Tuesday, June 13, 2023

SELF-SUFFICIENCY IN WATER IN TAMILNADU IS POSSIBLE தமிழ்நாட்டின் தண்ணீர் தன்னிறைவை திட்டமிட முடியும்

தண்ணீர்  தன்னிறைவை 
திட்டமிட முடியும்


88888888888888888888888

தமிழ்நாட்டின் மொத்த பூகோளப்பரப்பு    130,058  சதுர கி.மீ.  இதன் கிழக்கு  திசையில்  வங்காள விரிகுடாக்கடலும்மேற்கு திசையில், கர்னாடகா மற்றும்  ஆந்திரப் பிரதேச  மாநிலங்களும்,  தென்திசையில்  இந்து  மகாக்கடலும்   உள்ளது.

தமிழ்நாட்டில்,  38 மாவட்டங்களும், 209  வார்டுகளும்,  385  வட்டாரங்களும்,  10 மாநகராட்சிகளும்,  150   நகராட்சிகளும்,  559   நகர ஊராட்சிகளும்,  12,620  ஊராட்சிகளும், 93,699   குக்கிராமங்களும்  உள்ளன.

மாநிலத்தை நான்கு முக்கிய பகுதிகளாக பிரித்துள்ளார்கள். ஒன்று கடலோர  சமவெளிப்பகுதி (COASTAL PLAINS)  கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதி  (EASTERN GHATS)> மத்திய சமவெளிப்பகுதி  (CENTRAL PLATEU)  மற்றும்  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி  (WESTERN GHATS)>  பழவேற்காடு முதல்   கன்னியாகுமரி  வரை  இதன் கடற்கரை  998  கி.மீ.  நீளம் கொண்டது. 

ஆண்டு சராசரி மழை

தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை   அளவு 950  மி.மீ.  இதில் தென் மேற்கு பருவ மழை மூலம், கிடைப்பது  32.96 தமிழ்நாட்டின் தண்ணீர்

தன்னிறைவை

திட்டமிட முடியும்  வடகிழக்கு பருவமழை மூலம் கிடைப்பது  48.10 மூ  குளிர் பருவத்தில் கிடைக்கும் மழை  4.82  மூ  கோடைப்பருவமழை  14.12 மூ. 

மேற்பரப்பு நீரின் அளவு  (SURFACE WATER POTENTIAL)  தமிழ்நாட்டின் ஆற்றுப்படுகைகளின் மூலம்  கிடைக்கும் மொத்த  நீரின் அளவு  24,120 .  மில்லியன்  கியூபிக்  மீட்டர். (ஆ  ஊ ஆ) அல்லது  85,000  மில்லியன் கியூபிக்  மீட்டர்  (M C M). 

39>000. ஏரிகள்  மூலம் 347  டி.எம்.சி. நீரும், 79 நீர்த் தேக்கங்;கள்  மூலம்   243  டி.எம்.சி.  யும், வெளி மாநிலங்களிலிருந்து  கிடைக்கும்  261  டி.எம்.சி.யும்,  இதர ஆதாரங்களின்  மூலம்   2  டி.எம்.சி. யும்  தண்ணீர்  கிடைக்கிறது.

கடலில் கலந்து வீணாகும் நீர்தமிழ்நாட்டின்  17  ஆற்றுப் படுகையிலிருந்து> பயன்படுத்தியது போக  வீணாகப்; போகும் நீரின்  அளவு  177.12 டி. எம்;. சி.

நிலத்தடிநீரின் நிலை

தமிழ்நாட்டின் 185  ஒன்றியங்களில்,  நிலத்தடி நீரைப் பொருத்தவரை,  பாதுகாப்பானவை என்பது,  142  மடடுமே.   70  சதவீதத்திற்கும்,  குறைவான நிலத்தடிநீரை  செலவு செய்பவை என்று பொருள்.  ஆக பாதுகாப்;பான ஒன்றியங்களின்  சதவீதம்  37.66  மட்டுமே.

வரவு எட்டணா   செலவு  பத்தணா  என>  99  சதத்திற்கும்  அதிகமான தண்ணீரை செலவு செய்து,  ஆபத்தான  நிலையில் இருப்பவை  36.88  சதவீத ஒன்றியங்கள்.   அதாவது 142 ஒன்றியங்கள்.

மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பவை  8.57  சதவீதம்.  அதாவது 33  ஒன்றியங்கள். 

மிதமான நெருக்கடியில் இருப்பவை   14.8  சதவீதம்  57  ஒன்றியங்கள்.

நிலத்தடியில்    உப்பு நீராக உள்ளவை   2.07  சதவீதம். அதாவது    8  ஒன்றியங்கள்.

இறவை  மற்றும்  மானாவாரி   நிலப்பரப்பு: தமிழ்நாட்டின் மொத்த  நிலப்பரப்பில்>  46  சதவீத நிலப்பரப்பில்  மானாவாரி  விவசாயம் நடைபெறுகிறது.  மீதமுள்ள 54 சதவீத நிலங்களில்  இறவை  சாகுபடி  செய்யப்படுகிறது.

இன்;ஸ்டியூட்  ஆப்  வாட்டர்  ஸ்டடிஸ்

தமிழ்நாடு  அரசின்,  இன்ஸ்டியூட்  ஆப்  வாட்டர்  ஸ்டடிஸ்  என்ற அமைப்பு  தமிழ்நாட்டின் நீர்த்தேவை பற்றிய  ஆய்வினை  செய்தது.  அந்த ஆய்வுப்படி  ஒரு ஆண்டின்  தேவை   1894-80   டி.எம்.சி.  தண்ணீர்  என கண்டுபிடித்துள்ளது. 

இதில் குடிநீர்த் தேவை  51.40  டி.எம்.சி.  பாசனத்தேவை   1766 டி.எம்.சி.    ; தொழிலகங்களின்   தேவை  54.90  டி.எம்.சி., மின்சார உற்பத்தி மாதிரி  பவர் ஜெனரேஷனுக்கு  தேவைப்படும் நீர்   4.20  டி.எம்.சி.,   கால்நடை  வளர்ப்புக்கு  தேவை  18.30 .   டி.எம்.சி.,   ஆக மொத்த  தேவை  1894 . 80   டி.எம்.சி.

பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென்

ஒரு கட்டுரையில் இவ்வளவு புள்ளி விவரங்களை தரக்கூடாது. தெரிந்தேதான் இத்தனை புள்ளிவிவரங்களை இங்கு அள்ளித் தெளித்திருக்கிறேன்.

நீர் மேலாண்மைத்துறை மற்றும் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இந்த புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு திட்டமிட வேண்டும்.

எத்தனை ஆண்டுகளில் நமது தண்ணீர்த்தேவையை தன்னிறைவு அடையச் செய்ய முடியும்  ? அதற்கு என்னவெல்லாம்  செய்ய வேண்டும் ?

நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியாசென், வங்காளப் பஞ்சத்திற்கு முக்கியமான காரணம்  அரசிடம் சரியான புள்ளிவிவரங்கள் இல்லாததுதான் என்று தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். புள்ளிவிவரங்களின் உதவியுடன் திட்டமிட்டிருந்தால் பஞ்சத்தை தவிர்த்திருக்கலாம் என்று சொல்லுவார்.

அப்படி இந்த புள்ளி விவரங்கள்  தண்ணீர் தன்னிறைவு என்பதை அடைய உதவியாக இருக்கும். திட்டமிட்டால் இது முடியும் என்ற நம்பிக்கையையும் அடைய இவை உதவியாக இருக்கும்.

888888888888888888888888888888888888

 

                                           

 

 

 

 

 

 

 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...