Wednesday, June 21, 2023

SHUMARD RED OAK BUSINESS TREE 93. சுமார்டு சிவப்பு ஒக் வணிக மரம்

சுமார்டு சிவப்பு ஒக்
ஓர் வணிக மரம் 


சுமார்டு சிவப்பு ஒக் மரம்
,  முக்கியமாக ஒரு வணிக மரம்.  இரண்டவதாக நிழல் தரும் மரம்,  மூன்றாவதாக பறவைகள்,  ற்றும்  விலங்குகளுக்கு உணவாகும் மரம்,  பலவகையான மரவேலைகள் செய்ய ஏற்ற மரம்> தொடர்ந்து 40 முதல் 50 நாட்கள் அடிமரப் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றால் கூட பாதிக்கப்படாத மரம், அதிகபட்சமாக  சுமார் 480 ஆண்டுகள் ரை உயிர் வாழும் மரங்களில் ஒன்று. 

தமிழ்ப்பெயர்: சுமார்டு சிவப்பு ஒக் (SHUMARD RED OAK)

பொதுப் பெயர்கள்: சுமார்டு ஒக், ஸ்பாட்டட் ஒக்,  ஷிநெக் ஒக், சுமார்டு ரெட் ஒக்,  சுவேம்ப் ரெட் ஒக் (SHUMARD OAK, SPOTTED OAK, SCHNECK OAK, SHUMARD RED OAK, SWAMP  RED OAK)

தாவரவியல் பெயர்: கொர்கஸ் சுமார்டி (QUERCUS SHUMARDII)

தாவரக் குடும்பம் பெயர்: பேகேசியே (FAGACEAE)

தாயகம்: அட்லாண்டிக் கடற்கரைச் சமவெளியில் வடக்குக் கரோலினா முதல் வடக்கு புளோரிடா வரை (ATLANTIC COASTAL PLAIN – NORTH CAROLINA TO NORTHERN FLORIDA). இந்த சுமார்டு சிவப்பு ஒக் மரத்திற்கு சொந்த மண் ஐரொப்பா,  ஆப்ரிக்கா மற்றும் ஆசியா.     

பொதுவாக சிவப்பு ஒக் மரங்கள், முதல் தரம் உடையவைஆனால் மரவாடிக்கு போய் சிவப்பு ஒக் மரம் வேண்டும் என்றால், அவர்கள் உங்களுக்கு சுமார்டு சிவப்பு ஒக் மரம்தான் சிபாரிசு செய்வார்கள். 

சுமார்டு சிவப்பு ஒக் மரம் தவிர மற்றவை எல்லாம் சுமார் ரக ஒக் மரங்கள்தான் என்பார்கள்.

வணிக ரீதியான மரத்திற்கான அத்தனைப் பண்புகளையும் கொண்டது> சுமார்டு சிவப்பு ஒக் மரம்.  மரவேலைகள் செய்ய உயர்தரமான மரம் (MECHANICALLY SUPERIOR TREE) என்கிறார்கள் மர நிபுணர்கள்.

பலவிதமான மரவேலைகள் செய்யலாம்

இந்த சுமார்டு மரத்தைப் பயன்படுத்தி பலவகையான மரவேலைகள் செய்யலாம்.  வணிக ரீதியில் பயன்பட அது முக்கியமாக கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்பட வேண்டும்.  மேஜை நாற்காலி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப் பயன்பட வேண்டும்.  தரை போடுதல்> அலங்கார வேலைகள், பொருட்களை பேக்கிங் செய்யத் தேவையான பெட்டிகள் செய்யப் பயன்பட வேண்டும்.  பல்வேறு பொருட்களை செய்வதற்கான அச்சுக்கள் (MOULDS) தயாரிக்க பயன்பட வேண்டும். 

பரவியிருக்கும் இடங்கள்

வட அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பரவியுள்ள மரம்> அவை மிசிசிப்பி ஆற்றின் பள்ளத்தாக்குப் பகுதிகள், மத்திய ஒக்கலஹாமா,  வடக்கு கான்சாஸ், மிசௌரி, தெற்கு இலிநாய்ஸ், இண்டியானா, மேற்கு மற்றும் தெற்கு ஒகையோ,  கெண்டக்கி, டென்னிசி,  மிச்சிகன், பெனிசில்வேனியா, மேரிலேண்ட், மேற்கு நியூயார்க் பகுதி மற்றும் ஒண்டாரியோ,  கனடா.

பரவலான மண்வகைகள் ஏற்றவை

வேறுபட்ட கார அமிலநிலை உள்ள மண்வகைகளிலும் நன்கு வளரும்.  நல்ல சூரிpய ஒளி மற்றும் சுமாரான வெளிச்சம் இருந்தாலும் வளரும்.  வறட்சி இருந்தாலும் அதனையும் தாங்கி வளரும்.

25 ஆண்டுகள் விதை உற்பத்தி செய்யும் (SEED PRODUCTION)    

சுமார் 25 ஆண்டுகள் இந்த மரங்கள் விதைகளை உற்பத்தி செய்யும்.  தனது 25 வது வயதில் விதை உற்பத்தி செய்யத் தொடங்கி 50 ஆண்டுகள் வரை தொடரும்.  ஆனால் இதன் வயதைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். 

அதிக வயது வாழும் மரங்களில் ஒன்று.  இதன் வயது 480 ஆண்டுகள்.  அகார்ன்கள்தான் விதை உற்பத்தி செய்யும் இனப்பெருக்க உறுப்புகள்.  இந்த அகார்ன் சராசரியாக ஒரு அங்குல நீளம் இருக்கும்.

பறவைகளுக்கும் பாலூட்டிகளுக்கும் உணவாகிறது    

சுமார்டு ஒக் மரங்களின் அகார்ன்கள் வன உயிர்களுக்கு உணவாகிறது.  குறிப்பாக பறவைகள் மற்றும் சிறு பிராணிகளுக்கும் உணவாகிறது.  குறிப்பாக பாடும் பறவைகள்,  விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படும் (SONG BIRDS & GAME BIRDS) வான் கோழிகள்,  காடைகள்,  மற்றும் நீர்க் கோழிகள்.  சிறு பாலூட்டி விலங்குகளில் வெள்ளைவால் மான்கள்> காட்டுப்பன்றிகள் (WHITE TAIL DEERS, HOGS) எலிகள் மற்றும் அணில்கள் போன்றவை இந்தப் பட்டியலில் அடங்கும்.

பெருங்குழுவைச் சேர்ந்த ஒக் மரங்கள்   

ஒக் மரங்கள் என்பதே ஒரு பெரிய குழுவைச் சேர்ந்தது.  இதில் ஏராளமான மரவகைகள் உள்ளன.  இதில் சிவப்பு ஒக் மரங்களும் ஒரு பெருங்குழுவே.  இவற்றில் சுமார்டு சிவப்பு ஒக் மரங்களுடன் தொடர்புடையவை என மூன்று வகைகளைக் குறிப்பிடுகிறார்கள்.

அவை டெக்சாஸ் ரெட் ஒக், நூட்ல் ஒக், சிசோஸ் ரெட் ஒக் (TEXAS RED OAK, NUTTAL OAK AND CHISOS RED OAK).    

எப்படிபட்ட மரங்கள் ?

மரங்கள் அளவில் பெரியவை.  உயரத்தில், பெரியவை.  மரத்தின் பருமனில் பெரியவை.  அதிகபட்சமாக பதிவு  செய்யப்பட்ட உயரம் 138 அடி.  மரத்தின் தலைப்பகுதியின் (ஊசுழுறுN) அளவு 90 அடி.  மரங்கள் நேராக நிமிர்ந்து வளரும்.  தரைமட்டத்தில் மரத்தின் அடிப்பகுதி பருமனாகக் காணப்படும். 

சுமார்டு மரங்கள் தாழ்வான பள்ளக்கால் பகுதிகளில் வளரும்.  அதனால்தான் அதனை ஸ்வாம்ப் ஒக் (SWAMP OAK) என்றும் சொல்லுகிறார்கள்.  இப்படிப்பட்ட சதுப்பு நிலங்களில் தொடர்ந்து 40 முதல் 50 நாட்கள் அடிமரப் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றால் கூட மரங்கள் பாதிக்கப்படாது.

கொண்டாடும் இலையுதிர் பருவம்

ஆங்கிலத்தில் ஃபால் (FALL) என்பதன் அர்த்தம் வேறு. அமெரிக்காவில் ஃபால் என்பது ஒரு கொண்டாட்டத்தைக் குறிக்கும்  சொல்.  அப்போதுதான் பல அழகு மரங்கள்,பசுமையான தங்கள் இலைகளை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு,  காவி,  செங்காவி, தங்க நிறம் என பல நிறங்களில் மாறி மாறி வர்ணஜாலம் காட்டி உதிர்ந்து போகின்றன.

கொசுறு

பொங்கல் விழாவின்போது தமிழ்நாட்டில்  நமது கிராமப்புற வீடுகள் புதுக்கோலம் பூணுவதுபோல, இலையுதிர் பருவத்தில் இங்கு இயற்கை புதுக்கோலம் பூணுகின்றது.  ஃபால் எனும்  இலை உதிர் பருவத்தில் இலைகள், கவர்ச்சிகரமான காவி மற்றும் சிவப்பு நிறமாக மாறி உதிர்கின்றன;.

FOR FURTHER READING

WWW.EN.WIKIPEDIA.ORG “QUERCUS SCHUMARDII”

 WWW.MISSOURIBOTANICALGARDEN.ORG –“QUERCUS SCHUMARDII”

WWW.WILDFLOWER.ORG – PLANT DATA BASE – “QUERCUS SCHUMARDII”

WWW.PLANTS.CES.NCSU.EDU/ QUERCUS SHUMARDII- NORTH CAROLINA EXTENSION GARDNER PLANT TOOL BOX.

WWW.SRS.FS.USDA.GOV/  QUERCUS SHUMARDII BUCKL – SOUTHERN RESEARCH STATION

WWW.ARBORDAY.ORG / SHUMARD OAK TREE ON THE TREE GUIDE AT ARBOR DAY

I LOVE TO SEE YOUR COMMENTS, IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO,  PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD. YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).

9999999999999999999999999999999999999999

 

 

 

    

        

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...