சோழ வேங்கை முதல்தர கட்டை மரம் |
(SOZHAVENGAI,
BISHOPWOOD, BISCHOFIA JAVANICA, EUPHORBIACEAE )
தாவரவியல்
பெயர் : (BISCHOFIA
JAVANICA)
பொதுப்பெயர்
/ ஆங்கிலப்பெயர் : பிஷப் வுட் (BISHOPWOOD)
தாவரக்குடும்பம்
: யுபார்பியேசி (EUPHORBIACEAE)
மரத்தின்
தாயகம்: வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல ஆசிய நாடுகள்.
நீளமான
நார்கள், காகிதம் தயாரிக்க மரக்கூழ், பொதுவான கட்டுமானச் சாமான்கள், பாலங்கள்
கட்டுவதற்கான உத்தரங்கள், கம்பங்கள், ரயில்பாதை ஸ்லிப்பர் கட்டைகள், சுரங்கத் தூண்கள், ஒட்டுப் பலகைகள் என்னும் பிளைவுட், வீடுகளில்
தரை பாவுதல் (FLOORING), மற்றும் மரச்சாமான்களை அலங்கரிக்கும் மரத்தகடுகள் (VENEERS)
தயாரித்தல் போன்றவற்றிற்கு பயன்படும் அரியவகை
மரம் இந்த சோழவேங்கை.
உலகம் முழுவதும் பரவியுள்ள மரம்
சைனா,
இந்தியா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா,
ஹவாய், மலேசியா, வியட்நாம், லாவோஸ், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூகினியா ஆஸ்திரேலியா தெற்கு பசிபிக் ஆகிய நாடுகளில் சோழவேங்கை மரம்
பரவியுள்ளது.
வயிற்றுவலிக்கு
நல்ல மருந்து
சோழவேங்கை மரத்தின் பசுமையான
மரப்பட்டைகள் வயிற்றுவலிக்கு நல்ல மருந்து. மரப்பட்டையின் சாற்றுடன், எலுமிச்சைச் சாறு சேர்த்து கால்களில் தடவி காயங்கள் மற்றும் புண்களைக்
கட்டுப்படுத்தலாம். வயிற்றுவலியைக் குணப்படுத்த இலைகளை அரைத்துக் கூழாக்கி
வயிற்றின்மீது தடவ வேண்டும்.
வனப்பகுதிகளை
மறுசீரமைக்க ஏற்ற மரம்
காபி
மற்றும் ஏலக்காய்த் தோட்டங்களில் அற்புதமான நிழல் மரமாக பயன்படுகிறது. சீர் கேடடைந்த வனப்பகுதிகளை மறுசீரமைக்க ஏற்ற
மரம்.
சோழவேங்கையின் பலமொழிப் பெயர்கள்
தமிழ்:
சோழவேங்கை (SOZHAVENGAI)
இந்தி:
பில்லார் (BHILLAR)
மலையாளம்:
நீலி, சோழவேங்கா (NILI,
SOZHAVENGA)
தெலுங்கு:
ஹாலுப்பு முஸ்தி (HALUPPU
MUSTHI)
கன்னடம்:
கோப்பாரினி (GOPPARINI)
அசாமிஸ்:
கோபரியம் (GOPARIUM)
மணிப்புரி:
திய்சாக் (THEISAK)
மராத்தி:
போக் (BOK)
மீசோ:
குவாங்த்லி (KHUANGTHLY)
பொதுப்பெயர்:
பிஷப் வுட் ட்ரீ, டைகர் ட்ரீ, டுக் ட்ரீ, பை சோபியா, ஜாவா செடார் (BISHOP
WOOD TREE, TIGER TREE, TOOG TREE, BI CHOPHIA, JAVA CEDAR)
தழை: கால்நடைகளுக்கு தீவனமாகும் வைட்டமின் ' சி"
நிறைந்த தழைகளைத் தரும் மரம். இலைகளை சமைத்தும், பச்சையாகவும்
சாப்பிடலாம்.
பட்டை,
பதினாறு சதவிகித
டேனின் சத்துக்கள் நிறைந்தது. தோல் பதனிடலாம்.
இதனைப் பயன்படுத்தி வலைகள் மற்றும் கயிறுகளை வலுப்படுத்தலாம்.
மரப்பட்டைகளிலிருந்து
எடுக்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் சாயங்கள் துணிகளுக்கு வண்ணம் கூட்ட பயனாகின்றன.
விதை,
சோப்பு தயாரிக்க விதை எண்ணெய் உடைய விதைகளைத் தரும் மரம்.
மரம்,
ஒட்டுப்பலகை தயாரிக்க மரம்தரும், மேஜை,
நாற்காலி, படகுகள் செய்ய மரம் தரும் மரம் சோழ வேங்கை. மரம் , காகிதம்
செய்ய மரக்கூழ் தயாரிக்க மரம் தரும். துரிதமாக
ஓங்கி வளர்ந்து கட்டிட வேலைகளுக்கு உதவும்.
இலை,
கிளை, மரம், அடுப்பெரிக்க விறகாக தரும் மரம்.
சுற்றுச்சூழல்:
ஓங்கி வீசும்
காற்றின் வேகத்தை தடுக்கும், தூசி மற்றும் பசுமை இல்ல வாயுக்களை
வடிகட்டி காற்றை
தூய்மைப்படுத்தும் மரம். அழிந்துபோன காடுகளை மீட்டெடுக்க உதவும் மரம்.
மரத்தின்
தாயகம்: இந்தியா, இமயமலை அடிவாரம்
ஏற்ற மண்
: ஈரசெழிப்புள்ள மண்
நடவுப்
பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
மரத்தின்
உயரம் : 20 -- 35 மீட்டர்.
இம்மரத்தின்
விதைகளை ஆறு
மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். மூன்று மாதங்களில் இதன் முளைப்புத் திறன்
குறையத் தொடங்கும். விதைத்த ஒன்று முதல் மூன்று வாரத்தில் நுற்றுக்கு 70 சத
விதைகள் மக்கர் பண்ணாமல் முளைக்கும். விதைகள், கிளைகள்
மற்றும் போத்துக்களைப் பயன்படுத்தி புதிய மரங்களை உருவாக்க முடியும்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment