பெக்கான் டெக்சஸ் மாநிலத்து அரசு மரம் |
பெக்கான் மரம், டெக்ஸஸ் மாநிலத்தின் அரசு மரம்> அங்கு
இது பிரபலமானது, நம்ம ஊர் நிலக்கடலை மாதிரி,
பெக்கான் வறுத்த கொட்டைகளையும், கொட்டைகளிலிருந்து
எடுத்த எண்ணெயையும் டின்களில் அடைத்து, அமெரிக்காவில் திரும்பிய பக்கம் எல்லாம் விற்க உதவுவது, ஒரு காலத்தில்
பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது, இன்று வியாபார மரமாக
முன்னேறி இருக்கும் மரம்.
தமிழ்ப்பெயர்: பெக்கான் மரம் (PECCAN TREE)
பொதுப்பெயர்: பெக்கான் மரம் (PECCAN TREE)
பேக்கன் மரத்தின் தாவரவியல் பெயர் கேரியா இலிநாய்னென்சிஸ் (CARYA ILLINOINENSIS).
தாவரக்குடும்பம் பெயர்: உக்லேண்டேசி (UGLANDACEAE)
தாயகம்: மெக்கிகோ மற்றும் சதர்ன் யுனைட்டெட் ஸ்டேட்ஸ்
டெக்ஸ்சாஸ் மாநில மரங்கள்
நான் இங்கு சொல்லப்போவது டெக்ஸாஸ் மாநிலத்தின் டல்லஸ் பகுதி மரங்களைப் பற்றிதான். ஆனால் ஏறத்தாழ
வட அமெரிக்காவின் முக்கிய மரங்கள் அத்தனை பற்றியும் உங்களுக்கு சொல்லுவேன். அத்தனையும் இங்கு இருக்கின்றன.
தாவரப்பூங்காக்கள்
நல்ல வேளையாக இங்கு இருக்கும் தாவரப் பூங்காக்களில்
ஒவ்வொரு மரத்திற்கும் பெயர்ப்பலகை வைத்திருக்கிறார்கள். மரங்களின் பெயர்களே அவை
பற்றி ஆய்வு செய்ய உதவியாக இருந்தது.
அதற்குப் பிறகு வேறு இடங்களுக்குப் போனாலும்
அந்த மரங்களை என்னால் அடையாளம் காண முடிந்தது.
டல்லஸ் நகரின் ஒரு பகுதி
ஒரு செப்டெம்பர் மாதம் 10 ம் தேதி இங்கு வந்து சேர்ந்தேன். அடுத்த அக்டோபர் 13 தேதி வரை இங்கு தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன்.
நான் தங்கி இருக்கும் இடத்தின் பெயர் “மான்ட் போர்ட் டிரைவ்’; என்றும் இடம். டல்லஸ் நகரின் ஒரு பகுதி. ‘போர்ட்ஒர்த்’ என்ற இடத்திலிருக்கும் விமானத் தளத்திலிருந்து 30 நிமிட காரோட்ட தூரம்.
மரங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் கொஞ்சம் மனிதர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
மக்கள்தொகைப்படியும், பரப்பளவின் அடிப்படையிலும் டெக்ஸாஸ் வட அமெரிக்காவின் இரண்டாவது பெரிய
மாநிலம்.
ஒயிட் அமெரிக்கர்கள்
இங்கு வசிப்பவர்கள் ஏறத்தாழ எழுபது சதம் மக்கள் ஒயிட் அமெரிக்கர்கள்;;> அதாவது
வெள்ளைக்காரர்கள். அதற்கு அடுத்தபடி
அதிகம் இருப்போர் ஆப்ரிக்க
அமெரிக்கர்கள்> அதற்கு அடுத்தது ஆசிய அமெரிக்கர்கள்.
டெக்சாஸ் நகரங்கள்
இங்கு ஆடுகள் ஜாஸ்தி. ஆட்டு ரோம உற்பத்தியும் டெக்சஸ் மாநிலத்தில்தான் ஜாஸ்தி.
இங்கு உள்ள முக்கிய நகரங்கள், ஹூஸ்டன், சேன் ஆன்டானியோ, டல்லஸ், ஆஸ்டின், போர்ட் ஒர்த், எல்பாசோ, ஆர்லிங்டன், கார்ப்பஸ் கிறிஸ்டி,
பிளானோ, மற்றும் லேரிடோ.
டெக்சாஸ் மரங்கள்
பேக்கன், லைவ் ஓக், பர் ஓக்,
செடார் எல்ம், பால்டு சைப்ப்ரஸ், மக்னோலியா ஆகிய ஆறு மரங்கள் டெக்சாஸ் மாநிலத்தின் மிக முக்கிய மரங்கள்.
டெக்சஸ் மாநில மரம்
டெக்சஸ் மாநிலத்தின் அரசு மரம் பேக்கன். அதிகபட்சமாக 100 அடி உயரம் வரை வளரும், சில இடங்களில் 150 அடி உயரம்
வரை கூட வளரும்,
மரத்தின் குறுக்களவு மூன்று அடிகூட இருக்குமாறு வளரும்.
கவர்னராக இருந்த ஜேம்ஸ் ஹாக் 1918 ம் ஆண்டு, அப்போது கவர்னராக இருந்த ஜேம்ஸ் ஹாக் (JAMES HOG) என்பவர் பேக்கன் மரத்தை டெக்சாஸ் மாநிலத்தின் அரசு மரமாக அறிவித்தார்.
அவர் இறந்த பிறகும் கூட தன்னுடைய கல்லறையில் பேக்கன் மரத்தை நடுமாறு கேட்டுக் கொண்டாராம். அந்த அளவிற்கு ‘ஜேம்ஸ்’
அந்த மரத்தை நேசித்தார்.
பேக்கன் கொட்டைகளை உறித்து சாப்பிடலாம், நம்ம ஊர் வேர்க்கடலை மாதிரி இருக்கிறது.
ஒரு காலத்தில் அமெரிக்க பழங்குடிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்தது. இந்த மரம், இதன் பழங்கள்
மற்றும் கொட்டைகளை பல்வேறு உணவுப் பொருட்களாக தயாரித்து சாப்பிட்டார்கள். அவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்ட
போதெல்லாம் அவர்களுக்குக் கை கொடுத்து, இந்த பெகான் மரங்கள்தான்.
கெட்ட கொழுப்பு கம்மி
பேகன் எண்ணெய்,
அதன் கொட்டைகளிலிருந்து எடுக்கிறார்கள். உணவு பதார்த்தங்கள் தயாரிக்கவும், மசாஜ் செய்யவும் பயன்படுத்தலாம்.
இதில் கெட்ட கொழுப்பு (SATURATED FATS) 9.5 சதம் மட்டுமே உள்ளது. இது ஆலிவ்
எண்ணெயில் 13.5 சதமும் கடலை எண்ணெயில் 16.90 சதமும்> மக்காச்சோள எண்ணெயில் 18.7 சதமும் உள்ளது.
அதனால் பேக்கன் எண்ணை
உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது.
நல்ல கொழுப்பு ஜாஸ்தி
பேக்கன் எண்ணெயில் மானோசேச்சுரேட்டட் கொழுப்புக்கள் (MONOSATURATED FATS) அதிக அளவில் உள்ளது. இதனை நல்ல கொழுப்பு என்பார்கள்.
ஒலியிக் அமிலம் 52.00 சதமும், லினோலிக் அமிலமும், பால்மிட்டிக் அமிலம் 7.1 சதமும், ஸ்டியரிக் அமிலம் 2.2 சதமும், லினோலெனிக் அமிலம் 1.5 சதமும் உள்ளன.
இவை அனைத்தும் சேர்த்து கெட்ட கொலஸ்ட்ரால் (LDL
CHOLESTROL) அளவைக் குறைக்கும். இதனால் இதயநோயால் பாதிக்கப்படுவது கட்டுப்படுத்தப்படும்.
