புதிய தொழில்தரும் சீத்தாப் பழம் |
(SEETHTHAAPAZHA
MARAM, CUSTARD APPLE TREE, ANNONA SQUAMOSA, ANNONACEAE )
தாவரவியல்
பெயர் : அனோனா ஸ்குவாமோசா (ANNONA SQUAMOSA)
பொதுப்பெயர்: கஸ்ட்டர்ட் ஆப்பிள் (CUSTARD APPLE)
தாவரக்குடும்பம்
: அனோனேசி (ANNONACEAE)
வறட்சியான,
வளங்குன்றிய நிலப்பகுதிகளில்
கூட எவ்விதமான கவனிப்பும் தேவைப் படாமலும், சிரமம்
இல்லாமலும், பாசனம் தேவைப்படாமலும், பூச்சிப் பூசணத் தொல்லை இல்லாமலும்,
மதிப்புக் கூட்டினால் ஒரு தொழிலாகவும், கிராமப்புற
மக்களுக்கு வேலைவாய்ப்பும், விவசாயிகளுக்கு முட்டுவெளிச் செலவில்லாமல் வருமானமும், தானாக
வளர்ந்து எந்த பழமரம் வருமானம் தரும் ஒரே சிறுபழ மரம் சீத்தாப்பழம்.
வேலூர், நாற்றாம்பள்ளி,
வாணியம்பாடி, தர்மபுரி
வேலூர் நாட்றம்பள்ளி
பகுதியிலும் தர்மபுரி பகுதியிலும் அறுவடைக் காலத்தில் மிதிபடும். வீட்டிற்கு வீடு
தோட்டத்திற்குத் தோட்டம் சீத்தா மரங்களைப் பார்க்கலாம். இந்தப் பகுதிகளில் உள்ள சீத்தாப்பழ மரங்கள் எல்லாம் யாரும் விதைக்கவில்லை. கன்றுகள்
வாங்கி நடவில்லை. எல்லாம் தானாய் வளர்ந்தவை. அப்படி என்றால் அவை அனைத்தும் பறவைகள்
உபயம் என்று அர்த்தம்.
சீத்தா
பழங்களில் ஒயின்
பிலிப்பைன்ஸ்
நாட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனி சீத்தா பழங்களில் ஒயின் தயாரித்து ஏகமான காசு
பார்க்கிறார்கள். வேலூர் தர்மபுரி மாவட்ட விவசாயிகள் கூட ஒன்றாய் சேர்ந்து
சீத்தாப் பழத்தில் ஒயின் தயாரிக்கும் கம்பெனி ஒன்றைத் தொடங்கலாம்.
மத்திய
மாநில அரசுகள் இப்போது போட்டிபோட்டுக் கொண்டு இப்படிப்பட்ட விவசாயிகள் உற்பத்தி
நிறுவனங்களைத் தொடங்க உதவுகின்றன.
பிரேசில்
நாட்டின் வடகிழக்கப் பகுதி நம் தமிழ்நாட்டைவிட வறட்சியான பகுதி. தமிழ்நாட்டில் கிடைக்கும் மழையில் இரண்டு பங்கு குறைவாக இங்கு கிடைக்கிறது.
அங்கு
கோலிகுண்டு சைசில் இலந்தம் பழம் மாதிரி ஒரு பழத்திலிருந்து பழச்சாறு, பழக்கூழ்,
என்று அதனை ஒரு தொழிற்சாலை மரமாக மாற்றிவிட்டார்கள். இந்த பழத்தின்
பெயர் உம்பு (UMBU). இதன்
தாவரவியல் பெயர் ஸ்பாண்டியஸ் டியூபரோசா (SPONDIAS TUBEROSA).
பயோ டீசல் மற்றும் பழச்சாறு
இதில்
புரதம், நார்ச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள், விட்டமின் சி, விட்டமின் பி, மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிரம்ப உள்ளன.
சீத்தா
பழத்திற்கான உலகின் தலைமைப்பீடம் தைவான் நாடு. அங்கு உள்ள ஒரு சீத்தாப் பழ
ரகத்தின் பெயர் தாமு (DHAMU). இந்த
தாமு ரகத்தின் ஒரு பழம் அதிகபட்சமாக இரண்டரை
கிலோ வரை இருக்குமாம். டெய்டுங் நம்பர் 2 (TAITUNG
NO.2) என்னும் ரகத்தை இங்கு பழப்பயிராக அதிகம் சாகுபடி செய்கிறார்கள். இதன்
பழங்கள் 200 முதல் 1000 கிராம் வரை கூட இருக்கும்.
தைவான்
நாட்டில் பிரபலமாக இருக்கும் அன்னாசிப் பழத்தை அட்டிமோயா (ATEMOYA)
என்கிறார்கள். இது அனோனா ஸ்குவாமோசா மற்றும் அனோனா செரிமோயா (ANNONA
SQUAMOSA, ANNONA CHERMOYA) ஆகிய இரண்டு ரகங்களை ஒட்டு சேர்த்து
உருவாக்கப்பட்டது.
மேப்ரோ
என்னும் ஒரு வியாபார நிறுவனம் சீத்தா பழத்தலிருந்து பழச்சாறு, கிரஷ் என
பலவிதமான பானங்களை தயார் செய்து விற்பனை செய்கிறது.
அதுமட்டுமல்ல,
சீத்தா பழத்தின் விதைகளிலிருந்து பயோ டீசல் தயார் செய்யலாம். வியாபார
ரீதியாக விஸ்காசிட்டி, போர் பாய்ண்ட், ஸ்பெசிபிக் கிராவிட்டி, பிளாஸ் பாய்ண்ட், ஆஷ்
கண்டெண்ட், கலர் இப்படி எல்லா சோதனைகளிலும் தேர்வுபெற்றுள்ளது இந்த சீதாப்பழ
டீசல்.
கல்லாங்கரடுகளிலும்
பாறை இடுக்குளிலும் வளரும்
கல்லாங்கரடுகளிலும்
பாறை இடுக்குளில் கூட வளரும் குறுமரம். இரண்டு பாறைகளுக்கு இடையே கையளவு மண்கண்டம்
இருந்தால் கூட முகம் சுளிக்காமல் வேர்விட்டு, கிளைவிட்டு,
பூவிட்டு பழம் தந்து பரவசப்படுத்தும் பழமரம்.
குன்றிருக்கும்
இடம் எல்லாம் குமரன் இருப்பான் என்பதுபோல சீத்தாப்பழ மரம் இருக்கும் இடமெல்லாம்
அணில்களின் அட்டகாசத்திற்கு குறைச்சல் இருக்காது.
சீத்தாப்பழ மரத்தின் பலமொழிப்
பெயர்கள்:
தமிழ்:
சீத்தாப்பழ மரம் (SITA PAZHA MARAM)
இந்தி:
ஷாரிஃபா (SHARIFA)
மராத்தி;
சீத்தாப்பல்: (SITAPHAL)
மணிப்புரி:
சீத்தாப்பல் (SITAPHAL)
அசாமிஸ்:
கடல் (KATAL)
பெங்காலி:
அட்டா (ATTA)
நேப்பாளிஸ்:
ஆட்டி (ATTI)
சிங்களம்:
மத்தி அனோடா (MATTI ANODA)
பர்மீஸ்:
அவ்சார் தீ (AWSAR THEE)
பிலிப்பைன்ஸ்:
அட்டிஸ் (ATTIS);
போர்ச்சுகல்:
அட்டா (ATTA)
விவசாயத்துக்கு உரத்தழை தரும் மரம்.
கனி:இளம்
பசுமை, நீலம் கலந்த பசுமை, மற்றும் அடர்த்தியான ஊதா நிற பழங்கள்; இளம்
மஞ்சள் மற்றும் கிரீம் நிறத்தில் நல்ல இனிப்பு சுவையுடைய, பழத்தசை;
நசுக்கிப் பார்க்க மிருதுவாக, வழுவழுப்பாக கொஞ்சம் நறநற வென நுண்ணிய
மணல்போல கைகளை உறுத்தும்.
ஒரு
கைக்குள் அடங்காத அளவில் பழங்கள்; 5 முதல் 10 செ.மீ. நீளமும் 6 முதல் 10 செ.மீ. அகலம்; 100 முதல் 240 கிராம் எடை கொண்டவை இதன் பழங்கள்.
ஒரு
பழத்தில் 20 முதல் 40 விதைகள்; கடினமான ஓடுடைய பளபளப்பான கூம்பு வடிவ விதைகள்;
பட்டை: டேனின் நிறைந்தது; தோல் பதனிடலாம்.
பூக்கள்: கோடையில் தேனீக்களுக்கு தேன் தரும்.
இலை, கிளை, மரம் : அடுப்பெரிக்க
விறகாகும்.
சுற்றுச் சூழல் : காற்றின் வேகம் தடுத்து. மாசு மற்றும் தூசுக்களை
வடிகட்டி காற்றை சுத்தப்படுத்தும்.
ஏற்ற மண்
: வறண்ட மண்.
நடவுப்
பொருள் : விதை, நாற்று, வேர்க்குச்சி
மரத்தின்
உயரம் : 4 -- 6 மீட்டர்.
A REQUEST
I LOVE TO SEE YOUR COMMENTS,
IF YOU FEEL THIS ARTICLE IS USEFUL TO OTHERS ALSO, PLEASE SPARE FEW MINUTES TO POST A COMMENT
WITH YOUR NAME, JUST BELOW THIS ARTICLE, IT WILL BE READ THROUGHOUT THE WORLD.
YOU CAN CLICK ON “NO COMMENTS” AND TYPE. YOU CAN SEE YOUR COMMENT WILL BE
PUBLISHED INSTANTLY. GNANASURIA BAHAVAN D (AUTHOR).
999999999999999999999999999999999999999
No comments:
Post a Comment