Saturday, June 24, 2023

STATE TREE OF THIRIPURA AGIL MARAM 113. அகில் திரிபுரா மாநில அரசு மரம்,

அகில் திரிபுரா மாநில அரசு மரம்,

மர உபயோகம் அல்லாத வனப்பொருள் என்ற வகையைச் சேர்ந்தது இந்த அகில் மரம். தெற்கு ஆசியாவிற்கு உரிய மரம். இந்தியாவில் தற்போது ஓரளவு அதிகமாக அகில் மரங்கள் இருப்பது  அஸ்ஸாம் மற்றும் சுற்றிலும் உள்ள மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மற்றும் மணிப்பூர் மாநிலங்களில்தான்.

உண்மையாக அகில் மரத்தில் ஒரு மருந்துக்குக்திரிபுர கூட வாசனை கிடையாது. அப்படி என்றால் வாசைன வீசும் அகில் அல்லது அகர் எங்கிருந்து வருகிறது ? தொடர்ந்து படியுங்கள்.

திருக்கத்தராய் திருத்தலத்தின் ஸ்தலவிருட்சம்

திரிபுரா மாநிலத்தின் அரசு மரம், வாசனைத் திரவிய மரம். மேலும் திருக்கத்தராய் திருத்தலத்தின் ஸ்தலவிருட்சம் என்னும் பெருமைக்கும் உரியது.

பாரம்பரிய மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், ஆயுர்வேதம், சீன மருத்துவம், திபேத்தியன் மருத்துவம், அத்தனையும் அகில் பொருட்களைக் கொண்டு மருந்துகள் தயாரிக்கின்றன.   

கல்லீரல் சம்மந்தமான நோய்கள், காது, மூக்கு, தொண்டை தொடர்பான நோய்கள், ஆஸ்துமா மற்றும்  இருமல் போன்றவற்றை குணப்படுத்தும்  மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.

அகிற்புகை பிடித்தால் போதும். அம்புட்டு நோய்களையும் பணால்’; என்கிறார்கள்.

மிகவும் மென்மையான பழவாசனையுடன் கூடிய பூவாசனையுடைய மரம் என வர்ணிக்கிறார்கள். இந்த மரவாசனையை இந்திய வேதங்கள் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான், வியட்நாம், ஆகிய நாடுகளில் கலாச்சார ரீதியாக போற்றப்படும் மரம் இது.

மூன்றுவகை அகில் மரங்கள்

அகில் மரத்தை அகரு என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இதில் மூன்றுவகையான அகருகள் சொல்லுகிறார்கள். அவை, கிருஷ்ண அகரு, கஷ்ட அகரு, டாஅகரு மற்றும் மங்களயா அகரு.

அகில் மரம் என்ன விலைக்கு விற்பனை ஆகிறது தெரியுமா? தெரிந்தால் தலை சுற்றும். 2010 ம் ஆண்டில் ஒரே ஒருகிலோ மரம் ஒரு லட்சம் டாலருக்குக் கூட விற்பனை ஆனது. அகில் எண்ணெயும் விலை  அதிகம்தான்;.

அகில் மரங்களில் பதினைந்து வகை உண்டு. எல்லா அகி;ல் மரங்களும் அகில் தராது. அகில் அந்த மரங்களில் உற்பத்தியாகும் ஒரு வாசனைத் திரவியம். அந்த மரத்தின் வயிரப் பகுதியில் உருவாவதுதான் அகில்.

எந்த மரம் அகில் உற்பத்தி செய்யும் ?

அகில் மரம்பற்றி ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைச் சொல்ல வேண்டும். சந்தன மரம் என்றால் எல்லா மரங்களிலும் சந்தனம் உற்பத்தி ஆகும். ஆனால் அகில் மரத்தில் எல்லா மரங்களிலும் இந்த வாசனைத் திரவியம் உற்பத்தி ஆவதில்லை.

அப்புறம் ? நுறு மரங்களில் ஒரே பத்து மரங்களுக்குத்தான் அந்தக் குடுப்பினை கிடைக்கும். இதற்கு அம்ப்ரோசியா என்னும் வண்டுகளின் அனுக்கிரகம் வேண்டும். மேலும் எழுபது கிலோ மரத்தில் இருபது கிராம் அகில்தான் கிடைக்கும்.

இந்த அம்ப்ரோசியா வண்டுகள் பட்டுப்போன மரங்களையும் தாக்கும் உயிரோடு இருக்கும் மரங்களையும் விட்டுவைக்காது. இந்த வண்டுகள் இந்த அகில் மரத்தை குடைந்துகுடைந்து தின்று தாக்குகின்றன.

இதனால் பலவீனமடையும் மரம் அஸ்கோமைசீட்டஸ் என்னும் பூசணத்தால் தாக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இருந்து எப்படி தப்பிக்கலாம் ? யோசிக்கிறது அகில் மரம்.

அதற்காக ஒரு பாதுகாப்புப் பிசினை சுரக்கிறது கில் மரம். ஆக அகில் மரத்தின் பாதுகாப்புப் பிசின்தான் கடைச்சரக்காகும் அகில். அதுதான் லட்சங்களில் பேசப்படும் அகில்.

அகில் மரத்தின் வயிரம் மென்மையாக இருக்கும். வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். இந்த மென்மையான வயிர மரத்தை அகில் பிசின் கருமையாக மாற்றும்.

அகில் எண்ணெயின் விலை மிக அதிகம்

அடுத்து அதனை கடினமான மரமாகவும் மாற்றும். அகில உலக சந்தையில் அகில் மற்றும் அகில் எண்ணெயின் விலை மிக அதிகம். காரணம் இது இயற்கையாகக் கிடைக்கும் அற்புத வாசனைத் திரவியம்.

உலகில் மிக அதிகமாக விற்பனை ஆகும்  போதைப் பொருளின் விலை 77000 யு.எஸ் டாலர்தான். ஆனால் அகிலின் விலை அதைவிட அதிகம். அதனால் நிறையபேருக்கு அதன் மீது அதிக போதை.

சர்வதேச வாசனைத் திரவிய சந்தையின் சூப்பர் ஸ்டார் அவுட் வகை அகில்தான். ஒரு கிலோ அவுட்ன் விலை ஒரு லட்சம் யு. எஸ். டாலர். இவ்வளவு விலைக்கு விற்றால் யாராவது சும்மா இருப்பர்களா ? வேட்டையாடிவிட்டார்கள்.

விளைவு, 1955 ம் ஆண்டு இதனை அழிந்துவரும் மரவகையாக அறிவிக்கப்பட்டது.

தமிழ் மொழியில் அகில் என்பதைச் சொல்ல 115 பெயர்கள்; உள்ளன.   எங்கு எவ்வளவு அகில் மரங்கள் இருக்கும் என்ற புள்ளிவிவரம்தான் ஏதும் கைவசம் கிடைக்கவில்லை.

அகில் மரத்தின் பல மொழிப் பெயர்கள்

தமிழ்: அகில், அக்குரு, களிமங்கன் (AKIL, AKKURU, KALIMANKAN)

இந்தி: அகர் (AGAR)

தெலுங்கு: அகருசேட்டு (AGARU CHETTU)

மலையாளம்: அகில் (AKIL)

பொதுப்பெயர்: அகர்வுட், அலோஸ்வுட், ஈகிள்வுட் (AGAR WOOD, ALOES WOOD, EAGLE WOOD)

தாவரக்குடும்பம் பெயர்: தைமிலேசியே (THYMELAEACEAE)

தாவரவியல் பெயர்: அக்யுலேரியா அகலோச்சா (AQUILARIA AGALOCHA)

சர்வதேச அளவில் தற்போது இந்தோனேசியா. வியட்நாம் ஆகிய நாடுகளில் சிறு அகில் தோட்டங்களை உருவாக்கும் பெரும் முயற்சியில்  உள்ளார்கள். பங்ளாதேஷ் மவுல்வி மாவட்டத்தில் நிறைய சிறு அகில் தோட்டங்களை அமைத்து ஏற்றுமதியும் செய்து வருகிறார்கள்.

A REQUEST

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...