Tuesday, June 20, 2023

STINKWOOD TREE HERB OF TRIBAL PEOPLE 57. பழங்குடி மக்களின் மூலிகை பீநாறிமரம்

பழங்குடி மூலிகை பீநாறிமரம்


இந்த மரத்தின் முக்கிய அடையாளம் சகிக்க முடியாத மல நாற்றம்தான் பீநாறி மரம், என்ற பெயர் இதற்கு வைத்த காரணப் பெயர். பெரிய மரமாக வளரும். படகர் பழங்குடி மக்களின் மூலிகை மரம். வைரம் நோய்களை குணப்படுத்தும். பீநாறி என்ற பெயரில் அழைக்கப்படும் தீக்குச்சி மரம் இதுவல்ல.  

தமிழ்ப்பெயர்: பீநாறிமரம் (STINK WOOD)

பொதுப் பெயர்கள்: ஸ்டிங்க் வுட், ஹேக்கிள் பெர்ரி (STINK WOOD, HACKLE BERRY)

தாவரவியல் பெயர்: செல்டிஸ் சின்னமோமியா, செல்டிஸ் தைமோரென்சிஸ் (CELTIS CINNAMOMEA,CELTIS TIMORENSIS)

தாவரக் குடும்பம் பெயர்: கன்னாபேசி (CANNABACEAE)

பிறமொழிப் பெயர்கள்:

கன்னடா: பென்டி மரா,  பெல்லி (BENDE MARA, PELLE)

மலையாளம்: பூச்சாகுரு மரம்,  புத்தா, ஒனத்தி (POOCHAKRURUMARAM, BHUTHA, ONATHI)

இதர பெயர்கள்: பீநாறி, பல்லுவீரி, புத்தியுர்த்தி,  பூச்சாகுருமரம், புருமா, கோடாலி முறிச்சி (PEENARI, PALLU VEERI)

சமஸ்கிருதம்: பூதிகாஸ்தா (P POOTHIKASHTA)

தெலுங்கு: கோட்டி பெரா (KOTIBERA)

பீநாறி மரம், என்ற பெயர் இதற்கு வைத்தது காரணப் பெயர்.  இந்த மரத்தின் முக்கிய அடையாளம் சகிக்க முடியாத மல நாற்றம்தான்.  பெரிய மரம்.  கிட்டத்தட்ட 25 மீட்டர் உயரம் வளரும்.  ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் நோய்களில் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

மரத்தின் தாயகம் மற்றும் பரவியிருக்கும் இடங்கள்

தாயகம்: வெப்பமண்டல ஆசிய நாடுகள் என்கிறார்கள், முதன் முதலாக தைமூர் தீவில்தான் கண்டறியப்பட்டது, அதனால் இதனை செல்டிஸ் தைமூரென்சிஸ் என்றும் சொல்லுகிறார்கள். இது இந்தோனேசியாவில் தைமூர் கடலில்  அமைந்துள்ளது இந்த்த் தைமூர் தீவு.  

இந்த மரம் ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவியுள்ளன.  குறிப்பாக இந்தியா உட்பட ஸ்ரீலங்கா, இந்தோசைனா, தெற்கு சைனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவு ஆகியவற்றில் அதிகம் காணப்படுகின்றன.

கர்நாடகாவில், சிக்மகளுர், தட்சிண கர்நாடகா, ஹாசன், னமசூர், ஷிமோகா, உத்தர கன்னடா ஆகிய பகுதிகளிலும் இந்த மரங்கள் அதிகம் பரவியுள்ளன.  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் வறண்ட வனப்பகுதிகளில் இம்மரங்கள் வளர்ந்துள்ளன.

தமிழ் நாட்டிலும் இந்த மரங்கள் வளர்ந்துள்ளன.  இந்த மரங்கள் காணப்படும் இடங்கள் கோயம்பத்தூர், தர்மபுரி, திண்டுக்கல்,ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், நீகிரி, சேலம், தேனி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

மருத்துவப் பயன்கள்      

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படகர் இன மக்கள் இதன் இலைகள் மற்றும் பட்டைகளை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள் மற்றும் புண்களை ஆற்றுவதற்காக பயன்படுத்துகிறார்கள். 

2015 16ம் ஆண்டு வாக்கில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றிலும் இது நிரூபீக்கப்பட்டுள்ளது ஹைத்ராபாத்தின் வகர்லால் நேரு டெக்னலாஜிpகல் இன்ஸ்டி டியூட் மற்றும் நாட்கோ பார்மாவும் தமிழ்நாடு நேல் இன்ஸ்டி டியூட் ஆப் சித்தா வும் இணைந்து இந்த ஆய்வை நடத்தின.

ஸ்ரீலங்காவில் இதன் மரக் கட்டைகளை குரெண்டா (GURENDA) என அழைக்கிறார்கள்.  இந்த குரெண்டா வைப் பயன்படுத்தி மேகப்புண்கள் அல்லது கிரந்திர புண்கள்> சின்னம்;மை, மற்றும் மீசில்ஸ் என்னும் மணல்வாரி.  அம்மையைக் (SIPLILIS, CHICKENPOA & MEASLES) கட்டுப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள்.  இதற்கென ஆயுர்வேத மருந்துகளை இங்கு தயார் செய்கிறார்கள்.

மரங்களில் பலவற்றிற்கு இந்த பீநாறி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  அதனால் இந்த பொதுப் பெயரை வைத்துக் குழம்ப வேண்டாம்.  தீக்குச்சி மரத்தைக் கூட (ALANTHUS EXCELSA) என்ற அழைப்பார்கள்.  இந்த நாற்றத்திற்குக் காரணம்,  இதில் இருக்கும் ஸ்கேட்டோல் (SKATOL) என்னும் ஒருவகை அங்ககக் கூட்டுப் பொருள்.  இது லேசாக நச்சுத்தன்மை உடையதும் கூட.

மூன்று நரம்பு இலைகள்

இதன் இலைகள் வித்தியாசமானவை.  இவை; மஞ்சள் கலந்த பசுமை நிறத்தில் இருக்கும்.  நீள வடிவமான முட்டை வடிவில் இருக்கும்.  பிரியாணி இலைகளைப்போல தோற்றம் தரும்.  இலைகளில் மத்தியில் ஒன்று இரு பக்கமும் இரண்டு என மூன்று இலை நரம்புகள் இணையா ஒடும்.

ஆண் - பெண் பூக்கள் தனித்தனி (MALE & FEMALE FLOWERS)

ஆண் பெண் பூக்கள் தணித்தனியாகப் பூக்கும். பூங்கொத்துக்களாகப் பூக்கும்.  பூக்கள் பசுமையாக இருக்கும்.  பழங்கள் நீளமானவை. விதைகள் கடினமானவை. நீரின் மூலம் பரவும்.  காய்கள் பசுமையாகவும் னிந்தால் ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறமாகவும் மாறும்.  ஐனவரி முதல் மார்ச் மாதம் வரை பூத்து காய்க்கும்.

இந்தியாவில் பரவியிருக்கும் இடங்கள்      

இந்தியாவில் அஸ்ஸாம், மேஹாலயா, சிக்கிம், பெங்கால், த்தியப்பிரதேஷ் தென்னிந்திய மாநிலங்கள் ஆகியவற்றில் இந்த மரங்கள் பரவியுள்ளன.  கேரளாவிலும் பல மாவட்டங்களில் பரவியுள்ளன.  அவை  இடுக்கி, கொல்லம், மலப்புறம்,  பாலக்காடு,  கண்ணூர், வயநாடு,  திருச்சூர்,  கோழிக்கோடு,  மற்றும் திருவனந்தபுரம்.

காராஷ்ட்ராவில்,  அகமத்நகர், பூனா,  ரத்னகிரி,  சத்தாரா,  சித்ததூர்க் மற்றும் தாணே ஆகிய பகுதிகளில் இந்த மரங்களை நிறைய பார்க்கலாம்.

படகர் இன பழங்குடி மக்கள்:

நீலகிரி மாவட்டத்தின் படகர்  பழங்குடி மக்கள் இதனை மூலிகையாகப் பயன்படுத்துகின்றனர்.  பீநாறி மரத்தின் இலைகள். மற்றும் வேர்களை வெட்டுக் காங்கள் மற்றும் இதரவகைப் புண்களை ஆற்றுவதற்கு காலங்காலமாக உபயோகப்படுத்துகிறார்கள்.  

படகர் இன மக்களில் ஒரு பிரிவினர் தொரையா பழங்குடி மக்கள்.  நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இவர்கள் சுமார் 200 வகையான தாவரங்களை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.  இதனை கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலக அளவில் அதிக அளவிலான மக்கள் இன்னும் பாரம்பரிய மருத்துவ முறைகளையே சார்ந்து உள்ளார்கள்.  உலகம் முழுவதும் சுமார் 2000 பழங்குடி மக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியான மருத்துவ முறைகளை தனித்தனி அனுபவங்களாக வைத்துள்ளார்கள். 

சர்வதேச அளவில் அதிக அளவில் தாவரங்களையும் மூலிகைகளையும் கொண்ட நாடுகள் இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா.  இந்தியாதான் தன்னிடம் உள்ள 20 சத மூலிகைகளை பயன்படுத்துகிறது. 

அடுத்ததாக இரண்டாவது இடத்தில் 18.9 சதத்தை உபயோகப்படுத்துவது சீனா.  அந்த வரிசையில் வரும் இதர நாடுகள் தாய்லாந்து ஸ்ரீலங்கா மற்றும் வியட்நாம்.  சர்வதேச அளவில் சுமார் 50000 தாவரங்களை மூலிகைகளாகப் பயன்படுத்துகிறோம்> என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

சில சந்தேகங்கள்

பீநாறி பெயரில் இன்னும் இரண்டு மரங்களை சொல்லுகிறார்கள், ஒன்று தீக்குச்சிமரம் என்று சொல்லுவது, இதன் தாவரவியல் பெயர் ஐலாந்தஸ் எக்செல்சா. இன்னொன்று பீநாறிப் பூண்டு அல்லது செடி என்று சொல்லப்படும் களைச்செடி, இதன் தாவரவியல் பெயர் லென்டானா கேமரா என்பது.  

FOR FURTHER READING

WWW.PLANTSJOURNAL.COM – “MEDICINAL PLANTS USED BY THORIYA ETHNIC (SUB TRIBE OF BADUGA) IN NILGRIS – INDIA”

WWW.FLORAKARNATAKA. CES.GSC.AC.IN “DIGITAL FLORA OF KARNATAKA – CELTIS CINNAMONACEAE”

WWW.INDIA BIODIVERSITY.ORG ‘CELTIS TIMORENSIS’

‘WOUND HEALING ACTIVITY OF CELTIS TIMORENSIS LEAF EXTRACT IN WISTAR ALBINO RATS.

WWW.INDIA BIODIVERSITY.ORG – CELTIS TIMORENSIS.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

           


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...