சிக்கும் சிகிடும் அடிக்காது.
சமையலுக்கு பயன்படுத்துவதில் ஆலிவ் எண்ணெயை விட ஒரு படி அதிகம் என்கிறார்கள். அதைவிட கொஞ்சம் லேசான எண்ணெய். அதிக நாட்கள் வைத்திருத்து
பயன்படுத்தலாம். சீக்கிரமாக சிக்கும்
சிகிடும் அடிக்காது.
வி.ஐ.பி எண்ணெய்
இதனை ஒரு ‘வி ஐ பி’
எண்ணெயாக மதிப்பிடுகிறார்கள். உள்ளுர் கடைகளில் கிடைப்பதில்லை. ஆன்லைன் மார்கட்டுகளில் அமேசான், அலிபாபா என்றால் கூப்பிட்ட குரலுக்கு சப்ளை செய்கிறார்களாம்.
அழகு சாதனம்
பேகன் கொட்டைகளை வறுத்து அரைத்து அதிலிருந்து எண்ணெயை வடித்து
எடுக்கிறார்கள்.
இந்த எண்ணெயை பலவிதமான காரியங்களுக்கும்
பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, சமையல், காய்கறிகளை பதப்படுத்தல்,
மசாஜ் செய்தல், அழகு சாதனமாகப் பயன்படுத்தல், சூரிய ஒளி அல்லாமல் பதப்படுத்தல், பயோ பியூல், அரோமா தெரப்பி, என்று பயன்படுத்துகிறார்கள்.
பெக்கான் எண்ணை மற்றும் இதர பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏகப்பட்ட
பயன்கள் நமக்குக் கிடைக்கின்றன.
சுமார் ஒரு டஜன் நோய்கள்
இதயத்தை ஆரோக்கியமாகப் பராமரித்தல், உடல் பருமனை குறைக்க உதவுதல், வயிற்று செரிமான பிரச்சினைகள் வராமல் பாதுகாத்தல், மார்பகப்
புற்றுநோய் தாக்குதலுக்கான வாய்ப்புக்களை குறைத்தல், எலும்பு மற்றம் பற்களை பாதிக்கும் நோய்களிலிருந்து
பாதுகாத்தல், ரத்த அழுத்தத்தை சீராகப் பராமரித்தல், உடலுக்குக் தேவையான பாதுகாப்பு
மண்டலத்தை பலப்படுத்துதல்,
தோல் சம்மந்தமான பிரச்சினைகளை சரி செய்தல், தலையில் முடி உதிர்வைத் தடுத்தல்,
முடி
வளர்ச்சியைத் தூண்டுதல், இப்படிப் பல வகைகளிலும் பெக்கான் எண்ணெய் உதவிகரமாக உள்ளது.
வடிகால் வசதி
பெக்கான் மரங்களுக்கு ஆழமான வடிகால் வசதி உள்ள மண்கண்டம்
அவசியம். மரங்கள் நன்கு வளர்ந்து கொட்டை மகசூல் தர வேண்டும் எனில் இந்த அடிப்படை வசதிகள் வேண்டும்.
இல்லை என்றால் மரங்கள் சுமாராக வளரும். கொட்டை மகசூலில்
கோட்டை விடவேண்டி இருக்கும். பாறைகள்
மிகுந்த பகுதிகள் மற்றம் மண்கண்டம் ஆழமற்ற பகுதிகளிலும் மகசூல் தராத மரங்கள் மட்டுமே வளரும்.
FOR
FURTHER READING
WWW.EN.M.WIKIPEDIA.ORG- “PECON OIL – WIKIPEDIA”
WWW.CABI.ORG/ CARYA ILLINOINENSIS
WWW.PFAF.ORG / CARYA ILLINOINENSIS
WWW.BRITANNICA.COM / PECCAN
WWW.GBIF.ORG/ CARYA ILLINOINENSIS
WWW.WILDFLOWER.ORG/ CARYA ILLINOINENSIS
A REQUEST
I LOVE TO
SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
9999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment