Thursday, June 22, 2023

TEXAS MOUNTAIN LAUREL ORNAMENTAL TREE 104. அழகுக்காக வளர்க்கும் டெக்சாஸ் மலை மரம்

டெக்சாஸ் மலை மரம்


டெக்சஸ்
மலை மரம், பட்டாம் பூச்சிகள் தேனீக்கள் மற்றும் இதர பூச்சி வகைகளைக் கவரும் ஊதாப்பூக்களுடன் நச்சுத்தன்மை கொண்ட விதைகளையும் உடைய அழகு சிறுமரம், மற்றும் இதன் ரம்யமான வாசம், எப்படிப்பட்ட மோசமான நிலத்திலும் முகம் சுளிக்காமல் வளரும், அழகுக்காக வளர்க்கும் சிறுமரம்.

தமிழ்ப்பெயர்: டெக்சாஸ் மலை மரம் (TEXAS MALAI MARAM)

பொதுப் பெயர்கள்: டெக்சாஸ் மவுண்டெய்ன் லாரெல், மெஸ்கல் பீன் சோபோரா, பிரிஜோலிலோ, பிரிஜோலிடோ,  கோரல் பீன்,  பிக் டிரங்க் பீன், கோலோரின் (TEXAS MOUNTAIN LAUREL, MESCAL  BEAN SOPHORA, FRIJOLILLO, FRIJOLITO, CORAL BEAN , BIG TRUNK BEAN, COLORIN).

தாவரவியல் பெயர்: சோபோரா செகண்டிபுளோரோ (SOPHORA SECUNDIFLORA)

தாவரக் குடும்பம் பெயர்: பேபேசி (FABACEAE)

தாயகம்: டெக்சாஸ் நியூ மெக்சிகோ (TEXAS & NEW MEXICO)

பசுமை மாறாத, பல அடி மரங்களையுடைய (MULTI TRUNKED) சராசரியாக பத்துப் பதினைந்தடி உயரம் வளரும். அழகான ஊதாப்பூக்களும்> நச்சுத்தன்மை கொண்ட விதைகளையும் உடைய அழகுக்காக வளர்க்கப்படும் சிறுமரம்.

வாசம் தரும் பூக்கள்

இந்த மரத்தின் சிறப்பே இதன் பூக்கள்.  இந்தப் பூக்களுக்கு இரண்டு சிறப்பு உண்டு.  ஒன்று இதன் கவர்ச்சிகரமான நிறம்.  தனி நீலம், தனி ஊதா அல்லது இரண்டும் சமபங்காக கலந்தது மாதிரியான நிறம். 

ஆங்கிலத்தில் லேவண்டர் நிறப் பூக்கள்.  இரண்டாவது சிறப்பு> இந்தப் பூக்களின் வாசம்.  நாம் தொலை தூரத்தில் இருந்தாலும் நான் இங்கேதான் இருக்கிறேன் என்று அறிவிக்கும் வாசம்.  பிப்ரவரி மார்ச் மாதங்களில் பூக்கும்.  பூக்கள், பட்டாம் பூச்சிகள் தேனீக்கள் மற்றும் இதர பூச்சி வகைகளைக் கவரும்.

கவர்ச்சிகரமான இலைகள்

இதன் இலை அழகா? பூ அழகா? என பட்டி மன்றம் வைக்கும் அளவுக்கு இதன் இலைகளும் அழகானவை. அடர்த்தியான பசுமை நிறத்தில் கொத்துக் கொத்தாக வளரும்.  பசுமையாக இருந்தாலும் பளபளப்பான இலைகள். 

இலைகளின் நுனி வித்தியாசமான வட்ட வடிவில் இருக்கும்.  அதிகபட்சமாக இரண்டு அங்குலம் அளவுக்கு வளரும்.  வித்தியாசமாக இலைகளின் நுனி அகன்றும் அடிப்புறம் குறுகலாகவும் இருக்கும்.  தொட்டுப் பார்த்தால் மெத்மெத் தென்று தோல் பொருட்களைக் தொடுவது போல இருக்கும்.

நோய்களை குணப்படுத்தும் இலைகள்

இதன் இலைகளை பசுமையாகவும் உலர வைத்தும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள். அக்கி, கொக்கிப்புழுவின் தாக்குதல், சிபிலிஸ் எனும் மேகப்புண், ஆகியவற்றை இதன் மூலம் குணப்படுத்துகிறார்கள்.

நச்சுத்தன்மை கொண்ட பழங்கள்

அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் குடிகொண்டு இருக்கும், அதுபோல பழங்கள் பார்க்க பளிச்சென்ற பளபளப்பான சிவப்பு நிறத்தில் இருக்கும்,   ஆனால் இவை நச்சுத்தன்மை உடையவை.

இதன் பழங்களை அரைத்து கூழாக்கி அத்துடன் சுடுநீர் சேர்த்து வடிகட்டி சில துளிகளை மட்டும் காதில் விட காதுவலி குணமாகும்.  காதுவலிக்கு இது அற்புதமான மருந்து.  மிச்ச சொச்சமாக இருக்கும் அமெரிக்கப் பழங்குடி மக்களுக்கு இன்றும்கூட இதுதான் கைகண்ட மருந்து.

போதை தரும் விதைகள்

கவர்ச்சிகரமான சிவப்பு நிறமான இதன் விதைகளில் சோபோரின் (SOPHORIN) என்னும் ஆல்கலாய்ட் உள்ளது.  அந்த ஆல்கலாய்ட்தான் அந்த நச்சுத்தன்மைக்குக் காரணமாக உள்ளது.  அதுமட்டுமல்ல, இந்த விதைகளை போதைப் பொருளாகவும் (NARCOTIC AND HALLUCINOGEN) பழங்குடி மக்கள்  பயன்படுத்துகிறார்கள்.

விதை மூலம் புதிய கன்றுகள்

முதல் ஆண்டு உற்பத்தியாகும் பழங்கள்,  அடுத்த ஆண்டுதான் அவை விதைகளை வெளியேற்றும்.  அடுத்த ஆண்டு கோடை பருவத்தில்தான் பழங்கள் மரங்களிலிருந்து உதிர்ந்து விதைகளை வெளிப்படுத்தும். 

விதைகளை, சுடுநீரில் ஊறவைத்து விதைப்பதால், நன்கு முளைக்கும்.  காற்றுப்புகாத குப்பிகளில் சேமித்து வைத்தும் பின்னர் பயன்படுத்தலாம்.  மேலும் இளங்கன்றுகள் மெல்ல வளரும்.  மரங்களின் கிளைகளை வெட்டியும் நடவு செய்தும் புதியக் கன்றுகளை உருவாக்கலாம். 

விதை சேகரிப்பு

விதைகள் ஒரளவு முதிர்த்தவுடன் அவை ஊதா நிறமாக மாறும்.  அந்த சமயத்தில் விதையின் மேல்தோல் கடினத்தன்மை இல்லாமல் இருக்கும். 

அதாவது ஜூPன்,  ஜூPலை மாதங்களில் இந்த விதைகளை சேகரிப்பதன் மூலம் அவற்றை உடனடியாக பயன்படுத்த முடியும்.  அந்த விதைகள் மிக வேகமாக பிரச்சினையின்றி முளைக்கும். 

விதைத்தோல் கடினமானால் முளைப்பு தாமதமாகும்.

பழங்குடி மக்களின் ஆபரணம்

அழகான சிவப்பு நிற விதைகளை மாலைகளாக செய்து கழுத்தில் மாலைகளாக அணியும் வழக்கம் அமெரிக்கப் பழங்குடி மக்களிடையே பரவலாக இருந்தது.  அதுமட்டுமல்லாமல்> இதன் மரக்கட்டைகளிலிருந்து மஞ்சள் நிற சாயம் எடுத்து பயன்படுத்தி வத்தார்கள். 

நமது கிராமத்துக் குழந்தைகள்,  கருவேலங் காய்களை> கால் கொலுசுகவும், கழுத்து மாலையாகவும் அணிவதை  நான் பார்த்திருக்கிறேன்.  நிறைய குழந்தைகளுக்கு நானே செய்தும் கொடுத்துள்ளேன்.

எங்கு வளரும்?

வறண்ட நிலப்பகுதிகள் கற்களும் பாறைகளும் நிறைந்த கல்லாங்கரடுகள்,  சுக்காம் பாறை நிறைந்த மண்கண்டம் (CALCAREOUS SOILS), மணற்சாரியான நிலம்,  மனற்சாரியான இருமண்பாடுள்ள நிலங்கள், களிமண்பாங்கான இருமண்பாட்டு மண், கரிசல் மண்,போன்ற பரவலான நிலங்களில் வளரும் தன்மையுடையது. 

வெப்பமான குளிர்ச்சியான, மற்றும் வறட்சியான சூழல்களையும், 7.2 கார அமிலநிலை உள்ள தன்மைகளையும் தாங்கி வளரும்.  எது எப்படி இருந்தாலும் நல்ல வடிகால் வசதி அவசியம் வேண்டும்.  மொத்தத்தில் எப்படிப்பட்ட மோசமான நிலத்திலும் முகம் சுளிக்காமல் வளரும்.

நீர் சிக்கன மரம்

தண்ணீர் குறைவாகக் தேவைப்படும் மரங்களைக் தேடிப் பிடித்து அவற்றை அமெரிக்கர்கள் அழகு மரங்களாக நகர்ப்புறங்களில் நட்டு வருகிறார்கள்.  அந்த வகையில் இந்த மலை மரத்தை அழகுமரமாக அமெரிக்கர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.  நீரை சிக்கனமாக செலவு செய்யும் மரம். 

நன்றி: தாவரவியல் பூங்கா, போர்ட்ஸ் வொர்த், டல்லஸ்,  யூ எஸ் ஏ (BOTANICAL GARDEN, FORTS WORTH, DALLAS, USA)

FOR FURTHER READING

WWW.WILDFLOWER.ORG – “SOPHORA SECUNDIFLORA (TEXAS MOUNTAIN LAUREL)”

WWW.WATERUSEITWISELY.COM – PLANT OF THE MONTH -“TEXAS MOUNTAIN LAUREL”

WWW.MSWN.COM – “SOPHORA SECUNDIFLORA”

WWW.HORTICULTUREISAWESOME.COM/  – “TEXAS MOUNTAIN LAUREL”

WWW.FS.FED.US/  SOPHORA SECUNDIFLORA- USDA FOREST SERVICE

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

  

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...