Wednesday, June 28, 2023

TEAK THE KING OF WOOD 138. தேக்கு மரங்களின் அரசன்

 

தேக்கு  மரத்தில் செய்த
ரரயில் பெட்டிகள்


தேக்கு மரம் கப்பல் கட்ட, மரப்பாலம் அமைக்க, இரயில் பெட்டிகள், மேஜை நாற்காலிகள், பீரோக்கள், செய், வீடு கட்டுமானப் பணிகள் செய்ய, இசைக்கருவிகள் செய்ய, சிற்பங்கள், செதுக்க, ஒட்டுப்பலகை தயாரிக்ககட்டைகள் தரும், சாலைகளுக்கும் சோலைகளுக்கும் பசுமை அழகு தரும், பூக்கும் பருவத்தில் தேனீக்களுக்கு தேன் தரும், தோல் பதனிட டேனின் நிறைந்த இலைகள் தரும். தேக்கு மரத்தின் ஆங்கிலப்பெயர் டீக் வுட் ட்ரீ (TEAK WOOD TREE), தாவரவியல் பெயர் டெக்டோனா கிராண்டிஸ் (TECTONA GRANDIS)

மக்களின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் மரம்

சாதாரண மக்களின் கனவில் வரும் மரமாகவே இன்றளவும் இருந்து வருகிறது. தேக்கு மரத்தின் விலை சாமானிய மக்களின் கைகளுக்கு எட்டாத உயரத்திலேயே இருக்கிறது.

உதாரணத்திற்கு சில செய்திகள் சொல்லுகிறேன்.

லண்டன் பக்கிஙகாம் அரண்மனையில் எந்த மரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் ?

புனிதத் தலம் மெக்காவில் எந்த மரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் ?

டைட்டானிக் கப்பலின் உட்புறம்; எந்த மரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் ?

தெரியுமா ? எல்லாம் நமது மாண்புமிகு தேக்குதான்.

தேக்கு மரத்தின் பல மொழிப் பெயர்கள் 

தமிழ் : தேக்கு (THEKKU)

தெலுங்கு: டேக்கு (TEKU)

கன்னடம்: டேகு (TEGU)

மலையாளம்:டேக்கா (TEKKA)

இந்தி: சாகுன் (SAGUN)

மராத்தி: சக்வான் (SAKVAN)

மணிப்புரி: சிங்சூ (SINGHSU)

பெங்காலி: சகுனா (SAGUNA)

தாவரவியல் பெயர்: டெக்டோனா கிராண்டிஸ் (TECTONA GRANDIS)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர்  : 

டீக் வுட் ட்ரீ (TEAK WOOD TREE)

தாவரக்குடும்பம்  :  வெர்பினேசி (VERBINACEAE)

 மரத்தின் வகை  :   வாணிப மரம் (COMMERCIAL TREE) 

தேக்கு மரத்தின் பயன்கள் :

தழை, விளைநிலங்களுக்கு தழை உரமாகும். பட்டை  டேனின் நிறைந்து, தோல்பதனிட பட்டைத் தரும்,  இதன் விதைகள் , சோப்பு தயாரிக்க எண்ணெய் தரும்.

பச்சை வண்ண இலைகளோடு, கிளைகளின் நுனிகள் எல்லாம் பளிச்சென்ற வெண்ணிறப் பூக்கள் நிறைந்த, சுமார் ஒருஅடி நீளமுள்ள பூச்சரங்களுடன் வீட்டு முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறத்திற்கும் அழகூட்டும் மரம்.

மரத்தின் தாயகம் :--  இந்தியா, பர்மா

ஏற்ற மண் :--  மணல்சாரி, வறண்ட மண்;

நடவுப் பொருள் :-- விதை  /  நாற்று   / வேர்க்குச்சி

மரத்தின் உயரம் :--   46  மீட்டர்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

999999999999999999999999999999999999999

 

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...