்கும். இதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். இது அவர் தொண்டுக்கு, தியாகத்திற்கு சேவைக்கு கிடைக்கும் அங்கீகாரம் எனச் சொல்லலாம். 

இயற்கை விவசாயத்தின் தந்தை (FATHER OF ORGANIC FARMING)

டாக்டர்.ஜி. நம்மாழ்வார் 1938 ம் ஆண்டு பிறந்தவர். இயற்கை விவசாயத்தின் தீவிர பிரச்சாரகராக அறியப்பட்டவர். பின்னால் இயற்கை விஞ்ஞானியாக இயற்கை விவசாயத்தின் தந்தை என்றும் போற்றப்பட்டது எப்படி என மிகச்சுருக்கமாகப் பார்க்கும் கட்டுரை இது. 

பி எஸ்ஸி அக்ரி பட்டப்படிப்பு படித்தவர் (GRADUATED IN AGRICULTURE)

தமிழ்நாட்டின் தென்பகுதியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்து சிதம்பரம் அண்ணாலைப்பல்கலைக் கழகத்தில் பி எஸ்ஸி அக்ரி பட்டப்படிப்பு படித்தவர். 

கோவில்பட்டி ஆராய்ச்சி  நிலையம் (KOVILPATTY AGRICULTURAL REARCH STATION)

விவசாய பட்டதாரியான அவர் கோவில்பட்டியில் உள்ள மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் 1963 ம் ஆண்டில் தன் பணியைத் தொடங்கினார்.கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையம் மானாவாரி  பயிர்களை ஆராய்ச்சி செய்துவரும் ஒரு மையம்.  இங்கு குறிப்பாக மானாவாரி பருத்தி தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வந்தன.

அவற்றுள் பயிருக்குப் பயிர் எவ்வளவு இடைவெளி கொடுக்க வேண்டும் ? எவ்வளவு ரசாயன உரம் போட வேண்டும் ? எந்த பூச்சிக்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும் என்பது போன்ற ஆராய்ச்சிகள் அங்கு நடந்து வந்தன.

விவசாஆராய்ச்சிகள் (RESEARCH ON RAINFED FARMING)

மானாவாரி விவசாயிகளுக்கு இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் ஏழை எளிய மானாவாரி விவசாயிகளுக்கு உதவாது என்ற எண்ணம் நம்மாழ்வார் மனதை அரித்து வந்தது. இதுபற்றிய தனது கருத்தை சக விஞ்ஞானிகளிடம் தெரிவித்து அதனை மாற்றி அமைக்க வேண்டிய அவசியத்தையும் கூறி வந்தார். 

நம்மாழ்வார் போர்க்கொடியை உயர்த்தினார்(NAMMAZHVAR WAS DIFFERENT)

ஆனால் அவர்கள் அவரை வேற்றுக் கிரகத்து மனினைப்போல பார்த்தார்கள். சொல்ற வேலையப் பார்த்தமா ? சம்பளத்தை வாங்கிட்டுப் போமா ? அதை விட்டுட்டு என்று இவரை கிண்டலடித்தார்கள். அதைப்பற்றி கவலைப்படாத நம்மாழ்வார் தனது போர்க்கொடியை உயர்த்தினார்.

கோபக்கார இளைஞர் (AN ANGRY BIRD)

நரி வலம்போனால் என்ன ? இடம்போனால் என்ன ? என்று சராசரியாக இருக்கமுடியாத கோபக்கார இளைஞராக இருந்த நம்மாழ்வார் தான் செய்துவந்த வேலை யாருக்கும் பயன்தராது என்று அவர் கருதியதால் கால்கடுதாசியில் ராஜினாமவை எழுதித் தந்துவிட்டு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1969 ல் தன் நடையைக் கட்டினார்.

அய்லண்ட் ஆஃப் பீஸ்’(ISLAND OF PEACE).

அதன் பிறகு தன் மனதிற்கு பிடித்திருந்த அய்லண்ட் ஆஃப் பீஸ்’(ISLAND OF PEACE) என்ற தொண்டு நிறுவனத்தில் இணைந்து சுமார் 10 ஆண்டுகள் களக்காடு வட்டாரத்தில் பணியாற்றினார். 

களக்காடு வட்டார பத்தாண்டு அனுபவம்தான் (EXPERIENCE IN KALAKKAAD)

திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு வட்டாரத்தில் விவசாயிகள் மத்தியில் சேவைசெய்துவந்த அந்த பத்தாண்டு அனுபவம்தான் அவரை பின்னாளில் ஒரு இயற்கை விவசாயப் போராளியாக மாற்றியது. 

கழிவுப்பொருட்கள் மறுசுழற்சி (RECYCLING OF CROP WASTES)

காசுகொடுத்து வாங்கிப் பயன்படுத்தும்  இடுபொருட்களை  குறைத்து விவசாய நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்யும் முறைகள் அவர் மனதில் அழுத்தமாகப் பதிந்தன.

வினோபாவின் சித்தாந்தங்கள் (PHILOSOPHIES OF VINOBAJI)

1970 ம் ஆண்டுக்குப் பின்னால் வினோபா அவர்களின் சித்தாந்தங்களால் அவர் வழிநடத்தப்பட்டார். அதனடிப்டையில் அவர் தனக்கென கீழ்கண்ட சில கொள்கைளை வகுத்துக்கொண்டார்.

கல்வியின் பயன் என்பது சுதந்திரம். சுதந்திரம் என்பது தன்னிறைவு அடைந்து தன்னுடைய சொந்தக் காலில் நிற்பது என்று அர்த்தம். அன்றாட உணவுக்காக ஒரு மனிதன் யாரையும் அண்டிப் பிழைக்காமல் இருப்பதுதான் தன்னறைவு. தனக்குத் தேவைப்படும் அறிவினை அனுபவங்ளைத் தானே திரட்டிக்கொள்ளும் சக்தி அவனுக்கு வேண்டும். தன்னையும் தன் சிந்தனையையும் தன் உணர்வுகளையும் ஆளுமை செய்யும் திறன் அவனிடம் இருக்க வேண்டும்.

அவர் தன்னடைய கொள்கைகளை விவசாயிகள் மத்தியில் பிரபலமாக்கி பின்பற்றச் செய்ய வேண்டும் என விரும்பி 1979 ம் ஆண்டு குடும்பம் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

GNANASURIA BAHAVAN D

gsbahavan@gmail.com



No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...