டான் ரெட்வுட் ஒரு வரப்பிரசாதம் |
டான் ரெட்வுட் எனும் டெக்சாஸ்
மாநிலத்து செம்மரம், உலகம் முழுவதும் அழகுத்தோட்டம் அமைக்க ஏற்றது, பிரமிடு போன்ற தோற்றத்தில் வளரும், இது 1940 ல் ஜப்பானிலும் 1941ல் தெற்கு சைனாவிலும் புதை பொருள்
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது, விரைவாக காடுகளை உருவாக்க நினைக்கும் வனத்துறையினருக்கும்,
ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்து கூடுதலாக டாலர் பார்க்க நினைக்கும் விவசாயிகளுக்கும், உறுதியானத் தன்மை கொண்ட மரங்கள் தேவைப்படாத அனைத்துக்
காரியங்களுக்கும், இந்த ‘டான் ரெட்வுட்’ மரம் ஒரு வரப்பிரசாதம், பாலங்கள் கட்ட,
கட்டிடங்களில் தரைகள் பாவ,
கட்டுமான வேலைகள் செய்ய, அத்துடன் இதன் இலைகளை கால்நடைகளுக்கு
தீவனமாகப் போட என மொத்தத்தில்
இது ஒரு பல பயன் தரும் தரு.
தமிழ்ப்பெயர்: டான் ரெட்வுட் (DAWN
REDWOOD)
பொதுப் பெயர்: டான் ரெட்வுட் (DAWN REDWOOD)..
தாவரவியல் பெயர்: மெட்டாசெக்கோயா கிளிப்டோஸ்டிரோபாய்டஸ் (METASEQUOIA
GLYPTOSTROBOIDES)
தாவரக் குடும்பம் பெயர்: டாக்சோடியேசி (TOXO DIACEAE)
தாயகம்: சைனா
பிரமிடு போல வளரும் செம்மரம்
டான் ரெட்வுட் என்றும் இந்த ஊர் செம்மரம் அழகான மரம். 55 அடி உயரம் வரை
வளரும். லேசான அமிலத்தன்மையுடைய வடிகால்
வசதி கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
உலகம் முழுவதும்,
அழகுத்தோட்டம் அமைக்க எற்ற மரம் (LANDSCAPE TREE). நடுத்தரமான மற்றும் பெரிய
மரம். பிரமிடு போன்ற தோற்றத்தில் வளரும்
செம்மரம். தாழ இருக்கும் கிளைகளைக் கூட
தாங்கிப் பிடிக்கும் மரம்
(RETAINS
LOWER LIMBS) இதன் பட்டைகள் எப்போதும் உதிர்ந்து
போவதற்குத் தயாராக இருக்கும்.
இதன் ஊசி இலைகள் பால்ட் சைப்ரஸ் மரங்களின் இலைகளைவிட பெரும் ஊசிகளாக
இருக்கும். வேகமாக வளரும் தன்மையுடையது. ஆனால் வறட்சியைத்
தாங்காது. நல்ல சூரிய வெளிச்சம்
தேவைப்படும். சுமாரான நிழலைத் தாங்கி
வளரும். பூக்காமல் கோன்களை உருவாக்கும்.
செம்மரத்தின் பூர்வீகக் கதை
இதன் காய்கள் மற்றும் பழங்களும் இதன் கோன்கள்தான். சிறிய அளவு கோன்கள் நீளமான உருண்டை வடிவில்
முரட்டுக் கட்டைத் துண்டுகள் போல இருக்கும்.
நன்கு முதிர்த்து கனிந்த
கோன்களை உடைத்தால் விதைகள் வெளியேறும்.
மரங்கள் 60 முதல் 100 அடி உயரம் கூட வளரும். 20 முதல் 30 அடி சுற்றளவுக்கு இந்த மரங்கள் பரவியும் வளரும்.
1940 ல் ஐப்பானிலும் 1941ல் தெற்கு சைனாவிலும் புதை பொருள்
ஆய்விள் இந்த மரத்தினை கண்டுபிடித்தார்கள்.
இந்த மரங்கள் உயிருடன் சில இடங்களில் இருப்பதை பின்னர்தான் கண்டுபிடித்தார்கள்.
