மாதா கோயில் கட்டிய இஸ்ரேலியக் கருவை |
(ISRELIYA
KARUVAI, ISREAL BABUL, ACACIA TORTILIS, MIMOCEAE)
தாவரவியல்
பெயர் : (ACACIA TORTILIS)
பொதுப்பெயர்
ஃ ஆங்கிலப்பெயர்: இஸ்ரேல் பாபுல் (ISREAL BABUL)
தாவரக்குடும்பம்
: மைமோசி (MIMOCEAE)
மரத்தின்
தாயகம் : இஸ்ரேல் நிகேவ் பாலைவனம்.
இந்தக்
கருவையை இஸ்ரேலியர்கள்தான் அதிகம் பயன்படுத்தினார்கள். இது பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாடு
பைபிளில் பல உள்ளன. டேபர்னகிள் என்றால் மொபைல்
கோவில்கள் (DWELLING PLACE
OF GOD) கட்ட
இந்த மரத்தைப் பயன்படுத்தி உள்ளனர். ஹீப்ரு இன மக்களுக்காக மோசஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டுத்தலம்.
பைபிளில்
இஸ்ரேலியக் கருவையின் பெயர் சீத்திம் மரம். பைபிளில் இருபத்தி ஒன்பது
இடங்களில் இஸ்ரேலியக் கருவைபற்றி சொல்லப்பட்டுள்ளது.
பைபிளில்
எக்சோடஸ், டியூட்டெரோனமி, ஐசய்யா, ஜோயில் ஆகிய அதிகாரங்களில் பல இடங்களில் இஸ்ரேலியக் கருவையை கிறித்துவ
ஆலயங்கள் மற்றும் பலிபீடத்தை அமைக்கும் வழிமுறைபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில்
கம்பங்கள், சட்டங்கள், பெட்டிகள், தூண்கள் கூரைப் பலகைகள், ஆகியவற்றை எல்லாம் இஸ்ரேலியக் கருவையில் செய்யப்பட வேண்டும் என்கிறது பைபிள். அளவுகள் கூட
துல்லியமாக சொல்லுகிறது. இந்த மரத்தை ஆங்கிலத்தில் அகேசியா என்றும் தமிழில்
சீத்திம் என்றும் சொல்லுகிறது பைபிள்.
உதாரணமாக
இதோ இரண்டு பைபிள் வசனங்கள்.
“சீத்திம்
மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக் கடவது. அதன் நீளம் இரண்டரை முழமும், அதன் அகலம் ஒன்றறை முழமும், அதன் உயரம்
ஒன்றறை முழுமும் இருப்பதாக – வசனம்: 10, அதிகாரம்: 25, யாத்திராகமம் (EXODUS)
“ஐந்து
முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தை உண்டுபண்ணுவாயாக, அது
சதுரமும் மூன்று முழ உயரமும் இருப்பதாக - வசனம்: 1, அதிகாரம்:
27, யாத்திராகமம் (EXODUS).
பாலைவனத்தில்
வளர்க்கப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிந்கு சிறந்த தீவனம் இந்த மரம். பாலைவனத்தில் வசித்த
மக்கள் வேட்டையாட, போர் செய்ய மற்றும் பாதுகாப்புக்குத் தேவைப்படும் வில், அம்பு போன்ற கருவிகள் செய்ய ஏற்றது என பைபிளில்
குறிப்பிடப்பட்டிருக்கும் மரம்
இஸ்ரேலியக் கருவை. மணல் களர் பாறை ஆகியவற்றிலும் வளர்ந்திடும் மரம்.
இஸ்ரேலியக்
கருவையின் பலமொழிப்
பெயர்கள்:
தமிழ்:
இஸ்ரேலியக் கருவை (ISREALIYA
KARUVAI)
அரபிக்:
அப்செர் (ABSAR)
சொமாலி:
குரா (KURA)
பின்னிஷ்:
கீரியா காசியா (KERIYA
KASIYA)
மரத்தின்
வகை : வறண்ட நிலத் தாவரம்.
மரத்தின்
பயன்கள்
தழை,
ஆடு மாடுகளுக்கு தீவனமாகும்.
பூக்கள்:
இருக்கமான, வாசனையான பூங்கொத்துக்கள்.
நெற்றுக்கனி, கால்நடைகளுக்கு இனிப்பு சுவையுடைய தீவனமாகும். ,
பிசின்,'கோந்து"அராபிக்
கம் தயாரிக்க உதவுகிறது. ஒரு காலத்தில் உணவாக சாப்பிடக்
கூடபயன்பட்டது
பட்டை,
டேனின் நிறைந்தது.
மரம்,
காகிதம் தயாரிக்க மரக்கூழ்,
பேனா, வண்டிச் சக்கரங்கள், அழகுப் பெட்டிகள், வேளாண் கருவிகள், மேஜை, நாற்காலிகள், செய்யவும் மரம் தரும்.
7,800 கலோரி வெப்பத்திறன் கொண்ட இலைகள், கிளைகள்,
மரம், அடுப்பெரிக்கவிறகாகும்.
வீசும்
காற்றின் வேகத்தை தடுக்கும். தூசியினை வடிகட்டும். காற்றை சுத்தப்படுத்தும்.
ஏற்ற மண்
: பரவலான மண் வகை, அதிக வறட்சி,
கல்லாங் கரடு, மிகுந்த சரிவான நிலம் மற்றும் உப்பு மண்ணிலும் வளரும்
நடவுப்
பொருள் : விதை / நாற்று
/ வேர்க்குச்சி.
மரத்தின்
உயரம் : 9 மீட்டர்.
ஏற்ற
பருவ நிலை: நல்ல வெப்ப நிலை 0 முதல் 50 டீகிரி சென்டிகிரேட், மழை 100 முதல் 1000 மி.லி. பெய்யும் இடங்கள்.
வறட்சியான
ஆண்டுகளில் இந்த மரத்தின் இலை தழைகள், பூக்கள் மற்றும் நெற்றுக்கள் வெகுவாகக்
குறைந்துவிடும். அந்த சமயங்களில் பாலைவனங்களில் பெரும்பாலான விலங்குகள் தீவனமின்றி
இறந்து போகும்.
இதன்
நெற்றுக்களை தீவனமாகக் கொள்ளும் ஆடுகள்தான் தங்கள் புழுக்கைகளால் இந்த மரத்தின் விதைகளை
பாலைவனத்தின் பிற பகுதிகளுக்கும் பரப்புகின்றன.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment