Thursday, June 15, 2023

TALIPOT PALM 02. தாலிப்பனை

 

  

தாலிப்பனை

மிகவும் பழமையான தமிழ் நூல் என்னும் பெருமைக்குரிய தொல்காப்பியம் எழுதப்பட்டது. தாலிப்பனையின் ஒலைகளில்தான்> உலகின் மிகப்பெரிய கிளைகளை உடைய பூங்கொத்து என்னும் பெருமைக்கு உரியது   இதன் பூங்கொத்துதான். ஒரு காலத்தில் தந்தத்திற்குப் பதிலாக இதன் கொட்டைகளில்தான் பட்டன்கள் மற்றும் மாலைகளுக்கான மணிகள் செய்தார்கள்> ஒரு காலத்தில் போட்டிபோட்டுக் கொண்டு ஸ்டார்ச் எடுப்பதற்காக இந்த மரங்களை அடுக்கடுக்காக வெட்டி சாய்த்த்தால் கொடுமைக்கு உள்ளானதும் தாலிப்பனைதான்.

 

பொதுப் பெயர்: டாலிபாட் பாம் (TALIPOT PALM)

தாவரவியல் பெயர்: கொரிபா அம்பராகுலிபெரா (CORYPHA UMBRACULIFERA)

தாவரக் குடும்பம் பெயர்: அரிகேசி (ARECACEAE)

தாயகம்: தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

பலமொழிப் பெயர்கள் (VERNACULAR NAMES)

தமிழ்: தாலிப்பனை (THALI PANAI)

இந்தி: பஐர்பட்டு (BAJARBATTU)

தெலுங்கு: ஸ்ரீதாலமு (SRITALAMU)

பெங்காலி: தாலி (TALI)

மராத்தி: தாலி (TALI)

மலையாளம்: குடப்பனா> தாலி (KUDAPPANA, TALI)

சமஸ்கிருதம்: அல்பாயுஷி (ALPAYUSHI)

துளு: பனோலிடா மரா (PANOLIDA MARA)

மிகவும் பழமையான தமிழ் இலக்கணநூல் என்னும் பெருமைக்குரிய தொல்காப்பியம் முதன் முதலில் எழுதப்பட்டது தாலிப்பனை ஒலைகளில்தான்.  இது மூன்றாம் நூற்றாண்டுக்குரியது.  

தற்போது நம்முடைமுய உள்ள மிகவும் பழமையான ஒலைச் சுடிகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அத்வைத மதம் குறித்தவை. இது கண்டுபிடிக்கப்பட்டது நேப்பாளத்தில். 

ஆனால் அது தற்போது இருப்பது.  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் என்று சொல்லுகிறார்கள்.  இது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரியவை.

ஓரிசாவில் உள்ள மாநில மியூசியத்தில் மட்டும் நான்கு லட்சம் பனை ஒலைச் சுவடிகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள தமிழ்நாட்டின் ஒரியண்டல் மேனுஸ்கிரிப்ட் லைப்ரரியில் மட்டும் ஐம்பதாயிரம் ஒலைச்சுவடிகள் உள்ளன. 

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் பனை ஒலை சுவடிகளுக்கென பிரத்தியேகமான ஒரு துறை (DEPARTMENT OF PALM LEAF MANUSSCRIPTS) இயங்கி வருகிறது.

தாலிப்பனையின் தாவரப்பண்புகள்

தாலிப்பனை அதிகபட்சமாக 25 மீட்டர் உயரம் வளரும். அடி மரங்கள்  3 மீட்டர் வரை  குறுக்களவு உடையதாக வளரும். 

விசிறி போன்றதும் விரல்கள் போன்றதுமான அமைப்புடைய இதன் மட்டைகள்  5 மீட்டர் குறுக்களவு உடையதாக வளரும். மட்டையின் காம்புகள் நான்கு மீட்டர் நீளம் உடையதாக இருக்கும்.

 தாலிப்பனையின் பூக்கள் அதன் உச்சியில் தோன்றும். இந்த பூங்கொத்தின் நீளம் 6 முதல் 8 மீட்டர் இருக்கும். இதன் பூங்கிளைகளில்  லட்சக் கணக்கான பூக்கள் பூக்கும். 

30 முதல் 50 ஆண்டுகள் வயதுடைய மரங்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இந்தப் பூக்கள் காய்த்து ஓய்ந்ததும் சுமார் ஒரு ஆண்டில் இந்த மரங்கள் பட்டுப் போகும்.

 இந்த பூக்களில் இருந்து ஆயிரக்கணக்கான காய்கள்  காய்க்கும் இந்த காய்கள் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் விட்டம் உடையதாக இருக்கும். ஒவ்வொரு கனியிலும் ஒரு கொட்டை அல்லது விதை இருக்கும்.

உலகின் மிகப் பெரிய பூங்கொத்து

உலகின் மிகப்பெரிய பூங்கொத்து என்னும் பெருமைக்கு உரியது>  தாலிப்பனையின் பூங்கொத்து.  இதுவும் வாழை போலத்தான்.  ஒரு முறைதான் பூக்கும்.  பூ பூத்தவுடன் அது காயாகி கனியாக தோராயமாக ஒராண்டு ஆகும். 

தன் பிறகு அந்த மரம் பட்டுப்போகும்.  தாலிப்பனை பூத்தால் வெகுதூரத்திலிருந்து கூட பார்க்கலாம்.  அவ்வளவு பெரிய பூங்கொத்து.  அந்தப் பூங்கொத்தில் பல லட்சக் கணக்கான பூக்கள் இருக்கும்.  அது மட்டுமல்ல 30 முதல் 80 ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் பூக்கும்.  இதன் பூங்கொத்து ஆறு முதல் எட்டு மீட்டர் நீளம் இருக்கும். 

குடைப்பனை என்பதும் இதுதான்   

ண்மைக்காலம் வரை கேராளவில் இதன் ஒலைகளில் குடைகள் செய்து பயன்படுத்தி வந்தார்கள்.  குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாய வேலை செய்பவர்கள் இதனை பயன்படுத்தி வந்தார்கள்.  

அதனால் மலையாளத்தில் குடப்பனா என்றும் ஆங்கிலத்தில் அம்ப்ரல்லாபாம் என்றும் அழைக்கிறார்கள்.  வீடுகளுக்கு கூரை போடவும் இதன் ஒலைகளை பயன்படுத்துவது உண்டு. 

இந்த மரத்திலிருந்து சாறு இறக்கி புளிக்கவைத்து கள் தயாரிப்பதும் உண்டு.     

இதன் ஒலை மட்டைகளும் மிகவும் பெரியவை.  உதாரணமாக ஒரே ஒரு பெரிய தாலிப்பனை ஒலையை தலைக்குமேல் பிடித்தால் சுமார் 10 பேர் மழையில் நனையாமல் ஒண்டிக் கொள்ளலாம். 

இதன் ஒலை மட்டையின் அலம் ஏழு மீட்டர் வரையும் மட்டையின் காம்புகள்   நான்கு மீட்டர் நீளமாகவும் இருக்கும்.  மிக உயரமான மரமும் கூட அதிகபட்சம் 100 அடி உயரம் கூட வளரும்.

ங்கு? எப்படி வளரும்?    

கடுமையான வறட்சியைக் கூட தாங்கி வளரும்.  வடிகால் வசதி வேண்டும்.  நல்ல சூரிய வெளிச்சம் வேண்டும்.  அடிக்கடி  தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை.  மண்ணின் கார அமில நிலை சமநிலை (NEUTRAL PH) உடையதாக இருக்க வேண்டும்.  மிகவும் மெல்ல வளரும் தன்மையுடையது.

அழிந்துவரும் மரம்

இந்த மரம் இந்தியாவிலிருந்துதான் உலகின் பிற பகுதிகளுக்குச் சென்றது.  மியான்மர்> ஸ்ரீலங்கா> தாய்லாந்து> சைனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.  முன்னதாக கிழக்கித்தியக் கம்பெனியைச் சேர்ந்த வெள்ளைக்காரர்கள் இதனை தென் அமெரிக்காவில் சூரிநாம் என்ற நாட்டிற்கு கொண்டு போனார்கள்.   

ஒரு காலத்தில் போட்டிபோட்டுக் கொண்டு ஸ்டார்ச் எடுப்பதற்காக இந்த மரங்களை அடுக்கடுக்காக வெட்டி சாய்த்தார்கள்.  அதன் விளைவாக இன்று அழிந்து வரும் மரவகை என இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதர பயன்கள்      

இந்த மரத்தின் வயிரப்பகுதியில் தனது மிகுதியான ஸ்டார்ச் ஐ சேமித்து வைக்கிறது.  ஒரு வளர்ந்த மரத்தில் 25 கிலோ ஸ்டார்ச் எடுக்கலாம்.  உத்தர கன்னட பகுதியில் உள்ள மக்கள் இதனை உணவாக சமைத்து சாப்பிடுவார்கள். 

ஒரு காலத்தில் ஏழை எளிய மக்களின் உணவாக இருந்துள்ளது.  அப்போது தந்தத்திற்குப் பதிலாக இதன் கொட்டைகளில் பட்டன்கள் மற்றும் மாலைகளுக்கான மணிகள் செய்திருக்கிறார்கள்.  இவை இந்தப் பகுதிகளிலிருந்து ஏற்றுமதியும் கியுள்ளது.    

இதன் பழங்களை இடித்து கூழாக்கி அதனை மீன்பிடி நச்சாக (FISH POISON) பயன்படுத்தி உள்ளார்கள்.    

மேலும் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் இவை அழகு மரங்களாகவம் நடப்பட்டன இவற்றின் விதைகளை விதைத்தால் 120 நாட்களில் நன்கு முளைக்கும்.

1899 முதல் 1901 இரண்டே ஆண்டுகளில் சுமார் 15000 தாலிப்பனை மரங்கள் கர்நாடகாவின் காடுகளிலிருந்து மட்டும் (HANOVAR FORESTS) வெட்டிப்பட்டது. 

பனைஒலை தாலி

ஒரு காலத்தில் திருமணத்திற்கான தாலிகளை பனை ஒலைகளில்தான் செய்திருக்கிறார்கள்.  ஒலைகளில் கணவனின் குலச் சின்னங்களை எழுதி பெண்களுக்கு திருமணத்தின்போது தாலியாகக் கட்டி இருக்கிறார்கள்.  அதனால்தான் இதற்கு தாலிப்பனை என்று பெயர் வந்தது.

ராஜாராணி காலத்தில் மென்மையான இதன் ஒலைகளில் பங்க்கா என்று சொல்லும்படியான செய்ய விசிறிகளைச் செய்துப் பயன்படுத்தி உள்ளார்கள்.  அதனால்தான் இதற்கு விசிறிப்பனை என்று பெயர் வந்தது.    

ஆனால் அமெரிக்காவில் ஒரு பனையை கலிபோர்னியா விசிறிப்பனை என்றும்> மெக்சிகோவில் மெக்சிகன் விசிறிப்பனை> என்றும் கேனரி ஐலண்ட் விசிறிப்பனை என்றும் சொல்லுகிறார்கள்.  ஆனால் அந்தப் பனைகளில் தாலிப்பனை ஒலைகள் மாதிரி ராட்சச பனைமட்டை கிடையாது. 

தாலிப்பனை தேசியப் பூங்கா

உலகின் பழமையான இலக்கியங்களை தனது ஒலைகள் மூலம் பாதுகாத்துத் தந்த மரம்.  உலகில் உள்ள மரங்களிலேயே மிகப்பெரிய பூங்கொத்தை உடைய சிறப்புமிக்க இந்த மரத்திற்கு தனியானதொடு தேசியப் பூங்காவை உருவாக்கலாம். அதில் இந்தியாவில் உள்ள பனை வகைகளை எல்லாம் சேகரிக்கலாம்.

REFERENCES:

WWW.EN.WIKIPEDIA.ORG/PALM  LEAF MANUSCRIPT

WWW.TAMIL UNIVERSITY.AC.IN/ DEPARTMENT OF PALM LEAF  MANUSCRIPTS.

WWW.PALMPEDIA.NET/CORYPHA UMBRACULIFERA.

WWW.IAS.AC.IN/ARTICLE/”TALIPOT A FORGOTTEN PALM OF WESTERN GHATS.

 PLEASE POST A COMMENT, REGARDS - GNANASURIA BAHAVAN (AUTHOR)

 99999999999999999999999999999999

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...