இந்த மரங்களுக்கு ‘டான் ரெட் வுட்’
என பெயர் வைத்தார்கள். சைனாவின் அந்தப் பகுதிலிலேயே கூடுதலாக இந்த
மரங்கள் இருப்பதை கண்டுபிடித்தார்கள். பின்னர்
இதிலிருந்து விதைகளை சேகரித்து உலகம் முழுவதும் விதைத்தார்கள் என்பது இந்த செம்மரத்தின் பூர்வீகக் கதை.
கலிபோர்னியா செம்மரம் மாதிரி
இந்த செம்மரத்தில் கவர்ச்சிகரமான அம்சம் என்பது மிக வேகமாக வளரும்
என்பதுதான். 26 ஆண்டுகளில் இந்த மரங்கள் 100 அடியைத் தாண்டி வளர்கின்றன. மரங்கள் 3 அடி குறுக்களவுள்ள மரங்களாகப் பருத்து வளர்ந்து பரவசப்படுத்துகின்றது.
விரைவாக காடுகளை உருவாக்க நினைக்கும் வனத்துரையினருக்கும்> ஏக்கர் கணக்;கில் சாகுபடி செய்து கூடுதலாக டாலர் பார்க்க நினைக்கும் விவசாயிகளுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்கிறார்கள்.
இந்த மரம் ஏறத்தாழ கலிபோர்னியா செம்மரம் மாதிரி. மரங்கள் கடினத்தன்மை இல்லாதது. மிருதுவான தன்மை கொண்டது. இதன் வயிரப்பகுதி மரங்கள் கவர்ச்சிகரமான
ஊதாநிறத்தில் இருக்கும். ஆனால் மிகவும் பலவீனமான மரம். உறுதித் தன்மை இல்லாதது. உடைத்தால்
பொல பொலவென உதிர்த்துபோகும். ஆனால் மரங்களை அழுகவைக்கும் பூசணங்களைத் தாங்கி வளரும்.
முற்றிலுமாக அழிந்துபோன மரம்
கடினமான, உறுதியானத் தன்மை கொண்ட மரங்கள் தேவைப்படாத அனைத்துக்
காரியங்களுக்கும், இந்த ‘டான் ரெட்வுட்’
மரத்தையும் பயன்படுத்தலாம்.
20 ம் நூற்றாண்டின் மத்தியக் காலம் வரை இந்த ‘டான் ரெட்வுட் மரம்’
முற்றிலுமாக அழிந்துபோன மரம் என்றே
கருதப்பட்டது. 1949 ம் ஆண்டில்தான் இந்;த மரம் உயிருடன் இருப்பது
கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்த மரத்தின் கட்டைகளை மரச்சாமான்கள் செய்யக்கூட
பயன்படுத்தலாம். பெட்டிகள் வீடுகளில்
பயன்படுத்தும் தட்டுமுட்டுச் சாமான்கள் செய்யலாம். ‘கோஸ்டல் ரெட் வுட்’
என்பதற்கு.
ஏறத்தாழ சமமான மரங்களைத் தரும் இந்த ‘டான் ரெட்வுட்’. அமெரிக்கா மற்றும் சீனாவில் பாதுகாக்கப்படும் மரம் (P PROTECTED STATUS) என்னும் பெருமை உடையது.
கால்நடைகளுக்குத் தீவனம்
சாதாரணமாக மரச்சாமான்கள் செய்வதற்கான மரம் என்றாலும் கூட மரக்கூழ்
தயார் செய்யவும், காகிதம் செய்யவும் இது மிகவும் எற்புடைய மரம். ‘பிளைவுட்’
செய்யவும் இது பயன்படுகிறது.
பாலங்கள் கட்ட,
கட்டிடங்களில் தரைகள் பாவுவதற்கும், கட்டுமான வேலைகளுக்கும்
அதிகம் பயன்படுத்துகிறார்கள். அத்துடன்
இதன் இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகப் போடுகிறார்கள்.
FOR FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG/ METASEQUOIA GLYPTOSTROBOIDES
WWW.CONIFERS.ORG/ METASEQUOIA GLYPTOSTROBOIDES
WWW.BRITTANICA.COM/ DAWN REDWOOD / PLANT CYCLOPEDIA
WWW.CONIFERSOCIETY.ORG/ METASEQUOIA GENUS (DAWN RED WOOD) AMERICAN CONIFER
SOCIETY
WWW.PLANTS.CES.NCSU.EDU/ METASEQUOIA GLYPTOSTROBOIDES (DAWN
RED WOOD)
A REQUEST
I
LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS
ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A
COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE
WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL
BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment